சுவாரபிஷேகம்.
2004 ஆம் ஆண்டு கே.விஸ்வநாத் அவர்களின்
இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஸ்வராபிஷேகம்.

இதில் விஸ்வநாத் அவர்கள் நடித்திருக்கிறார்.
ஜோடி ஊர்வசி.
ஸ்ரீரங்கம் சகோதரர்கள் ஸ்ரீநிவாஸாச்சாரி(கே.விஸ்வநாத் & ரங்கா
ஸ்ரீகாந்த்)இருவரும் சங்கீத கலைஞர்கள்.
ஸ்ரீநிவாஸாச்சாரிக்கு குழந்தைகள் இல்லை. இளையவன்
ரங்காவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தை.
மனைவியை இழந்தவர். பெரியம்மா,பெரியப்பாவிடம்
பிள்ளைகள் வளர்கிறார்கள். கூட்டுக்குடும்பமாக ஒன்றாக
வாழ்கிறார்கள்.
அண்ணன் தம்பி இருவரும் இணைந்து
தெலுங்கு சினிமாவில் கிளாசிக்கல் மற்றும் சாஸ்திரிய
முறையில் மட்டுமே திரைப்படங்களுக்கு இசை அமைக்கும்
மிகப்பெரிய இசையமைப்பாளர்கள்.
பேரும் புகழும் பெறுவதற்கு முன்னர் அதற்குகாரணமாக
இருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியை மறக்காமல்
தாங்கள் அமெரிக்கா சென்ற அந்த நந்நாள் அன்று அந்த
செருப்புத் தொழிலாளி வீட்டுக்கு சென்று அவர்களுக்கு
மரியாதை செய்வதாக காட்டியிருப்பது நாம் பழைய
வாழ்வை மறக்க கூடாது என்றும், நன்றி மறப்பது
நன்றன்னு என்றும் அழகாக சொல்லியிருப்பது போலிருக்கும்.
ராமாவினோதி வல்லபா பாடல் அருமை.
Get Your Own Hindi Songs Player at Music Plugin
அண்ணன் ஸ்ரீநிவாஸாச்சாரி ஹோமியோபதி மருத்துவரும்
கூட. கட்டணமாக பாடலை பாடச்சொல்லும் அளவுக்கு
இசையின்மேல் பற்று உடையவர். ம்யூசிக் தெரபியிலும்
விற்பன்னர்.
ரயிலில் பிரசவ வலி ஏற்பட்ட ஒரு தாய்க்கு
பாடி அமைதி படுத்தி பிரசவம் பார்க்கும் இப்பாடல்
அருமையாக இருக்கும்.
Get Your Own Hindi Songs Player at Music Plugin
டீவி ஆங்கர் சுரேகா(லயா)இளையவர் ரங்காவை விரும்ப
திருமணம் நடக்கிறது. திருமணத்து்க்கு பிறகு சுரேகா
தன் கணவனுக்கு கிடைக்க வேண்டிய பெருமைகள் பெரியவர்
ரங்காச்சாரிக்கு மட்டுமே கிடைப்பதாகவும் தனக்கும் தன்
கணவனுக்கு அந்த வீட்டில் உரிய இடம் இல்லை என்பதாகவும்
நினைக்க ஆரம்பித்ததும் பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன.

ஸ்ரீரங்காச்சாரிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததும் பொறாமை பொங்க
சுரேகா பேசிய வார்த்தைகளால் குடும்பம் பிரிகிறது. விருது வாங்க
டெல்லிக்குச் சென்ற பெரியவர்கள் இருவரும் வீட்டுக்குத் திரும்பாமல்
தன் இருப்பிடம் சொல்லாமலும் வாழ்கிறார்கள்.
இளையவன் ரங்காவோ தன் அண்ணன் இல்லாமல் ஒரு பாடல்
கூட இசையமைக்க முடியாமல் போகிறார். ரசிர்கர்களும்
இவர் இசையமைப்பில் ஜீவன் இல்லாததாக கூறுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் குரல் போய் பாடகூட முடியாத நிலைக்கு ஆகிறார்.
சுரேகா அண்ணன் தம்பி இருவரும் இணைந்தால்தான் இவர்களால்
இசைக்க முடியுமென்றும், இசையாய் இணைந்த குடும்பத்தைப்
பிரித்து தான் செய்தது மாப்பெரும் தவறு என உணர்கிறார்.
அண்ணன் தம்பி இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பது
கிளைமாக்ஸ்.

”லட்சுமணன் தன்னை அண்ணா என அழைக்க இந்த
ராமன் என்ன தவம் செய்தேனோ” எனும் பொருள் படும்
இந்தப்பாடல் தான் கிளைமாக்ஸ்.
“பெரியவன் ராமனை அண்ணா என அழைக்க தான் என்ன
தவம் செய்தேனோ” இளையவன் ரங்கா பாடும் இடமும்
அருமை. (யேசுதாஸ், எஸ்.பி.பி காம்பினேஷன் வேறு,
கேட்க வேண்டுமா!!)
Get Your Own Hindi Songs Player at Music Plugin

அழகான கூட்டுக்குடும்பம், மனதை மயக்கும் பாடல்கள்
என பல +கள் நிறைந்த இந்தப்படம் விருது வென்ற படம்.
************************************************
டிஸ்கி: இன்று மறைந்த மாமாவின் பிறந்த நாள்.
அண்ணன் தம்பி பாசமா? தந்தை மகன் பாசமா?
என பட்டிமண்டபம் வைக்கும் அளவுக்கு இந்த
அண்ணன் தம்பி பாசமும் இருந்தது.
என்றும் அன்பு மழை பொழிந்த மாமாவின்
நினைவு இந்தப்படம் பார்க்கும் பொழுது
மிக மிக அதிகமாகும்.
மாமா என்றும் எங்களுடன் இருப்பதாகத்தான் நினைக்கிறோம்.
இதோ என் அருகில் இருந்து நான் கணிணியில் ஏற்றுவதையும்
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.
இந்தப்பதிவு மாமாவுக்கு சமர்ப்பணம்.
14 comments:
பேரும் புகழும் பெறுவதற்கு முன்னர் அதற்குகாரணமாக
இருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியை மறக்காமல்
தாங்கள் அமெரிக்கா சென்ற அந்த நந்நாள் அன்று அந்த
செருப்புத் தொழிலாளி வீட்டுக்கு சென்று அவர்களுக்கு
மரியாதை செய்வதாக காட்டியிருப்பது நாம் பழைய
வாழ்வை மறக்க கூடாது என்றும், நன்றி மறப்பது
நன்றன்னு என்றும் அழகாக சொல்லியிருப்பது போலிருக்கும்.\\
நல்ல கருத்து ...
நினைவு கூறலுடன் அருமையான பதிவு.
வருகைக்கு நன்றி ஜமால்
நன்றி வண்ணத்துப்பூச்சியாரே
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்...
நல்ல பதிவு.
\\மாமா என்றும் எங்களுடன் இருப்பதாகத்தான் நினைக்கிறோம்.
இதோ என் அருகில் இருந்து நான் கணிணியில் ஏற்றுவதையும்
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.//
தவறியவர்கள் நம் நினைவுகளில் வாழ்கிறார்கள்
நன்றி சந்ரு
நன்றி வித்யா
தவறியவர்கள் நம் நினைவுகளில் வாழ்கிறார்கள்//
ஆமாங்க. 3 மாசமாச்சு மாமா தவறி. மனதுக்கு அவர் இன்னமும் இருக்கார்ங்கற நினைப்புத்தான்
நல்ல பதிவு..
\\மாமா என்றும் எங்களுடன் இருப்பதாகத்தான் நினைக்கிறோம்.
இதோ என் அருகில் இருந்து நான் கணிணியில் ஏற்றுவதையும்
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.//
கண்டிப்பாக!
நன்றி தியானா
நன்றி சிவா
Post a Comment