எனது மாண்டிசோரி ஆசிரியை தனது பள்ளியில்
நடந்த பல சுவாரசியமான விடயங்களை எங்களுடன்
அவ்வப்போது பகிர்ந்துகொள்வார்.
அவரை வாயடைக்க வைத்த ஒரு மாணவனைப்பற்றி:
மாண்டிசோரி முறையில் 11 முதல் சொல்லிக்கொடுக்க
teen board
உபயோகித்து சொல்லிக்கொடுப்போம்.
எல்லா மாணவர்களும் ஒழுங்காக பயிற்சி செய்ய
ஒரு மாணவன் மட்டும் “சும்மா” உட்கார்ந்திருதிருக்கிறான்.
”ஏன் நீ மட்டும் இந்தப் பயிற்சி செய்யவில்லை?”
என்று கேட்டிருக்கிறார் ஆசிரியை.
இதெல்லாம் கத்துக்க வேண்டியதே இல்லை. டைம் வேஸ்ட்!!!
என்று சொன்னவனை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டே
11,12---100 கற்றுக்கொள்வது வேஸ்டா? எப்படி?!!”
என்று கேட்க.
”உங்க வீட்டுல கால்குலேட்டர், போன் எல்லாம் இல்லையா?
அதுல எத்தனை நம்பர் இருக்கு? 0 - 9 தானே எனக்கு 10 கூட
தெரியும் அதனால் அதுக்கு மேல கத்துகிட்டு டையத்தை
வேஸ்ட் செய்ய விரும்பலை. எவ்வளவு கத்துகிட்டாலும்
0-9 தெரிஞ்சா போதும்” அப்படின்னு அசால்டா சொல்லிட்டு
போய்விட்டானாம்.!!!
10குள்ளே உலகம் இருக்குன்னு அந்த குட்டிபையன்
சொல்லிட்டான்.
அந்த பையன் சொன்னதிலும் ஒரு லாஜிக் இருக்கு. அவன்
சொன்னது தவறுன்னு சொல்ல முடியாது. 3 வயது
குட்டி பயலுக்கு என்ன ஒரு யோசனை பாருங்கள்!!!
11 comments:
10குள்ளே உலகம் இருக்குன்னு அந்த குட்டிபையன்
சொல்லிட்டான்.
அந்த பையன் சொன்னதிலும் ஒரு லாஜிக் இருக்கு. அவன்
சொன்னது தவறுன்னு சொல்ல முடியாது. 3 வயது
குட்டி பயலுக்கு என்ன ஒரு யோசனை பாருங்கள்!!!///
ஆமாங்க!
இப்ப உள்ள பிள்ளைங்க ரொம்ப புத்திசாலிங்க!!
இப்ப உள்ள பிள்ளைங்க ரொம்ப புத்திசாலிங்க!!//
ரொம்ப இல்ல ரொம்ப ரொம்ப
பையன் ரெம்பொ சுட்டியா இருப்பான் போல.
இந்த காலத்து குட்டி ஸ் கிட்ட வாய கொடுத்தா நம்ம ட்ரௌஸர் ஐ கிழுத்து தொங்க விட்டுறாங்க.
மானதோட ஊர் போய் சேரணும்னா வாய இறுக்க மூடிட்டு இருக்கறது நமக்கும் நல்லது நம்ம ட்ரௌஸர் க்கும் நல்லது.
கரைக்கிட்டுதான் போல..
அவன் சொன்னது தப்பே இல்லை
அதுல தத்துவமும் விஞ்ஞானமும் கூட இருக்கு
(உடனே என்னன்னு கேட்க கூடாது ...)
உடனே என்னன்னு கேட்க கூடாது ...//
:)))))))))
வாங்க ஜானி,
நீங்க சொல்வதும் சரிதான்.
நன்றி வித்யா
வாங்க ஆதி,
வருகைக்கு நன்றி
அந்த பையன் ரெம்பொ சுட்டியா இருப்பான் போல. எல்லதையும் கூர்ந்து கவனிச்சிருக்கான்.
teen board தகவல் லிங்க் நல்லயிருக்கு.
வருகைக்கு நன்றி நாஞ்சில் அவர்களே
Post a Comment