பள்ளத்தூர் ஆச்சி காலேஜ் இது நான் படித்த கல்லூரி.
கல்லூரி வாழ்க்கையை முழுதுமாக அனுபவிக்காமல்
அல்பாயுசில் என் கல்லூரி படிப்பு தடை பட்டுவிட்டது.
ஆனால் அந்த ஒரு வருடமே எனக்கு 3 வருடத்திற்கான
ஆனந்தத்தை தந்துவிட்டது.
ஆங்கில இலக்கிய பிரிவுக்காரர்கள் நாங்கள் அடித்த லூட்ட்
கொஞ்ச நஞ்சமல்ல. எங்களுக்கு முந்தைய பேட்ஜ்ல்
(செகண்ட் இயரி)வெறும் 12 பேர்தான். அதற்கு முந்தைய
பேட்ஜ்ல் 3 பேர் இப்படி இருந்த இடத்தில் நாங்கள்
30 பேர். எங்கள் ஹெச் ஓடிக்கே சந்தேகம்,
“என்ன இம்புட்டு கூட்டம்னு” யோசிச்சிருப்பார்.
தயங்கி தயங்கி ஒவ்வொருவராக நட்பானோம்.
காலேஜில் நானும் விசாலாட்சியும் இரட்டையர்களாக
அறியப்பட்டோம். இருவரும் சேர்ந்துதான் சுத்துவோம்.
சாலா, ஸ்ரீதேவி, மீனாள், சாந்தி, விசாலாட்சி,வஹீதா
என பெரிய பட்டாளம்.
அந்த வருடத்தோடு நான் படிப்பை நிறுத்த போகிறேன்
என்று கேள்விப்பட்டதும் விசாலாட்சி அழுதது,
அப்பாவுடன் பேசிப்பார்த்தது எல்லாம் மீறி
என் படிப்பு நிறுத்தப்பட்டது. காரணம் இங்கே:
ஆட்டோ கிராப்கள், போட்டோக்கள் எல்லாம் முடிந்தது.
முகவரி பரிமாற்றங்கள் எல்லாம் முடிந்து
கண்ணீரோடு வந்தாச்சு.
சாலா, ஸ்ரீதேவி இரண்டுமுறை கடிதம் எழுதினார்கள்.
விசாலாட்சி தொடர்பே இல்லாமல் போயிவிட்டது.
ஆனால் இவளிடமிருந்து மட்டும் பதிலுக்கு பதில்
என உடனடியாக கடிதம் வரும்!!!!
மாதத்திற்கு 5 கூட இருக்கும்.
"நீ பக்கத்துல இல்லாத குறையே தெரியாம
எதிர்ல பேசுற மாதிரி இருக்கு உன் லெட்டர்”
அப்படின்னு அடிக்கடி பாராட்டுவாள்.
“வெந்து வெர்மிசிலியாகி, நொந்து நூடில்ஸாகின்னு”
அப்பயே காமெடி தெறிக்க கடிதம் எழுதுவாள்.
புதுகையில் டீச்சர் வேலையை விட்டு மும்பையில்
வேலை கிடைத்துப்போன பிறகும் விடவில்லை.
கடிதம் கண்டிப்பாய் வரும். மாதத்திற்கு 3 கடிதம்.
என் கடிதங்களை மாமாவிடம் படிக்கக் கொடுத்துவிடுவேன்.
(நோ ரகசியம்) நான் வந்து பிரிக்கும் வரை கடிதம்
சாமியிடம் இருக்கும். அவ்வளவு நம்பிக்கையாக
அவர்கள் இருக்கும்போது நான் மட்டும் கடிதத்தை
மறைப்பது நல்லதல்ல என்பது என் எண்ணம்.
என் திருமணம் டிசம்பரில் அவளது திருமணம்
பிப்ரவரியில்.” நீ வரமுடியாதுன்னு தெரியும்,
முடிஞ்சா ட்ரை செய்” என்ற புரிதல்...
எங்கள் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்த
கடிதப்போக்குவரத்துக்கள்.....
குழந்தை பிறந்தது... என எல்லா பகிர்வுகளும்
உடனுக்குடன் கடிதம் மூலம் தெரிந்துவிடும்.
ஆரம்பத்தில் அத்துனை நெருங்கிய தோழியாக
இல்லாது போனவள் கடிதத்தினால் மிக மிக
நெருங்கிய தோழியாகிப்போனாள்.
இன்று வரை தொடர்பில் இருப்பவள் அவள்தான்.
அவளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில்
மிக்க மகிழ்ச்சி. தற்போது தமிழகத்தில் புகழ்பெற்ற
பல்கலைக்கழகமொன்றில் ஆங்கிலத்துறை
பேராசிரியை, இரண்டு பிள்ளைகளுக்குத் தாய்...
எனக்கு மட்டும் அன்பான ஸ்ப்ராட் குண்டு.
:))))))))))))))))))))))
அவள் பெயர் s.p.shanthi.
குண்டம்மா, இது என்னுடைய 450ஆவது பதிவு.
அது உன்னைப்பற்றி எழுதியது என்பதில் சந்தோஷம்.
”ஆன்லைனில் எழுதியாவது நம் 18 வருட
நட்பை கொண்டானும்ஞ்ச!!!” என்ற உன் கோரிக்கை
இதோ என் 450ஆவது பதிவாக..
தொடரும்....
23 comments:
450-aavadhu pathivukku vaazhthukkal :))))
நட்புக்கும்
450க்கும் வாழ்த்துகள் ...
450வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்.
1000மாவது பதிவுக்கும் வாழ்த்த விழைகிறேன்.
பதிவை படிச்சுட்டு கமெண்ட் போடுறேன்.வெயிட்டீஸ்..
வாழ்க உங்கள் நட்பு:)!
4500-யை விரைவில் தொடவும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!
நன்றி ஜி3
நன்றி ஜமால்
நன்றி ரங்கன்
4500-யை விரைவில் தொடவும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!//
ஆஹா, நன்றிகள் பல
450க்கும் வாழ்த்துகள் ...
விரைவில் ஐநூறை தொட்டதும் ஹைதையில் பெரிய கட் அவுட்..
\\\ நம் 18 வருட
நட்பை கொண்டானும்ஞ்ச!!!///
வாழ்த்துக்கள் 18 வருட நட்புக்கு
450 க்கு வாழ்த்துகள் குருஜி :)
அப்புறம் அக்கா இனிமேல் உங்களின் மற்றும் இராமலெஷ்மி அக்காவின் பதிவுகளைத்தவிர மற்ற பெண் பதிவர்களின் பதிவுகளில் கமெண்ட் போடுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். அத்தனை மனவலி காலையில் இருந்து..
450க்கு வாழ்த்துகள் :)
வாழ்த்துக்கள்.. :)
உங்க தோழிக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்..உங்கள் நட்பு மேன்மேலும் சிறக்கட்டும்.. என் காணாப்போன தோழிகளை இன்னெரம் நினைத்துப்பார்த்த்க்கொள்கிறேன்..
வாழ்த்துகள் உங்கள் 450 பதிவுக்கும் நட்புக்கும்..
18 வருட நட்புக்கும்,450 வது பதிவுக்கும் வாழ்த்துக்கள் தென்றல்!!
வாழ்த்துகள்...450 க்கும் நட்பான மனதுக்கும்........
450வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்
450 பதிவு நம்ப முடியவில்லை!!
நட்புக்கு சலாம்
450 க்கு வாழ்த்துக்கள்!
பதிமூன்று வருடமாக நட்பா ??? ஆச்சரியம் தான். அற்புதமான நட்பினை தாங்கள் பெற்றிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்
வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
அடடே..450க்கு வாழ்த்துக்கள்!
என்னா ஒரு வேகம்!
என்னா ஒரு ஞானம்..!
புதுகை பதிவர்கள் தலைவி நீங்கதான்!
நட்பு என்னிக்குமே சூப்பர்தான்!
:)
வாங்க தலைவரே
வருகைக்கு நன்றி
Post a Comment