Friday, July 17, 2009

தேவை ஒரு மாற்றம்...

சர்வர் சுந்தரம் படத்தில் சினிமா நடிகனாகிய
பிறகு நாகேஷ் பேட்டி அளிப்பது போல் ஒரு
காட்சி வரும்.

பிரச்சனை என்பதை நான் ஒரு கல்லா
பாக்கறேன்!! கல்லை கண்ணுக்கிட்ட கொண்டு
போனா கல்லு பெருசா தெரியும், கொஞ்சம்
விலக்கி முன்னாடி கொண்டு வந்தா கொஞ்சம்
சிறுசா தெரியும்!! அதையே காலடியில
போட்டுகிட்டா காணாமப்போயிடும்!!
என்பார். அருமையான வசனம். நம்
மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டிய ஒன்று.


நமக்கு நல்லதாக நடக்கப்போவதைக்கூட
சில சமயம் நாம் தவறாக நினைத்து வருந்துவோம்.
இலங்கைக்கு மாற்றலாகிய புதிது. விலை வாசி,
புது சூழல், யுத்த பயம்.. நட்பென்று அப்போது
யாருமே கிடையாது. எப்படி இங்கே வாழ்வது???
பேசாமல் திரும்ப இந்தியாவுக்கே போய்விடுவோமா???
என யோசித்து யோசித்து குழம்பிக்கொண்டிருந்த
நேரம்.

என் அனில் அண்ணாவைப்பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன்.

எப்போதும் நல்ல ஆலோசனை வழங்குவதில்
அண்ணா எக்ஸ்பர்ட். நலம்விரும்பியாகத்தான்
இருந்திருக்கிறார், இருக்கிறார்.

“ஹே! கமான். இவ்வளவு அழகான ஊர்.
பச்சை பசேலென்று ரம்யமாக இருக்கிறது.
3 மணி நேரப்பயணத்தில் குளிர் ப்ரதேசத்தை
அடையலாம். அங்கிருந்து 3 மணிநேரம்
மிக மிக ரம்யமான குளிர் ப்ரதேசம்..
பீச் ரிசார்ட்ஸ், சுத்தமான காற்று,
தூய்மையான சாலைகள், அருமையான
தண்ணீர் என எவ்வளவு +கள் இருக்கிறது
பார்!!இது மாதிரி உனக்கு உலகில்
வேறெங்கும் கிடைக்காது.
இந்த இடம் உங்களுக்கும் பிடிக்கும்.
ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும்.”
என்ற அவரது வார்த்தைகள் கேட்டு
வாழ்ந்துதான் பார்ப்போமே என்று இருக்கத்
துவங்கினோம். 7 வருடங்கள் அண்ணா
சொன்னது போல் அருமையாக கழிந்தது.
விட்டுவிட்டு வர மனசில்லாமல் போனது.

தேவை ஒரு மாற்றம் என்று சொன்னது
நம் அணுகுமுறைக்கு, ஒரு நிகழ்வை
நாம் பார்க்கும் விதத்திற்கு மாற்றம் தேவை.

ஆங்கிலத்தில் "U PUT YOUR SELF IN OTHERS
SHOES, THEN U WILL KNOW THE PAIN"
என்பது வழக்கில் இருக்கும் வாக்கியம்.
அடுத்தவர் இடத்தில் நம்மை இறுத்திப்
பார்ப்பதால் பிரச்சனையின் மறுபக்கமும்
தெரிந்து கொள்ள முடியும்.

நம்ம சின்னப்பாண்டி அதாங்க ஆயில்யன் பாஸ்
ஒரு முறை குருஞ்செய்தி ஒன்று அனுப்பியிருந்தார்.
அதை பத்திரமாக எனது மொபைலில் வைத்திருக்கிறேன்.
மிக அருமையான செய்தி அது:

WHILE RAINING EVERY BIRDS PICKS SHELTER
IMMEDIATELY, XCEPT D EAGLE!!!
IT GOES OVER D CLOUD, 2AVOID D RAIN.
PROBLEM IS D SAME BUT ATTITUDE
MAKES IT D KING!!!!!


மழை பெய்யும்பொழுது கழுகைத் தவிர
பறவைகள் அனைத்தும்
ஒதுங்க இடம் தேடி ஓடுகின்றன!!!

கழுகு மட்டும் மேகத்துகுள் சென்று
மழையில் நனையாமல் இருக்கிறது.

பிரச்சனை என்னவோ ஒன்றுதான்
சிந்தனை முறை கழுகை பறவைகளின்
அரசனாக்குகிறது.

அருமையான வார்த்தைகள் இல்ல!!

நம் சிந்தனை முறையில் மாற்றம்
வந்தால் நம் வாழ்விலும் நல்ல மாற்றம் + முன்னேற்றம்
வரும்.

29 comments:

நிஜமா நல்லவன் said...

Present!

எம்.எம்.அப்துல்லா said...

மிகச் சிறப்பான இடுகை.புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா மாற்றம் என்பது அவசியம் தான்..

அன்னைக்கு என் தோழி ஒரு வார்த்தை சொன்னாங்க .அழகா இருந்தது.. அச்சா சோச்ச்னே மே க்யா பூராயி ஹை..ன்னு :))

( ஹிந்தில மிஸ்டேக் இருந்தா கண்டுக்காதீங்க )

pudugaithendral said...

ப்ரசண்ட் மார்க்டு

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அப்துல்லா

pudugaithendral said...

அச்சா சோச்ச்னே மே க்யா பூராயி ஹை..ன்னு :))


அருமையா சொல்லியிருக்காங்க கயல்

ஜோசப் பால்ராஜ் said...

அருமையா சொல்லியிருக்கிங்க.

அதுவும் அந்த கழுகு மேகத்துல மேல போற வரிகள் மிக அருமையானது.

ஜோசப் பால்ராஜ் said...

// முத்துலெட்சுமி/muthuletchumi said...
ஆமா மாற்றம் என்பது அவசியம் தான்..

அன்னைக்கு என் தோழி ஒரு வார்த்தை சொன்னாங்க .அழகா இருந்தது.. அச்சா சோச்ச்னே மே க்யா பூராயி ஹை..ன்னு :))

( ஹிந்தில மிஸ்டேக் இருந்தா கண்டுக்காதீங்க )//

எங்களுக்கு ஹிந்தி தெரிஞ்சா தானே மிஸ்டேக்கு கண்டுபுடிக்க.

அது சரி அந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்னாச்சும் சொல்லிருக்கலாம்.

மணிநரேன் said...

அவசியமான மாற்றம் கூறும் அருமையான இடுகை.

pudugaithendral said...

நன்றி ஜோசப்,

அச்சா சோச்ச்னே மே க்யா பூராயி ஹை//

இதன் அர்த்தம் நல்லதாக நினைப்பதில் என்ன தவறு??

pudugaithendral said...

நன்றி மணிநரேன்

Thamiz Priyan said...

அருமையான வாசகம்..:) பகிர்வுக்கு நன்றி!

மதன் said...

பாலசந்தருடைய அருமையான வசனமது. அவ்வப்போது சுய ஊக்குவிப்புக்கு எனக்கு உதவி செய்யும். கழுகு செய்தியும் சிறப்பு. வாழ்த்துக்கள்!

pudugaithendral said...

வருகைக்கு நன்றி தமிழ்ப்ரியன்

pudugaithendral said...

வருகைக்கு நன்றி நாஞ்சிலாரே

pudugaithendral said...

நன்றி மதன்

நட்புடன் ஜமால் said...

தடு-மாற்றம் ஏற்பட்டால்

ஏற்படலாம் தடம்-மாற்றம்.

கழுகு மேட்டர் புதிய தகவல்.

--------------

அப்துல்லா அண்ணன் என்ன சொல்றார்ன்னு தான் தெரியலை.

தராசு said...

கொசுவர்த்தி சுத்தியே ஒரு சேதி சொல்லீருக்கீங்க, உபயோகமான ஒன்று.

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல பகிர்வு தென்றல்!

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ஜமால்

pudugaithendral said...

கொசுவத்தி கைவசு நிறைய்ய இருக்கு தராசு. :))

வருகைக்கு நன்றி

தேவன் மாயம் said...

மழை பெய்யும்பொழுது கழுகைத் தவிர
பறவைகள் அனைத்தும்
ஒதுங்க இடம் தேடி ஓடுகின்றன!!!

கழுகு மட்டும் மேகத்துகுள் சென்று
மழையில் நனையாமல் இருக்கிறது.

பிரச்சனை என்னவோ ஒன்றுதான்
சிந்தனை முறை கழுகை பறவைகளின்
அரசனாக்குகிறது.
/
கருத்து சூப்பருங்கோ!!

மங்களூர் சிவா said...

மிகச் சிறப்பான இடுகை.

கானா பிரபா said...

நல்லா இருக்கு

pudugaithendral said...

நம்ம ஆயில்யன் அனுப்பின குறுஞ்செய்தி தேவா

pudugaithendral said...

நன்றி சிவா

pudugaithendral said...

ஆஹா பிரபா,

ரெம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க!!!

“யாருப்பா அங்கே! ஒரு ஜோடாவை உடைச்சு ஐயாவுக்கு கொடுப்பா”

butterfly Surya said...

அருமையான பதிவு.

உவமையுடன் மேலும் சிறப்பு

வாழ்த்துகள்.

pudugaithendral said...

நன்றி வண்ணத்துப்பூச்சியார்