இந்தச் செய்தியை படிச்சதிலேர்ந்து சிரிப்பு தாங்க முடியலை!!!!
குப்பை பொறுக்குவது எப்படின்னு
தெரிஞ்சுக்க சிங்கப்பூர் போனேன், அப்படி இப்படின்னு
நம்ம அமைச்சர்கள் எல்லாம் அடிக்கடி வெளிநாட்டுக்கு
போறாங்க... இதுக்கு எப்படி ஆப்பு வைக்கறது
அப்படின்னு ரூம் போட்டு இந்திய அரசாங்கம்
யோசிச்சிருக்கு போல...
அதான் இப்படி ஒரு சட்டம் போட்டிருக்காங்க.
அதாகப்பட்டது வெளிநாட்டுக்குச் செல்லும்
அமைச்சர்கள், மற்ற அரசு அதிகாரிகள் எல்லோரும்
நமது தேசிய விமானத்தைதான் உபயோகிக்கணுமாம்.
தனியார் விமானங்களில் பறக்கக்கூடாதாம்.
உள்நாட்டுக்குள் இந்திய விமானச்சேவைதான்.
வெளிநாட்டில் அவர்கள் செல்லும் இடத்தில்
ஏர் இந்தியா பறக்காவிடில் எந்த இடம் வரை
ஏர் இந்திய விமானம் செல்கிறதோ அதுவரை
சென்று,, அதன் பிறகு ஏர் இந்தியாவுடன்
கூட்டாக இருக்கும் விமானச்சேவையை
பெறவேண்டுமாம்.. ஹி ஹி ஹி.
என்ன கொடுமை சரவணன் இது??!!
நஷ்டத்தில் இயங்கிக்கு கொண்டிருக்கிறது
இந்தியன் ஏர்லைன்ஸ். அதை நாமே
தூக்கிவிடாட்டி எப்பூடி???ன்னு யோசிச்சிருக்காங்க.
அதன் விளைவுதான் இது.
ஒரே கல்லுல இரண்டு மாங்காங்கறா மாதிரி
யாரும் பயணம் செஞ்சா!!! இந்தியன் ஏர்லைன்ஸுக்கு
வரும்படி, அதுல பயணம் செய்ய பிடிக்காம
அதிகாரிகளும், அமைச்சர்களும் “ஆணியே...
வேணாம்னு””!! முடிவு செஞ்சு எந்த
வெளிநாட்டுக்கும் போகவேண்டாமனு முடிவு
செஞ்சா நம்ம அரசாங்கத்துக்கு செலவு மிச்சம்.
என்ன ஒரு மூளை!!!
இந்திய விமானச்சேவையை அனுபவிச்சவங்க
பல பேருக்கு அவர்களின் சேவைத்தரம் தெரிஞ்சிருக்கும்.
நாம காசு கொடுத்து டிக்கட் வாங்கி போறோம்.
என்ன நம்ம கூட காசு வாங்காம கரப்பான் பூச்சி,
எலியார் எல்லாம் வருவாங்க. அம்புட்டுதான்.
விமாணப்பணி(கிழவி)பெண்கள் ஆடுற ஆட்டம்.
அப்பப்பா.. தாங்க முடியாது. என்னோட அனுபவம்
இங்க
விமானச் சேவையின் தரத்தை கூட்டினா ஏன்
தனியார் விமானத்தை தேடி போகப்போறாங்க???
அத்த விட்டுப்புட்டு இந்திய விமானச்சேவையைத்தான்
உபயோகிக்கணும்... எலிகளோடத்தான் பயணிக்கணும்னு
சொல்றதெல்லாம் ... சுத்த
சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு..........
22 comments:
அரசியல் வாதியின் வாரிசுகள் அரசாங்க பள்ளியில் தான் படிக்கனுமுன்னு ஒரு சட்டம் போட்டா தேவலை ...
இந்திய விமானச்சேவையை அனுபவிச்சவங்க
பல பேருக்கு அவர்களின் சேவைத்தரம் தெரிஞ்சிருக்கும்.
நாம காசு கொடுத்து டிக்கட் வாங்கி போறோம்.
என்ன நம்ம கூட காசு வாங்காம கரப்பான் பூச்சி,
எலியார் எல்லாம் வருவாங்க. அம்புட்டுதான்.//
அனுபவிக்கட்டுமே!!
/ நட்புடன் ஜமால் said...
அரசியல் வாதியின் வாரிசுகள் அரசாங்க பள்ளியில் தான் படிக்கனுமுன்னு ஒரு சட்டம் போட்டா தேவலை .../
Repeattuuuu:)
அய்ய........குப்பை என்ன லேசுப்பட்ட விஷயமா?
நாமெல்லாம் குப்பை கொட்டப்போனா இவுங்க பொறுக்கப்போனாங்களாமா?
குப்பைப் பதிவு ஒன்னு பாதி எழுதி வச்சுருக்கேன். அதைக் குப்பைக்குப் போகாம, இங்கே போடணுமேன்னு இப்பக் கவலையா இருக்கு:-))))
அரசியல் வாதியின் வாரிசுகள் அரசாங்க பள்ளியில் தான் படிக்கனுமுன்னு ஒரு சட்டம் போட்டா தேவலை ...
மட்டுமல்ல. அரசு ஊழியர்களின் பிள்ளைகளும் தான் படிக்கனுமுன்னு ஒரு சட்டம் போடணும்.
அவங்க அதுலதான் போகனும்ன்னு கட்டாயமேற்பட்டா ஒருவேளை அது சிறப்பாக புதுப்பிக்க செய்வாங்களோ..
வாங்க ஜமால்,
நீங்க சொல்வதும் சரிதான்
அனுபவிக்கட்டுமே!!//
:))))))))))
அதானே!!! வருகைக்கு நன்றி தேவா
//கட்டாயமேற்பட்டா ஒருவேளை அது சிறப்பாக புதுப்பிக்க செய்வாங்களோ..//
ஆனா அமைச்சர்களுக்கு தனி விமானம், பயணிகளுக்கு வழக்கம்போல சிறப்பான சேவைன்னுதான் செய்வாங்க பாருங்க!
வருகைக்கு நன்றி நிஜமா நல்லவன்
கலக்கல்!
குப்பைப் பதிவு ஒன்னு பாதி எழுதி வச்சுருக்கேன். அதைக் குப்பைக்குப் போகாம, இங்கே போடணுமேன்னு இப்பக் கவலையா இருக்கு//
:))))))))
வருகைக்கு நன்றி துளசி டீச்சர்
உங்கள் இடுகையை வரிக்குவரி வழிமொழிகிறேன்!
/*/ நட்புடன் ஜமால் said...
அரசியல் வாதியின் வாரிசுகள் அரசாங்க பள்ளியில் தான் படிக்கனுமுன்னு ஒரு சட்டம் போட்டா தேவலை .../
*/
வழி மொழிகிறேன்.
அப்படியாவது இதெல்லாம் உருப்படுமானு பார்ப்போம்...
வாங்க நாஞ்சிலாரே,
சட்டம் போட்டாலும் அதுல ஓட்டை வெச்சு தப்பிக்க நம்மாளுங்களுக்காத் தெரியாது
அவங்க அதுலதான் போகனும்ன்னு கட்டாயமேற்பட்டா ஒருவேளை அது சிறப்பாக புதுப்பிக்க செய்வாங்களோ..//
நம்ம இந்தியன் ஏர்லைன்ஸ் மேல உங்களுக்கு அம்புட்டு நம்பிக்கையா கயல்????
ஆனா அமைச்சர்களுக்கு தனி விமானம், பயணிகளுக்கு வழக்கம்போல சிறப்பான சேவைன்னுதான் செய்வாங்க பாருங்க!//
இந்தக் கொடுமையும் நடக்கும்தான் :((
நன்றி சிபி
ஒரு வேளை மோசமான சேவை செய்வது எப்படின்னு தான் அவங்களுக்கு டிரைனிங் தருவாங்கன்னு நினைக்கிறேன்.. :(
ம் நடக்கட்டும் நடக்கட்டும் இதனாலயாவது அவங்க சேவையின் தரம் உயர்ந்தால் நல்லதுதானே.
ஒரு வேளை மோசமான சேவை செய்வது எப்படின்னு தான் அவங்களுக்கு டிரைனிங் தருவாங்கன்னு நினைக்கிறேன்..//
அயித்தான் வெளியூருக்கு போயிட்டு வந்தால் பசங்க கிட்டத்துல போயி வாசனை பாப்பாங்க. இந்தியன் ஏர்லைன்ஸ்னா ஒரு வாசம் பசங்க கண்டு பிடிச்சு வெச்சிருக்காங்க. அந்த வாசம் அடிச்சா உடனே அயித்தான் குளிச்சு உடை மாத்திடணும்னு ரூல் போட்டு வெச்சிருக்காங்க.
இதனாலயாவது அவங்க சேவையின் தரம் உயர்ந்தால் நல்லதுதானே.//
உயருமா!!!????
Post a Comment