பார்லே பிஸ்கட் வாங்கி வந்து பிள்ளைகளுக்கு
கொடுத்த பொழுது என் நியாபகங்கள் பின்னோக்கிச் சென்றது.
பார்லே... இந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்.
மும்பையில் இருந்த பொழுது வசாய்- சர்ச்கேட்டுக்கான
என் பயணங்களில் விலே பார்லேவைத் தாண்டித்தான்
இருக்கும்.
அந்தேரி ஸ்டேஷன் தாண்டியதுமே ஆவலாக காத்திருப்பேன்.
அது விலே பார்லே ஷ்டேஷன் தாண்டியதும் வரும் பார்லே
கம்பெனியில் இன்று என்ன வாசம் வரும் என்று பார்க்கத்தான்.
:)))
ஏலக்காய் மணக்கும் ஒரு நாள், ஒரு நாள் குளுகோஸ்
மணம் காற்றில் வரும்.
ரயில்வே ட்ராக்குக்கு அருகிலேயே ஃபேக்டரியின்
சுவர்(பின்புறச்சுவராய்த்தான் இருக்கும்) இருந்ததால்
சுகந்த மான மணம்.
சனிக்கிழமை வேலை முடித்து வீடு போகும்போது
ஆகா நாளை “வாசம்” பிடிக்க முடியாதே!!
என நினைத்துக்கொள்வேன்.
பார்லேயின் இந்த விளம்பரம் நினைவிருக்கிறதா??
குளுகோஸ் பிஸ்கட்கள் என்றால் அது
பார்லேவினுடையதுதான்.
மாங்கோ பைட் வந்த போது அதை யார் போய்
வாங்கி வருவது என எனக்கும் தம்பிக்கும் சண்டையே
நடந்தது..
இவையெல்லாம் பார்லேயின் தயாரிப்புக்களில் சில.
சில விடயங்கள் சுகமான நினைவுகளாகும்.
பார்லே எனக்கு சுகந்தமான நினைவுகளாகி
எப்போதும் இருக்கிறது.
17 comments:
சூப்பர் ஞாபகங்கள்..
அழகா சொல்லி இருக்கீங்க..
வீடியோ பார்த்த போது அந்த காலத்திற்கே சென்றுவிட்ட உணர்வு..
பார்லே-ஜி சக்திமானை எங்கள் வயதினர் மறக்கவே மாட்டார்கள்.
நன்றி கலா மேடம்
நல்ல கொசுவர்த்தி...
கர கர பதிவு...
கல்லூரியில் படிக்கும்போது சாப்பிட தவறும் நேரங்களில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பார்லே தின்ன ஞாபகங்கள் :)
அழகான நினைவுகள். மொனாக்கோ என் ஆல் டைம் பேவரிட்:)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே... நண்பனே...
பார்லே விரும்பியா நீங்க. எனக்கு பிடிச்ச பிஸ்கட் பிரித்தானியா குட் டே!
பழைய விளம்பரங்கள் இப்போதும் யூடியூபில் தவறாமல் பார்ப்பதுண்டு.
நீங்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பிரிமீயர் குக்கர் விளம்பரம் பாத்திருக்கீங்களா ??
நன்றி ரங்கன்
நன்றி மயில்
நன்றி வண்ணத்துபூச்சியார்
உங்களுக்கும் கொசுவத்தி சுத்திடிச்சா பாஸ்
வருகைக்கு நன்றி வித்யா
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே//
ஆமாம் ராகவன்
பார்லே விரும்பியா நீங்க. //
இல்ல சிவா, நம்ம ஓட்டு எப்பவும் பிரிட்டானியா மில்க் பிகிஸ், குட்டே தான்.
பார்லே மும்பை போனதுக்கப்புறம் அந்த வாசனைக்காக பிடிக்கும். குளுகோஸ் பிஸ்கட் சாப்பிட்ச் சொன்னா அழுவாச்சியா இருக்கும் எனக்கு.
நீங்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பிரிமீயர் குக்கர் விளம்பரம் பாத்திருக்கீங்களா //
இல்லையே, இருந்தால் லிங்க் கொடுங்க.
என் மொபைலில் லியோ காபி இசை இருக்கு.:))
அந்த மாங்கோ பைட் நம்ம ஃபேவரைட்
Post a Comment