வீட்டில் நடக்கும் எந்த ஒரு சுப நிகழ்ச்சிக்கும்
அழைப்பிதழ் அச்சிடுவோம். அந்த
அழைப்பிதழ் சிற்ப்பாக இருக்க வேண்டும்
என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும்.
சில வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில்
வித்யாசமான அழைப்பிதழ் பற்றி படித்தாக
ஞாபகம். இரண்டுவருடங்களுக்கு முன் வீட்டில்
நடந்த விசேடம் ஒன்றிற்கு அழைப்பிதழ் தெரிவு
செய்ய வேண்டும். மனதுக்குள் அந்த அழைப்பிதழ்
தான் ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஓவியரின்
பெயரும் மறந்துவிட்டேன். ஆனால் அந்த அழைப்பிதழ்
தான் என்பதில் திடமாக இருந்தேன். நெட்டில் தேடினால்
ஈசியாக கிடைக்கும் என்றாலும் ஓவியரின் பெயர்
தெரியாதே!!!
என் நண்பர் ஒருவரிடம் இதுப்பற்றி பேசிக்கொண்டிருந்த
பொழுது ஆமா, நானும் படிச்சேன். பெயர் மறந்து
போச்சு, ஆனாலும் தேடித்தர்றேன் என்று சொன்னார்.
சொன்னால்போல அடுத்த நாள் அவரது மெயிலும்
வந்ததும். அந்த லிங்கை தொடர்ந்து பார்த்த
பொழுது மனதுக்குள் மிக்க மகிழ்ச்சி.
அப்படி என்ன விசேடம் இந்த அழைப்பிதழில்.
எந்த ஒரு நிகழ்வும் எதற்காக செய்யப்படுகிறது?
என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.
திருமணச் சடங்குகள் எதற்காக? போன்ற
விடயங்கள் எளிதாக புரியும் விதத்தில்
சடங்குகளின் புகைப்படத்தோடு அழைப்பிதழ்
இருந்தால் அனைவருக்கும் புரியும் தானே!!
பல நாளிதழ்கள் இவரைப்புகழ்ந்து
பாராட்டியிருக்கிறார்கள்.
அந்த ஓவியர் மாயா. அவரின் ஓவியங்கள்
நம் கலாச்சாரத்தை பரைசாற்றும் அழைபிதழ்களாகி
இருக்கின்றன.
அழைப்பிதழ் மாடல்கள் சில பார்க்க
ஷஷ்டியப்தபூர்த்தி எனப்படும் 60ஆம் கல்யாண
வைபோக அழைப்பிதழ்கள்.
கிருஹப்ப்ரவேசம் அழைப்பிதழ்
அழைப்பிதழ்கள் வாங்குவது எப்படி?
அச்சிடுவது என எல்லா விவரங்களூம்
இந்த வெப்பேஜில் இருக்கிறது.
பாருங்களேன்..
13 comments:
ரைட்டு :-)
அருமையான தகவல் - நன்றி
வருகைக்கு நன்றி எஸ்.கே
நன்றி சீனா சார்
அழைப்பே அழகாய் --- ஹூம் நடக்கட்டம்.
புதுகைத் தென்றல்
எல்ல பதிவிம் அருமையாக எழுதியுள்ளீர்கள்
ரொம்ப ரசித்து படித்தேன்
:))
nice info.
வருகைக்கு நன்றி ஜமால்
தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றிகள் கோஸ்ட்.
வருகைக்கு நன்றி நாஞ்சிலாரே
நன்றி சிவா
சூப்பர்!
பகிர்விற்கு நன்றி
Post a Comment