பாஸ்மதி அரிசியில் சோறு சமைத்து(சின்ன ரைஸ் குக்கர்
கொண்டு போயிருந்தோம்ல :) ) டப்பாவில் போட்டு எடுத்துக்
கொண்டோம். வழியில் சாப்பாடு சரியில்லாமல் இருக்கும்.
கதிர்காமம் - பெந்தோட (Bentota) அடுத்த பயணம்.
ஆனந்தமான தரிசனத்துக்கு பிறகு அலைகடலின் ஓரத்தில்
தங்கி ரெஃப்ரெஷ் செய்து கொள்ளத் திட்டம்.
Tangale எனும் இடத்திலிருந்து இடது பக்கம் அலைகடல்,
வலது பக்கம் பசுமை படர்ந்த மரங்கள். இதற்கு இடையேயான
பயணத்தின் போது எப்போதும் என் மனம் பாடும்
பாட்டு,”பட்டம் தரத் தேடுகிறேன்! எங்கே அந்த நாயகன்!!”
என் மொபைலில் எடுத்த போட்டோ இது.
ஹிக்கடுவ எனும் இடத்தில் மீன்பிடிக்க இப்படி
குச்சி கட்டி அதன் மேல் அமர்ந்து மீன் பிடிப்பார்கள்.
(பார்த்திபன் கனவு படத்தில் ஒரு காட்சியில் வரும்)
திஸ்ஸமஹாரம- இங்கு கிடைக்கும் தயிருக்கு ஈடு இணையே
இல்லை. இலங்கை சூப்பர் மார்க்கட்டுகளிலும் சட்டியில் தயிர்
கிடைக்கும். ஆனால் திஸ்ஸா தயிர்... ம்ம்ம்ம்.
அத்துடன் கீத்துல் பானி சேர்த்து சாப்பிட்டால்.... :)))
வழியெங்கும் தயிர் கடை. மீ கிரி என்பார்கள்.
நாங்களும் இரண்டு சட்டி வாங்கி கொண்டோம்.
பாஸ்மதி அரிசியில் சமைத்த சோற்றில் தயிர்
சோறு பிசைந்து, காக்ரா சப்பாத்தி, ஊறுகாயுடன்
வழியிலேயே கடலலைகளை பார்த்துக்கொண்டு
எங்கள் மதிய உணவு அமர்க்களமாக நடந்தது.
நாங்கள் கொண்டு சென்றிருந்த சீடி முடிந்து போக
டிரைவர் அண்ணா தா.நா.4777 படம் பார்த்தோம்.
ஹிந்தியில் நானாபடேகர் கலக்கியிருந்த படம்.
தமிழிலும் முதன் முறையாக அதே எப்கட்டுடன்(ஓரிஜினல் மாதிரி)
படம் அருமையாக இருந்தது. கிளைமாக்ஸ் வருவதற்குள்
ஹோட்டல் வந்துவிட்டது.
ஹோட்டலின் பெயர் LIHINIYA SURF -BENTOTA.
எம்புட்டு அழகா இருக்குல்ல...
பிள்ளைகள் நீச்சல் குளத்திற்கு செல்லவேண்டும்
என்று ஒரே அடம். :))
நானும் அண்ணபூர்ணாவும் சொல்லிவைத்தாற் போல்
நீச்சலுடை எடுத்து செல்ல மறந்துவிட்டதால் தீர்க்கரை பாவி
போல் நிற்பதை விட மணலில் கால் புதைய நடந்தோம்.
அயித்தானும், பாலகிருஷ்ணாவும் பிள்ளைகல் நீச்சல்
குளத்தில் விளையாட பார்த்துக்கொண்டார்கள்.
பிள்ளைகள் water polo விளையாண்டார்கள்.
நான்குபேரும் இரு குருப்பூகளாக பிரிந்து சரி
விளையாட்டு.
அங்கே தயாரிக்கப்படும் பிட்சா மிக அருமையாக இருக்கும்
என்று கேள்விப்பட்டு இரவு உணவு அங்கேயே சாப்பிட்டோம்.
மிக அருமையான, அதிகம் சீஸ் இல்லாத பிட்சா.
அவர்கள் தயாரித்த விதம் மிக அருமை. அப்புறமாக அதை
யூ ட்யுபில் ஏற்றி பதிவு போடுகிறேன்.
மணல் திட்டில் அலையின் ஓசையுடன் ஆனந்தமாக
அளவளாவிக்கொண்டிருந்த பொழுது, இசைக்கலைஞர்கள்
வந்து பாட சுராங்கனி பாடல் பாடச்சொல்லி கேட்டோம்.
பயணக்களைப்பு, தூக்கம் கண்களை சுழற்ற
போய் படுத்தோம். விடிந்ததே தெரியவில்லை.
7.30 மணி வாக்கில் எழுந்து ரூமிலே இருந்த
கெட்டிலில் காபி போட்டுகுடித்து பிச் வாக்
செய்ய போனோம்.
கடலலை காலை முத்தமிட நின்று பிறகு
மணல்வீடு கட்டினோம்.
அம்ருதா கட்டிய வீடு.
தேஜு கட்டிய வீடு. ஏதோ தன் சொந்த வீட்டை
கட்டுவது போல்,” நானும் அம்ருதாவும் பக்கத்திலேயே
இருப்போம். அடிக்கடி போய் பார்த்துக்கொள்வோம்,
என்று பேசிக்கொண்டே கட்டினார்கள். பிள்ளைகளின்
மனதில் தான் எத்தனை கள்ளம்கபடமற்ற அன்பு
கொட்டிக்கிடக்கிறது!!!!
ஆஷிஷும்,பானுவும் சேர்ந்து
வீடு கட்டினார்கள். கட்டி முடித்துவிட்டு இரண்டு
நட்புக்களும் மறுபடியும் போய் கடலலையில்
போய் நின்று கொண்டார்கள்.
இழுத்து செல்லாத குறையாக அறைக்கு அழைத்துச்
சென்றோம். காலை உணவு முடித்து 11 மணி வாக்கில்
கொழும்புக்கு பயணமானோம்.
மற்றவை அடுத்த பதிவில்.
7 comments:
ஹோட்டல் வீய்வு செம தூள்
அலைகடலும், மணல் வீடும்..சூப்பரு ;)
வாங்க ஜமால்,
இந்த மாதிரி பீச் சைட் ரிசார்ட்ஸ் அங்கே அதிகம்.
மனதை கொள்ளைக்கொள்ளும் அழகு.
வருகைக்கு நன்றி ஜமால்
நன்றி கோபி
நடத்துங்க:)
நடத்துங்க//
:))))))))))))))))
சூப்பர்!
Post a Comment