கொழும்பு - பெந்தோட 2 மணி நேரப்பயணம்.
வழியில் வெள்ளவத்தை சண்முகாஸில் மதிய
உணவு. முடிந்ததும்
அயித்தானும்,பாலகிருஷ்ணாவும்
மட்டும் ஹோட்டலுக்கு போய் சாமான்களை
வைத்துவிட்டார்கள்.
வேன் வாடகை அதிகமாக இருக்கும் என்பதால்
அவருக்கு நன்றி சொல்லி பணத்தைக்கொடுத்து
அனுப்பி விட்டோம்.
நாங்கள் ஷாப்பிங்க் செல்வதாகவும்,
அயித்தான் மீட்டிங்கிற்கு(அவுக ஹெட் ஓபிஸ் அங்கதான்
இருக்கு)செல்வதாகவும் திட்டம்.
”வண்டி இல்லாமல் எப்படி? நான் மீட்டிங்கிற்கு
போனா எப்படி மேனேஜ் செய்வ? ”என்றார் அயித்தான்.
”ஹலோ! இது என்னோட இடம். இங்க இருந்த போது
நீங்க ஆபிஸ் போனா நான் எப்படி கடைக்கு போவேனோ
அது மாதிரிதான். கவலைப்படாம போங்கப்பு,
ரவி அண்ணா இருக்காரு” என்று சொன்னதும் சிரித்துக்கொண்டே
எஞ்சாய்! என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
வருவதை பற்றி முன்னாடியே ரவி அண்ணாவுக்கு
போன் செய்து சொல்லியிருநெதேன். அவருக்கு
போன் செய்து இரண்டு ஆட்டோ எடுத்துக்கொண்டு
5 மணி வாக்கில் House of Fasion வந்து விடும்படி
சொன்னேன்.
House of Fasion இது துணிக்கடை. இலங்கையில் தயாரிக்கப்படும்
ஆயத்த உடைகள் ஏற்றுமதி தரம் வாய்ந்தவை.
ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 4 வருடங்களூக்கு முன்
வாங்கின உடை இப்போதும் அப்படியே இருக்கிறது.
கொடுக்கும் விலைக்கு தரமான துணிகள்.
Duplication Roadல் இருக்கிறது House of Fasion.
எப்போதும் கூட்டம்தான். இப்பொழுதெல்லாம்
நம்மூர் கம்பெனிகள் பல இலங்கையில்தான்
மீட்டிங் வைக்கிறார்கள். சென்னையிலிருந்து
மும்பை செல்லும் பணம் தான் சென்னை-கொழும்பு.
வருபவர்கள் எல்லாம் இந்தக்கடைக்கு ஒரு விசிட்
அடித்து மூட்டை மூட்டையாக வாங்காமல் போக
மாட்டார்கள்.
நாங்கள் அங்கே இருந்த நேரம் 25 பேர்கொண்ட
இந்தியர்கள் ஒரு பஸ்ஸில் வந்து பர்சேஸ் செய்து
சென்றார்கள்.
பில்லிங் முடித்து வெளியில் சந்திக்கலாம் என்று
அண்ணபூர்ணாவிடம் சொல்லிவிட்டு
ஒவ்வொரு தளமாக போனோம். வேண்டியதை எடுத்தார்கள்
பிள்ளைகள். எனக்கு அங்கே செட் ஆகாது. எனக்கு
என் கடை இருக்கு. அதுதான் சரிப்பட்டு வரும். பிள்ளைகளுக்கு
அவர்கள் விரும்பியது எடுத்தேன். பிள்ளைகளூக்கு
ஸ்விம்மிங் கிளாஸ், என பலதும் அங்கே கிடைக்கும்.
வெளியே வந்து ரவி அண்ணாவுக்கு போன் செய்ததும்
சுனில் எனும் ஆட்டோ டிரைவருடன் வந்துவிட்டார்.
எங்களைக்கண்டதும் ஒரே குஷி. பிள்ளைகள் போய்
பக்கத்தில் நின்று ரவி அண்ணா கைபிடித்து பேசினர்.
சுனிலுக்கு சிங்களம் மட்டும்தான் தெரியும். கொஞ்சம்
ஆங்கிலமும் கதைப்பார் என்பதால் முகம் முழுக்க
சிரிப்புடன் பேசினார்.
10 நிமிட இடைவெளியில் அண்ணபூர்ணாவும் வந்துவிட்டார்.
நமக்கு கிடைக்கலையே என்றார். என் கடைக்கு போகலாம்
இரு்ங்க!! என்றேன்.
அடுத்த பயணம் வெள்ளவத்தை ரோமா Batik கடைக்கு.
மலேசியாவில் பத்திக் புகழ் பெற்றது. அதுபோல் இலங்கையிலும்
பத்திக் அருமையாக இருக்கும். பல கடைகள் இருந்தாலும்
ரோமா Batik எங்களுக்கு(மீ & அண்ணபூர்ணா) பிடித்த இடம்.
பிள்ளைகளூக்கு, எனக்கு எடுத்தோம். அயித்தானுக்கு
பத்திக் டிசைன் பிடிக்காது.
அங்கிருந்து நேராக என் கடை. THIANGARA இது இருப்பது
திம்பிரிகஸ்ஸ்யாய(Thimbirigasaya). நாங்கள் முன்பிருந்த
வீட்டிலிருந்து 2 நிமிட நடை தூரம். நான் விரும்பும்
பேண்ட்கள், ஷார்ட் குர்த்தீஸ், ஸ்கர்ட் எல்லாம் கிடைக்கும்.
பசங்க பர்சேசிங் ஆகிடுச்சு. எனக்கும் அண்ணபூர்ணாவுக்கும்தான்
வேலை. பசங்களை அழைத்துக்கொண்டு பாலகிருஷ்ணா
பக்கத்திலே இருக்கும் SENSAL பேக்கரிக்கு போனார்.
பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த இடம் அது.
நானும் என் தோழியும் எங்களுக்கு தேவையானவற்றை
பார்த்து எடுத்துக்கொண்டிருந்தோம். “அக்கா நல்லா
இருக்கீங்களா?பாத்து எம்புட்டு நாளாச்சு!!” என்ற
குரல் கேட்டு நிமிரிந்து பார்த்தால் அந்தக் கடையில்
வேலை பார்க்கும் பாபு நின்று கொண்டிருந்தார்.
அடிக்கடி செல்லும் இடம் என்பதால் நல்ல பழக்கம்.
என்னை மறந்திருப்பார் என்றே நினைத்திருந்தேன்.
மறக்காமலிருந்தது ஆச்சரியமாக இருந்தது.
இந்தக் கடையில் தமிழ் பேசுபவர்கள் இருப்பார்கள்.
நமக்குத் தேவையானவற்றை பக்கதிலிருந்து
எடுத்துக்கொடுப்பார்கள்.
அயித்தான் தன் மீட்டிங் முடிந்து விட்டதாகவும்
தானும் தியங்கரா வருவதாகவும் சொன்னார்.
(அவுக ஆபிஸும் 5 நிமிஷ தூரம் தான்) அவரும்
வந்து ஹேண்ட்லூம் ஷ்ர்ட்கள் எடுத்துக்கொண்டார்.
பர்சேசிங் முடித்து ஆட்டோவில் ஹோட்டலுக்குச் சென்றோம்.
துணிகளை ரூமில் வைத்துவிட்டு ஃப்ரெஷாகி
நடை தூரத்தில் இருக்கும் CRESCAT FOOD COURTல் சாப்பாடு.
இங்கேயும் சண்முகாஸ் இருக்கிறது, பிட்சாஹட், ஸ்ரீலங்கன் சாப்பாடு,
சைனீஸ் எல்லாம் இருக்கும். தேஜூ பெத்தம்மா முகத்தை
தூக்கி வைத்துக்கொண்டு இருந்தாள். ”என்னாச்சு?
என்று விசாரித்தால்,”எனக்கு இங்கே சாப்பிட வேண்டாம்
ஆண்ட்டி, உங்க வீட்டுக்கு போவோம். பிட்சா தோசைசெஞ்சு
கொடுங்க” என்றாள்.
நாங்கள் இன்னமும் கொழும்புவில் இருப்பதாக நினைத்துக்
கொண்டிருக்கிறால் போலும்.
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் பற்றி நிறைய்ய
செய்திகள் இருக்கு. அதைப்பற்றிய அடுத்த பதிவோடு
சந்திக்கிறேன்.
5 comments:
நீங்கள் கொழும்பில் நிற்கின்ற செய்தியை யாராவது ஒரு பதிவருக்கு அறியத்தந்திருந்தால் சந்தித்திருப்போமே. நீங்கள் ஹவுஸ் பேஷனில் நின்றபோது நானும் அங்கே நின்றேன். ஏனென்றால் நீங்கள் குறிப்பட்டதுபோல் 25 பேர்கொண்ட இந்தியர்களின் கூட்டத்தை நானும் கண்டேன்.
ஆஹா தெரியாம போச்சே,
இலங்கைப்பதிவர்கள் யாரும் தொடர்பில் இல்லை. இறக்குவானை நிர்ஷான் கிராண்ட்பாசில் இருப்பதாக ஒரு முறை சாட்டில் சொன்னார்.
தெரிந்திருந்தால் கலந்து பேசியிருக்கலாம்.
நான் ஹவுஸ் ஆஃப் பேஷன் சென்றது 14.8
அடுத்த முறை வரும் வாய்ப்பிருந்தால் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செஞ்சிடுவோம் விடுங்க.
நாங்கள் அங்கே இருந்த நேரம் 25 பேர்கொண்ட
இந்தியர்கள் ஒரு பஸ்ஸில் வந்து பர்சேஸ் செய்து
சென்றார்கள். ]]
அதுல எத்தனை ப்லாக்கர்ஸ் :)
அதுல எத்தனை ப்லாக்கர்ஸ் //
avvvvvvvvv
:)))))))
/
நட்புடன் ஜமால் said...
நாங்கள் அங்கே இருந்த நேரம் 25 பேர்கொண்ட
இந்தியர்கள் ஒரு பஸ்ஸில் வந்து பர்சேஸ் செய்து
சென்றார்கள். ]]
அதுல எத்தனை ப்லாக்கர்ஸ் :)
/
:)))))))))))))))))
Post a Comment