ODEL - இது கொழும்பில் பிரபலமான இடம்.
துணிமணிகள், ஞாபகார்த்த பொருட்கள் என பலதும் கிடைக்கும்.
விலையும் மகா ஜாஸ்தி. ஆனால் அயித்தானுக்கும்,
பிள்ளைகளுக்கும் பிடித்த souvenior T.Shirtகள்
இங்கேதான் கிடைக்கும்.
ஹைதையில் 500 ரூபாய்க்கு வாங்கிய பை 2 மாதத்தில் கிழிந்து
விட்டது. :(( அதனால் பை அங்கேதான் வாங்க வேண்டும்
என்று முடிவு செய்தோம்.1000 ரூபாய்( இலங்கை பணம்)
இதன் தரம் பற்றி முன்பே தெரியும் இன்னும் 2 வருடத்திற்கு
கவலை இல்லை.
ARPICO - SUPER CENTER இங்கே என்னையும் குழந்தைகளையும்
இறக்கிவிட்டுவிட்டு அயித்தான் மீட்டிங்கிற்கு போய்விட்டார்.
இங்கே எல்லாம் கிடைக்கும். தேயிலை, மசாலா சாமன்கள்
எல்லாம் இங்கே வாங்கிக்கொண்டேன். அம்மா இதை
மறந்துட்டீங்க! என்று அண்ணனும் தங்கையும் ஆளுக்கொரு
பாக்கெட்டாக தூக்கிக்கொண்டுவந்தது:)
இங்கே இருந்த பொழுது பழகி விட்டார்கள். பானுவும் தேஜுவும்
கூட போன் செய்து தங்களுக்கும் வாங்கிவரச் சொல்ல
வாங்கி முடித்து வெளியே வருவதற்கு முன் ரவி
அண்ணாவுக்கு போன் அடித்தேன். 5 நிமிடத்தில் வந்துவிட்டார்.
அங்கிருந்து ஹோட்டலுக்கு போய் சாமான்களை வைத்துவிட்டு
பிள்ளைகளின் நண்பர்களுடன் மெக்டொனால்ட்ஸில் மதிய
உணவு. பிறகு அயித்தானும் வந்து சேர்ந்து கொண்டார்.
அங்கிருந்து பிள்ளைகளின் Elocution Teacher
Ms.Neetu desilva அவர்களை சந்தித்தோம்.
மிகவும் கண்டிப்பான ஆசிரியை. மிகவும் அன்பானவர்.
அவரால்தான் ஆஷிஷும், அம்ருதாவும்
கொழும்பு IWMS -INSITITUTE OF WESTERN MUSIC AND SPEECH
பரிட்சைகளில் 100/100 மதிப்பெண்கள் பெற்று
பெருமை மிகு BMICHல் கோப்பைகள் இரண்டுமுறை
வென்றனர்.
நம்மூரில் Elocution தனியாக எடுக்கப்படுவதில்லை.
ஆங்கில இலக்கணத்துடன் சேர்ந்து எடுக்கப்படுகிறது.
ஆனால் அங்கே ப்ரத்யேக Elocution வகுப்புக்கள்
நடைபெறும்.ஆங்கில புலமை அதிகமாக இருக்க
இந்தவகை வகுப்புக்கல் உதவுகிறது.
நானும் CALSDA அமைப்பில்
அங்கீகரிக்கப்பட்ட Elocution ஆசிரியை. :))
அண்ணபூர்ணா குடும்பத்தினரும் தங்களது
வேலைகளை முடித்துக்கொண்டு ஹோட்டலுக்கு
வந்துவிட்டனர். இரவு உணவு crescatல்.
ஆனால் இந்த முறை சண்முகாஸ் அல்ல.
இலங்கை உணவு.
இது crescatல் இருக்கும் இலங்கை உணவகம்.
இங்கே கொத்து (பரோட்டா) மிக சுவையாக இருக்கும்.
சுடச்சுட கொத்து ரெடியாகிறது.
கொத்து சாப்பிட்டுவிட்டு அளவளாவியபடி காலியாக
இருந்த ரோட்டில் நடந்து ஹோட்டலுக்கு வந்தோம்.
தூக்கம் கண்களை சுழற்றியது...
தொடரும்
19 comments:
எங்கள் வதிவிட நகர் பற்றி அழகாகச் சொன்னீர்கள். ரசிக்க முடிந்தது. நன்றி.
வதிவிட நகர் //
?????அவ்வளவு தூயத் தமிழ் தெரியாது டாக்டர்.
தெளிவாகச் சொல்ல முடியுமா??
நன்றிக்கு நன்றி
இலங்கையப்பற்றி பேசச்சொன்னால் பேசிக்கொண்டே இருப்போம். உன்னை
ceylon tourist boardல் மெம்பராக்கிவிடவேண்டும் என்று தோழிகள் கிண்டல் செய்வார்கள்.
கொத்து புரோட்டாவாஆஆஆஆ
யக்கா அதெல்லாம் உண்டா ...
நாங்கள் இப்பொழுது வசிக்கும் நகரம், தற்காலிகமாக வசிக்கும் நகரை அவ்வாறு சொல்வார்கள்.
நான் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்தவன். சென்ற 10 வருடங்களாக கொழும்பில் தான்.
ஹூம்ம்ம்.
அன்பின் சகோதரி,
நீங்கள் இன்னும் கொழும்பிலா இருக்கிறீர்கள்?
நீங்கள் சொல்லியிருக்கும் crescat, galleface hotel இரண்டுக்கும் மத்தியில் Jewel Qudsi எனும் Gem shop இருக்கிறது. அங்குதான் நான் பல்கலைக்கழகம் படிக்கும்போது பகுதிநேர வேலை பார்த்தேன்.
முடியுமெனில் அங்கு போய்வாருங்கள். நான் சொன்னால் கற்கள் சகாயவிலையில் கிடைக்கும்.
போவதாக இருந்தால் அறியத்தாருங்கள். மேலதிக விபரங்கள் தருகிறேன்.
mrishanshareef@gmail.com
உலா 2ம் கலக்கல் ;))
வாங்க ஜமால்,
வெஜ் கொத்து, ஃபிஷ் கொத்து, எல்லாம் உண்டு
ஆஹா,
டொக்டர் நான்கொழும்பில் தான் 7 வருடங்கள் இருந்தேன். இப்போது இந்தியா வந்துவிட்டோம். கணவருக்கு பணிமாற்றம்.
வருகைக்கு நன்றி வித்யா
வாங்க ரிஷான்,
இப்போது இந்தியா திரும்பிவிட்டோம். 7 வருடங்கள் இருந்த இடத்தை பார்க்கும் ஆவலில் சென்ற மாதம் 1 வாரப் பயணம் அடித்தோம்.
நீங்கள் கூறியிருக்கும் Jewel Qudsi தெரியும். கற்கள் வாங்கியிருக்கிறேன்.
நன்றி
நன்றி கோபி
ஸ்மைலிக்கு நன்றி நிஜம்ஸ்
/
நானும் CALSDA அமைப்பில்
அங்கீகரிக்கப்பட்ட Elocution ஆசிரியை. :))
/
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஆசிரியரே!
:)
/
கொத்து புரோட்டாவாஆஆஆஆ
/
ஹும்ம்ம்ம்ம்ம்ம்
Dear Sister,
Pls check this
http://flyingcarpets.blogspot.com/2007/05/fazal.html
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சிவா
படித்தேன் ரிஷான்,
படிக்க படிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
நல்ல பாஸிடம் வேலை கற்பது ஆண்டவன் வரம்.
Post a Comment