கொழும்புவில் தங்கியிருந்தது புகழ்பெற்ற GALLE FACE HOTELல்.
இந்த ஹோட்டல் 1864ல் துவங்கப்பட்டது. பிரிட்டீஷார்களால்
துவங்கபப்ட்டு இன்றளவும் பலரின் விருப்பமான இடமாக
இருக்கிறது.
மறைந்த பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்தி அவர்கள்
இலங்கை வந்த போது இங்கே தான் தங்கியிருக்கிறார்.
பழைய கட்டிடம் + புது கட்டிடம் என கால் ஃபேஸ்
இந்தியப் பெருங்கடலை பார்ப்பது போல் கட்டப்பட்டிருக்கிறது.
கொழும்பிவில் இந்த ஒரு ஹோட்டல் மட்டும் தான்
இந்தியப் பெருங்கடலை பார்ப்பது போல் இருக்கும்.
இங்கே காலை உணவு அருமை. continental breakfast,
ஸ்ரீலங்கன் உணவு எல்லாம் இருக்கும். சரி ருசி.
சுடச்சுட ஆப்பம் தொட்டுக்கொள்ள போல் சம்பல் அல்லது
லுனுமிரிச்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)) Danish pastry
ரொம்பப் பிடிக்கும். இனி இதெல்லாம் எங்கே... :((
ஹோட்டலில் வைக்கப்பட்டிருக்கும் கெஸ்ட் புக்கை புரட்டிபார்த்தால்
ஒரு ஆச்சரியம். அந்த மனிதரை கட்டாயம் சந்தித்து பதிவு
எழுத வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.
நாங்கள் தங்கியிருந்தது புதிய கட்டிடத்தில். அவரோ பழைய்ய
கட்டிடத்தில் தான் பொதுவாக இருப்பாரம். காலை உணவுக்குச்
செல்லும்பொழுது பார்க்கலாம் என்றார் அயித்தான்.
நான் சென்ற நேரம் அவர் தேநீர் அருந்த போய்விட்டார்.
அவரை சந்திக்காமல் இந்தியா திரும்புவதில்லை என்று
முடிவு செய்யும் அளவுக்கு யார் அவர்??
இந்த ஹோட்டலிலேயே அதிக சர்வீஸ் போட்ட
திரு.குட்டன் அவர்கள் தான் நான் சந்திக்க விரும்பிய
மனிதர்.
மல்லு தேசக்காரர்.
தனது 17ஆம் வயதில் இலங்கைக்கு வந்தவர். தற்போது
அவருக்கு வயது 88. இந்த ஹோட்டலில் 60 வருடங்களுக்கு
மேலாக வாயில்காப்போனாக இருக்கிறார்.
காலை 5 மணி வாக்கில் மாளிகாவத்தை எனும் இடத்திலிருந்து
ஹோட்டலுக்கு வந்து விடுகிறார். (சில சமயம் நடந்தும் வருவாராம்!!!)
சிரித்த முகத்துடன் கதவைத் திறந்து விடுகிறார்.
சாமான்கள் வாங்கிக்கொண்டு வந்த போது அவரைக்கண்டேன்.
பிள்ளைகளூக்கு அவரை அறிமுகப்படுத்தி அவருடன்
பேசினோம். தமிழ் அருமையாக பேசுகிறார்.
குருவாயூருக்கு பக்கத்தில் ஒரு ஊர்தான் குட்டன் அங்கிளின்
ஊர். ஓணத்துக்கு ஊருக்கு வருவதாகச் சொன்னார்.
குட்டன் அவர்களுக்கும் இன்று ஓணம் கொண்டாடும் நண்பர்கள்
அனைவருக்கும் மனமார்ந்த ஓணம் நல் வாழ்த்துக்கள்.
Hotelன் முதல் மாடியில் மியூஸியம் வைத்திருக்கிறார்கள்.
இள்வரசர் உபயோகித்த கார், யார் யாரெல்லாம் அங்கே
தங்கியிருக்கிறார்கள் போன்ற விவரங்கள் இருக்கு.
இந்தக்காரை அப்போது 12 பவுண்டிற்கு வாங்கினாராம் பிரிட்டீஷ்
இளவரசர்.
GALLE FACE WIKIPEDIA
கட்டாயம் படிங்க.
17 comments:
குட்டன் அங்கயும் இருக்காரா :))
ஓணம் வாழ்த்துக்கள் எல்லாருக்கும் !!
பாஸ்
நல்லா திங்க முடியாம கிடக்கிற இந்த நேரத்துல சுடச்சுட ஆப்பம் கார சம்பல்
வயித்து வலிதான் பாஸ் வரப்போவுது ! :))
குட்டன் அவர்களுக்கும் இன்று ஓணம் கொண்டாடும் நண்பர்கள்
அனைவருக்கும் மனமார்ந்த ஓணம் நல் வாழ்த்துக்கள்.]]
வாழ்த்துகள் திரு. குட்டன் அவர்களே
இப்பதிவின் மூலம் குட்டன் உட்பட அனைத்து கேரள நண்பர்களுக்கும் ஓணம் வாழ்த்துகள் சொல்லிக்கொள்கிறேன்.
இவ்வளவு துரம் நம்ம உருக்கு வந்து இருக்கீங்க எனக்கு தெரியாம போச்சே.
ஒரு எட்டு வந்து பார்த்திருப்பேனே.
நம்ம நாட்ட ரொம்ப அழகா வர்ணிச்சதுக்கு ரொம்ப நன்றி அக்கா.
குட்டன் அங்கயும் இருக்காரா :))
அவங்க இல்லாத இடமேது பாஸ்
நல்லா திங்க முடியாம கிடக்கிற இந்த நேரத்துல //
வொய் பாஸ்???
வயித்து வலிதான் பாஸ் வரப்போவுது ! //
:))
வருகைக்கு நன்றி ஜமால்
வருகைக்கு நன்றி மஞ்சூர் ராசா
வாங்க சுதர்ஷினி,
அங்கே 7 வருடம் இருந்துவிட்டு பிரியமனமில்லாமல் பிரிந்து இந்தியா வந்து மறுபடியும் அனைவரையும் பார்க்க வந்தோம்.
உங்க முதல் வருகைக்கு நன்றி
நம்ம நாட்ட ரொம்ப அழகா வர்ணிச்சதுக்கு ரொம்ப நன்றி அக்கா.//
சொன்னது கொஞ்சம் தான் தங்கச்சி,
அனுபவத்தித்து தெரிய வேண்டிய இனிமை இலங்கையின் இயற்கை வளம்.
ஐய் நான் இதுக்கு முதல்லயும் வந்திருக்கேனே........
இல்ல மீ த பாஸ்ட் ஆ ?
பயணக் கட்டுரையில் அக்கா எப்பவும் சூப்பர்ஸ்டார் :)
அன்பின் சகோதரி,
இந்த ஹோட்டலில்தான் முழுக்க முழுக்க இயக்குனர் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் எனும் திரைப்படம் எடுத்தார்கள்.
நான் இதுக்கு முதல்லயும் வந்திருக்கேனே...//
ஞாபகமில்லை. அதான் முதல் வருகைன்னு சொல்லிட்டேன்
நன்றி அப்துல்லா
அப்படியா ரிஷான்,
அருமையான தகவல். ஆனால் பலச்சந்தரின் பொய் படம் பார்த்துவிட்டு பிள்ளைகள் கூட என்னமா இது என்று கேட்டார்கள்.
ஒரு காட்சி காலியில் இருக்கும் அடுத்த காட்சி நுவரேலியா...
ஒரு நொடியில் எப்படி நுவரேலியா? என பிள்ளைகளுக்கு ஆச்சரியம்.
:)))))))))
உங்கள் பரந்த மனது உங்கள் எழுத்துகளில் தெரிகிறது தோழி.!
நன்றி ஃப்ரெண்ட்
Post a Comment