பூர்த்தி அடையாதுன்னு நினைக்கற அளவுக்கு
சூப்பர் ஹோட்டல் இது.
THE MANGO TREE இது தர்மபால மாவத்தையில்
இருக்கும் இந்திய உணவகம்.

இந்த உணவின் சுவை எங்கேயும் கிடைக்காது!!!
வட இந்திய உணவகம். பஞ்சாபிக்காரர் ஒருவர்
வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார்.
அந்த சுவை, தரம் இந்தியாவில் கூட எந்த ஹோட்டலிலும்
நாங்கள் சாப்பிட்டதில்லை. இங்கே ஹைதையில் இருக்கும்
அங்கித்தி கூட அந்த சுவையோடு ஒப்பிடுகையில் பரவாயில்லை ரகம் தான்.
ட்ரைஃப்ரூட் லஸ்ஸி, பனீர் டிக்கா, தால் மக்கானி
ஒவ்வொன்றும் ஸ்ஸ்... வாயில் நீர் ஊற வைக்கும்.

ஒரு ஹோட்டலின் தரம் நல்லா இருக்கு என்பதற்கு
அர்த்தம் வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை.

வயது முதிந்தவர்கள் முதல் சின்னக்குழந்தை வரை
இந்த ஹோட்டலை விரும்புவார்கள். நாங்கள் போயிருந்த போது
வீல் சேரில் ஒரு முதியவர் உணவு உண்ண வந்திருந்தார்.
மாங்கோ ட்ரீயில் சாப்பிட வேண்டும் என்ற அவரது
விருப்பத்திற்காக குடும்பத்தினர் அழைத்து வந்திருந்தனர்.

இந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் பஞ்சாபிக்காரர்
நமக்கு நண்பர் தான். சுற்றிப்பார்க்க வந்த போதும்
விருந்து்ண்ண தன் ஹோட்டலுக்கு வந்ததை பெருமையாக
நினைப்பதாகச் சொன்னார்.
பிள்ளைகள் அவருடன் பேசி உணவு மிகவும் ருசியாக
இருப்பதாகவும் இந்தியாவில் அதுவும் ஹைதையில் ஒரு
ப்ராஞ்சும், நைரோபியில் ஒரு ப்ராஞ்சும் ஆரம்பிக்கச்
சொல்லி கேட்டார்கள். பிள்ளைகள் பெரிதும் விரும்பியது
அவருக்கு மிக மிக திருப்தி.
THE MANGO TREEயின் இந்தியாவுக்கு ஆஷிஷும், நைரோபிக்கு
பானுவும் ப்ராண்ட் அம்பாசிடர்கள் ஆக்கிடலாம் என்றார் அவர்.
:)))
இனிதான பயணம், இனிமையான உணவோடு முடிக்க எண்ணம்.
அதான் கிளம்புவதற்கு முதல் நாள் இரவு மாங்கோ ட்ரீ
விஜயம்.
THE MANGO TREE WEBSITE
Address:
THE MANGO TREE
no.82,Dharmapala mavatha,
colombo-03,
Srilanka
Tel.94 11 5819790/1
15 comments:
அடடா படத்தை பார்த்ததும் பசிக்குதே!!! சூப்பர்!!!
என்னடா சாப்பாடு பற்றி ஒண்ணும் தகவலில்லையே என நினைத்தேன். நல்ல பசி நேரத்தில் வருகிறது பாருங்கள்.. அவ்வ்வ்..
நோன்பு நேரத்துல பதிவப்பாரு
:))))
வாங்க அபி அப்பா,
மீ த பர்ஸ்டா வந்திருக்கீங்க. நன்றி
சாப்பாடு பற்றி தகவல் இல்லாமலா ஃப்ரெண்ட். :)))
வருகைக்கு நன்றி
நோன்பு நேரத்துல பதிவப்பாரு
நோன்பு நேரத்துலயும் பதிவ பாத்ததுக்கு தாங்கஸ்
mango tree பத்தி நினச்சாலே பசிக்கும் , அவ்வளவு ருசி.
ஞாபகப்படுத்திடிங்க இன்னைக்கு போக போறோம் :)
கொடுத்துவச்சவங்க சுதர்ஷிணி நீங்க.
:))))))
உங்கள் இலங்கைப் பயணம் குறித்து எல்லாப் பதிவுகளையும் படித்தேன். நல்லதொரு வாசிப்பு அனுபவம் மற்றும் ஒருவகையில் "மலரும் நினைவுகள்".
மேங்கோ ட்ரீ இருக்கும் பித்தளை சந்தி (ஜங்ஷன்) அருகே உள்ள ஒரு அலுவலகத்தில் சில காலங்கள் வேலை பார்த்திருக்கிறேன். அப்போது ஓரிரண்டு முறை அங்கே விஜயம் செய்திருக்கிறேன். சுவை சூப்பர் என்றாலும், ஒரு பிரியாணி 500 ரூபா என பர்ஸை பதம் பார்த்ததால் அதிகம் நுழைவதில்லை.
2006 என்று நினைக்கிறேன்.. அந்த பித்தளை சந்தியிலேயே நடந்த ஒரு மோசமான (??) நிகழ்வு இன்னும் ஞாபகம் உள்ளது.
;))
இந்த மாதிரி படிக்கும் போது எல்லாம் என்னாமே தெரியலைக்கா ஒரே புகையாக வருது...வாயில இருந்து ;))
வாங்க புட்டியன்,
மேங்கோ ட்ரீ விலை அதிகம் தான் ருசியும் அதிகம் என்பதால் எப்பாவாவது அல்லது ஏதும் விசேட நாட்களில் செல்வதுண்டு.
எங்கள் திருமண தினத்திற்கு டேபிள் புக் செய்யப்போவதாக இருந்தேன். அயித்தானும் ஹோட்டலும் 1 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தார்.
அப்போதுதான் குண்டு வெடிப்பு சம்பவம்!!! மயிரிழையில் இருவரும் உயிர் தப்பினோம். :))
புகை வந்துச்சா அப்பாடி சந்தோஷமா இருக்கு கோபி.
:))))))))))))))))
இப்படியே...
சாப்பாட்டு ஐட்டமா பொளந்துகட்டிட்டு
எங்க வயித்..வாயெரிச்சலைக்கொட்டிக்கிறதே
பொழப்பாப்போச்சு!
:)
நடத்துங்க நடத்துங்க!
:))
வயித்..வாயெரிச்சலைக்கொட்டிக்கிறதே
பொழப்பாப்போச்சு!//
அப்பாடி சந்தோஷமா இருக்கு
:)))))))
aaaha ensoy maadi
Post a Comment