சென்ற மாதம் வரை வறண்டு போன நிலங்கள்,
வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தன.
விவாசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக
செய்திகள்.
இப்போதோ வரலாறு காணாத வெள்ளம்.
மந்த்ராலயம் கோவில் மூழ்கிவிட்டது. கர்ணூல் மற்றும் மெகபூப் நகர்
பெரும் பாதிப்புக்குள்ளாகியது. விஜயவாடா அபாய நிலையில் இருக்கிறது.
ஸ்ரீசைலம் நீர்த்தேக்கமும் அபாய நிலையில்.
என்னே இயற்கையின் ஆட்டம்!!!!!!!
************************************************
சனிக்கிழமை இரவு 10.30 மணிவாக்கில் ஒரு போன்
வந்தது. வெள்ளத்த்தில் பாதிக்கபப்ட்டவர்களுக்கு
தேவையான சாமான்களை நாளை ஹெலிகாப்டரில்
அனுப்புகிறோம். உங்கள் வீட்டில் பழைய நல்ல
துணிகள் இருந்தால் கொடுங்கள் என்றார் தோழி.
அவரது கணவர் தனது போலிஸ் நண்பரி உதவியோடு
இந்த நற்செயலை செய்வதாகச் சொன்னார்.
எங்கள் அப்பார்ட்மெண்டில் அனைவரும் உடனடியாக
ரெடி செய்து கொடுத்தார்கள். 1 வாரம் முன்புதான்
துணிமணிகள் பழையதானவற்றை
அநாதை ஆசிரமத்தில் கொடுக்கலாம் என்று
எடுத்து வைத்திருந்தேன். இரண்டு பைகள் நிறைய்ய
துணி. மொத்தம் 15 பைகள் நிறைய்ய துணிகள்
சென்றது.
இதில் முக்கியம் எங்கள் அப்பார்மெண்ட் பிள்ளைகள்
அந்த இரவு நேரத்தில் வீடு வீடாக சென்று வாங்கிக்
கொண்டு போய் தோழியின் வீட்டில் கொடுத்ததுதான்.
ஆண்டவனருள் அந்த பிள்ளைகளுக்கு எப்போதும்
இருக்கட்டும்.
****************************************
15 நாளுக்கு முன் டீவியில் அந்த செய்தியை
பார்த்து அதிர்ந்து போனேன். காதலை ஏற்க
மறுத்த பெண் குளித்துக்கொண்டிருந்த பொழுது
அவளது கழுத்தில் வெட்டியிருக்கிறான் பாதகன்.
தடுக்க வந்த பெற்றோரையும் கத்தியால்
குத்தி கொன்றிருக்கிறான்.தாய் அங்கேயே
இறந்துவிட, உயிருக்கு போராடும் தந்தை...
மஹா கொடுமை... இது.
அவரை படம் பிடிப்பதை விட்டு அருகில்
இருக்கும் ஏதாவதொரு மருத்துவமனையில்
சேர்த்திருந்தால் முதலுதவி கிடைத்து
உயிர் பிழைக்க வாய்ப்பிருந்திருக்கும்.
பாவம் அந்தப் பெண் கழுத்தில் காயத்தோடு
அநாதையாக நிற்கிறாள்.
கலி முத்தியது என்பது இது தானோ!!!!
***********************************
கணேஷா விசர்ஜன் தான் பார்த்திருக்கிறேன்.
தசரா அன்று துர்கா விசர்ஜன் பார்க்கக் கிடைத்தது.
ஷமீர் பேட் ஏரியில் துர்கா விசர்ஜன் படம்.
9 comments:
mic testing
நீங்க மைக் டெஸ்ட் பண்ணியது பெங்களூர் வரை கேட்டு வருகிறேன்.
இயற்கையின் போக்கை என்னவென்று சொல்வது:(?
----
உதவும் பழக்கத்தைக் குழந்தைப் பருவத்திலேயே கொண்ட இவர்களால் உருவாகும் அடுத்த தலைமுறை நன்றாக இருக்கும் என நம்பலாம்.
----
வாழ்க அந்த குழந்தைகள்.
நீங்க மைக் டெஸ்ட் பண்ணியது பெங்களூர் வரை கேட்டு வருகிறேன்.//
:))))))))வாங்க ராமலக்ஷ்மி,
உதவும் பழக்கத்தைக் குழந்தைப் பருவத்திலேயே கொண்ட இவர்களால் உருவாகும் அடுத்த தலைமுறை நன்றாக இருக்கும் என நம்பலாம்.//
ஆமாம்
வாங்க அப்துல்லா,
வாழ்த்தைச் சொல்லிடறேன்
மழையா...இங்க கொளுத்துது..
இங்க கொளுத்துது//
கொளுத்தாட்டிதான் நியூஸ் :)))))))
வாழ்க அந்த குழந்தைகள்.
சொல்லிடறேன் சிவா
Post a Comment