வலி.. வலி..வலி வலி என் வாழ்வில் ஒரு பங்கு ஆகிவிட்டது.
வலியோடு வாழ்வது எப்படி? என்று பழக ஆரம்பித்திருக்கிறேன்.
அப்படி என்னதான் வலி????
என் முந்தைய பதிவு இங்கே.
ஸ்பாண்டிலைடிஸ் என்று சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
ட்ராக்ஷன், பிசியோதெரபி கையை அசைக்க உதவியது.
மெல்ல மெல்ல முன்னேற்றம் வந்தது. ஆனாலும்
கைகளில் வலி குறையவில்லை.
மேலும் பரிசோதித்து பார்த்த மருத்துவர் சொன்னது
Fibromyalgia - பேரெ வாயில் நுழையவில்லை எனக்கு.
ஃபைரோமயால்ஜியா. இது வரை இதைப்பற்றி
கேள்விபட்டதுமில்லை.
வலி வலி என எப்போதும் வலி இருந்து கொண்டே
இருக்கும். அதிகம் பெயின் கில்லர் எடுத்துக்கொள்ளக்
கூடாது என்பதால் வலி வரும்போது மேலே நிவாரனி
பூசி, வெந்நீர் ஒத்தடம் தான். தவிர நரம்புகளுக்கு
வலு தரும் மருந்து எடுத்துக்கொள்கிறேன்.
Fibromyalgia - எப்படி எதனால் வருகிறது என்று
கண்டுபிடிக்க முடியாத ஒன்றாம்.நோயின்
அறிகுறி பற்றிய செய்திக்கு இங்கே கி்ளிக்கவும். கீழே படத்தில்
பாருங்கள். இந்த இடங்களில் எல்லாம் வலி இருக்கும்.
தலை சுற்றி மயக்கம் வரும். குனிந்து ஏதும்
செய்யப்போனால் ”டமால்” என் விழுந்துவிட நேரம்.
படிக்கட்டுகளில் ஏறி இறங்குதல் பெரிய விடயம்.
எனக்கு வலது கையில் வலி என்பதால் கையை
உபயோகிப்பது குறைவாகிப்போனது.
தூக்கம் நல்ல நாளிலேயே சரியாக
வராது. இந்த நிலையில் நிம்மதியான
தூக்கம் இராது. கொடுக்கப்படும்
மருந்தில் தூக்கம் வரவழைக்கும் காரனிகள்
உண்டு. தூக்கம் ஒருவகையான மருந்தாகிறது.
அதிக தூக்கம் பழக்கமேயில்லாத ஒன்று
கஷ்டமாக இருக்கிறது.
மருந்துடன், உடற்பயிற்சி அதுவும் ஸ்ட்ரெட்சஸ்
என்ப்படும் வகை மிக அவசியம் என
மருத்துவர் பரிந்துரை செய்திருக்கிறார்.
1 மாதத்தில் கொஞ்சம் முன்னேற்றம்.
அதிகம் வீட்டு வேலை(பாத்திரம் கழுவுதல்,
பெருக்குதல்) காய்கறி வெட்டுதல் போன்றவை
செய்யாமல் இருந்தால் உடற்பயிற்சியின் உதவியோடு
வலி குறைவாக இருக்கிறது.
சோம்பி இருக்க முடியாமல் மெல்ல மெல்ல
என் வேலைகளை செய்கிறேன். ஆனால்
முன்புபோல் செய்யமுடியவில்லையே என்று
மன வருத்தம். மன வருத்தம் மேலும் வருத்தத்தை
தரும் என்று சொல்கிறார்கள். அதனால் மனதை
மாற்ற பாட்டு, புத்தகம் எப்போதாவது பதிவு என
இருக்கிறேன்.
இந்த நேரத்தில் நம் ராமலட்சுமியின் இந்த கவிதை
படித்து பாருங்கள். எனக்கு ஊட்டம் தரும் விதமாக
இருக்கிறது.
ஒரு வேண்டுகோள்:
Fibromyalgia பற்றி அதிகம் சொல்லக் கூடியது
நம் தமிழ்த்துளி தேவா டாக்டர் தான்.
உங்களிடம் எனது அன்பு கோள் இதுதான்
தேவா சார். இந்த வலியைப் பற்றி தமிழில்
பதிவு எழுதுங்கள். பலருக்கு இந்த வலி
இருக்கிறது என்றே தெரியாமல் கழுத்தெலும்பு
தேய்வுக்கு மருத்துவம் தவறாக கொடுக்கப்படுகிறதாம்.
ப்ளீஸ்...
வலைத்தளத்தில் தேடினால் நிறைய்ய விடயங்கள்
கிடைத்தது. எப்படி எதிர்கொள்வது? போன்ற
விடயங்கள். என் மருத்துவர் சொன்னது Fibromyalgia
வுக்கு இந்தியாவில் அதிக மருந்துகள் அல்லது
மருத்துவ முறை இல்லை. விடாமல் உடற்பயிற்சி
முக்கியம். அவர் சொன்ன தகவல் வலிகுறைய்ய
தாய்ச்சி கற்றுக்கொள்வார்களாம்ம். (தாய்ச்சி ஒருவகை
கராத்தே பயிற்சி)Taichi india
”நானும் தாய்ச்சி கத்துக்கறேன்”என்று அயித்தானிடம்
கேட்டேன். உடனே ஆஷிஷ், அம்ருதாவைக்கூப்பிட்டு
“கண்ணுங்களா! எப்பவும் என் கூடவே இருங்க.
என்னிய பத்திரமா பாத்துக்கங்க. நீங்க டீவி பாக்கறப்ப
ஏதும் சத்தம் கேட்டா கவனமா இருங்க”ன்னு சொன்னார்.
பசங்க,”ஏன்பா! என்னாச்சு”ன்னு கேட்க,
”அம்மா தாய்ச்சி கத்துக்கப்போறாங்களாம்!!!!” என்னை
நீங்க தான் காப்பத்தணும்னு” கிண்டல் அடிச்சு பயந்து
போயிட்டார்.
அயித்தான் ரொம்பவே பயந்து போயிருப்பதால்
தாய்ச்சி கற்றுக்கொள்வதை தள்ளி வைத்து
யோகா மட்டும் செய்வதாக முடிவெடுத்திருக்கிறேன்.
:)))))))))
24 comments:
வலியோடு வாழ மனோவலி(மை) ரொம்ப அவசியம்.
எனக்கு நேர்ந்த கார்விபத்துக்குப் பிறகு இந்த நாலே முக்கால் வருசமா தினமும் மருந்தோ மருந்துதான்.
வலியை மறக்கடிக்கும் ஒருவித போதைக்கும் இப்போ அடிமையா ஆகிட்டேன். எழுதாமலோ தமிழ்மணம் பார்க்காமலோ, பதிவுகளைப் படிக்காமலோ ஒரு நாளும் இருக்க முடியறதில்லை:-))))
ஏதேச்சையாக நான் இன்று இட்ட பதிவு உங்களுக்கு ஊட்டம் த்ந்ததில் மகிழ்ச்சி. பயிற்சிகளைத் தொடருங்கள். அதே சமயம் தேவையான ஓய்விலும் கவனம் கவனம்:)!
நோயைப் பற்றிய அறிகுறிகளுக்கான சுட்டி பயனுள்ளது. நன்றி. டாக்டர் தேவா உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவாராக!
யோகாவும் பயிற்சிகளும் சீக்கிரமே உங்களைக் குணப்படுத்த எங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு.
me the 1st aa ??
தெரியலை
கை வலி இன்னுமா படுத்துது. எதேதோ புதுப்புது பேர்லாம் சொல்லி பயமுறுத்துறீங்க :((
/
”நானும் தாய்ச்சி கத்துக்கறேன்”என்று அயித்தானிடம்
கேட்டேன். உடனே ஆஷிஷ், அம்ருதாவைக்கூப்பிட்டு
“கண்ணுங்களா! எப்பவும் என் கூடவே இருங்க.
என்னிய பத்திரமா பாத்துக்கங்க. நீங்க டீவி பாக்கறப்ப
ஏதும் சத்தம் கேட்டா கவனமா இருங்க”ன்னு சொன்னார்.
பசங்க,”ஏன்பா! என்னாச்சு”ன்னு கேட்க,
”அம்மா தாய்ச்சி கத்துக்கப்போறாங்களாம்!!!!” என்னை
நீங்க தான் காப்பத்தணும்னு” கிண்டல் அடிச்சு பயந்து
போயிட்டார்.
/
இதுல எங்க கிண்டல் இருக்கு ஒன்னும் புரியலையே :))))))))
(ஒரு ரங்கமணியோட பயம் இன்னொரு ரங்கமணிக்குதான் தெரியும்)
விரைவில் பூரண குணம் பெற வேண்டுகிறேன்.
ஆஹா இந்த முறை மீ த பர்ஸ்டா நீங்களா டீச்சர், வெல்கம்.
//வலியை மறக்கடிக்கும் ஒருவித போதைக்கும் இப்போ அடிமையா ஆகிட்டேன். எழுதாமலோ தமிழ்மணம் பார்க்காமலோ, பதிவுகளைப் படிக்காமலோ ஒரு நாளும் இருக்க முடியறதில்லை:-))))//
எனக்கும் இது ரொம்ப பிடிக்கும். அதிக நேரம் உட்கார்வது, டைப் அடிப்பது கஷ்டம். மவுஸை அதிக நேரம் நகர்த்தி படித்தல் கூட வலியை அதிகரிக்க செய்வதனால் ரொம்பவே கஷ்டமா இருக்கு.
யோகாவும் பயிற்சிகளும் சீக்கிரமே உங்களைக் குணப்படுத்த எங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு.//
வாங்க ராமலட்சுமி,
அப்ப தாய்ச்சி கத்துக்க வேண்டாம்னு சொல்றீங்க. ஸ்ரீராமுக்கு சப்போர்டா இன்னொரு ஆள். :)))))
கை வலி இன்னுமா படுத்துது.//
பொதுவா நான் கைவலின்னு சொல்லிக்கிட்டாலும் பின் கழுத்து, தோள்பட்டை, நடு முதுகுன்னு வலி வரும்.
அது பாட்டுகு அது நான் பாட்டுக்கு நான்
:))))))
(ஒரு ரங்கமணியோட பயம் இன்னொரு ரங்கமணிக்குதான் தெரியும்)//
ஆஹா....
நன்றி சூர்யா
விரைவில் பூரண நலம் பெற வேண்டுகிறேன் அக்கா.
உங்கள் கைவலி குணமாக ஆரோக்கியம் மீண்டு வர உள்ளன்போடு பிரார்த்திக்கிறோம்
அடடா...புதுகை பதிவெல்லாம் எங்கே ஓடப் போகுது????மெதுவா அப்புறமா படிக்கலாம்....முதல்லெ உடம்பைக் கவனிங்க....
//யோகா மட்டும் செய்வதாக முடிவெடுத்திருக்கிறேன்.//
நிச்சயமாக நல்ல பயனைத் தரும்.
வாங்க கோமா,
மிக்க நன்றி
பதிவெல்லாம் எங்கே ஓடப் போகுது????மெதுவா அப்புறமா படிக்கலாம்....//
அது சரிதான். ஆனா எதுவும் செய்யாமல் சோம்பி, தூங்கி இருக்க முடியலை அதான்.
உங்க அன்புக்கு நன்றி அருணா
வாங்க நிர்ஷான்
மிக்க நன்றி
வாங்க நிர்ஷான்
மிக்க நன்றி
வாங்க நிர்ஷான்
மிக்க நன்றி
இவ்வளவு சீரியஸாக இருக்கும் என நான் எண்ணவில்லை.கவனமாக இருங்கள். தகுந்த உடற்பயிற்ஸி, உணவு, மருந்து எடுத்துக்கொள்ளுங்கள். மனமாற்றங்கள் தரும் விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். விரைந்து குணம்பெற வாழ்த்துகள் ஃப்ரெண்ட்.
நானும் இம்புட்டு சீரியஸா இருக்கும்னு நினைக்கலை. அதுவாட்டுக்கு நடக்குது.
வருகைக்கு நன்றி
அதிகம் வீட்டு வேலை(பாத்திரம் கழுவுதல்,
பெருக்குதல்) காய்கறி வெட்டுதல் போன்றவை
செய்யாமல் இருந்தால் உடற்பயிற்சியின் உதவியோடு
வலி குறைவாக இருக்கிறது.
]]
சரிதான் - ஆனா இத யார் செய்றது ...
சரிதான் - ஆனா இத யார் செய்றது ...//
ஆள் போட்டிருக்கு. அவங்க வராதப்ப வெளியில வாங்கி சாப்பிட வேண்டியதுதான்.
:(((((
Post a Comment