நம்ம நேரம் இப்படியாகிடிச்சே...ன்னு தான் புலம்பிங்.
அப்படி என்ன நேரம்???
நேரம் 1: அப்பா மகள் கூட்டணி எல்லார் வீட்டிலும்
நடப்பதுதான். இது ஏன் இப்படின்னு முன்னாடி
ஆராய்ச்சிஎல்லாம் செஞ்சு பதிவு போட்டிருந்தேன்.
என் பிள்ளைகள் இருவருமே அப்பா கோண்டாகத்தான்
இருந்தார்கள். எங்கேயிருந்து வந்த மாற்றம் என்று புரியவில்லை.
ஆஷிஷ் என் பக்கம் சாய ஆரம்பிக்க அம்ருதா அப்பா
பக்கம்.
அவர்கள் இருவரும் சென்னைக்காரர்கள், நாங்கள்
இருவரும் புதுகைக்காரர்கள் என்ற ரீதியில் மட்டுமே
கலாய்ப்புகள் நடந்தன. வர வர அப்பாச் செல்லம்
அதிகமாக தலைக்காட்ட நானும் மகனும் அடக்கி
வாசிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது!!!!
ஒரு நாள் ஏதோ பேசிக்கொண்டிருந்த பொழுது அயித்தானிடம்
”ரொம்ப ஓவராத்தான் போய்கிட்டு இருக்கு.
ரொம்ப தான் பொண்ணுன்னு செல்லம் கொடுக்கறீங்க,
கல்யாணம் செஞ்சு அனுப்பும்போது என்னை விட
நீங்க தான் அழப்போறீங்க. ஜாக்கிரதை”ன்னு சொன்னேன்.
“நான் என் பொண்ணை எல்லாம் கல்யாணம் செஞ்சு
அனுப்ப மாட்டேன். பொண்ணும் மாப்பிள்ளையும்
என் கூடத்தான் இருப்பாங்க. அதுக்கு ஒத்துக்கறவங்க
என் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கட்டும்” இது அயித்தான்.
“ஆஹா! அப்ப என்னை மட்டும் ஏன் கூட்டிகிட்டு வந்தீங்க?
நீங்க வீட்டு மாப்பிள்ளையா வந்திருக்கலாம்ல??””
“அப்ப உங்கப்பா கூப்பிடலை அதானால நான்
உன்னை கூட்டிகிட்டு வந்தேன்!!!”” அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
புலம்பாம என்ன செய்ய????
*******************************************
சேலை கட்டி மகள் நின்றால் எந்த தகப்பனுக்கும்
உள்ளுக்குள் ஆனந்தம் தான். ஆனால் அந்த
ஆனந்தத்துக்கும் மேலே பயம் வரும். மகளை
பத்திரமாக கரை சேர்க்க வேண்டுமே என்ற பயம்.
அதனாலேயே அப்பா நான் சேலை கட்டினால்
என்னுடம் பேச மாட்டார்!!!(அப்போது) பாவாடை,
தாவணி, பாவடை சட்டை ஓகே, நோ சேலை.
கல்லூரிக்கு சேலை கட்ட வேண்டிய பொழுது
அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி பர்மிஷன் வாங்குவேன்.
அம்மாவுக்கு ஆரம்பிக்கும் தலைவலி. அம்மாவின்
நல்ல புடவைகளுக்கு ப்ளவுஸ் தைத்து வைத்துக்கொள்வேன்.
வேலைக்கு போகும் அம்மா,”இன்று தனக்கு எந்த
புடவை கிடைக்குமோ!” என்று யோசிக்கும் அளவுக்கு
படுத்துவேன். நிறைய்ய திட்டியிருப்பாரோ என்னவோ!!!
10 வயதாகும் என் மகள் என் புடவையை எடுத்து
வைத்துக்கொண்டு தனக்கு ப்ளவுஸ் தைத்துக்கொடுக்கச்
சொல்கிறாள்!!!
துணிகளை மடித்து வைக்கும் பொழுது புடவையாக
இருந்தால்,” அப்படியே இருக்கட்டும்! நான் கட்டி
பாத்துட்டு அப்புறம் மடிச்சு வைக்கலாம்!” என்கிறாள்.
கட்டிக்கொண்டு கண்ணாடி முன் அழகு பார்த்து,
அப்பாவுக்கு காட்டி,” சூப்பர்டா செல்லம்”
பாராட்டு வாங்கிய பிறகு தான் புடவை கைக்கு வரும்.
(அயித்தானின் லுங்கி, செருப்பு ஆஷிஷ் அபேஸ்
செய்ய ஆரம்பிச்சிருப்பதும் நடக்குதுன்னாலும்)
முற்பகல் செய்யின் பிற்பகல் இல்ல அதுக்கும் முன்னாடியே
ஆப்பா வரும்..
************************************************
இந்தக் கைவலி வந்தாலும் வந்துச்சு, வீட்டுல என் நிலமை
ரொம்பவே கஷ்டமாகிடுச்சே :((
அடிக்கடி ஊருக்கு போகும் வேலை என்பதால் தான்
ஊரில் இல்லாத பொழுது என்னை கவனிக்க தன்
ஒற்றர் படையிடம்(ஆஷிஷ் அம்ருதா தான்) சொல்லிவிட்டு போயிருக்கிறார்
அயித்தான். நான் ஏதாவது வேலை செஞ்சா உடன்
ஆஷிஷோ அம்ருதாவோ கையை ஆட்டிக்கொண்டு
“நாநாவிடம் சொல்றேன், சொல்றேன். துணியை
எதுக்கு மடிக்கணும், காய்கறி எதுக்கு தூக்கிகிட்டு
வரணும்” என்று கோள் மூட்டத் துவங்கியிருகிறார்கள்.
அப்பா வந்ததும் சொல்வது இல்லாட்டி போன் செஞ்சாவது
போட்டுக்கொடுத்துவிடறாங்க.:))
என்னத்த புலம்பி என்னத்த செஞ்சுன்னு புலம்பிக்கினே
இருக்கேன். பதிவெழுத கூட விடமாட்டேங்கறாங்கப்பா..
32 வயசுக்கு மேல தீபாவளி எப்படி இருக்கும்னு
நண்பர் நர்சிம் பதிவுல கேட்டிருந்தார்.
இப்படி புலம்பிக்கினு, பிள்ளைங்க செய்வதை
ரசிச்சிக்கினு வாழ்க்கை ஓடும். இதுவும் ஒரு சுகம் ஃப்ரெண்ட்.
18 comments:
படிச்சிட்டு வரேன்.
:))
அழகு :)
வாங்க சூர்யா வாங்க
ஸ்மைலிக்கு நன்றி சிபி
அழகு :)//
மருமக பிள்ளைங்களைப்பத்தின பதிவாச்சே. இப்படி சொல்லாட்டித்தான் அதிசயம்.
ஆமாம்! ஃபிரண்ட்.
ஆனந்தப் புலம்பல்கள் அடுக்கடுக்காய் தொடரட்டும்:)))!
நன்றி ஜமால்
//சேலை கட்டி மகள் நின்றால் எந்த தகப்பனுக்கும்
உள்ளுக்குள் ஆனந்தம் தான். ஆனால் அந்த
ஆனந்தத்துக்கும் மேலே பயம் வரும்.//
தென்றல் அப்பா ஸ்பீக்கிங்க் ப்ரம் புதுகை :- சாதாரண சேலை கட்டுனா பிரச்சனையில்ல ! பட் என் பொண்ணு கட்டுனா தினசரி பட்டுபுடவையில்ல கட்டுவேன்னுன்னு சொல்லும் அவ்வ்வ்வ்வ்வ்வ்
பொண்ணுங்க அம்மாவின் சேலையை உடுத்திக் காட்டும் போது ஏற்படும் உணர்வை என்ன சொல்வது????
என் பொண்ணு கட்டுனா தினசரி பட்டுபுடவையில்ல கட்டுவேன்னுன்னு//
பாஸ் நாங்க பட்டு புடவை கட்டாத பார்ட்டி பாஸ். :)))
பொண்ணுங்க அம்மாவின் சேலையை உடுத்திக் காட்டும் போது ஏற்படும் உணர்வை என்ன சொல்வது????//
குட்டி பாப்பா வளரத்துவங்கிவிட்டாள் என்பதால் சந்தோஷமா, பெண்மைக்கே உண்டான சங்கடங்களை சந்திக்க அவளை தயார்படுத்தவேண்டும் என்ற கஷ்டமா என்னவோ சொல்லமுடியாத சந்தோஷ துயர கலவையான உணர்வுன்னு நினைக்கிறேன்.
நன்றி ராமலக்ஷ்மி
/
இப்படி புலம்பிக்கினு, பிள்ளைங்க செய்வதை
ரசிச்சிக்கினு வாழ்க்கை ஓடும். இதுவும் ஒரு சுகம் ஃப்ரெண்ட்.
/
இதுவல்லவோ சுகம்?
:)
ஒற்றர்படை சரியா வேலை செய்யறதில்லை போல நிறைய பதிவு வருதே??
take care of your health akkaa.
கூத்தடிச்சிட்டு இருக்கீங்க.
ஒற்றர்படை சரியா வேலை செய்யறதில்லை போல நிறைய பதிவு வருதே??//
:)) கைவலி கொஞ்சம் பரவாயில்லை சிவா. தவிரவும் எதுவும் செய்யாமல் இருப்பது போர் அடிக்க தினம் 1 மணி நேரம் மட்டும் கணினியில் உட்கார அயித்தான் பர்மிஷன் கொடுத்திருக்காக
கூத்தடிச்சிட்டு இருக்கீங்க.//
யெஸ்ஸு ஃபண்டூ
Post a Comment