கிட்டத்தட்ட 4 மாதத்திற்கு மேலாக கைவலி என்னை
பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறது நண்பர்கள் எல்லோருக்கும்
தெரியும்.
ஸ்பாண்டிலைடிஸ் என்று ஆரம்பித்து
பிசியோதெரபி எல்லாம் செய்தும் குறையாத
வலியால் எனக்கு வந்திருப்பது பைப்ரோமயாலஜி என
முடிவு செய்து அதற்கும் மருத்துவம் நடந்து
கொண்டிருந்தது. ஒருவருக்கு இருவராக அதை
கன்பர்ம் செய்து மருந்துகள் சாப்பிட்டுக்கொண்டு
வலியோடு வாழ்வதெப்படின்னு யோசிச்சுகிட்டு
இருந்தேன்.
குறையாத வலியில் அவதிப்படும் என்னைப்பார்த்த
பக்கது வீட்டு டாக்டர் பைப்ரோமயாலஜிக்கு ப்ரத்யேக
கவுன்சிலிங் உண்டு. வலியை எதிர்கொள்ள அது உதவும்னு
சொல்லி தான் வேலை செய்யும் KIMS- KRISHNA INSTITUTE OF
MEDICAL SCIENCE -SECUNDERABADக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே ரிமுடாலஜி மருத்துவர் சரத்சந்த்ரா அவர்களை
சந்தித்து என் வலிகளைப்பற்றிச் சொல்ல பெரிய
லிஸ்ட் டெஸ்ட்கள் எழுதிக்கொடுத்தார். ஆஹா!!
அப்படின்னு நினைச்சேன்.
அயித்தான் விடாமல் வம்படியாக அழைத்துச் சென்றார்.
4 சிரிஞ் ரத்தம் பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டார்கள்.
அடுத்தநாள் ரிப்போர்ட் வாங்கி மருத்துவரிடம் சென்றபோது
அவர் சொன்னது எனக்கு பயங்கர அதிர்ச்சி.
“உன் வலிக்கு காரணம் பைப்ரோமயாலஜி அல்ல. நான்
சந்தேகப்பட்டது போல் விட்டமின் டி குறைபாடு” என்று
சொல்லி இளவயதில் வலியும் வேதனையும் நீ படக்கூடாது
என்று சொல்லி விட்டமின் டீ சப்ளிமெண்ட் மருந்துகள்
கொடுத்திருக்கிறார்.
2 மாதத்திற்கு பிறகு மறுமுறை வந்து காட்டச் சொன்னார்.
வாரத்துக்கு 4 நாள் வெயில் மேலே பட நிற்க வேண்டும்.
தினமும் கடைக்கு,அந்த வேலை இந்த வேலை என்று
வெயிலில் போய் வரும் எனக்கே விட்டமின் டீ குறைபாடு
என்றால் வீட்டிலேயே அடைந்து கிடைக்கும் தங்கமணிகளே
கவனமா இருங்க.
விட்டமின் டீ குறைஞ்சா என்னவாகும்னு தெரிஞ்சிக்க
நெட்ல போட்டா மேட்டர் கொ்ட்டுது.
இம்புட்டு ஆகும்.
மொத்த உடம்பும் வலி. அதிலும் எலும்பு வலி.
கால்சியம் சத்து குறைந்து விடுகிறது. அதிலும் பெண்களுக்கு
மார்பகப்புற்று நோய் வருவதற்கு இந்தக் குறைபாடும் ஒரு
காரணம்.
எச்சரிக்கை பதிவுன்னு சொன்னதன் காரணம்
இந்தக் குறைபாடு பற்றி பலருக்கும் தெரிய
சாத்தியமில்லை. தேவையான மருந்தோடு
தகுந்த உணவும் முக்கியம்.
காட்லீவர் மாத்திரையில் அதிக அளவு
விட்டமின் டீ கிடைக்கிறது.
சோயா பால், சோயா பொருட்கள் மிக்க நலம்.
பத்திரமா பாத்துக்கோங்க. சீக்கிரம் என் வலி
குறைந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி
உங்க எல்லோரையும் பதிவு போட்டு
ஒரு வழி ஆக்கிடும் நாள் ரொம்ப தூரத்துல
இல்லீங்கோ.
:))))))))))))))
27 comments:
//இளவயதில் வலியும் வேதனையும் நீ படக்கூடாது//
சந்தடிசாகுல இப்படி பொய் சொல்லுறீங்களே அங்கிள்.
//வாரத்துக்கு 4 நாள் வெயில் மேலே பட நிற்க வேண்டும்.//
வெயில் மேல நீங்க எதுக்கு படுறீங்க தள்ளி நில்லுங்க.
//பத்திரமா பாத்துக்கோங்க. சீக்கிரம் என் வலி
குறைந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி
உங்க எல்லோரையும் பதிவு போட்டு
ஒரு வழி ஆக்கிடும் நாள் ரொம்ப தூரத்துல
இல்லீங்கோ//
வில்லு படமே பாத்துட்டோம் இதுக்கெல்லாம் பயபுடுவேமா. சீக்கிரமா வாங்க
சில தினங்களுக்கு முன் தொடர்ந்து கணினியை கிட்டத்தட்ட 14 மணி நேரம் தொட்டதன் விளைவு கைவலி என்னவென்று தெரிய வந்தது.அடுத்த நாள் ஓய்வில் சரியாகியது.
குணமடைய வாழ்த்துக்கள்.
//சீக்கிரம் என் வலி
குறைந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி
உங்க எல்லோரையும் பதிவு போட்டு
ஒரு வழி ஆக்கிடும் நாள் ரொம்ப தூரத்துல
இல்லீங்கோ.
//
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நாங்க இல்லீங்கோ. சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திங்க வி ஆர் ரெடிங்கோ :)))
எச்சரிக்கை பதிவுக்கு நன்றிகள் பல.
விரைவில் உடல் நலம் அடைய எல்லாம் வல்ல ஆண்டவனிடம் வேண்டிக் கொள்ளுகின்றேன்.
//உங்க எல்லோரையும் பதிவு போட்டு
ஒரு வழி ஆக்கிடும் நாள் ரொம்ப தூரத்துல
இல்லீங்கோ.//
நாங்களும் பின்னூட்டம் போட்டு ஒரு வலி/வழி ஆக்கிடுவோம்
சந்தடிசாகுல இப்படி பொய் சொல்லுறீங்களே அங்கிள்.//
என் வலைப்பூக்கு புதுசா வந்திருக்கீங்க போலிருக்கு. அதான் அங்கிள்னு சொல்றீங்க தம்பி. பெண்மணியின் வலைப்பூங்க.// :))
வெயில் மேல நீங்க எதுக்கு படுறீங்க தள்ளி நில்லுங்க.//
ஆஹா....
வில்லு படமே பாத்துட்டோம் இதுக்கெல்லாம் பயபுடுவேமா. சீக்கிரமா வாங்க//
:)))))
வாங்க ராஜநடராஜன்,
மிக்க நன்றி
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நாங்க இல்லீங்கோ. சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திங்க வி ஆர் ரெடிங்கோ //
இந்தத் தைரியம்ரொம்ப பிடிச்சிருக்கு தம்பி
நன்றி இராகவன்
நாங்களும் பின்னூட்டம் போட்டு ஒரு வலி/வழி ஆக்கிடுவோம்//
:)))
ஓக்கே ஒரு வழியா ப்ராப்ளம் என்னன்னு கண்டுபிடிச்சிட்டாங்கள்ள!
சீக்கிரம் குணமடைந்து வந்து பதிவுலகையே கலக்குங்க!
//பத்திரமா பாத்துக்கோங்க. சீக்கிரம் என் வலி
குறைந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி
உங்க எல்லோரையும் பதிவு போட்டு
ஒரு வழி ஆக்கிடும் நாள் ரொம்ப தூரத்துல
இல்லீங்கோ//
வெல்கம்!
Take Care
நல்ல பகிர்வு. பதிவுப் புயல் புதுகைத் தென்றல் சீக்கிரமே சரியாகி வர ரசிகர் மன்றத்தினரின் பிரார்த்தனைகள்!!
பயனுள்ள பதிவு. விரைவாக குணமடைய வாழ்த்துக்கள்
என் வலைப்பூக்கு புதுசா வந்திருக்கீங்க போலிருக்கு. அதான் அங்கிள்னு சொல்றீங்க தம்பி. பெண்மணியின் வலைப்பூங்க.// :)
சரிங்க Aunty
நன்றி சிவா
நன்றி இராஜலட்சுமி
பதிவுப் புயல் -இதுவே டூமச்னா ரசிகர் மன்றம் வேற. ஏன்ப்பா இந்த மர்டர் வெறி
நன்றி சுதர்ஷிணி
சரிங்க Aunty//
நீங்களும் ரங்கமணிஆகும் நந்நாள் வரும். அன்னைக்கு வச்சிக்கிறேன் உங்களுக்கு கச்சேரி. :))))
ம்ம்...உபயோகமான தகவல்...உடல் நிலையை பார்த்துக்கோங்க.
நல்ல எச்சரிக்கை தான் ...
-----------------------
பத்திரமா பாத்துக்கோங்க. சீக்கிரம் என் வலி
குறைந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி
உங்க எல்லோரையும் பதிவு போட்டு
ஒரு வழி ஆக்கிடும் நாள் ரொம்ப தூரத்துல
இல்லீங்கோ.]]
காத்திருக்குறோம்ல ...
நன்றி கோபி
காத்திருக்குறோம்ல ...//
வந்திட்டேன்.
Post a Comment