Wednesday, October 14, 2009

தீபாவளி ஏற்பாடுகள்

நம்மூரில் தீபாவளி அன்றுதான் பெரிய பண்டிகை.
கொண்டாட்டம் விருந்து எல்லாம். ஆனால்
உண்மையில் 5 நாட்கள் தீபாவளி பண்டிகை
என்பது மும்பை போனபோதுதான் தெரியும்.


நம்மூரில் பொங்கலுக்கு முன்பு வீட்டை சுத்தம் செய்து
வெள்ளை அடித்து, பளிச்சென்று செய்வோம்.

வடக்கே தீபாவளிக்கு அமர்க்களப்படும். அந்த ஐடியா
எனக்கும் பிடிக்க நானும் பின் பற்றுவேன்.

ஜன்னல்களும் புத்தாடைக்கட்டி தீபாவளிக்கு நான் ரெடின்னு
சொல்லும். கலர் கொஞ்சம் டார்காக இருப்பதுபோல்
பார்த்துக்கொள்வேன். கோல்டன் கலரில் செய்தாலும்
அமர்க்களமாக பண்டிகைக்கான தோற்றத்துடன் வீடே
ஜொலிக்கும்.

ஏற்றப்படாத மெழுகுவர்த்திகளை வைத்து
அலங்காரம் செய்வது வீட்டில் நுழைந்த உடன்
நல்ல மூடை கொடுக்கும்.

அகல்விளக்குகள் (எரியவிடாமல்) அலங்காரமாக
வைத்தாலும் சூப்பரா இருக்கும்.

வீட்டுக்கு வெளியே இப்படி வைப்பதும் அழகைத்தரும்.




தீபாவளியன்று செய்யப்படும் லட்சுமி பூஜை மிக
விசேசம். இது போல் லட்சுமி காலடி வீடெங்கும்
போடுவார்கள்.


அது என்ன 5 நாள் பண்டிகை??

1. DHANTHERYAS - முதலாம் நாள் பண்டிகை. தன் திரேயஸ்.
இன்று லட்சுமி பூஜைக்கான வெள்ளிக்காயின், அல்லது தங்கம்
குறைந்த பட்சம் எவர்சில்வர் பால்காய்ச்சும் பாத்திரமாவது
வாங்கிவருவார்கள்.

தன்வந்திரி- இவர் நாராயணின் அம்சம். அம்ருத கலசத்தோடு
வெளிப்பட்டநாள் என்றும் சொல்வார்கள்.
2.CHOTI DIWALI- நரகசதுர்தசி
3.BADI DIWALI,LAKSHMI POOJA- லட்சுமி பூஜை செய்யப்படும்.
இதனால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகுவதாக நம்பிக்கை.

4.GOVARDHAN POOJA/NEW YEAR - மார்வாடிக்காரர்களுக்கு
புத்தாண்டு.(சித்திரை வருடப்பிறப்பு). இந்நந்நாளில்தான்
ஸ்ரீக்ருஷ்ணர் கோவர்தன கிரி மலையை கையில் ஏந்தி
தன் பக்தர்களை ரட்சித்ததாக கதையும் உண்டு.

5. BAIDUJ - உடன் பிறப்புக்கள் கலந்து உறவை
பலப்படுத்திக்கொள்ளும் திருநாள். திருமணத்திற்கு
பிறகு தாய்வீட்டு விசேடங்களில் பெரிதாக பங்கேற்க
முடியாமல் போகும். ஆனால் இந்நந்நாளில் தன் அக்கா,
தங்கை கையால் உண்ப்வர்களுக்கு நல்ல ஆயுசு,ஐஸ்வர்யம்
கிடைக்கும் என்பது நம்பிக்கை

மேலதிக தகவல்களுக்கு இங்கே பாருங்கள்.


அம்மா வீட்டில் தீபாவளிக்கு முதல் நாள்
கொண்டாட்டமாக இருக்கும்.

உக்காரை, வகைவகையான பஜ்ஜி, முள்ளங்கி வெங்காய
சாம்பார் என மெனு கலக்கலாக இருக்கும்.
இப்போது நானும் இந்த மெனுதான் செய்வேன்.

அடுத்த நாள் அதாவது தீபாவளியன்று மெனு
அதிகமாக செய்ய மாட்டேன். இதனால்
பண்டிகை நாளன்று வேலையும் குறைவு.
வயிற்றுக்கு இதமான மெனு இதுதான் திட்டம்.

வீட்டுக்கு வருபவர்களுடன் அளவளாவ முடியும்.

ஆனால் இங்கே வந்த பிறகு இந்த 1 1/2 வருடத்தில்
பண்டிகை நாட்கள் வரும்போது மனது கொஞ்சம்
வருத்தமடையும்.

இது எனக்கு மட்டுமல்ல. என்னைப்போல் பலருக்கும்
இருக்கும் கருத்து என்றுதான் நினைக்கிறேன்.

என்ன மேட்டர்??? அடுத்த பதிவில் சொல்றேன்.

2 comments:

Vidhya Chandrasekaran said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் அக்கா. ஆஷிஷ் & அம்ருதாக்கும் சொல்லிடுங்க:)

pudugaithendral said...

கண்டிப்பா சொல்லிடறேன் வித்யா.

ஜூனியர் பட்டாசு வெடிப்பதை படம் பிடிச்சு அனுப்புங்க