இங்கே வந்த பிறகு இந்த 1 1/2 வருடத்தில்
பண்டிகை நாட்கள் வரும்போது மனது கொஞ்சம்
வருத்தமடையும்.
இது எனக்கு மட்டுமல்ல. என்னைப்போல் பலருக்கும்
இருக்கும் கருத்து என்றுதான் நினைக்கிறேன்.
என்ன மேட்டர்??? அடுத்த பதிவில் சொல்றேன்.
என்று போன பதிவில்சொல்லியிருந்தேன்.
அப்போதெல்லாம்
பண்டிகை நாட்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனும்
தந்ததுண்டு. ஆனால் இருந்தது ஒரு சேனல் தான்
என்பதாலும் 24 மணி நேர ஒளிபரப்புக்கள் கிடையாது
என்பதாலும் உற்றார், உறவினரை சந்திக்க,
பெரியவர்கள் வீட்டுக்குச் சென்று ஆசிரிவாதம்
வாங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் உண்டு.
புத்தாடை கட்டி கர்வமாக வீதியில் நடந்திருப்பேமே
ஞாபகம் இருக்கா??
பண்டிகைகள் கொண்டாட்டங்கள் இறைவனுக்கு
பூஜை செய்வதற்காக மட்டுமல்ல உற்றார்,
உறவினருடன் கலந்து மகிழத்தான். ஆனால்
இன்று நடப்பது என்ன?
அவசர அவசரமாக எண்ணெய்க்குளியல்,
பூஜை,புத்தாடை, பட்டாசு வெடித்து
காலை முதல் நள்ளிரவு வரை தீபாவளி
சிறப்பு நிகழ்ச்சிகள் பார்ப்பது தான் :((
நான் சென்ற முறை உறவினர் வரச்சொன்னாரே
என்று அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். என்னை
வரச்சொல்லிவிட்டு எல்லோரும் டீவி முன்
இருந்தனர். வா என்றழைத்ததோடு சரி. பேசவேயில்லை.
ஏன் போனோம் என்றாகிவிட்டது. :((( சேர்ந்து
கோவிலுக்கு போகலாம் வாங்கள் என்றழைத்ததற்கு
”ஆஹா, அந்த நேரத்தில் சிறப்புத்திரைப்படம் இருக்கு
நான் வரவில்லை!!!” என்று சொல்லிவிட்டார்.
இலங்கையில் இருந்த போதெல்லாம் நாம்
இந்தியாவை விட்டு தூரத்தில் இருக்கிறோம். இதனால்
நம் பிள்ளைகள் கலாச்சாரம்,பூஜை ஆகியவற்றை
மறந்து விடக்கூடாது என்பதுதான் பலரின் எண்ணம்.
(வெளிநாட்டில் வாழும் பலரின் மனதில் இந்த
எண்ணம் தான் ஓடிக்கொண்டிருக்கும்)
அதனால் ஒவ்வொரு பண்டிகை, பூஜை எல்லாம்
சிறப்பாக கொண்டாடுவோம். அங்கிருக்கும்
நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர்
போனில் வாழ்த்திக்கொள்வது பத்தாமல்
நேரில் வந்து வாழ்த்து சொல்வார்கள். நாங்களும்
செல்வோம்.
எங்கள் குரூப்பின் பெயர் “ப்ரவாஸாந்த்ரா(PRAVASANDHRA)"
அர்த்தம் ஆந்திராவைவிட்டு வெளியே இருப்பவர்கள்.
எப்போதும் இனிப்பாக நினைவில் இருப்பது
யுகாதி(தெலுங்கு வருடப்பிறப்பு), தீபாவளி.
யுகாதி மிக முக்கியமான கொண்டாட்டம்.
பிள்ளைகள் பாரம்பரியத்தை உணர்த்தும்
விதமாக நடனம், ஸ்லோகங்கள் ஆகியவை
அரங்கேற்ற 2 மாதங்களுக்கு முன்பே சொல்லிக்
கொடுப்போம். பெரியவர்கள், சிறியவர்கள்
சேர்ந்து நடத்தும் குடும்ப விளையாட்டு,
என கேளிக்கை, கொண்டாட்டம் இருக்கும்.
மிக முக்கியமான பஞ்சாங்க ஸ்ரவனம் உண்டு.
வந்திருக்கும் அனைவருக்கும் பரிசு, என
பல விதமாக உழைத்து செய்வோம். பெண்கள்
நாங்களே எல்லா ஏற்பாட்டுகள்(அனைவரையும்
ஒருங்கினைத்தல், அழைப்பிதழ் தயாரித்தல்,
பிள்ளைகள் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு
சான்றிதழ்கள் தயாரித்தல்,பிள்ளைகளை
தயார் செய்வது, விழா நடத்த ஹோட்டல்
புக் செய்வது, பரிசுகள்) செய்து யுகாதி அன்று
ஆண்கள் கையில் கொடுத்து நடத்தச் சொல்வோம்.
மிக முக்கியமான கண்டீஷன் என்னவென்றால்,
ஆங்கிலம், ஹிந்தியில்பேசக்கூடாது.நிகழ்ச்சி
நடைபெறும் பொழுது தெலுங்குத்தவிர
வேறு மொழி பேசினால் உடனே “மாத்ரு பாஷா,மாத்ரு பாஷா”
என்று சவுண்ட் விடுவோம். :))
பாராம்பரிய உடையில் தான் வரவேண்டும்.
ஏன் இந்த கண்டீஷன்??
எப்போதும் மற்ற பாஷைக்ள் கலந்து பேசுவோம்.
யுகாதி அன்று மட்டுமாவது தெலுங்கு மட்டும்
பேசினால் நம் நாட்டில் இருக்கும் எஃப்கட் கிடைக்கும்.
மொழி மறந்துவிடாமல் பிள்ளைகளும்
பேசுவார்கள். இது தெலுங்கர்கள் மட்டும் பங்கேற்கும்
நிகழ்ச்சி.
தீபாவளி அனைவருக்கும் பொதுவானது. அதுவும்
மிக சிறப்பாக கொண்டாடுவோம். வெடி வெடிக்க
ஏதுவாக நிறைய்ய காலியிடம் இருக்கும் நண்பரின்
வீடுதான் கொண்டாடும் இடம்.
கொண்டாட்டத்தில் கலந்து வரும் தோழிகள்
முன்னாடியே பேசிவைத்து “POT LUCK"
முறையில் ஒவ்வொருவரும் உணவுதயாரித்து
கொண்டு செல்வோம். நாங்கள் வாங்கி வைத்திருக்கும்
பட்டாசுகளை கொண்டு சென்று எல்லா பிள்ளைகளும்
சேர்ந்து பட்டாசு வெடித்து மகிழ்வார்கள்.
ஒன்றாக கலந்து, பேசி மகிழ்ந்து, உண்டு
பண்டிகை கொண்டாடிய மகிழ்ச்சியில் பிள்ளைகள்
மறுநாள் பள்ளிக்கு மட்டம் அடித்து என
இனிய நினைவுகள் தான்.
இங்கே வந்த பிறகு இந்த 1 1/2 வருடத்தில்
பண்டிகை நாட்கள் வரும்போது மனது கொஞ்சம்
வருந்தும் காரணம். நம் தாய்த்திருநாள் நாட்டில்
பண்டிகைகள் கொண்டாடப்படும் விதம். அங்கு
எல்லோருடனும் கலந்து மகிழ்ச்சியாக இருந்துவிட்டு
“இங்கே எனது வீடு, எனது பிள்ளைகள், எனது
குடும்பம்” என்று தனியாக இருப்பது போல் இருக்கிறது.
இந்த நிலை மாற வேண்டும். பண்டிகை காலங்களில்
டீவிக்கு சற்று ஓய்வுக்கொடுத்து, உற்றார் உறவினர்
வீட்டுக்குச் சென்று கலந்து மகிழ்ந்து உறவை
பலப்படுத்திக்கொள்வேன் எனும் சங்கல்பம் அனைவரும்
செய்து கொண்டால் நிஜமான பண்டிகை கொண்டாடி
அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.
நிஜமான பண்டிகை கொண்டாடி அனைவரும் வாழ்வில்
மகிழ்ச்சியாக இருக்க ஆண்டவனை ப்ரார்த்திக்கிறேன்.
வலையுலக நண்பர்கள்,உடன் பிறப்புக்கள், மற்றும் அவர்களது
குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக
மனமார்ந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
VOTE போடுவீங்கன்னு எனக்குத் தெரியும்.:)))
19 comments:
வலையுலக நண்பர்கள்,உடன் பிறப்புக்கள், மற்றும் அவர்களது
குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் :)))
தீபாவளி நேரத்துல கேபிள் கனெக்ஷனை தடை செய்ய உத்தரவு வரனும்..
//இங்கே வந்த பிறகு இந்த 1 1/2 வருடத்தில்
பண்டிகை நாட்கள் வரும்போது மனது கொஞ்சம்
வருத்தமடையும்.
இது எனக்கு மட்டுமல்ல. என்னைப்போல் பலருக்கும்
இருக்கும் கருத்து என்றுதான் நினைக்கிறேன்.//
:(
உண்மைதான் சகோதரி
என்ன பண்றது ஒன்றை பெற ஒன்றை இழக்கவேண்டியிருக்கிறது...
தங்களுக்கும் தங்கள் குடும்பதினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....
அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். பண்டிகை சந்தோஷத்தை தொலைத்து விட்டு, தொலைக்காட்சி முன் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றோம்.
வருங்காலத்தில், பண்டிகையை விட்டு விட்டு, தொலைக்காட்சி பிரதானமாகப் போய்விடும் என நினைக்கின்றேன்.
நன்றி பாஸ்
தீபாவளி நேரத்துல கேபிள் கனெக்ஷனை தடை செய்ய உத்தரவு வரனும்..//
ரிமோட் நம்ம கையிலதானே இருக்கு.
வாங்க வசந்த்,
உங்களுக்கும் என் மனமார்ந்த தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
வருங்காலத்தில், பண்டிகையை விட்டு விட்டு, தொலைக்காட்சி பிரதானமாகப் போய்விடும் என நினைக்கின்றேன்.//
ஆமாம்.அதான் பயம்மா இருக்கு இராகவன்.
மனமார்ந்த தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
நடப்பில் உள்ளதை நன்றாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள் தென்றல்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா ;)
அருமையா சொல்லியிருக்கீங்க!பூங்கொத்து!
நன்றி ராமலக்ஷ்மி,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி கோபி
பூங்கொத்தை வாங்கிக்கொண்டேன் நன்றி அருணா,
மனமார்ந்த தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
நல்லா சொல்லியிருக்கீங்க. நாளைக்கு முடிஞ்சவரைக்கும் டிவில எல்லா ப்ரொக்ராமும் பாத்திடறேன்
குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
/
Jeeves said...
தீபாவளி நேரத்துல கேபிள் கனெக்ஷனை தடை செய்ய உத்தரவு வரனும்..
/
ஜீவ்ஸ் இப்பிடி எல்லாம் தடை உத்தரவு போட வெச்சிட்டு DTH ல நீங்க மட்டும் பாக்கலாம்னு திட்டமா???
நாங்களும் DTHல பாப்போம்ல
:))))))
நல்லா சொன்னீங்க. நிறைய பேரு வீட்டுல டிவி நேரத்தில போனா, ஏண்டா வந்தான்கிற மாதிரி பாக்கிறாங்க. அட அத விடுங்க. நிறைய குழந்தைகள் வெளில போய் விளையாடவே மாட்டேன்றாங்க.
நன்றி சிவா
நிறைய குழந்தைகள் வெளில போய் விளையாடவே மாட்டேன்றாங்க.//
ஆமாம் வெளியில் சென்று விளையாட இடம் இருக்கா என்ன???
Post a Comment