Thursday, October 29, 2009

வெள்ளிக்கொலுசு மணி.....


அடுத்த மாதம் இரண்டாவது பிறந்த நாள் கொண்டாடப்போகும்
என் வலைப்பூவில் இது என் 500ஆவது பதிவு.
ஆனந்தமாக இருக்கிறது. ஆதரவு தரும் அன்பு உள்ளங்களுக்கு
நன்றி.

500 ஷ்பெஷலாச்சே. அதான் இந்த ஷ்பெஷல் கருத்தும்
கானமும் பதிவு.

அழகுக்கு அழகு சேர்ப்பது போல் அழகான கால்களுக்கு
கொலுசு அழகு சேர்க்கும். கொலு்சோசை கேட்டு
மயங்காதவர்கள் உண்டோ..




வெள்ளிக் கொலுசுமணி .... இளையராஜாவின்
இசையில் மறக்க முடியாத பாடல்.

Get Your Own Hindi Songs Player at Music Plugin

தண்டை ஒலி எழ குழந்தை நடந்து வரும்போது
அந்த ஜில் ஜிலீர் சத்தம் அப்பப்பா...

பெண்மையின் அடையாளம் இந்த கொலுசு. வீட்டில் பெண்
இருக்கிறாள் என்பதை கட்டியம் கூறுவது கொலுசு.

பாதக்கொலுசுமணி...

Get Your Own Hindi Songs Player at Music Plugin

மனைவியி்ன் கொலுசோசை கணவனுக்கு தன்
மனைவியின் இருப்பை உணர்த்துகிறது. சிணுங்கும்
அவளின் கொலுசுசத்தம் தூக்கத்தை கெடுத்தாலும்
அந்த ஓசையை மிகவும் ரசிப்பார்கள் என்று எங்கோ
படித்திருக்கிறேன்.


மூக்குத்தி அணியாத பெண்களும் உண்டு. ஆனால் கொலுசு
மாடர்ன் மங்கைகளும் அணியும் ஆபரணம்.

பாயல்(ஹிந்தி), பட்டியலு (தெலுங்கு) இது கொலுசின்
வேறு பெயர்கள்.

எனக்கும் கொலுசு மிகவும் பிடிக்கும். திருமணத்திற்கு
முன்பு வரை என் பிறந்தநாளுக்கு முன்பு பழைய கொலுசை
கொடுத்துவிட்டு மேற்கொண்டு பணம் போட்டு நல்ல
கொலுசு வாங்கி கொடுப்பார் அவ்வா.

புது கொலுசு ஜொலிக்க ஜல் ஜல்லென்று பள்ளிக்குச்
செல்வேன். எப்போதும் புது டிஜைன் கொலுசுதான்.
அப்பா திட்டினால் கூட அவ்வா தன் பென்சன் பணத்தில்
வாங்கி கொடுப்பார்.

கைபிடித்து தேவேந்திரன் மாமா நகைக்கடைக்கு அழைத்துச்
சென்று பொறுமையாக டிசைன் தேடி,ஸ்குரு கழண்டு
விடாமல் செப்புக் கம்பி போட்டு முடுக்கி என அவ்வா
பார்த்து பார்த்துச் செய்வார்.

திருமணத்திற்கு பிறகு அயித்தான் அவ்வா போல்
புது கொலுசு வாங்கி கொடுக்கிறார். பிள்ளைகளின்
பிறந்த நாளின் போது எனக்கும் ஏதேனும் பரிசு
கொடுப்பார்.(நாங்களும் பரிசு கொடுப்போம்)
இந்த முறை ஆஷிஷின் பிறந்த நாளுக்கு
எனக்கு புது கொலுசு. எப்போது கொலுசு வாங்கினாலும்,
புது கொலுசை கண்டாலும் அவ்வாவின் நினைவு வந்து
செல்லும்.




கொலுசு சத்தத்தால் வீடேநிறைந்தது
போலிருக்கும். விசேட நாட்களில் கொலுசு
அணிந்து அம்ருதா வீடெங்கும் இனிமையை நிறப்புதாகத்
தான் தோன்றுகிறது. தங்கை கொலுசு அணிந்தால் அண்ணாவுக்கு
அம்புட்டு பெருமை. நல்லா இருக்கு பாரு, என்று அடிக்கடி
அண்ணா சொல்வது இனிமை.

வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்....

Get Your Own Hindi Songs Player at Music Plugin

கொலுசே கொலுசே இசை பாடு கொலுசே
நீ பாடாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்
ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில்
ரத்ததில் தேன் வந்து தித்தித்ததே...

பெண்புத்தி முன் புத்தி படத்தில் இனிமையான
பாடல். (லிங்க் கிடைக்கவில்லை)
எப்போதும் இனிமையான நினைவைத் தரும் கொலுசு.

டிஸ்கி: பாடல்கள் தேடிய பொழுது தேடிக்கொடுத்த
அன்புத் தம்பி சென்ஷிக்கு ஷ்பெஷல் தேங்க்ஸ்

49 comments:

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் பாஸ்ஸ்ஸ்ஸ் :)))

ஆயில்யன் said...

கொலுசுச்சத்தம் கேக்கையில் மனம் தந்தியடிக்குது பாட்டுத்தான் சட்டுன்னு ஞாபகம் வருதேய்ய்ய் :))

Ungalranga said...

500வது !!!! பதிவா?!!!!


அடேங்கப்பா..கலக்கிட்டீங்க..!!

வாழ்த்துக்கள்!!

pudugaithendral said...

தாங்க்ஸ் பாஸ், அது பாட்டுக்கு நடுவுல வ்ர்ற வரி பாஸ்

pudugaithendral said...

நன்றி ரங்கன்

butterfly Surya said...

500க்கு ஆயிரம் முறை வாழ்த்துகள்..

மணிநரேன் said...

500- க்கு வாழ்த்துக்கள்..:)

pudugaithendral said...

நன்றி சூர்யா

pudugaithendral said...

நன்றி மணிநரேன்

Sanjai Gandhi said...

வாழ்த்துகள்..

//சர்வேசன்500 - 'நச்'னு ஒரு கதை 2009 - போட்டி//

”புதுகைத்தென்றல் 500” ஏன் ஒரு போட்டி வைக்கக் கூடாது?

S.Arockia Romulus said...

வாழ்த்துக்க‌ள் அக்கா

pudugaithendral said...

”புதுகைத்தென்றல் 500” ஏன் ஒரு போட்டி வைக்கக் கூடாது?//

ஏன் இந்த மர்டர் வெறி சஞ்சய், பேசி தீத்துக்குவோமே::)

வாழ்த்துக்கு நன்றி

pudugaithendral said...

நன்றி ரோமுலஸ்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகளுங்கோ ...

pudugaithendral said...

கடப்பாறை அதிகமோ ஜமால்,

இப்பல்லாம் உங்களை பார்கக்வே முடிவதில்லை.

நன்றி

ராமலக்ஷ்மி said...

ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்

ஒவ்வொரு ஜல் ஓசையும் ஒருநூறு வாழ்த்துக்களுக்கு சமம்.
ஐந்து ஜல் ஐநூறுக்கு!

வாழ்த்துக்களுடன் என் மனமார்ந்த பாராட்டுக்களும் தென்றல்!

வல்லிசிம்ஹன் said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் தென்றல். இன்னும்நிறைய பதிவுகள் எழுதி எங்களை மகிழ்விக்கணும்.

Vidhya Chandrasekaran said...

500க்கு வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

அன்பின் புதுகைத் தெர்ன்றல்

மனம் மகிழ்கிறது ‍ 500 இடுகைகள் எனில் கடும் உழைப்பு தெரிகிறது
சும்மா சொல்லக் கூடாது ‍ பாராட்டுகள்

நல்வாழ்த்துகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

500 க்கு வாழ்த்துக்கள்

கொலுசு சத்தத்தின் ஊடாக உங்கள் மனசு மகிழ்ச்சியும் தெரிகிறது :)

pudugaithendral said...

ரொம்ப சந்தோஷம் ராமலட்சுமி

மிக்க நன்றி

pudugaithendral said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள் வல்லிம்மா

pudugaithendral said...

நன்றி வித்யா

pudugaithendral said...

மனமார்ந்த நன்றிகள் சீனா சார்

pudugaithendral said...

ஆமாம் அமித்துஅம்மா,

மனது மகிழ்ச்சியா இருக்கு. நீங்க சொன்ன நல்ல செய்தி இன்னும் அதிகமாக்கி இருக்கு.

பேரண்ட்ஸ் கிளப் பத்தி விகடனில் யாராவது போட்டோ அனுப்பினா நல்லா இருக்கும்.

போனுக்கும், வருகைக்கும் நன்றி அமித்து அம்மா

சென்ஷி said...

500க்கு வாழ்த்துக்கள்....

:)

எம்.எம்.அப்துல்லா said...

இப்பதான் அக்காவோட பதிவை படிக்க ஆரமிச்சமாதிரி இருக்கு.அதற்குள் 2 வருஷம் ஆச்சா??

ஹைநூறுக்கு வாழ்த்துகள் ;0)

சிஷ்யன்,

எம்.எம்.அப்துல்லா.

pudugaithendral said...

thanks senshie

pudugaithendral said...

ஆமாம் 2 வருடம் முடிய போகுது.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அப்துல்லா
சிஷ்யன்,//
இது எதுக்கு?? ஒரு முடிவோடத்தான் இருக்கீக போல. நடத்துங்க ராசா

:)))

காற்றில் எந்தன் கீதம் said...

500வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா:)

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் அக்கா!

pudugaithendral said...

நன்றி நிஜ்ம்ஸ் தம்பி

pudugaithendral said...

நன்றி சுதர்ஷினி

வெண்பூ said...

வாழ்த்துகள் தென்றல்.. நீங்க பதிவு போடுற வேகத்துக்கு 500 எல்லாம் கம்மி.. எதுனா ஒரு சைபர் விட்டுட்டீங்களான்னு நல்லா பாருங்க :))

அன்புடன் அருணா said...

500 பூக்களுடன் ஒரு பூங்கொத்து 500க்கு!

Pandian R said...

////////
இந்த முறை ஆஷிஷின் பிறந்த நாளுக்கு
எனக்கு புது கொலுசு
/////////

இந்த விளையாட்டு நல்லா இருக்கு!!!!

கொலுசு வாங்கப் போனோம்.
பெருசுகளின் பார்வையில் - இது உழைக்குமா... முத்து உதிருமா..
என் பார்வையில் - இது அவ காலுக்கு எப்டி இருக்குமோ..
என் மனைவி பார்வையில் - இந்தப் பாவி மனிசனுக்குப் பிடிக்குமோ!

சபாஸ். அருமையான தலைப்பு.

தென்றல் 500க்கு வாழ்த்துக்கள்.

Thamira said...

கொலுசு இசையுடன் 500க்கு வாழ்த்துகள்.!

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள் ஆஷிஷமித்தம்மா

//கொலுசுச்சத்தம் கேக்கையில் மனம் தந்தியடிக்குது பாட்டுத்தான் சட்டுன்னு ஞாபகம் வருதேய்ய்ய் :))//

அந்தப் பாடல் கூட்டத்திலே கோவில் புறா (படம் இதயக்கோவில்)

http://www.tamilcollections.com/tc/lyricsdl.asp?lno=837http://www.tamilcollections.com/tc/lyricsdl.asp?lno=837

http://www.goodlanka.com/idhaya-kovil/kootathile-kovil-pura-video_cc5aab178.html

pudugaithendral said...

எதுனா ஒரு சைபர் விட்டுட்டீங்களான்னு நல்லா பாருங்க :))//

ஆஹா...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி வெண்பூ

pudugaithendral said...

500 பூக்களுடன் பூங்கொத்தா...

தாரளமனசு உங்களுக்கு அருணா.
அன்பில் அகமகிழ்ந்தேன். நன்றி

pudugaithendral said...

வாங்க ஃப்ண்டு,

நான் அயித்தான் கூட போனா அவுகளே எடுத்து கொடுக்கட்டும்னு கம்முன்னு இருந்துடுவேன். அவுக பெருசா பட்ஜட் போட்டிருந்து நாம கேட்டோமேன்னு சிருசா வாங்கி கொடுத்துப்பிட்டா. :))))))

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

pudugaithendral said...

நன்றி ஃப்ரெண்ட்

pudugaithendral said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பாலராஜன் கீதா அவர்களே

FunScribbler said...

500??? கூல் கூல்....வாழ்த்துகள். தொடருங்கள்!!

Annam said...

ennoda vaazhthukkalaiyum pidiyungal thendral akka

pudugaithendral said...

நன்றி தமிழ்மாங்கனி

pudugaithendral said...

நன்றி அன்னம்

ப்ரியமுடன் வசந்த் said...

500 ஆ ...அம்மாடியோவ்...சுத்திப்போடச்சொல்லுங்க...வாழ்த்துக்கள்

pudugaithendral said...

சொல்லிட்டேன். நன்றி வசந்த்