Saturday, October 31, 2009

பெண்களின் பிரச்சனைகள்

பெண்களுக்கே இருக்கும் பலவித பிரச்சனைகளின்
காரணம் பெண்களுக்கே புரியாது, தெரியாது.
படித்த பெண்களும் இதில் விதி விலக்கல்ல.

திருமணத்திற்கு முன்பு வரை கொடியிடையாளாய்
வளைய வந்தவள் அப்புறம் ”கொடிய இடையாளாய்”
ஆகிவிட்டாள் என கேலி பேசுவது உண்டு. ஆனால்
அதற்கான காரணங்களை யாரும் உணர்வதில்லை.

தாய்மைக்கு பெண் கொடுக்கும் விலை தன் அழகு.
கரு உண்டான உடனே அவளின் உடல் தாய்மைக்கு
தயாராகி, ஹார்மோன்கள் மாறுகின்றன.

குழந்தை பிறக்கும் வரை இருவருக்கும் உண்கிறாள்.
பிறந்த பிறகோ பாலூட்ட சக்திவேண்டுமென உண்கிறாள்.
இவை எல்லாம் தருவது அதிக எடை. தவிரவும்
நம் இந்திய பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு
உடற்பயி்ற்சி செய்யும் பழக்கமில்லை.

கைக்குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும்,
குடும்பம், வேலை, இத்யாதிகள் என இவற்றுக்குத்தான்
முதலிடம் கொடுக்கிறாளே தவிர தன்னை பற்றி
பரிபூரணமாக மறந்து விடுகிறாள்.

பிரசவம் தவிர குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை
பெண்ணுக்குத்தான் செய்யப்படுகிறது. இதனால்
ஏற்படும் விளைவு உடல் பருமன் என சமீபத்தில்
தமிழ் வார இதழ் ஒன்றில் பல பெண் மருத்துவர்களும்
ஒத்துக்கொண்ட விடயம்.

இதைத் தவிர வேறு என்ன காரணங்கள் இருக்கக்கூடும்!!!

ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம். வேலைக்கு போகும்/
போகாத பெண்களுக்கு இது அதிகம். தவிர மாமியார்,புகுந்தவீட்டு
பிரச்சனை, புரிந்து கொள்ளாத கணவன், குழ்ந்தைகளின்
கல்வி, எதிர்கால பயம் எல்லாமும் காரணம்.

மன அழுத்தம் அதிகமானால் ஒன்று அதிகமாக சாப்பிடத்தோனும்,
இல்லையேல் குறைவாக சாப்பிடுவோம். விளைவு உடல் பருமன்.

பிள்ளை வளர்ப்பு என்பது சாதாரணமான விடயம் அல்ல.
ஆனால் அந்த மாபெரும் பொறுப்பு பெண்ணின் கையில்தான்
இருக்கிறது. இதுவும் மன அழுத்தம் தரும் விடயம்தான்
என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.


பொதுவாகவே அனைவரும் பசிக்குத் தான் சாப்பிடுகிறோமே
தவிர போஷாக்கான உணவு எடுத்துக்கொள்வதில்லை. அதிலும்
பெண்கள் மீதம் இருப்பதை உண்பர். இல்லையே அன்றைக்கு
மோர் சோறுதான். இது பல வீடுகளில் நடக்கும் விடயம்.

இதில் போஷாக்கு எங்கேயிருக்கிறது. பழங்கள், சாலட்கள்
இவைகள் அன்றாட உணவில் எங்கே எடுத்துக்கொள்கிறோம்.

உடல் நிலை சரியில்லாவிட்டால் மருத்துவரிடம் போனால்
போதும் என்று நினைப்போமே தவிர சின்ன சின்ன விடயங்களுக்கு
மருத்துவரிடம் செல்வதில்லை.

தமிழ்த்துளி தேவா அவர்கள் பெண்களின் பிரச்சனைகள்
பற்றி தொடர் பதிவு
போட்டு வருகிறார். அதை படிக்கத்
தவறாதீர்கள்.

மருத்துவரை கலந்தாலோசித்து, தகுந்த நியுட்ரீஷியன் உதவியோடு
சத்தான உணவு எடுத்துக்கொண்டு, தகுந்த உடற்பயிற்சியும்
செய்ய வேண்டும்.

இதற்கான அவசியத்தை பெண்கள் உணர்ந்து செயல்படவேண்டும்.
ஆண்களும் தனது மனைவிக்கு தேவையான வசதிகளை
செய்து கொடுத்து, அனுசரணயாக இருக்க வேண்டும்.

இந்தக் கதையையும் படித்து பாருங்கள்
பெண்களின் நிலை புரியும்.

அவள்

அவள்

10 comments:

வித்யா said...

நல்ல பதிவு. இதெல்லாம் இயற்கையான/ மருத்துவ ரீதியில் தீர்விருக்கிற விஷயங்கள் என்பது படித்த பெண்களுக்கும் தெரியாமல் இருப்பது வேதனையான விஷயம்.

Rajalakshmi Pakkirisamy said...

good post

ஆதிமூலகிருஷ்ணன் said...

பளிச்சென எடுத்துச்சொல்லியிள்ளீர்கள். மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. அது இன்னும் விரைவடையும் என்று நம்புவோம்.

உங்கள் கதையையும் படித்தேன் ஃபிரெண்ட். சுப முடிவு மகிழ்வாய் இருந்தது.

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு.

கல்யாணத்துக்கு முன்பே கொடிய இடையாளா இருக்கிறாங்களே பலர் என்ன காரணம்?

பர்கரும் பீட்ஸாவுமா??

புதுகைத் தென்றல் said...

பெண்களுக்கு அனுசரனையான குடும்பம் அமைந்து அவர்களும் ஒத்துழைத்தால் நல்ல தீர்வு நிச்சயம் கிடைக்கும் வித்யா.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி ராஜலட்சுமி

புதுகைத் தென்றல் said...

நன்றி ஃப்ரெண்ட்

புதுகைத் தென்றல் said...

கல்யாணத்துக்கு முன்பே கொடிய இடையாளா இருக்கிறாங்களே பலர் என்ன காரணம்?

பர்கரும் பீட்ஸாவுமா??//

ஆமாம், தவிர அம்மா அப்பாவின் அதீத கவனிப்பு, தன் உடல் நிலை பற்றிய அக்கறை இல்லாதது எல்லாம் காரணம்

அமுதா said...

நல்ல பதிவு. சுட்டிக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி அமுதா