Monday, October 26, 2009

JAI HO

10 வருடங்களுக்கு முன்பு சென்னையில் clinic plus 25ஆம் வருட
நிறைவுக்கொண்டாட்டத்திற்காக ஹிந்துஸ்தான் லீவர்
எஸ்.பீ.பாலு அவர்களின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க.
அயித்தான் அப்ப ஹிந்துஸ்தான் லீவரில்தான் இருந்தார்
என்பதால் பாஸ் கிடைச்சது. மிக அருமையா இருந்தது
நிகழ்ச்சி. அதற்கப்புறம் ம்யூசிக்கல் ஷோவுக்கு போகும்
வாய்ப்பு, நேரம் கிடைக்கலை.

கடந்த சனிக்கிழமை 24.10 அன்னைக்கு ஹைதையில்
மாபெரும் நிகழ்ச்சி. போக முடியுமான்னு தெரியலை.
”போகலாமான்னு்!” அப்ளிகேஷன் போட்டுவெச்சேன்.


சனிக்கிழமை மதியம் 3 மணிவரைக்கும் ஒண்ணுமே
சொல்லலை. அன்றைக்கு வரும்போது கையில் ஜெய் ஹோ
டிக்கெட். பசங்களுக்கு ஒரே குஷி. எனக்கும் தான்.:))

நிகழ்ச்சி நடக்கவிருந்தது சம்ஷாபாத் ஏர்போர்ட் பக்கத்தில்.
நம்ம வீட்டுலேர்ந்து 1 மணிநேரம்(ட்ராபிக் இல்லாட்டி) ஆகும்.
4 மணிக்கு கிளம்பினோம். இதுல இன்னோரு சர்ப்ரைஸ்
என்னன்னா புது ப்ரிட்ஜில் பயணம்.

இந்தியாவின் மிக நீளமான மேம்பாலம் ஹைதையில் தான்
இருக்கு. கடந்த திங்கள்கிழமைதான் முதல்வர். ரோசய்யா
திறந்துவெச்சார்.11.66கிமீ தூரத்துக்கான மேம்பாலம் இது. 12 நிமிஷத்துல
கடந்திடலாம். காரணம் இந்த மேம்பாலத்தில் நடப்பவர்கள், டூவீலர்ஸ்,
பஸ் போகத் தடை. ச்சும்மா கலக்கலா இருந்துச்சு.
இந்த பாலத்தால விமான நிலையத்துக்கு போறவங்களுகு
பயண நேரம் கணிசமா குறையுது.ஏர்போர்ட்டுக்கு பகக்த்தில் இருக்கும் நோவாடெல் ஹோட்டலுக்கு
பக்கத்தில் இருக்கும் GMR ARENA வில் நிகழ்ச்சி. சரி கூட்டம்.
7.15 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது.3.15 மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் A.R.RAHMAN
தமிழ், தெலுங்கு, ஹிந்தி பாடல்கள் வழங்கினார்.
சாதனா சர்கம், சித்ரா,ப்ளேஷ் என பல பாடகர்கள்
பாடினார்கள். ரஹ்மானும் அவரது ஹிட் பாடல்களை
வழங்கினார்.

ட்ரம்ஸ் சிவமணி அடி வெளுத்துக்கொண்டிருந்தார்.
மனிதர் பாடல்களுக்கு இடையே தனது வாத்தியங்களை
கழுத்தில் மாட்டிக்கொண்டு மேடைக்கு நடுவில் வந்து
வாசித்தது சுவாரசியம்.

alt=""id="BLOGGER_PHOTO_ID_5396799377049307218" />

ஒரு சில பாடல்களைத் தவிர பல பாடல்களை கோர்த்து நடந்தது நிகழ்ச்சி.
ஜியாசே ஜியா, வெள்ளைப்பூக்கள் எல்லாம் அருமை.

ரஹ்மானின் சூப்பர் ஹிட்பாடல்களான முஸ்தபா,முஸ்தாபாவும்
ஹம்மா ஹம்மாவும் பாடப்பட்ட பொழுது எல்லோரும் எழுந்து
ஆட்டம் தான்.

ரசிக்கும் வகையில் இருந்தது நிகழ்ச்சிக்கு ஹைலைட்
BACK STAGE EFFECTS மிகப் புதுமையாக இருந்தது
மெருகூட்டியது.
ரஹ்மானின் ஹிந்தி உச்சரிப்பு ஆச்சரியமூட்டியது.
அவர் பாடிய எந்தப் பாடலும் புத்தகம் கையில் இல்லாமல்
மனப்பாடமாக பாடியது ஆச்சரியமோ ஆச்சரியம்.

தலைக்கனமில்லாத அந்த மாமனிதரின் இந்த நிகழ்ச்சியில்
கிடைக்கும் ஆதாயத்தை ஆந்திராவின் வெள்ள நிவாரணத்துக்கு
அர்ப்பணிபத்திருப்பதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

நிகழ்ச்சிக்கு முதல்வர்.ரோசய்யாவுடன் மாலத்தீவு அதிபர்
தன் மனைவியுடம் வந்து கொண்டு சிறப்பித்தார்.

ஓபன் ஏரெனா என்று தெரியாமல் போய் குளிரில்
மாட்டிக்கொண்டோம். செம குளிர். ஆனாலும்
எழுந்து வர மனமில்லாமல் பிள்ளைகள். அவர்களுக்கு
பிடித்த பப்பு காண்ட் டான்ஸ் சாலா, டெல்ஹி 6,
ஜோதா அக்பர் பாடல்களும் நிகழ்ச்சியில் இடம் பெற்றது.

முஸ்தபா,முஸ்தபா பாடலின் போது(இது அயித்தானுக்கு
ஃபேவரிட்) அயித்தானும் உடன் பாடுவதைக்கேட்டு
அம்ருதாவுக்கு செம ஆச்சரியம். அப்பா பாடி நான்
பாத்ததே இல்லை!! என்றாள்.

அந்தப் பாடலின் போது சற்றே திரும்பி பார்த்தால்
எல்லோரும் ஏதோ யோகா பயிற்சி செய்வது போல்
கைகளை மேலே தூக்கி ஆட்டிக்கொண்டு, இசையில்
கட்டுண்டு பாடிக்கொண்டிருந்தது தெரிந்தது.

இசைக்கு மொழி ஏது??? அதுதான் தமிழன் ரஹ்மானை
இத்தனை உயரத்துக்கு கொண்டு சென்று, பலரும்
விரும்பும் இசையமைப்பாளனாக ஆக்கியிருக்கிறது.

ஜெய்ஹோ பாடலும் வந்தே மாதரம் பாடலும் இறுதியில்
பாடப்பட்ட பொழுது மொத்த அரங்கமும் எழுந்து நின்று
மரியாதை செலுத்தியபொழுது மதம், இனம்,மொழி
எல்லாவற்றையும் கடந்து நின்றது மனது.....

17 comments:

fundoo said...

நல்ல நிகழ்ச்சியாக இருந்திருக்கும்.தான் உண்டு தன் பணி உண்டு என்று தழும்பாத நிறைகுடம் ரகுமான்.

புதுகைத் தென்றல் said...

வாங்க ஃபண்டூ,

ரொம்ப அருமையா இருந்துச்சு. மனிதர் ரொம்ப இயல்பா எந்த ஆர்பாட்டமும் இல்லாம இருந்தது செம ஆச்சரியம்

வருகைக்கு நன்றி

fundoo said...

ஆமாங்க. உயிரே 'dil se re' பாடினாரா. அப்பப்பா.ஒருமுறை தொலைக்காட்சியில் அவரது இந்தப் பாடலில்.... அப்படி ஒரு ஜீவன்.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

அந்த அடக்கம்தான் ரஹ்மானை வைத்திருக்கிறது எப்போதும் உயரத்தில்.

வித்யா said...

சென்னையில் நடந்தபோது எங்கள் அபார்ட்மெண்டில் டிஸ்கவுண்ட் டிக்கெட்ஸ் + டிரான்ஸ்போர்ட் அரேஞ்ச் செய்தார்கள். போகமுடியவில்லை. ஜியா சே ஜியா சூப்பர்:)

புதுகைத் தென்றல் said...

உயிரே 'dil se re' பாடினாரா//

:( illa

புதுகைத் தென்றல் said...

ஆமாம் ராமலக்‌ஷ்மி

புதுகைத் தென்றல் said...

போகமுடியவில்லை.//

அடுத்த முறை லக் அடிச்சு கண்டிப்பா பாத்து பதிவு போட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

ஜியா சே ஜியா சூப்பர்//

வெள்ளைப்பூக்கள் வீடியோவும் பாருங்க. வேறுவிதமா இருக்கும். அருமை

☼ வெயிலான் said...

நோவாடெல் ஓட்டலில் தான் எனக்கு 2009 புதுவருடம் பிறந்தது :)

அப்போது மேம்பாலம் கட்டிக் கொண்டிருந்ததால் போக்குவரத்து நெரிசலாயிருந்தது.

கானா பிரபா said...

முஸ்தபா,முஸ்தபா பாடலின் போது(இது அயித்தானுக்கு
ஃபேவரிட்) அயித்தானும் உடன் பாடுவதைக்கேட்டு//

அட

கலக்கலாத்தான் விழாவை பதிவாக்கி இருக்கீங்க பாஸ்

புதுகைத் தென்றல் said...

நோவாடெல் ஓட்டலில் தான் எனக்கு 2009 புதுவருடம் பிறந்தது :) //

ஆஹா சந்திக்கும் பொன்னான வாய்ப்பு போச்சே. அடுத்த முறை ஹைதை வந்தா மடலிடுங்க.

புதுகைத் தென்றல் said...

பாட்டு பத்தின பதிவுன்னா பாஸ் கரெக்டா வந்திடுவீங்கன்னு தெரியும்.

தாங்க்ஸ் பாஸ்

அபி அப்பா said...

"வெறி" குட்!!! எங்களை விட்டுட்டு நிகழ்ச்சிக்கு போனதால அந்த கொலவெறி மேடம்:-))

6 வருஷம் முன்ன துபாய்ல ரஷ்மான் நிகழ்சி போனது நியாபகம் வருதே நியாபகம் வருதே!!!

Rajalakshmi Pakkirisamy said...

Thanks for sharing:) very nice

புதுகைத் தென்றல் said...

வாங்க அபி அப்பா

எங்களை விட்டுட்டு நிகழ்ச்சிக்கு போனதால அந்த கொலவெறி//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ராஜலட்சுமி

☼ வெயிலான் said...

// ஆஹா சந்திக்கும் பொன்னான வாய்ப்பு போச்சே. அடுத்த முறை ஹைதை வந்தா மடலிடுங்க. //

நன்றி! நிச்சயம் தகவல் தெரிவிக்கிறேன்.