அரசாங்கம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான்
வாகனம் ஓட்டும் உரிமம் பெற முடியும்னு சட்டம்
போட்டு வெச்சிருக்காங்க. ஆனா பெத்தவங்களும்,
பிள்ளைங்களும் அதை காற்றில் பறக்க விட்டுகிட்டு இருக்காங்க.
13 வயது துவங்கி 18 வயதுக்குள் இருக்கும் ஆண்/பெண்
குழந்தைகள் டூவிலர் ஓட்டுவது சர்வசாதரணமாக
கண்ணில் படும் காட்சி. இது தவறு என்று தெரிந்தாலும்
இருதரப்பினரையும் செய்யத் தூண்டுவது எது??????
பிள்ளைகளின் பிடிவாதம் என்றே சொல்லலாம்.
அவர்கள் விரும்பியது விரும்பிய உடனே வாங்கிக்
கொடுக்கும் பெற்றோர் இந்த டூவீலர் விவகாரமும்
செய்கிறார்கள். “மெயின் ரோட்டுக்கு போகாதே!
அங்கே போலிஸ் இருக்கும். இங்கயே சுத்து”
இது நாமே சட்டத்துக்கு புறம்பாக பிள்ளையை
நடக்க அனுமதிக்கும் செயலாச்சே....
பிள்ளைகளுக்கு சைக்கிள் போதும். சைக்கிளில்
ஏறுவதற்கே ராக்கெட் ஓட்டுவது போல் வேகமாக
பிள்ளைகள் ஓட்டுகிறார்கள். தற்போது பல
பெரியவர்கள் கூட கார், பைக் ஓட்டுகிறார்கள் தான்.
ஆனால் ட்ராபிக் சென்ஸ் இல்லாமல் தாறுமாறாக
வண்டி ஓட்டுகிறார்கள். கிடைக்கும் சைக்கிள் கேப்பில்
லாரி ஓட்டுவது போல் முறையாக செல்லாமல்
வளைந்து, நெளிந்து இவர்கள் ஓட்டுவதால்
பெரிய வண்டிககாரர்கள் தடுமாறுவதும் நடக்கிறது.
பெரியவர்களே இப்படி இருக்கும்போது பிள்ளைகள்
கையில் வண்டி கொடுத்தால் என்னவாகும்???
பெற்றோர்களுக்கு அவசரமாக கடைக்கு போகவேண்டும் அல்லது
சின்ன குழந்தையை பள்ளி, ட்யூஷனில் விட
வேண்டுமாக இருந்தால் சற்றே பெரிய குழந்தையின்
உதவியை நாடுகிறார்கள். அவர்களோ,” டூ வீலர்
கொடுத்தால், நீங்க சொன்ன வேலையை நான் செய்யறேன்”
என்பதுதான். தனக்கு வேலை நடக்க வேண்டுமே என்பதற்காக
“ஜாக்கிரதயா போ!” என்று சொல்லி சாவியை
கொடுத்து விடுகிறார்கள்.
பக்கத்து வீட்டிலேயே பத்தாம் வகுப்பு படிக்கும்
மாணவி இருக்கிறாள். கொஞ்சம் பெரிய்ய
பெண்ணாக தெரிவாள். அதனாலேயே அவளது
பெற்றோர் தைரியமாக இங்கிருந்து 5 கிமீ
தொலைவில் இருக்கும் அவளது ட்யூஷன்
வகுப்புக்கு சென்று வர ஆக்டிவா வாங்கிக்
கொடுத்திருக்கிறார்கள்.. என்ன சொல்ல???
இப்படி சின்னக் குழந்தைகள் வண்டி ஓட்டுவதை
பார்க்கும்போது நெஞ்சு பதை பதைக்குது.
நேரம் நல்லா இல்லாமல் இருந்து விபத்து
ஏதும் ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை கூட
கிடைக்காது. மருத்துவ செலவு, அது இது
என்று விபரீதம் நடந்தால் என்னாகும் என யாரும்
யோசிக்காததால் பிள்ளைகள் டூவீலர் ஓட்டுகிறார்கள்.
பெற்றவர்களே யோசியுங்கள். இளங்கன்று
பயமறியாது!!! நாம் தான் எடுத்துச் சொல்லி
18 வயது வரை சைக்கிள் மட்டும் ஓட்டச்
சொல்ல வேண்டும்.
பெரியவர்களுக்கு என் வேண்டுகோள்.
ட்ராபிக் சட்டங்களை மதித்து வண்டி
ஓட்டுங்கள். இரவில் ஹெட்லைட்
எதிராளியின் கண்ணைக்குருடாக்குவது போல்
போட்டு வண்டி ஓட்டாதீர்கள். பக்கத்திலிருந்து
நம் பிள்ளைகள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக
திகழ வேண்டிய மாபெறும் பொறுப்பு நமக்கிருக்கிறது.
23 comments:
சரிதாங்க. பிடிவாதம்னு சொல்ல முடியாது. அது சிறுபிள்ளைகளுக்கான ஒரு ஆர்வம். அது இருக்கக்கூடாதுன்னு சொல்ல முடியாது. அத நல்ல படியா கொண்டு வந்திட்டாக்க பிரச்சினை இல்லை. அதுக்காக சைக்கிள் டூவீலர் சைக்கிள்ள இருந்து கீழ விழுறதுக்கெல்லாம் பெத்தவுகள கோச்சுக்கவும் முடியாது. மெயின்ரோட்டுக்குப் போகாம பாத்துக்கணும்.
// அவர்களோ,” டூ வீலர்
கொடுத்தால், நீங்க சொன்ன வேலையை நான் செய்யறேன்”
என்பதுதான். தனக்கு வேலை நடக்க வேண்டுமே என்பதற்காக
“ஜாக்கிரதயா போ!” என்று சொல்லி சாவியை
கொடுத்து விடுகிறார்கள்.//
சாரிட்டி பிகின்ஸ் அட் ஹோம் அப்படின்னு சொல்லுவாங்க...
அது மாதிரி லஞ்சம் பிகின்ஸ் அட் ஹோம்..
இது மாதிரி கேட்பதை ஊக்குவிப்பதே பெற்றோர்கள் செய்யும் தவறு (அ) தப்பு..
// பிள்ளைகளின் பிடிவாதம் என்றே சொல்லலாம்.
அவர்கள் விரும்பியது விரும்பிய உடனே வாங்கிக்
கொடுக்கும் பெற்றோர் இந்த டூவீலர் விவகாரமும்
செய்கிறார்கள். //
1. பிள்ளைகளின் பிடிவாதம்
2. அதை வாங்கிக் கொடுக்கும் நிலையில் இருக்கும் பொருளாதாரம்.
3. ஒரே ஒரு குழந்தை என்று இன்று இருக்கும் நிலை.. அவனுக்கு / அவளுக்கு இல்லாமல் வேறு யாருக்கு என்கின்ற நினைப்பு
4. நான் படிக்கிறபோது சைக்கிள் இல்லாம கஷ்டப் பட்டேன், என் குழந்தை அந்த கஷ்டம் படக் கூடாது என அதீத பாசம் / செல்லம் கொடுக்கும் பெற்றோர்.
ஆர்வம் சரிங்க. ஆர்வக்கோளாறுல்ல செய்யக்கூடாததை செய்வது தவறு.
சைக்கிள் ஓட்டுவது தவறில்லை. 18 வயதில் முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்ற பின் பைக் ஓட்டுவதுதான் சரி...
//மெயின்ரோட்டுக்குப் போகாம பாத்துக்கணும்.//
இதுதாங்க தப்பு.
வாங்க இராகவன்,
//
1. பிள்ளைகளின் பிடிவாதம்//
ஆமாங்க. அதே தான்
//2. அதை வாங்கிக் கொடுக்கும் நிலையில் இருக்கும் பொருளாதாரம்.//
தனது ஸ்டேடஸைக்காட்டுதுல்ல, டூவீலர்லாம் ஓட்டுறாப்பா மகள்னு பேரு வாங்கணும்.
//3. ஒரே ஒரு குழந்தை என்று இன்று இருக்கும் நிலை.. அவனுக்கு / அவளுக்கு இல்லாமல் வேறு யாருக்கு என்கின்ற நினைப்பு//
மோசமான நினைப்பு
//4. நான் படிக்கிறபோது சைக்கிள் இல்லாம கஷ்டப் பட்டேன், என் குழந்தை அந்த கஷ்டம் படக் கூடாது என அதீத பாசம் / செல்லம் கொடுக்கும் பெற்றோர்.//
ரொம்ப சரியா சொன்னீங்க. இப்ப பல பிள்ளைங்க ஸ்கூலுக்கு வேன்ல தான் போ்றாங்க. நாம போன மாதிரி புத்தகத்தை சுமந்து நடந்து போகலியே. அப்புறம் நான் கஷ்டபட்டேங்கற நினைப்பெதுக்கு??
பாசமும், செல்லமும் பெற்றோரின்
கண்ணை மூடுது.
வருகைக்கு கருத்திற்கும் நன்றி
//அரசாங்கம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான்
வாகனம் ஓட்டும் உரிமம் பெற முடியும்னு சட்டம்
போட்டு வெச்சிருக்காங்க.//
நான் சொந்தமா சம்பாதிக்க ஆரம்பிச்சப்பக்கூட பெத்தவங்க என்ன விடலை. இப்ப கல்யாணம் ஆனப்பறம்தான் கார் ஓட்ட முடியுது.
நல்ல பதிவு. அனைவரும் பொறுப்புணர்ந்து செயல்படவேண்டும். விதிகளை ஏற்பது அவ்வளவு கடினமாக இருக்கிறது நமக்கு.!
17 வயது வரையான இளையவர்களையும் 'சற்றே பெரிய குழந்தை' என அழைக்கும் உங்கள் மனது மகிழச்செய்கிறது. :-)
வாங்க சின்ன அம்மிணி,
18 வயசுக்கு மேலயும் வண்டி ஓட்டக்கூடாதுன்னு சொல்லக்கூடாது. நம்மால முடியாதோன்னு ஒரு பயம் சேர்ந்திடும்.
வருகைக்கு நன்றி
விதிகளை ஏற்பது அவ்வளவு கடினமாக இருக்கிறது நமக்கு.!//
ப்ரேக் த ரூல்ஸ்னா சரியா இருக்கும்.
//17 வயது வரையான இளையவர்களையும் 'சற்றே பெரிய குழந்தை' என அழைக்கும் உங்கள் மனது மகிழச்செய்கிறது//
நன்றி
//பக்கத்திலிருந்து
நம் பிள்ளைகள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக
திகழ வேண்டிய மாபெறும் பொறுப்பு நமக்கிருக்கிறது.//
100 % உண்மை. இந்த பொறுப்பு எல்லா பெற்றோருக்கும் வந்தாலே போதும். பல குடும்பங்கள் பல்கலைக்கழகங்களாகி விடும்.
வாங்க தராசு அண்ணே,
ரொம்பச் சரியா சொன்னீங்க. வருகைக்கு நன்றி
http://rto.kar.nic.in/howtogetLLANDDLCSS.html
16 வயதானவர்கள் LL பெற்று வண்டி ஓட்ட முடியும்.
மிக சரியான வார்த்தைகள். நான் என் இரண்டு மகன்களையும் மிதிவண்டியில் தான் பள்ளிக்கு அனுப்புகிறேன் . இருவரும் தினமும் ஆறு கிலோமீட்டர் தூரம் மிதிவண்டியில் செல்கிறார்கள். அனைவரும் இதே போல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் சுற்றுசூழலையும் பாதுகாத்தது போல் இருக்கும். ஏதோ நம்மால் முடிந்தது அது தான்.
16 வயதானவர்கள் LL பெற்று வண்டி ஓட்ட முடியும்.//
தகவலுக்கு நன்றி சிவா,
இப்போ 16 வயது ஆக்கிட்டாங்க போல அதுவரைக்குமாவது டூவீலர் கொடுக்காமல் இருந்தால் நல்லது. என்னுடைய இந்த பதிவின் காரணம் அரசு அனுமதிக்கும் வயதில் வாகனம் ஓட்டுவதுதான் நல்லது.
நன்றி மலர்விழி
அன்பின் தென்றல்
ஆதங்கம் புரிகிறது - ஆனாலும் இக்காலக் குழந்தைகள் ஐக்யூ அதிகம் உடையவர்கள் - அவர்களை அவர்களாகவே காத்துக்கொள்ளும் திறன் படைத்தவ்ரகள் - அதிக கவலை வேண்டாம் - நல்லதையே நினைப்போம்
நல்வாழ்த்துகள் தெனறல்
குழந்தைகள் பிடிவாதம் பண்ணி வாங்குவதாக சொல்வது, மெயின் ரோட்டுக்கு போகாம போன்னு சொல்லறது எல்லாம் எனக்கும் சரியாக படவில்லை. பெற்றோர்கள் குழந்தைகள் அடம் பண்ணினா எல்லாம் பண்ணிடுவோமா? இல்லை discrimination இல்லாம செய்யறதும் சரியா? ஒரு வாகனத்தை ஓட்ட maturity யும் வேணும் தானே ?வயசு, அறிவு இரண்டும் தான். எனக்கு தெரிந்த நண்பர்களின் மகன் 16 வயசுதான், ரொம்ப intelligent தான். மோட்டர் பைக் ல தெரு முனையில் accident ஆகி விட்டது . நம்ப ஊர்ல signals இருந்தும் unregulated, discipline ஐ follow பண்ணாத ட்ராஃபிக். இதுல ஆடு மாடு கழுதை வேறு சின்ன சாலைகளில். பாதி பேருக்கு helmet வேற கிடையாது.இந்த அழகில் வயதுக்கு மீறிய உரிமைகள் பழக்க வழக்கம் ரொம்ப வருந்த்தக்கதே.அது தன்னையும் மட்டுமில்லாது others ஐ யும் ஆபத்திலும் வருத்தத்திலும் ஆழ்த்தும். அப்புறம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்த கதை தான். வருந்தி ப்ரயோசனம் தான் இருக்குமா?
ஆதங்கம் புரிகிறது - ஆனாலும் இக்காலக் குழந்தைகள் ஐக்யூ அதிகம் உடையவர்கள்//
அதிகம்தான் இல்லைன்னு சொல்லலை. ஆனா அது வண்டி ஓட்டுவதில் வேண்டாம்.
// அவர்களை அவர்களாகவே காத்துக்கொள்ளும் திறன் படைத்தவ்ரகள்//
வாகன நெரிசல்களில் பெரியவங்களுக்கே தண்ணி காட்டுது.
மிகச்சரியா சொல்லியிருக்கீங்க!
உண்மையான ஆதங்கம்!
நம்ப ஊர்ல signals இருந்தும் unregulated, discipline ஐ follow பண்ணாத ட்ராஃபிக். இதுல ஆடு மாடு கழுதை வேறு சின்ன சாலைகளில். பாதி பேருக்கு helmet வேற கிடையாது.இந்த அழகில் வயதுக்கு மீறிய உரிமைகள் பழக்க வழக்கம் ரொம்ப வருந்த்தக்கதே.அது தன்னையும் மட்டுமில்லாது others ஐ யும் ஆபத்திலும் வருத்தத்திலும் ஆழ்த்தும்.//
ரொம்பச் சரியா சொன்னீங்க ஜெயஸ்ரீ,
பிள்ளைங்க அப்படி வண்டி ஓட்டுவது தப்பில்லைன்னு பலர் நினைக்கறாங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஹ்ம்ம்...
என்ன சொல்றது. இப்படித்தான் நடக்குது. அப்புறம் " அய்யோ எம்புள்ள சரியாத்தான் வண்டி ஓட்டிச்சு.. அவந்தான் சரியா ஓட்டலை"ம்பாங்க
அய்யோ எம்புள்ள சரியாத்தான் வண்டி ஓட்டிச்சு.. அவந்தான் சரியா ஓட்டலை"ம்பாங்க//
நல்லாச் சொன்னீங்க ஜீவ்ஸ்
வாங்க சுரேகா,
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment