Tuesday, November 24, 2009

முரணும், முரணுக்கெதிரும்

அம்மம்மா, தாத்தா, அவ்வா என அன்பு காட்டிய
அன்பு நெஞ்சங்களுடன் வாழ ஆசிர்வதிக்கப்பட்டவள் நான்.

அம்மம்மா, தாத்தா உள்ளூரிலேயே இருக்க எப்போதும்
அவர்களின் அன்பு அரவணைப்பும், கதகதப்பும் இருந்தது.

அம்மாவும் வேலைக்குச் செல்ல அவ்வா என்னைப்
பாதுகாத்தார். கதை சொல்லி, வேளைக்கு சோறு
கொடுத்து, ஜுரம் வந்தால் பார்த்துக்கொள்ள என
எப்போதும் உடனிருந்தார்.


நீண்ட தலைமுடியை பரமாமரிக்க அம்மம்மா
வீட்டுக்குச் சென்று விடுவேன். செம்பருத்தி சாறு தடவி,
ஷாம்பு போடாமல் அம்மம்மா பாந்த மாக குளிப்பாட்டுவார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் வேப்பிலை மருத்துவமும்
நடக்கும். வேப்பிலை, ஓமம் அரைத்து தொட்டுக்கொள்ள
கல் உப்புடன் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும்.
பூச்சி தொந்திரவு இல்லாமல் இருக்க என அம்மம்மா
பார்த்து பார்த்து செய்வார்.

புத்தகம் படிக்க, வகை வகையாக சமைக்க எல்லாம்
கற்றது அம்மம்மாவால் என்றால் சமைத்த சுவடே
தெரியாமல் சமையற்கட்டை சுத்தம் செய்ய,
பாத்திரங்களை நேர்த்தியாக வைக்க, சாமான்கள்
வாங்குவதற்கு முன் காலியான டப்பாவி கழுவி
வெயிலில் வைத்தல் என இதைக் கற்றது அவ்வாவிடம்.
பட்ஜட் போடக் கற்றது அவ்வாவிடம் தானே.


எப்போதும் நினைவலைகளில் இருக்கும் இந்த சுகம்
இப்போது என் பிள்ளைகளுக்கு இல்லையே என
ஏக்கமாக இருக்கிறது. (என் பிள்ளைகள் மட்டுமல்ல
பல பிள்ளைகளுக்கும் இதுதான் நிலை)

அயித்தானின் சிறிய வயதிலேயே அப்பா இறந்து
விட, எங்கள் திருமணமான பொழுது அவரது
அம்மா படுத்த படுக்கை நிலையில் நோயாளியாக
இருந்தார்.

ஆஷிஷாவது நானம்மாவை பார்த்திருக்கிறான்.
மகள் பிறந்த 11 மாதத்தில் இறந்துவிட்டார்.
அம்ருதாவுக்கு புகைப்படம் தான்.


அம்மா, அப்பா புதுகையில். நானோ ஒவ்வொரு
ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறேன். விடுமுறை
காலங்களில் அம்மா, அப்பா இங்கே வருவது,
இல்லையேல் நான் அங்கு செல்லும்போது
பிள்ளைகள் என்னையும், அயித்தானையும்
கண்டு கொள்ளவே மாட்டார்கள். அம்மா
அப்பாவும் அவர்களுடனேயே இருந்து அவர்களுக்குத்
தேவையானதை பார்த்து செய்வார்கள். இது
எப்போதோ ஒரு முறை நிகழ்ச்சி தான். என்னைப்போல்
அனுதினமும் அனுபவக்கவில்லை.

பல வீடுகளில் தற்போது தனிக்குடித்தனம் தான்.
சில வீடுகளில் பெரியவர்கள் இல்லாமல் சிறியவர்கள்,
பல வீடுகளில் சிறியவர்கள் இல்லாமல் பெரியவர்கள்
வாழ்கிறார்கள். வேண்டி விரும்பியது சிலர்.
திணிக்கப்பட வாழ்பவர் பலர். என்னைப்போல்.
வீட்டில் பெரியவர்கள் இல்லையே என ஏக்கம்
எப்போதும் உண்டு.

கொழும்பு போன புதிதில் குழந்தைகள் நல
மருத்துவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது
“வீட்டில் பெரியவர்கள் இல்லாதது கஷ்டமாக
இருக்கிறது” என்றேன். நான் சொன்னதைக்
கேட்டுக்கொண்டிருந்தவர் ஒரு நிமிடம்
கழித்து “நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர் என
நான் நினைக்கிறேன்” என்றார்.

”என்ன? வீட்டுல பெரியவங்க இருக்கக்கூடாதுன்னு
சொல்ற கூட்டத்துல நீங்களும் ஒருத்தரான்னு!” கேட்டேன்.

”ஐயோ!! அப்படில்லாம் இல்லீங்க!ஆனா நாணயத்துக்கு
மத்தப்பக்கமும் இருக்கு. இது ஒத்துக்கறீங்க தானே!”ன்னு
சொல்லவும் ஆமோதிச்சேன்.

மேற்கொண்டு அவர் சொன்னது அவரின் வார்த்தைகளாக.
“நீங்க ஆசிர்வதிக்கப்பட்டவள்னு ஏன் சொன்னேன்னா,
வீட்டுல உங்களுக்கு வேறு யாரும் இல்லாததால் தான்
பிள்ளைகளை ஒரு ஒழுங்கோடு வளர்க்க முடிந்தது,
வீட்டில் பெரியவர்கள் டீவி பார்த்துக்கொண்டுதான்
இருப்பார்கள். அது பேத்தி பத்தாவது பரிட்சைக்கு
படித்துக்கொண்டிருந்தால் கூட!! நீங்க பார்க்கவேணாம்னு
எப்படி சொல்வீங்க??

பிள்ளைகளைத் திட்டினா சப்போர்ட் செய்ய ஆளிருந்தால்
பிள்ளை உங்கள் பேச்சைக் கேட்காது. செல்லம் கொடுக்க
ஆளிருப்பதால் பிள்ளைகள் இருவரின் பேச்சையும்
கேக்காம தன் இஷ்டத்துக்கு வளர்வாங்க.

இப்படி பெரியவர்கள் வீட்டில் இருப்பதால் சில
நெகட்டிவ்களும் இருக்குங்க. அதுக்காக பெரியவங்களே
இருக்கக்கூடாதுன்னு சொல்ல மாட்டேன். இருக்கறவங்களுக்கு
ஒரு வித பிரச்சனைன்னா, இல்லாதவங்களுக்கு வேறொரு
விதம்”!! அப்படின்னு சொன்னார்.

உண்மைதான்னு வீட்டுல பெரியவங்க இருக்கற சில
குடும்பத் தலைவிகளிடம் கேட்டபோது புரிஞ்சது.

இதுலேர்ந்து ஒண்ணு மட்டும் புரிஞ்சுது. நமக்கும்
வயசாகும். நாம் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப
நம்மை மாத்திகாட்டி போனா, நாம ”இருக்கப்போற”
இடம் மாறிடும்.

ஏதோ என் மனசுல பட்டதை, நான் கேட்டதை
சொன்னேங்க. இதை யாரும் தப்பா எடுத்துக்கிட்டு
சண்டைக்கு வரவேணாம்.

45 comments:

அகல்விளக்கு said...

//நமக்கும்
வயசாகும். நாம் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப
நம்மை மாத்திகாட்டி போனா, நாம ”இருக்கப்போற”
இடம் மாறிடும்.//

சரியாச்சொன்னீங்க...

கண்மணி/kanmani said...

பெற்றவர் இருவரும் வேலைக்குப் போகும் வீட்டில் சீக்கிரமே பள்ளியிலிருந்து வரும் பையன் வீட்டு கேட்டிலே காவல் இருப்பதும் உண்டு.யாரும் இல்லாத தனிமை பிள்ளைகளுக்கு கொடுமை.அதைவிட நெகடிவ் களை பாஸிட்டிவாக மாற்றும் கலை தெரிந்தால் பெரியவர்கள் சிறியவர்கள் பிரச்சினை எப்படி வரும்?பிள்ளைகள் படிப்பு கெடுத்து யாரும் டிவி பர்ர்க்க மாட்டார்கள் என்பது என் எண்ணம்.

pudugaithendral said...

அதைவிட நெகடிவ் களை பாஸிட்டிவாக மாற்றும் கலை தெரிந்தால் பெரியவர்கள் சிறியவர்கள் பிரச்சினை எப்படி வரும்?//

வராது. அதைச் சொல்லிக்கொடுக்க சின்னவங்களுக்கும் தெரியலை, கத்துக்க பெரியவங்களுக்கு விருப்பமில்லை எனபதுதான் பலரது குரல்பா.
//பிள்ளைகள் படிப்பு கெடுத்து யாரும் டீவி பர்ர்க்க மாட்டார்கள் என்பது என் எண்ணம்.//

இல்லீங்க. இது நிஜமாவே நடந்தது. என் உறவினர் வீட்டில் நான் கண்ணார பார்த்தது. ஒரு தோழியும் இதைச் சொன்னாங்க. :(

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அகல்விளக்கு

தராசு said...

நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்குதுங்கறது உண்மைதாங்க.

என்னைப் பொறுத்தவரை வயதானவர்கள் உடன் இருப்பதால் நன்மைகள்தான் அதிகம். இளம் பெற்றோருக்கும் ஒரு தைரியம் கூடும்.ப்ரைவசிங்கறது முக்கியமானதுதான்னாலும், பெரியவர்களின் அருகாமை ஒரு வரம் தான்.

Vidhoosh said...

டீ.வீ. விஷயமும், கண்டிக்கும் போது குறிக்கிடும் விஷயமும் முற்றிலும் உண்மைதான்.

:( சமாளிச்சுக்க வேண்டியதுதான்.

கண்டிக்கும் போது இப்போதெல்லாம் பெட் ரூமுக்குள்தான். எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு. ஆனா இந்த நடுக்கூடத்தில் நம் வீட்டுக்குள்ளேயே சாபம் போல இருக்கும் டீ.வீ.க்கு மட்டும் தீர்வே இல்லை.

:(

--வித்யா

மோனிபுவன் அம்மா said...

எனக்கு கூட வீட்டில் பெரியவர்கள் இருக்க வேண்டும் என்ற நீங்காத ஆசை இருக்கு.

ஆனால்

சில நேரங்களில் நாம் படும் கஷ்டத்தை பார்காமல் அவர்கள் நாம் எங்கோ நாம் நல்லா இருக்கிறோம் என்ற என்னத்தோடு அவர்கள் வாழ்கிறார்கள்.

இந்த சந்தோஷம் நாம் அவர்களுக்கு கொடுக்ககூடிய ஒன்றாச்சே!

pudugaithendral said...

கண்டிக்கும் போது இப்போதெல்லாம் பெட் ரூமுக்குள்தான். எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு. ஆனா இந்த நடுக்கூடத்தில் நம் வீட்டுக்குள்ளேயே சாபம் போல இருக்கும் டீ.வீ.க்கு மட்டும் தீர்வே இல்லை.//

வாங்க விதூஷ்.

ரொம்ப கஷ்டம் தான். இதைவிடவும் இன்னோரு கஷ்டம் இருக்கு. எங்க அவ்வா எனக்கு எம்புட்டோ நலல்து செஞ்சாலும் எங்க அம்மாவைப் பத்தி கோள்முட்டியது, அவங்களுக்கெதிரா அறியாத வயசில் பேச வெச்சதுன்னு பலதும் உண்டு.

அம்மா வீட்டில் இல்லாத நிமிடங்களை வெறுப்பேன். எப்பப்பாரு அவங்களைப் பத்தி ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க அவ்வா.

:(

pudugaithendral said...

இளம் பெற்றோருக்கும் ஒரு தைரியம் கூடும்.ப்ரைவசிங்கறது முக்கியமானதுதான்னாலும், பெரியவர்களின் அருகாமை ஒரு வரம் தான்.//

ஆமாம் தராசு அண்ணேன், ஆமா.

நான் அந்தத் தனிமை கொடுமையை அனுபவிச்சுகிட்டு வர்றேன். பெரியவங்க கூட இருக்கக்கூடாதுன்னு சொல்லலை.

இதை படிச்சு சில பெரியவங்களைத் தன்னை கொஞ்சம் மாத்திகிட்டாத் தேவலை என்பதுதான் எண்ணம்.

Jayashree said...

நீங்க எழுதியிருப்பது போல தற்கால குடும்பங்கள் nuclear family யா தான் ஆகிவிடுகிறது . வேலை பொருட்டு இந்தியாவாக இருக்கட்டும் வெளி நாடாக இருக்கட்டும் முன்னேற்றம் என்று போய் விடுகிறோம். பிறகு தான் ரொம்பவே joint family அருமை தெரிகிறது.சில சமயம் CHOICE. சிலசமயம் வாய்த்தது. ஆனா கூட்டு குடும்பத்துல கிடைத்த படிப்பினை தனியா குழந்தைகளை வளர்க்கும் போது ரொம்ப effective ஆகவே இருக்கிறதுங்கறதுங்கறதும் உதவிக்குவருகிறதும் உண்மைனு எனக்கு தோனறது. நான் உங்களை மாதிரி கூட்டு குடும்பத்தில் என் இள வயதில் வளர்ந்தவள் தான். ஆனல் நான் புகுந்த வீடு சின்ன குடும்பம், அப்பா அம்மா மகன் என்று. எனக்கு கல்யாணம் ஆனபோது அது இன்னும் சுருங்கி அம்மா மகன் என்றாகி இருந்தது. ஆனல் என் மாமியார் என்னுடன் சிறிதுகாலமே மனித உருவில் வாழ்ந்த தெய்வம். அவரும் போன பின் loneliness இருந்தது , இருப்பது இன்றும் உண்மை. ஆனா அவர் வழி, மற்றபடி தூரத்தில் இருந்தாலும் என் தாய் ,அம்மம்மா வழி இன்னும் உதவுகிறது.பலனும் தருகிறது.

அமுதா said...

/*நமக்கும் வயசாகும். நாம் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நம்மை மாத்திகாட்டி போனா, நாம ”இருக்கப்போற”
இடம் மாறிடும்.*/
உண்மை. எப்பொழுதும் முரண்கள் இருக்கு. அதை அனுசரித்து நாம் வாழ்வதுதான் சுவாரசியம்

pudugaithendral said...

வாங்க ஜெயஸ்ரீ,

நான் இதில் வேணாம் எனும் கட்சி இல்லீங்க. மருத்துவர் ஒருவர் ஆலோசித்து சொன்னதை வைத்து அந்தக் கோணத்தில் பார்த்த பொழுதுதான் நெகட்டிவ்களும் தெரிந்தன.

எப்போதும் + _ இரண்டும் சேர்ந்ததுதானே வாழ்க்கை.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

சில நேரங்களில் நாம் படும் கஷ்டத்தை பார்காமல் அவர்கள் நாம் எங்கோ நாம் நல்லா இருக்கிறோம் என்ற என்னத்தோடு அவர்கள் வாழ்கிறார்கள்.

இந்த சந்தோஷம் நாம் அவர்களுக்கு கொடுக்ககூடிய ஒன்றாச்சே!//

இது ரொம்ப பெரிய காரணம் மோனிபுவன் அம்மா,

இதனாலேயே பல பெண்கள் பிறந்த வீட்டுக்கு அடிக்கடிச் செல்லாமல் இருப்பாங்க.

ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம்.

:(

pudugaithendral said...

எப்பொழுதும் முரண்கள் இருக்கு. அதை அனுசரித்து நாம் வாழ்வதுதான் சுவாரசியம்//

ஆமாம் அமுதா,

அருமையாச் சொன்னீங்க

துளசி கோபால் said...

//இப்படி பெரியவர்கள் வீட்டில் இருப்பதால் சில
நெகட்டிவ்களும் இருக்குங்க. அதுக்காக பெரியவங்களே
இருக்கக்கூடாதுன்னு சொல்ல மாட்டேன். இருக்கறவங்களுக்கு
ஒரு வித பிரச்சனைன்னா, இல்லாதவங்களுக்கு வேறொரு
விதம்”!! அப்படின்னு சொன்னார்.//

இது சத்தியமான உண்மை.

அட்ஜஸ்ட் பண்ணிக்கும் பெரியவங்களும் இருக்காங்க. கொஞ்சம்கூட இணக்கம் இல்லாம சுயநலமா இருக்கரவங்களும் இருக்காங்க.

நாம் வாங்கிவந்த வரம் நல்லதுன்னா.... எல்லாம் நல்லது.

கடவுள் இடும் இடுகை நல்லதாவே இருக்குமா எப்போதும்?

S.Arockia Romulus said...

/*****“நீங்க ஆசிர்வதிக்கப்பட்டவள்னு ஏன் சொன்னேன்னா,
வீட்டுல உங்களுக்கு வேறு யாரும் இல்லாததால் தான்
பிள்ளைகளை ஒரு ஒழுங்கோடு வளர்க்க முடிந்தது,
வீட்டில் பெரியவர்கள் டீவி பார்த்துக்கொண்டுதான்
இருப்பார்கள். அது பேத்தி பத்தாவது பரிட்சைக்கு
படித்துக்கொண்டிருந்தால் கூட!! நீங்க பார்க்கவேணாம்னு
எப்படி சொல்வீங்க??

பிள்ளைகளைத் திட்டினா சப்போர்ட் செய்ய ஆளிருந்தால்
பிள்ளை உங்கள் பேச்சைக் கேட்காது. செல்லம் கொடுக்க
ஆளிருப்பதால் பிள்ளைகள் இருவரின் பேச்சையும்
கேக்காம தன் இஷ்டத்துக்கு வளர்வாங்க.*****/

என்னால் இதை ஒத்துக் கொலள்ள‌ முடியாது..........

butterfly Surya said...

நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்குதுங்கறது உண்மைதாங்க.

என்னைப் பொறுத்தவரை வயதானவர்கள் உடன் இருப்பதால் நன்மைகள்தான் அதிகம். இளம் பெற்றோருக்கும் ஒரு தைரியம் கூடும்.ப்ரைவசிங்கறது முக்கியமானதுதான்னாலும், பெரியவர்களின் அருகாமை ஒரு வரம் தான்.


/// தராசு சொன்னதை வழி மொழிகிறேன்..

Jayashree said...

இங்க எல்லோரொட கருத்திலும் ஒரு உண்மை இருக்கத்தான் இருக்கு. நீங்க சொல்லறமாதிரி எல்லாத்திலும் + /_ இருக்கு. அதுதான் வாழ்க்கை. அந்த டாக்டர் சொன்னது போல coin has two side தான், yet we can directly see only one side at a time மறு சைட் தெரியறப்போ, அமுதா, நீங்க சொல்லறமாதிரி ஒவரால் நன்மை தீமைகளை தீர்கமா ஆலோசித்தே அனுசரித்துப் போவது விவேகம். பெரியவர்கள் சப்போர்ட் இல்லாதவர்கள் தனக்கு முன்பு கிடைத்த அன்பு ஆதரவை தன் குழந்தைகளிடம், தான் காண்பித்துவிட்டால் ஆச்சு!! ஆனா folks!!Learning to disagree without a fight, tough love, is also needed when it is appropriate!! whether young or old!!! இல்லையா?

இராகவன் நைஜிரியா said...

எந்த ஒரு விஷயத்திலும் நல்லதும் உண்டு. கெடுதலும் உண்டு.

என் தாய், தந்தையரும், மாமனாரும் (கல்யாணத்தின் போதே மாமியார் இல்லை) உயிருடன் இல்லாததற்கு இன்றும் நான் வருந்துகின்றேன்.

அவர்கள் எனக்கும், என் மனைவிக்கும் கற்றுக் கொடுத்தது ஏராளாம்.

எதற்கு பணம் செலவு செய்ய வேண்டும், குடும்பம் எப்படி நடத்த வேண்டும் என்பதையும், குழந்தை வளர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தவர்கள் அவர்கள்.

தொலைக் காட்சி பற்றிச் சொன்னீர்கள் - அவர்கள் இருந்த வரை, மகனுக்கு பரீட்சை (பெரிய வகுப்பு கூட கிடையாது 3 வது) தொலைக்காட்சி ஓடவே ஓடாது.

கடைசிவரை மூவரையும் என்னுடன் வைத்திருந்து, நல்லபடியாக கரைச் சேர்த்தது, அவர்கள் ஆசியும் கிடைத்தது என் பாக்யம்.

எனக்கு நல்லதாகவே நடந்தது.. அதனால் சந்தோஷமாக இருக்கு.. அதை சொல்லிவிட்டேன்.

எல்லோருக்கும் அப்படியே நல்லதாகவே நடக்க ஆசைப் படுகின்றேன்.

pudugaithendral said...

வாங்க இராகவன்,

நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவராக இருந்தது சந்தோஷம். அந்த வரம் அனைவருக்கும் கிடைத்தால் போதும்

காற்றில் எந்தன் கீதம் said...

//இதுலேர்ந்து ஒண்ணு மட்டும் புரிஞ்சுது. நமக்கும்
வயசாகும். நாம் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப
நம்மை மாத்திகாட்டி போனா, நாம ”இருக்கப்போற”
இடம் மாறிடும்.//

சரியாய் சொன்னீங்க அக்கா... (நான் நிஜம்மாவே உங்களுக்கு தங்கச்சியா தான் இருப்பேன் :) )
நான் சுதர்ஷினி .... நம்ம ப்ளாக் பக்கம் கொஞ்சம் வந்து பார்த்து நல்லது கெட்டது சொல்லுங்க.....

pudugaithendral said...

வாங்க ஜெயஸ்ரீ,

கருத்துக்கள் அருமை

pudugaithendral said...

வாங்க சூர்யா,
ஆனா இங்கே ஒரு விடயம் இருக்குங்க.

ஆணாக இருந்து பார்த்தலை விட பெண்ணாக இருந்து பார்த்தால் தெரியும். பிரச்சனை செய்ய சொல்லவில்லை. ஆண்கள் சந்திக்கும் பிரச்சனை வேறு விதம், பெண்கள் சந்திக்கும் பிரச்சனை வேறுவிதம்.

நல்லபடியா இருக்கணும் என்பதுதான் கருத்தே.

pudugaithendral said...

தொலைக் காட்சி பற்றிச் சொன்னீர்கள் - அவர்கள் இருந்த வரை, மகனுக்கு பரீட்சை (பெரிய வகுப்பு கூட கிடையாது 3 வது) தொலைக்காட்சி ஓடவே ஓடாது.//

இராகவன் இதற்கு உங்கள் வீட்டு பெரியவர்களுக்கு மானசீகமாக என் வணக்கஙள். எனக்கு நெருங்கிய உறவுக்குடும்பம். 3 மாதம் முன்பு வந்திருந்தார்கள். எல்.கே.ஜி படிக்கும் அவரது பேத்தி சீரியல் பெயர்கள் சொல்லி ஒவ்வொன்றாக பாட்டியுடன் சேர்ந்து பார்க்கிறாள். வீட்டில் டீவியை நிறுத்துவதே கிடையாது என அவரது மகனும் மகளும் என்னிடம் புலம்பினர். பாவமாக இருந்தது. அவர்களைப் பார்த்து அல்ல.

அந்தக் குழந்தையை நினைத்து.
:(

pudugaithendral said...

கொஞ்சம்கூட இணக்கம் இல்லாம சுயநலமா இருக்கரவங்களும் இருக்காங்க.

நாம் வாங்கிவந்த வரம் நல்லதுன்னா.... எல்லாம் நல்லது.

கடவுள் இடும் இடுகை நல்லதாவே இருக்குமா எப்போதும்?//

இதைவிட வேறு என்ன சொல்லமுடியும். சரியான டீச்சர் நீங்க.

pudugaithendral said...

என்னால் இதை ஒத்துக் கொலள்ள‌ முடியாது........//

ரோமுலஸ் இதற்காகத்தான் சொல்வது நாணயத்திற்கு மறுபக்கம் கூட இருக்குன்னு சொல்வது. நாம் பார்க்கும் பார்வை சரின்னு சொல்ல முடியாது.

இங்கே பெரியவர்களைப் பத்தி பேசுவதால் குற்றம் சொன்னால் அவமரியாதை செய்வதாக அர்த்தம் இல்லை.

பெரியவரோ, சின்னவரோ குற்றம் குற்றமே.

S.Arockia Romulus said...

/******இங்கே பெரியவர்களைப் பத்தி பேசுவதால் குற்றம் சொன்னால் அவமரியாதை செய்வதாக அர்த்தம் இல்லை.

பெரியவரோ, சின்னவரோ குற்றம் குற்றமே.*****/


கூட்டுக் குடும்ப‌த்தின் சிற‌ப்புக்க‌ளை உணர்ந்த‌வ‌ன் நான்.கூட்டுக் குடும்ப‌த்தில் வாழும் குழ‌ந்தை த‌வ‌றிப்போக‌ (த‌வ‌று செய்ய‌) வாய்ப்புக்க‌ள் மிக‌ மிக‌ குறைவு.

pudugaithendral said...

(நான் நிஜம்மாவே உங்களுக்கு தங்கச்சியா தான் இருப்பேன் :) )
நான் சுதர்ஷினி ..//

ஆகா இலங்கை காற்றிலிருந்து வீசும் கீதமா. வாங்க வாங்க நலமா தங்கச்சி.

உங்க ப்ளாக் பக்கம் இதோ வந்திட்டேன்.

pudugaithendral said...

கூட்டுக் குடும்ப‌த்தின் சிற‌ப்புக்க‌ளை உணர்ந்த‌வ‌ன் நான்.கூட்டுக் குடும்ப‌த்தில் வாழும் குழ‌ந்தை த‌வ‌றிப்போக‌ (த‌வ‌று செய்ய‌) வாய்ப்புக்க‌ள் மிக‌ மிக‌ குறைவு.//

நானும் கூட்டுக்குடும்பத்தில் பிறந்து அந்த கதகதப்பை உணர்ந்தவள் தான் ரோமுலஸ்.

இங்கே பேசுவது அதைப்பற்றி அல்ல. கூட்டுக்குடும்பத்தில் + - இருப்பது போல் தனிக்குடித்தனத்திலும் +- இருக்கிறது. இதில் முக்கிய அம்சமான பெரியவர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பற்றி பேசுகிறோம்.

Ungalranga said...

//என்னைப் பொறுத்தவரை வயதானவர்கள் உடன் இருப்பதால் நன்மைகள்தான் அதிகம். இளம் பெற்றோருக்கும் ஒரு தைரியம் கூடும்.ப்ரைவசிங்கறது முக்கியமானதுதான்னாலும், பெரியவர்களின் அருகாமை ஒரு வரம் தான்.//

என் அனுபவமும் இதேதான்!!!

ஹுஸைனம்மா said...

வீட்டில் பெரியவர்கள் இருப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

ஆனால் இந்த டி.வி. மற்றும் அட்வைஸ் விஷயத்தில்தான் பிரச்னையே வருவது, சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல்...

pudugaithendral said...

சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல்...//

வாங்க ஹுசைனம்மா,

நிஜமான நிலை இதுதான்.

pudugaithendral said...

வாங்க ரங்கன்,

பெரியவங்க இருக்கவே கூடாதுன்னு சொல்லலை. நாங்களும் அந்த கட்சிதான்.

cheena (சீனா) said...

அன்பின் தென்றல்

ஆதங்கம் புரிகிறது - என்ன செய்வது - துளசி கூறினாற்போல் கடவுளின் இடுகை கூட எப்பொழுதும் நன்றாய் இருக்காது. வீட்டில் பெரியவர்கள் இருப்பது பொதுவில் நல்லது தான். மறுபக்கம் பெரும்பாலும் நல்லதாகவே அமையும்.

நாம் வாங்கி வந்த வரத்தினைப் பொறுத்தது.

நல்வாழ்த்துக்ள் தென்றல்

Anonymous said...

அன்பின் தென்றல், யாரோ ஓரிவர் செய்யும் தவறுக்காகவும், யாரோ ஓரிருவர் அவர்களபை் பற்றி குறை சொல்வதற்காகவும் பெரியவர்களைக் குறை கூற இயலாது. அவர்களால் அசவுகரியம் உண்டு. ஆனால் அவர்கள் பிள்ளைகளுக்கு அளிக்கும் ஆரம்பகட்ட அறிவு (அஸ்திவாரம்னு சொல்லலாமா!) மிக முக்கியம்.

கடைசில முடிச்சிருக்கீங்க பாருங்க. நமக்கும் வயசாகும்னு. அது உண்மை. நாம் அசவுகரியம் என்று கருதுவதை, நம் பிள்ளைகளுக்குச் சென்று சேராமல் பார்ப்போம், புதிய குறைகளைக் கூற அவர்களுக்கு வாய்ப்புகள் தருவோம். எப்டி!

pudugaithendral said...

நாம் அசவுகரியம் என்று கருதுவதை, நம் பிள்ளைகளுக்குச் சென்று சேராமல் பார்ப்போம், புதிய குறைகளைக் கூற அவர்களுக்கு வாய்ப்புகள் தருவோம். எப்டி//

superb

pudugaithendral said...

நாம் வாங்கி வந்த வரத்தினைப் பொறுத்தது.


enna seyya. thanks for the comment

எம்.எம்.அப்துல்லா said...

இந்தமுறை ஊருக்குப் போனபோது இரண்டு வங்கிகளில் மாதம் ஆயிரம்,ஆயிரம் ரூபாய் நான் போட்டு வைப்பதை அறிந்த அம்மா “என்னடா? ரெண்டாவது பொண்ணு பிறந்தவுடனே சேர்க்கனும்னு பொறுப்பு வந்துருச்சா?ன்னாங்க. நான் சொன்னேன், “இதை சேர்க்குறது அவங்களுக்கு இல்லை.கடைசிகாலத்தில் எனக்கும்,என் மனைவிக்கும் முதியோர் இல்ல ஃபீஸ் கட்டுறதுக்கு”.

:)

வல்லிசிம்ஹன் said...

தென்றல், பெரியவர்கள் எங்கள் காலத்திலும் அதிகாரமும் செய்வார்கள் ஆதரவாகவும் இருப்பார்கள்.
இப்போது எப்படியோ தெரியாது.
கூடி இருப்பதில் நன்மை இருந்தாலும் பிரச்சினை பல ரூபங்கள் எடுத்து வரும்.
மறுக்க முடியாது. சில கொடுத்த வைத்த ஆத்மாக்கள் இருக்கிறார்கள். எல்லா விதத்திலும் ஒத்துமையாக இருக்கக் கற்றவர்கள்.

pudugaithendral said...

சில கொடுத்த வைத்த ஆத்மாக்கள் இருக்கிறார்கள். எல்லா விதத்திலும் ஒத்துமையாக இருக்கக் கற்றவர்கள்.//

லட்சத்துல ஒண்ணா இருக்கும். வருகைக்கு நன்றி வல்லிம்மா

pudugaithendral said...

வாங்க அப்துல்லா,

இதுதான் நிதர்சனம். :))

Thamira said...

ஒரு அழகான ஏக்கத்தை பதிவு செய்திருக்கிறீர்கள் என சொல்ல வந்தேன். அதற்குள் முடிவில் மாற்றுக்கருத்தையும் பதிவு செய்து இதை நல்லதொரு அலசலாக மாற்றிவிட்டீர்கள்.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ஃப்ரெண்ட்

Prathap Kumar S. said...

//நீண்ட தலைமுடியை பரமாமரிக்க அம்மம்மா
வீட்டுக்குச் சென்று விடுவேன். செம்பருத்தி சாறு தடவி,
ஷாம்பு போடாமல் அம்மம்மா பாந்த மாக குளிப்பாட்டுவார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் வேப்பிலை மருத்துவமும்
நடக்கும். //

இப்பல்லாம் இப்படி யாருங்க பண்றாங்க... எல்லாம் பாய்கட் பண்ணிட்டு யாரு பொண்ணு யாரு பையன்னே தெரியமாட்டேங்குது...

நல்லதொரு ஆதங்க பதிவு...நீங்க சொல்லிட்டீங்க.. சிலபேரு சொல்ல முடியாம இருக்காங்க...

pudugaithendral said...

சிலபேரு சொல்ல முடியாம இருக்காங்க...//

ஆமாம் நாஞ்சில் பிரதாப்.

சில இடங்களில் நல்ல பெரியவர்கள், பல இடங்களில் நீங்கள் சொல்லியிருக்கும் நிலை.

நான் சொல்வது பலருக்கு தவறாய் இருக்கும். இதில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இருப்பது பெண் தான். ஏனென்றால் வீட்டோடு இருக்கும் மாமன்/மாமியை பத்தி ஏதும் சொன்னால் முதலில் சண்டைக்கு வருவது கணவன்.

தவறே செய்தாலும் பெற்றோர் என்பதால் கண்மூடித்தனமான பாசம். என்ன செய்யலாம். வல்லிம்மா சொல்லியிருப்பது போல் அவரவர் வாங்கிவந்த வரம்.

வருகைக்கு நன்றி