Thursday, December 10, 2009

அனுமதியோம், அனுமதியோம், நாட்டைத் துண்டாட அனுமதியோம்

இப்படி எல்லாம் தேசபக்தி தளும்ப பாடிக்கிட்டு இருந்தோம்.
இனிமே “வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் நமது தேசக்
கொள்கை” அப்படின்னு சொன்னா யாரும்,”அப்படியா!!”ன்னு
கேப்பாங்கன்னு நினைக்கிறேன்.

வேற்றுமையை மட்டும் பார்ப்பதுதான் நமது கொள்கையாயிருச்சே.
தெலுங்கானா கலாட்டாக்கள் நடந்து கொண்டிருக்கும்பொழுதே,

தெலுங்கானா - பற்றிய விரிவான கதைக்கு இங்கே
கட்டாயம் பார்க்கவும்.“தெலுங்கானா மட்டும் பிரிச்சா நாங்க சும்மாயிருக்க மாட்டோம்!
ராயலசீமா கேப்போம்னு” ஒரு கோஷ்டி,

”உத்தராந்த்ரா(வடக்கு ஆந்திரா) தந்தே ஆகணும்னு” ஒரு கோஷ்டி,

இதுல ரொட்டிக்கு சண்டை போட்டுகிட்ட பூனைகள் மாதிரி
ஹைதராபாத் எங்களுக்கேங்கறாங்க சிலர், சிலரோ ஹைதையை
யூனியன் டெரிடரி ஆக்கிடுங்கன்னு சொல்றாங்க. ஹைதை
எங்கே? யாருக்கு? என்னாவாக போகுதுன்னு பாக்கணும். :((

காங்கிரஸ், பிரஜாராஜ்யம், தெலுகு தேசத்தை
35 எம்பிக்கள் ராயலசீமாவுக்காக தனது பதிவியை ராஜினாமா
செஞ்சாங்கன்னு செய்தி இன்னைக்கு மதியம் டீவில் வந்துச்சு.

தெலுங்கானா கொடுத்தா கம்மம் மாவட்டத்தில் இருக்கும்
பத்ராசலம் கோவிலும், கோதாவரியும் தமக்கே சேரணும்னு
கரையோர ஆந்திரா கேட்டதாக டீவில காட்டினாங்க.


என்ன கொடுமைடா சாமி இதுன்னு பாத்துகிட்டு இருக்கும்போது
தமிழ் தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்து இன்னுமும்
நொந்துக்க வேண்டியதாச்சு. புதுச்சேரியிலிருந்து காரைக்காலை
பிரிச்சு தனி யூனியன் டெரிடரியாக கொடுக்கணும்னு
ஆரம்பிச்சிருக்காங்க. மஹாராஷ்ட்ரத்தில் விபர்தாவை
தனியா பிரிக்கணுமாம்!!!


இதே போக்குல போனா இந்தியா எனும் நாடு இருந்துச்சுன்னு
சொல்லிக்கறா மாதிரி ஆகிடும் போல இருக்கே. இப்ப
தனி மாநிலம் வேணும்னு கேக்கறவங்க, பின்னாளில்
மாநிலமா இருந்து போரடிச்சு போச்சு, எனக்கு பிரதம
மந்திரி ஆகணும்னு தனி நாடு கேட்டு போராடுவாங்க.


தெலுங்கானா வரும்னு கண்டிப்பான உத்திரவாதம்
ஏதும் காங்கிரஸ் கொடுக்கலை என்பது என் கருத்து.
சந்திரசேகர ராவ் தனது உண்ணாவிரதத்தை கைவிடாவிட்டால்
மாணவர்கள் இன்னமும் வன்முறையில் ஈடுபடுவாங்க.
அதை தடுத்து நிறுத்தவே தெலுங்கானா வரும்னு
சொல்லியிருக்காரு. வரும்,வராது என்பது போலன்னு
வெச்சுக்கலாம்.

தெலுங்கானா எனும் மாநிலம் அமைய எடுத்து வைத்திருக்கும்
முதல் அடி இதுன்னு காங்கிரஸ் சொல்லுது. மாநிலம்
உருவாக எத்தனை நாளாகும்னு சொல்ல முடியாதுன்னும்
சொல்லியிருக்காங்க. இந்த வெண்டைக்காய் கொழ கொழ
மாதிரி இருக்கறதை புரிஞ்சிக்காமலா TRS கட்சி தனது
போராட்டத்தை கைவிட்டுச்சு!!!!!! இன்றைக்கு நடந்த பேரணியை
“வெற்றிப் பேரணியா” நடத்தினாங்க.

இன்னைக்கு காலேல பேப்பர் படிச்சபவே புரிஞ்சிருச்சு
இது ஒரு கண் துடைப்புன்னு. டீவி 9 சேனலில்
ஒருவர் சொன்னது தான் கொடுமையா இருந்துச்சு.
“50 வருட போராட்டத்திற்கு இப்போது பலன் கிடைத்திருக்கு.
இதுவரை அரசியல்வாதிகள் மட்டுமே போராடி
எதுவும் செய்ய முடியலை. இந்த முறை மாணவர்கள்
அதை செஞ்சு காட்டியிருக்காங்க!!!””
இது தவறான செய்தியாக மாணவர்களுக்கு போய்ச்
சேருமேன்னு தான் கவலையா இருக்கு.

போராட்டத்தில் ஈடுபடாவிட்டாலும் பள்ளிகள்,
கல்லூரிகள் மூடப்படுவதால் படிப்பு பாதிக்கப்படுகிறது.
இன்னும் எத்தனை உண்ணாவிரதமோ, எத்தனை
பந்த்களோ,போராட்டங்கள் இதற்கு விலையாகும்
மாணவர்களின் எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறி??????

36 comments:

புதுகைத் தென்றல் said...

தமிழ்மணத்துல
ஓட்டு போட மறந்துடாதீங்க.

ரங்கன் said...

காங்கிரஸ் எப்படியாவது இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்திருப்பதாக சேதி வந்திருக்கு..

இன்னும் சில நாட்களில் மேலும் பல புதிய தகவல்கள் வரக்கூடும்னு தெரியுது..

பார்ப்போம்..!!

butterfly Surya said...

அரசியல்ல நீங்க ஒரு ரவுண்டு வரலாம்.

அரசியலை பற்றி எழுதியவுடன் ஒட்டு போட சொல்றீங்க பார்தீங்களா..??

அதான் அரசியல்.

சரி.. போட்டாச்சு 2/2

ஹுஸைனம்மா said...

அக்கா, சரியாச் சொல்லியிருக்கீங்கக்கா. ஆளாளுக்குத் துண்டு துண்டா பிச்சு எடுத்துருவாங்க போல!!

அதுஏங்க்கா வோட்டு போடச் சொல்ல்றீங்க? எலெக்‌ஷன்ல எதுவும்... ஜெயிச்சா, தனித்தமிழ்நாடு வாங்கித் தருவீகளா? ;-))

புதுகைத் தென்றல் said...

மதியம் 4.44 மணி அப்டேட்.

இதுவரை 100 எம்பிக்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். இந்த திருப்பத்தை எதிர்பாராத காங்கிரஸ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போகிறது.

புதுகைத் தென்றல் said...

இன்னும் சில நாட்களில் மேலும் பல புதிய தகவல்கள் வரக்கூடும்னு தெரியுது..//

இன்னைக்கே அங்கங்கே நடக்குது. கோர்க்கா காரங்க நாளேயிலேர்ந்து உண்னாவிரதம் இருக்கப்போறாங்களாம்!!!

புதுகைத் தென்றல் said...

அரசியலை பற்றி எழுதியவுடன் ஒட்டு போட சொல்றீங்க பார்தீங்களா..??

அதான் அரசியல். //
:))
ஓட்டுக்கு நன்றி சூர்யா

புதுகைத் தென்றல் said...

எலெக்‌ஷன்ல எதுவும்... ஜெயிச்சா, தனித்தமிழ்நாடு வாங்கித் தருவீகளா?//

200 வருஷமா ஆந்திராவோடு இருந்த சென்னையை தமிழ்நாட்டோட இணைச்சிருக்காங்க. அதை வேனா பிரிச்சு தனி யூனியன் டெரிடரிஆக்கச்சொல்லலாமான்னு யோசனை.

(ஐயோ சும்மாதான் இப்படி பின்னூட்டம் :) )

கோபிநாத் said...

செய்தியை பார்த்து அட போட்ங்கடான்னு இருந்துச்சி...ஆனா நீங்க சொல்வது போல இது கண் துடைப்பு தான்...இப்போதைக்கு ஒரு STOP.

எம்.எம்.அப்துல்லா said...

//இதுவரை 100 எம்பிக்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள் //

calculation mistake!!??!! it may be MLAs not MPs.

புதுகைத் தென்றல் said...

வாங்க கோபி,

கொஞ்ச நேரம் முன்னாடி நடந்த பேச்சுவார்த்தையில்
தெலுங்கானா அமைவதில் சாதகம் பாதகம் பத்தி கலந்தாலோசிக்கப்படும்னு அம்மா சொல்லியிருக்காங்க.

இதெல்லாம் நேத்து ராத்திரி ஏன் இவங்க யோசிக்கலை????

திரும்ப கொதிக்க துவங்கி அராஜகம் நடக்காம இருந்தா சரி

புதுகைத் தென்றல் said...

calculation mistake!!??!! it may be MLAs not MPs.//

:)) யெஸ்ஸு. எம் எல் ஏக்கள் தான்.

வித்யா said...

:(

thenammailakshmanan said...

புதுகைத்தென்றல்
அரசியல் விஷயம் கூட கலக்குறீங்க

ஹைதை பிரியாணி மாதிரி ஹைதை அரசியல்லையும் நல்லா மசாலா காரமா இருக்கு

எப்ப இந்த மாணவர்கள் உணர்வாங்களோ தெரியல

cheena (சீனா) said...

ம்ம்ம் அன்பின் தென்றல் - ஹைதையில் இருக்கும் தங்களின்
ஆதங்கம் புரிகிறது.

என்ன செய்வது - மாணவர்கள் அல்லவா போராடுகிறார்கள் - நிலைமை கட்டுக்க்டங்காமல் போய் விடுமே - அதனால் மன்மோகனும் ப.சி.யும் ஏதோ கூறி இருக்கிறார்கள் - பார்ப்போம்

நல்வாழ்த்துகள்

fundoo said...

கால நேரம் பார்த்து அறுவடை பன்ற மாதிரி தெரியிது. அதையும் காங்கிரஸ் சமாளிக்கிற மாதிரி தெரியிது. இன்னும் என்ன என்ன கூத்து நடக்கப்போகுதோ. பாவம் நம்பாளு சந்திரபாபு நாயுடு. அவர யாருமே கண்டுக்க மாட்டேன்றாங்க.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி வித்யா

புதுகைத் தென்றல் said...

வாங்க தேனம்மை
ஹைதை பிரியாணி மாதிரி ஹைதை அரசியல்லையும் நல்லா மசாலா காரமா இருக்கு//

நன்றி

எப்ப இந்த மாணவர்கள் உணர்வாங்களோ தெரியல//

அதான் வருத்தம்

புதுகைத் தென்றல் said...

வாங்க சீனா சார்,
ப.சியும், மன்மோகனும் சேர்ந்து பண்னதுல ஆந்திரா 3ஆ போகப்போவுது. கடலோர ஆந்திரா,ராயலசீமாவுல பந்த் நடக்குதாம்.
ரயில்களை மறிக்கராங்களாம்.

:((

புதுகைத் தென்றல் said...

பாவம் நம்பாளு சந்திரபாபு நாயுடு. அவர யாருமே கண்டுக்க மாட்டேன்றாங்க.//

நீங்க வேற ஃபண்டூ,

சந்திரபாபுவும், சிரஞ்சீவ்யும் தெலுங்கானாவுக்கு ஆதரவுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இப்ப டமால்னு ப்ளேட்டை திருப்பி போட்டு “காங்கிரஸ் ஆட்சி யோசிக்காம ராத்திரியோடு ராத்திரியா இப்படி தெலுங்கானா கொடுப்போம்னு முடிவு செஞ்சிருக்க வேணாம்னு” சொல்றாங்க.

SanjaiGandhi™ said...

போராட்டத்தால் மட்டுமே ஒரு மாநிலத்தை பிரிக்க முடியாது. அந்த மாநிலத்தின் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப் படவேண்டும். அந்த தீர்மானம் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நிறைவேற்றப் படவேண்டும். ஆந்திராவின் தற்போதைய சூழலில் தீர்மானம் நிறைவேறாது போலிருக்கு. தெலுங்கானா டவுட்டு தான்.

SanjaiGandhi™ said...

//ப.சியும், மன்மோகனும் சேர்ந்து பண்னதுல ஆந்திரா 3ஆ போகப்போவுது.//

சேர்ந்து என்ன பண்ணாங்களாம்? இப்போவும் தெலுங்கானா பற்றி அறிவிக்காம இருந்திருந்தா ராவ் உயிர் போயிருக்கும். அதையொட்டி ஆந்திராவே எரிஞ்சி இருக்கும். ஆந்திர சட்டசபைல தீர்மாணம் கொண்டுவந்து நிறைவேற்றுங்கன்னு தான் சிதம்பரமும் மன்மோகனும் சொல்லி இருக்காங்க.இவங்க ஆந்திராவை மூனாக்கற மாதிரி எல்லாம் ஒன்னும் பண்ணலை.

புதுகைத் தென்றல் said...

வாங்க சஞ்சய்,

அந்தாளு செத்திருந்தா 2 நாள் லீவு விட்டு பேசாம இருந்திருக்கலாம். அதை விட இப்பத்தான் மொத்த ஆந்திராவும் சண்டை, கூக்குரல், பந்த்னு எரிஞ்சு கிட்டு இருக்கு.

தெலுங்கானா வரும்னு சொன்னதால் காங்கிரஸுக்கு தலைவலி. 9 புது மாநிலம் உருவாக்க கோரிக்கை வெச்சிருக்காங்க.

தெலுங்கானா வராது. ஆனா தரேன்னு சொன்னீங்களேன்னு திரும்ப வன்முறை நடக்கப்போவது மட்டும் நிச்சயம்

தராசு said...

அப்ப எங்க வீரத் திலகம், அன்பின் அக்கா, " தல்லி தெலுங்கானா" ன்னு ஒண்ணு ஆரம்பிச்சாங்களே, அது என்னாச்சு?????

Vinitha said...

அடுத்து தெலங்கானாவில் பிறந்தவர்களே அங்கு வாழ வேண்டும் என்று ஒரு "இது" போடுவார்கள்?

எல்லாம் கமிசன் அடிக்க இந்த வழி. ( ஜாதி வெறி ஒரு புறம்! )

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.... ஜார்கண்ட் போல தான் தெலங்கானாவும் ஆகும்.

என்னவோ இந்தியாவில் - மிலிடரி ஆட்சி வரும் போல?

புதுகைத் தென்றல் said...

வாங்கண்ணேன்,


" தல்லி தெலுங்கானா" //
அது தெலுங்கானா தல்லி சிலை தெலுகு தல்லிக்கு எதிரா தயாரிச்சு வெச்சு இப்ப அதுக்கு பூஜை,புனஸ்காரமெல்லாம் நடக்குது.

எனக்கு ஒண்ணு மட்டும் விளங்கவேயில்லை. தெலுகு தல்லி -இது தெலுங்கு தாய் என்பது மாதிரி. அந்த சிலையை உடைச்சிட்டு தெலுங்கானா தல்லி வெக்கிறாங்களே இவங்க என்ன பாஷை பேசப்போறாங்க!!!!!!!!

SanjaiGandhi™ said...

//தெலுங்கானா வரும்னு சொன்னதால் காங்கிரஸுக்கு தலைவலி. 9 புது மாநிலம் உருவாக்க கோரிக்கை வெச்சிருக்காங்க. //

தப்புக்கா.. தெலுங்கானா வரும்னு உறுதியா சொல்லலை. தீர்மானம் போடுங்கன்னு தான் சொல்லி இருக்காங்க. அது ஆந்திர சட்டசபை கைல தான் இருக்கு. பல பிரிப்புக் கோரிக்கைகள் எப்போவும் இருந்துட்டு தான் இருக்கு. அதெல்லாம் சமாளிச்சிக்கலாம்.

நில பரப்பு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் பெரிய மாநிலங்கள் அனைத்தும் பிரிக்கப் படனும் என்பது என் கருத்து. நிர்வகிக்க முடியாமல் எல்லா பெரிய மாநிலங்களிலும் மோசமான வறண்ட பகுதிகள் தொடர்கிறது.

புதுகைத் தென்றல் said...

அடுத்து தெலங்கானாவில் பிறந்தவர்களே அங்கு வாழ வேண்டும் என்று ஒரு "இது" போடுவார்கள்?//

இப்போதைக்கு போகச் சொல்ல மாட்டோம்னு சொல்றாங்க. பின்னாடி அனுப்பிவிட்டுத்தான் வேற வேலை பார்ப்பாங்க. இந்தியாவில் மிலிட்டரி ஆட்சி ஏன்பா? கஷ்டபட்டு சுதந்திரம் வாங்கி நாமளே அடிச்சிக்க ஆரம்பிச்சிருக்கோம்.

அடுத்து அமெரிக்கவோ, பிரிடீஷ்காரங்களோ வந்து ஆட்சி செய்யப்போறாங்க. இந்தியாவின் அடிமடியில் அதுக்கான் ஆயத்தம் நடக்கும்போது நமக்கும் நெறிகட்டாத்தானே செய்யும்.

:((

SanjaiGandhi™ said...

//அப்ப எங்க வீரத் திலகம், அன்பின் அக்கா, " தல்லி தெலுங்கானா" ன்னு ஒண்ணு ஆரம்பிச்சாங்களே, அது என்னாச்சு?????

//

TRSல சேர்ந்து MP ஆனதும் அதை மறந்துட்டாங்க.. :))

துளசி கோபால் said...

என்னமோ தல்லி எதுக்கு இத்தனை ஆவேசமுன்னு ஒன்னும் புரியலை!

ஜனத்தொகை அதிகமாக ஆக, இல்லேன்னா அரசு செய்யும் நன்மைகள் அதிகம் ரீச் ஆகாத இடங்களில் இருப்பவர்கள் தனியாப் போகணுமுன்னு சொல்றதுலே என்ன தப்பு?

கூட்டுக்குடும்பம் க்ரேட் என்றாலும், சமமான பங்கு உரிமை இதெல்லாம் இல்லேன்னாத் தனியாப் போறதுபோலத்தானே?

மாவட்டங்கள் பெருசா இருக்கு நிர்வாகம் பண்ண முடியலைன்னு புதுப்புது மாவட்டங்கள் உருவாச்சுல்லே? அது பரவாயில்லை. ஆனால்..... மாநிலம் பிரியக்கூடாதாமா?

அரசு செய்யும் சலுகை, நன்மை, முன்னேற்றம் எல்லாம் ஒன்னுபோல எல்லாருக்கும் எல்லா ஊர்களுக்கும் செஞ்சுருந்தா ஏன் தனியாப் போகணுமுன்னு கேப்பாங்க?

கிடைப்பது அத்தனையும் தானே முழுங்கணுமுன்னா இப்படித்தான் இல்லீங்களா?
சொல்லுங்க தல்லி:-)

புதுகைத் தென்றல் said...

வாங்க துளசி டீச்சர்,

பிரிக்கறதால என்னென்ன விளைவுகள் ஏற்படும்னு யோசிச்சு, பேசி அப்புறமா முடிவுக்கு வரணும்ல!!!

மக்கள் கருத்து கேக்கணும். புதுகை எனும் தொகுதியை பிரிச்சு திருச்சி, தஞ்சாவூரோடு சேர்த்தாங்க. பலன் யாருக்கு??

அரசியல்வாதிகள் ஆட்டத்துக்கு மக்கள் பலிகடா ஆகக்கூடாதுன்னு வேதனை.

ஹைதையில் பல பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செஞ்சிருக்கு. அவை என்னவாகும்?? இதெல்லாம் யோசிக்கனும்ல

புதுகைத் தென்றல் said...

நில பரப்பு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் பெரிய மாநிலங்கள் அனைத்தும் பிரிக்கப் படனும் என்பது என் கருத்து. நிர்வகிக்க முடியாமல் எல்லா பெரிய மாநிலங்களிலும் மோசமான வறண்ட பகுதிகள் தொடர்கிறது.//

சரிதான் பிரிப்பதால பாதிப்பு ஒருவருக்கும் சாதகம் ஒருவருக்கு பாதகமில்லாம அனைவருக்கும் நலன் பெற மாதிரி இருக்கணும் என்பதுதான் என் கருத்து.

Voice on Wings said...

நிஸாம் ஆட்சிக்குக் கீழ், தனியாக இருந்த தெலங்கானா பகுதியும், சென்னை பிரசிடென்சியின் ஆட்சிக்குட்பட்டு இருந்த ஆந்திர கடலோர மற்றும் ராயலசீமா பகுதிகளும் இணைந்துதான் ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலம் உருவானது. இந்த இணைப்பை பெரும்பாலான தெலங்கானா மக்கள் விரும்பவில்லை. ஆகவே ஒரு gentleman's உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தி, அதிகாரத்தில் சம உரிமை வழங்குவது போன்ற வாக்குறுதிகளின் அடிப்படையில்தான் இந்த இணைப்பிற்கு தெலங்கானா மக்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

ஆனால் எல்லா வாக்குறுதிகளையும் போலவே இதுவும் காற்றில் பறக்க விடப்பட்டு, ஒரு சாதகமற்ற ஒரு சூழலையே (நாட்டின் மிகப் பின்தங்கிய பகுதிகளில் ஒன்று என்ற 'புகழ்', இத்யாதி) தெலங்கானா மக்களுக்குப் பரிசாக அளித்தது ஆந்திர மாநிலம். இந்நிலையிலிருந்து மாற்றம் ஏற்படுவதற்கான நம்பிக்கையாவது இன்று அம்மக்களுக்குக் கிடைத்திருப்பது ஒரு நல்ல செய்தியே.

ஹுஸைனம்மா said...

அக்கா, மெயில் அனுப்பியிருந்தீங்களா? கன்ஃபர்ம பண்ணிக்கத்தான் கேட்டேன்.

புதுகைத் தென்றல் said...

ஆமாம் ஹுசைனம்மா,

மடல் அனுப்பியிருந்தேன்.

Senthil Durai T said...

துளுநாடு , கூர்க் பத்தி எழுத மறந்து போச்சா ??