Saturday, December 12, 2009

பிரிப்பது பிரச்சனையை தீர்க்குமா???

என்னுடைய முந்தைய பதிவில் சஞ்சய் தம்பியின்
இந்த பின்னூட்டம் மனதுக்குள் ஓடிக்கொண்டே
இருந்தது.

""நில பரப்பு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில்
பெரிய மாநிலங்கள் அனைத்தும் பிரிக்கப் படனும்
என்பது என் கருத்து. நிர்வகிக்க முடியாமல் எல்லா
பெரிய மாநிலங்களிலும் மோசமான வறண்ட
பகுதிகள் தொடர்கிறது.""


சஞ்சய் மாநிலங்களை பிரித்தல், மாவட்டங்களை பிரித்தல்
எல்லாம் செய்வதற்கு முன் பல விடயங்களை ஆலோசிக்க
வேண்டும்.

எங்க புதுக்கோட்டையை உதாரணமா எடுத்துக்கலாம்.
தொண்டைமான் ஆண்ட புதுக்கோட்டை சரித்திர
முக்கியத்துவம் வாய்ந்த ஊர். திருமயம் கோட்டை,
சித்தன்னவாசல் ஓவியங்கள்,குடுமியான் மலை கோவில்,
நார்த்தாமலை மகாமாயி கோவில் என பல இருக்கின்றன.

தொல்பொருள் ஆய்வாளர்களுக்கும், சுற்றுலாக்காரர்களுக்கும்
சொர்க்கமாக இருக்கும் எங்க ஊரை நல்லா விளம்பர படுத்தி
சுற்றுலா மூலம் அதிக வருவாய் வர வைக்கலாம்.


மண்ணின் மணம் பகுதி 1

மண்ணின் மணம் பகுதி 2


ஆரஸ்பதிக்காடுகளும், ஆதனக்கோட்டை முந்திரி பருப்பும் கூட
எங்கள் ஊரின் மணத்தில் இருக்கு.

எங்க ஊர் பத்திய இந்தத் தளத்தை பாருங்க.

ராஜாவின் ஊர்வலத்திற்காகவும், அன்னை பிரகாதாம்பாளின் பவனிக்காகவும்
எங்க ஊரின் ஒவ்வொரு வீதியும் ரிப்பன் வைத்து கட்டியது போல்
ஒரே சீராக இருக்கும். எந்தக் குழப்பமும் இல்லாமல் எளிதில்
அட்ரஸ் கண்டுபிடித்து விடலாம்.

இப்படி எங்க ஊரின் புகழ் எத்தனையோ இருக்கு.

திருச்சி, மதுரை போல வெளிநாட்டவர்களை இந்த
ஊருக்கு வரவழைக்க கூடிய சமாச்சாரங்கள் இருந்தும்
அதை சந்தை படுத்தாதது யார் தவறு???

மக்கள் செய்ய முடியாத காரண காரியங்களுக்குத்தான்
மக்களின் பிரதிநிதியாக அரசியல்வாதியை தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் செய்வது என்ன???

தமிழகத்திலேயே தலைசிறந்த பேருந்து நிலையத்தை
கொண்டது புதுகைதான். அதைப் பார்த்துத்தான் பிற
மாவட்டங்களில் பேருந்து நிலையத்தை சிறப்பாக
அமைத்தார்கள்.


மேன்மை மிகு ராணியார் பள்ளி, கோர்ட், மாமன்னர்
கல்லூரி ஆகியவை கட்டப்பட்ட அந்த செங்கல் போன்றது
தில்லி செங்கோட்டையில் பார்க்கலாம் என்று எனது
வரலாற்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார். மன்னரின்
அரண்மனையில்தான் தற்போதைய கலெக்டர் அலுவலகம்
நடை பெறுகிறது.

எத்தனையோ சிறப்பு மிக்க எங்கள் ஊர் தற்போது
பாராளுமன்ற தொகுதி கிடையாது.இதற்கு காரணம் யார்??
மக்களா??? இன்றைய நிலைக்கு காரணம் யார்???

எங்கள் புதுகை பதிவர் சுரேகாவின் வலைப்பூவில் பாருங்கள்.
பல பதிவுகள் புதுகையின் அவல நிலையைச் சொல்லும்.
:(((

புதுகையின் பாரம்பரியம் பற்றி அப்துல்லா எழுதி வரும்
ப்ளாக்கின் முகவரி தவற விட்டுவிட்டேன். கிடைத்ததும்
சேர்க்கிறேன்.


பராமரிக்க முடியாமல் போகும் அவல நிலை ஏன்??
பாரம்பரிய மிக்க வளைவையே இடித்து போட்டு விட்டார்களே!!!

பிரிவு எப்போதும் தீர்வு தராது. வரும் காலங்களில்
புதுகை என்றொரு ஊர் இருந்ததாம் என்று சொல்லும்
அவல நிலைக்கு புதுக்கோட்டை தள்ளப்பட்டு, பாராளுமன்ற
தொகுதிக்காக பிரிக்கப்பட்டது போல் பக்கத்து ஊர்களான
தஞ்சை, தி்ருச்சியோடு புதுக்கோட்டையை இணைத்தாலும்
இணைப்பார்கள்.

:((((((

(இது என் மன ஆதங்கம் + கருத்து)

THANKS KUDUKUDUPAI FOR THE LINK

புதுக்கோட்டை எனும் புகழ்மாடம்

25 comments:

புதுகைத் தென்றல் said...

mic testing

சுரேகா.. said...

சரியான பதிவு!

நம்ம நாட்டோட சாபக்கேடுங்க இது!

சேந்திருக்குறதை பிரிச்சு விடுன்னு தெலுங்கானாக்காரங்க வெறியோட போராடுறாங்க!

நாலா பிரிஞ்சிருக்கும் புதுக்கோட்டை தொகுதியை சேத்துவிடுன்னு நாம அந்த அளவுக்கு வெறியோட போராடலை!

ஆனா ரிஸல்ட் என்னவோ ஒண்ணுதான்..

மேல இருக்குறவுங்க என்ன நினைக்கிறாங்களோ அதைத்தான் செய்வாங்க!

மக்களெல்லாம் அவுங்களுக்கு தூசிக்கு சமம்.

இது அதிகமாக அதிகமாக.......
ஏதாவது நடக்கும்.!

fundoo said...

அன்பின் தென்றல்,
நண்பர் சொன்ன பிரிவினையை நானும் ஆதரிக்கிறேன். ஆனால் மாநிலங்கள் பிரிவினை அல்ல. மாநிலங்களில் புதிய தாலுகாக்கள், மாவட்டங்கள் என்று மக்கள் தொகைக்கேற்ப பிரிப்பது தொடரவேண்டும். மாநிலங்கள் பிரித்தல் என்பது ....மக்களின் உணர்வுகளைப் பொறுத்தது. மாநிலம் மக்கள் தொகையால் பிதுங்கும் சமயத்தில் அதைப் பற்றி யோசிக்கலாம்.

தங்கள் மண்ணின் மணம் பதிவுகளைப் பார்த்தேன். அருமை. கலாக்க்ஷேத்திரா ருக்குமணிதேவியை புதுக்கோட்டை மக்கள் ஒட்டு மொத்தமாக மறந்துவிட்டீர்கள் !!!!

புதுகைத் தென்றல் said...

வாங்க தலைவரே,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புதுகைத் தென்றல் said...

கலாக்க்ஷேத்திரா ருக்குமணிதேவியை புதுக்கோட்டை மக்கள் ஒட்டு மொத்தமாக மறந்துவிட்டீர்கள் !!!!//

எனக்கு இது புது செய்தி. அந்த அளவுக்கு புதுகையின் பெருமை வெளி உலகுக்கு தெரியாமலேயே இருக்கிறது.

:(((

க‌ரிச‌ல்கார‌ன் said...

//புதுகையின் பாரம்பரியம் பற்றி அப்துல்லா எழுதி வரும்
ப்ளாக்கின் முகவரி தவற விட்டுவிட்டேன்//

http://mmabdulla.blogspot.com/
இந்த‌ அப்துல்லாவா?

Jayashree said...

" பிரிவு எப்போதும் தீர்வு தராது."
absolutely true.ஆக்க ஆயுள்காலமும் பத்தாது ,ஆனா அழிக்க அடுத்து கெடுக்க மனுஷனுக்கு அரை நொடி போதும் இப்பல்லாம்.
நாடாகட்டும் வாழ்க்கையாகட்டும் நம்ப கல்ச்சர் ஓட லைட் ல பாக்கும் போது ஒத்துக்கலையா, முடியலையா வெட்டிடு, துண்டு போடுங்கற western philosophy தனமா, தீர்வுகாண முயற்சி செய்யாமலே செய்யறது சரிதானா? நம்ப என்னனல்லாமோ சாதிக்கமுடியும்னு மார் தட்டிக்கறோமே, யோசிச்சு சமரசமா ஒரு ப்ரச்சனைக்கு தீர்வு காண நம்மால் முடியாதா ? வருத்தமாதான் இருக்கு. குழந்தைகளுக்கு ஒரு கட்டு குச்சியை கொடுத்து உடைக்க முடியறதா பாரு அதுதான் unity யோட strengh னு சொல்லி கற்ற சிறுவயது பாடம் ஏட்டுசுரைக்கையாகிவிட்டதா?சமீபத்துல எங்க ஊருக்கு நம்ப இந்திய navy commander தன் உயிரையும் பணயம் வைத்து சாகர் பரிக்க்ரமா என்ற circum navigation programme ல around the world, treacherous sea ல போய்க் கொண்டிருக்கிறவர் வந்தாருங்க. அவர் மஹாராஷ்ட்றியன் எங்க ஆளுஇல்லைனு INDIANS பல தரப்பினர் அவரை honour பண்ணக்கூட நீ மாட்டேன் நான் மாட்டேன்னு முறுக்கிக்கொண்டு போனாங்கங்க எங்க ஊருல!!:((. எனக்கு ரொம்ப வருத்தமா இருந்ததுங்க நம்ப ஒத்துமை லக்ஷணத்தை பாத்து:(( யார் பெத்த பிள்ளையோ நல்லபடி SUCCESSFUL ஆ முடிச்சு ஊர் போய் சேரப்பானு வேண்டிண்டேன்.என் மனசுல இருக்கற நம்ப கலாசாரம் முற்றும் மாறிடுச்சாங்க. துக்கமா இருக்கு.

புதுகைத் தென்றல் said...

http://mmabdulla.blogspot.com/
இந்த‌ அப்துல்லாவா?//

:) வாங்க கரிசல்காரன்,

அப்துல்லா தம்பியோட ப்ளாக் ஐடி என் கிட்ட இருக்கு. அவரு வேற ஒரு வலைப்பூவுல எழுதிருக்காரு. அதைச் சொன்னேன்

புதுகைத் தென்றல் said...

என் மனசுல இருக்கற நம்ப கலாசாரம் முற்றும் மாறிடுச்சாங்க. துக்கமா இருக்கு.//

ஆமாம் ஜெயஸ்ரீ,

வட நாட்டுக்காரன் சரியில்லை, மல்லுக்காரங்களோட ஜாக்கிரதையா இருங்க, கன்னடத்துக்காரங்க சவகாசமே வேணாம்னு நாமளே நமக்குள் ஒரு வட்டம் போட்டுக்கிட்டோம்.

அதே மாதிரி அவனவனும் போட்டுக்கிறதால மனிதம் செத்து போச்சு.

:( வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜோசப் பால்ராஜ் said...

மாநிலங்கள பிரிக்கிறதால புதுசா ஒரு சட்டமன்றம், எல்லாத் துறைகளுக்கும் அலுவலகங்கள், தலைமை செயலகம், கவர்னர் மாளிகை, புது முதலமைச்சர், அமைச்சர்கள் அப்டின்னு ஏகப்பட்ட செலவுகள் தான்.

உ.பி மாதிரி பெரிய மாநிலங்கள வேணும்ணா நிர்வாக வசதிகளுக்காக பிரிக்கலாம். ஆனா இப்ப தெலுங்கான மாநிலம் அமைக்க மத்திய அரசு அனுமதிச்சதும் பாருங்க, மே.வங்கத்துல கூர்காலாண்ட் கேட்டு போராடுறவங்க இப்ப உண்ணாவிரதம் இருக்கப் போறதா சொல்லிருக்காங்க. அடுத்து உ.பில ஒரு கூட்டம், மகாராஷ்டிரால விதர்பா , கர்நாடகால கூர்க் இப்டி பல கும்பல் கிளம்பிருச்சு.
( இன்னும் தமிழ்நாட்டுல தென் தமிழ்நாடு மாநிலம் அமைக்கனும்னு ஒரு கும்பல் கிளம்பலங்கிறது ஆச்சரியம்!)

ஏற்கனவே அங்கயும் இங்கயுமா சிதறிக்கிடக்கிற பாண்டிச்சேரியில , காரைக்கால் பகுதிய தனிமாநிலமாக்க கோரிக்கை வந்துருச்சு.

இதான் நடக்கும் இனிமே. அப்போ 100 மாநிலங்கள் 100 முதலமைச்சர்கள்,அமைச்சர்கள், கவர்னர்கள் , அதிகாரிகள் ..... இப்டியே போனா என்னாகிறது?
தேவையற்ற நிர்வாகச் செலவுகள் தான். வெட்டிச் செலவுகளும் , தேவையற்ற தலைவர்களும் தான் அதிகமாவாங்க.
சிறந்த உதாரணம் ஜார்கண்டின் மது கோடா, இவரு ஒரு சுயோட்சை எம். எல். ஏ. ஆனா இவரு கொஞ்சநாளு ஜார்கண்டின் முதல்வரா இருந்தாரு. இருந்த கொஞ்ச நாள்லயே மனுசன் 24 மணி நேரமும் ஓயாம கொள்ளையடிச்சான் போல. ஏகப்பட்ட கோடிகள் அடிச்சு குவிச்சுட்டாரு.
ஒரு பெரிய மாநிலமா இருந்தா இப்டி சுயோட்சையெல்லாம் ஆட்சியமைக்கிறளவுக்கு நிலைமை வருமா? இது போல தேவையில்லாத தலைவர்கள், உருவாவத தடுக்க முடியாது.

ஒரு மாநிலத்துல 200 தொகுதியாவது இருக்கனும் . 101 பேரு ஆதரவு இருந்தா தான் ஆட்சியமைக்க முடியும்னு இருந்தா தான் நல்லது. சும்மா 50 தொகுதியெல்லாம் வைச்சு ஒரு மாநிலம் அமைச்சா யோச்சிச்சு பாருங்க, 10 எம். எல்.ஏக்கள கைக்குள்ள போட்டு வைச்சுக்கிட்டவன் கூட பெரியாளாயிருவான்
என் கையில 10 பேரு இருக்கான் , எனக்கு இந்த துறைய குடுன்னு கேட்பான். இல்லன்னா பிரச்சனை தான்.

சீக்கிரம் சீன நம்ம நாட்டு மேல படையெடுத்த நல்லதுன்னு தோணுது.

புதுகைத் தென்றல் said...

பல மாநிலங்களானாத்தான் பராமரிப்பது கஷ்டம். சொல்வது சரிதான்னு எனக்கும் படுது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோசப்.

ரங்கன் said...

நல்ல பதிவுங்க..!!

பிரித்து ஆளுவது என்பது எந்த அளவுக்கு சரியானதோ..அதே அளவுக்கு வேற்றுமையை வளர்க்க கூடியதும் கூட..

தமிழகத்திலேயே எத்தனை ஜாதி பிரிவனைகள்..இன்றைக்கும் தீண்டாமை என்பது மனதளவில் இருந்தே வருகிறது..

மாவட்டங்களுக்குள்ளேயே கூட இது நடந்துதான் வருகிறது..

இது ஒரு மாநிலத்தையே பாதித்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.!!

மனிதன் போட்டுகொள்ளும் எல்லைகள் அவன் மனப்போக்கை கெடுத்துதான் இருக்கிறதே தவிர..முன்னேற்றியதில்லை..

புரிந்துகொள்வரா மக்கள்?

thenammailakshmanan said...

காரைக்குடிக்குப் பக்கத்தில்தான் புதுக்கோட்டை
நான் பயணத்தில் மிகவும் ரசிக்கும் ஊர் அது
மிகவும் கட்டுக் கோப்பாக இருக்கும் அரண்மனை மற்றும் அது சார்ந்த சுற்றுச்சுவர்களும்
கோவில் கூட சின்னதா பஸ்டாண்டு பக்கம் வரும்
மற்ற இடங்கள் நான் போனதில்லை ஆனால் ஊர் மிகவும் கரைந்து அதன் புராதன பெருமைகள் மறைந்து வருவது வருத்தம் தருவதாகத்தான் இருக்கு தென்றல்

பூங்குன்றன்.வே said...

//பிரிவு எப்போதும் தீர்வு தராது. //

ஒரே வார்த்தை.உண்மையான வார்த்தை.ஒவ்வொருவர் மதத்துக்கும்,கொள்கைளுக்கும் மாநிலம்,மாவட்டம் என்று பிரித்துகொண்டே போனால்
நிர்வாகசிக்கல்,பிரிவு மனபான்மை இப்படி பல வேறுபாடுகளால் நாடே திண்டாடும்.(நம் இலங்கை தமிழர் பிரச்சினை இதில் வராது.ஏனெனில் அது மண் சம்பந்தப்பட்ட உரிமை பிரச்சினை.)நல்ல பதிவு.

வித்யா said...

மக்களை வோட்டு வங்கிகளாக மட்டுமே பார்க்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை நோ சேஞ்ச்:(

புதுகைத் தென்றல் said...

மனிதன் போட்டுகொள்ளும் எல்லைகள் அவன் மனப்போக்கை கெடுத்துதான் இருக்கிறதே தவிர..முன்னேற்றியதில்லை..//

aamam

புரிந்துகொள்வரா மக்கள்?//


purinthu kolla vendiyathu arasiyal vathigal thane!!!

புதுகைத் தென்றல் said...

vaanga thenammai,

karaikudiku pakkathu oorthan.

athan parampariyam azinchukittu varuvathuthan varuthama iruku.

oorukaga varutha padathan mudiyuthu

:((

புதுகைத் தென்றல் said...

vaangga poongundren,

azagathan sollirukeenga

varugaikku nandri

புதுகைத் தென்றல் said...

மக்களை வோட்டு வங்கிகளாக மட்டுமே பார்க்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை நோ சேஞ்ச்:(//

yessu, ithai purinju maaratha makkal irukum varaikum no change than :((

குடுகுடுப்பை said...

http://varungalamuthalvar.blogspot.com/2009/06/blog-post_23.html

புதுகைத் தென்றல் said...

MIKKA NANDRI KUDUKUDUPAI

ஹுஸைனம்மா said...

பெரிய மாநிலங்களை நிர்வாக வசதிக்காகப் பிரிப்பதில் தவறில்லையேன்னு நெனச்சேன். ஆனா,

//ஒரு பெரிய மாநிலமா இருந்தா இப்டி சுயேட்சையெல்லாம் ஆட்சியமைக்கிறளவுக்கு நிலைமை வருமா?//

//ஏகப்பட்ட செலவுகள் தான்.//

/பல மாநிலங்களானாத்தான் பராமரிப்பது கஷ்டம். //

மாத்திக்கணும் போலருக்கு. நன்றி புதிய பார்வைகளுக்கு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஜோஸ்பின் கருத்துகளே எனதும். புதுகை மட்டுமல்ல இன்னும் ஆயிரம் இருக்கின்றன.. ஆளும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் கடமையைக் கைக்கொள்ளும் வரை இந்த அவலங்கள் தொடரும்..

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ஹுசைனம்மா

புதுகைத் தென்றல் said...

வாங்க ஃப்ரெண்ட்,

அரசியல்வாதிகள், அதிகாரிகள் கடமையைக் கைக்கொள்ளும் வரை இந்த அவலங்கள் தொடரும்..//

அதே அதே சபாபதே :(