பாட்டி செத்ததுக்காக லீவு கேட்ட ஆபீஸ் பையன் ஜோக்
ஞாபகம் இருக்கா... அது மாதிரி “நான் தூங்கணும்! அதுக்காக
லீவு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்னு” லீவு லெட்டர்
எழுத வேண்டிய நிலமை நம் இந்தியர்களுக்கு வந்தாச்சு.
என்ன எல்லா இந்தியர்களுக்குமான்னா இல்ல 93%!!!
மீதி 11% பேருங்க வேலை பார்க்கற இடத்துல தூங்கறாங்களாம்!!!!!!
Philips Electronics India limited நடத்தின ஒரு
சர்வேயில் 11 % பேர் தூங்குவதற்காக லீவு போட்டாங்கன்னு
தெரிய வந்துச்சாம்.
சர்வே எடுப்பதையே வேலையா வெச்சிருக்கறா
Nielsen Company நவம்பர் 2009ல் எடுத்த சர்வேயில்
இந்தியா முழுதும் இருக்கற 35-65 வயசுக்குள்ள இருக்கற பலர்
”சரியாக தூக்கமில்லாதது தங்கள் வேலையை
பாதிக்குதுன்னு” சொல்லியிருக்காங்களாம்.
74% பேர் தூக்கத்தில் குறைந்தது 3 அல்லது 4 முறை
எழுந்திருப்பதால் சரியாக தூங்க முடியலைன்னு
சொல்லியிருக்காங்க.
இயற்கையின் அழைப்பு,மன அழுத்தம், வெளியில்
ஏற்படும் சத்தங்கள் தங்கள் தூக்கத்தை கெடுக்குதுன்னு
சொல்லியிருக்காங்க.
இதுல 62 % பேர் OBSTRUCTIVE SLEEP APNEA(OSA)
தூக்கத்தின் போது மூச்சுவிட சிரம்ப்படும் ஒரு
வியாதியால் இருக்காங்களாம். அது இருதய
நோய்க்கு ஆளாக்கிடும்னு சொல்றாங்க.
என்ன கொடுமைங்க இது?
வேலை வேலை வேலை வேலைக்கு இல்லை வேளை.
சரிங்க. ஆபீஸுக்கு போறவங்க லீவு போட்டுட்டு
வீட்டுல தூங்கலாம். இல்லத்தரசிகள் எந்த ஆபிஸுக்கு
லீவு போட்டு எப்படி தூங்குவது?????
புலம்பியிருக்கேன் படிச்சு பாருங்க. :((
42 comments:
ஒரு லிங்க்தான் படிச்சேன் அதுக்குள்ள ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! இன்னிக்கு லீவு நான் தூங்க்போறேன்ன்ன்ன்ன்ன்!
ஆஆஆஆஆவ் தூக்கம் தூக்கமா வருது ஆபீஸ் முடிஞ்சதும் வந்து வாசிக்கிறேன்
மீ த பர்ஸ்டா வந்திருக்கீங்க பாஸ்
நன்றி
ஆஹா நீங்களுமா பெரிய பாஸ்,
வராதவுக வந்தது சந்தோஷம் பாஸ்
அருமையான தகவல்கள்
ஆ ஆவ்வ்வ்வ் என்க்கும் தூக்கம் வருதே !
என்னங்க லிங்க்குள்ள லிங்க்னு போய்கிட்டே இருக்கு.இந்த பதிவை படிச்சாலே தூக்கம் வராதவர்களுக்கும் தூக்கம் வந்திரும்...
நான் நேத்து லீவு போட்டு தூங்கினேன்.
ஒரு மாதத்துக்கு ரெண்டு நாள் லீவு போட்டு தூங்கிறது வழக்கம்... :)
இது நிச்சயமாக ஒரு முக்கிய பிரச்சனையாக பல துறைகளிலும் உருவாகி வருவது கவலைக்குரியது.
இப்போ தான் தூங்கி..எழுந்தேன்..அதுக்குள்ள தூக்கத்தை பத்தி பதிவா?
நல்ல...ஆஆஅவ்வ்வ்..தக..ஆஆவ்வ்வ்...வல்..கள்ள்ள்ள்ள்ள்ள்..!!
மி த ஸ்லீப்பிங்கு...!!
93%+11%=100 அவ்வ்வ்வ்வ் எப்படி ஆத்தா
வாங்க ஸ்டார்ஜன்
வருகைக்கு நன்றி
வாங்க நிமல்,
அதான் கவலைக்குரியதா இருக்கு.
முதல் வருகைக்கு நன்றி
நல்லா தூங்குங்க ரங்கா
வருகைக்கு நன்றி
வாங்க கரிசல்காரன்,
தூக்கத்தை பத்தி நிறைய்ய புலம்பியிருக்கோம். ரொம்ப சாதாரணமா எடுத்துக்கற விஷயம் இது. ஆனா நம்ம உடல்நிலைக்கு முக்கியமானது. அதான் லிங்குகள் கொடுத்து பதிவு
93%+11%=100 அவ்வ்வ்வ்வ் எப்படி ஆத்தா//
சித்த கண்ணசஞ்சிட்டேன் அதான்.
:)))
கொர்ர்ர்ர்ர்...யாருப்பா அது பதிவு போட்டு எழுப்பிவிடறது...கொர்ர்ர்ர்
இந்தியா மட்டுமில்லிங்க வளைகுடாவில் வாழும் இந்தியர்களும் ஆவ்வ்வ்வ்வ்வ்..க்குத்தான் லீவ் போடறோம்...
தூக்கம் வருது ...ஆனா சென்னை மழைல வீடெல்லாம் ஜிலு ஜிலுன்னு இருக்கு,கழுதை எதை தொட்டாலும் கன்றாவிக் குளிர் ,விறு விறுன்னு இருக்கு,அதிகப்படி வெயிலானாலும் சரி அதிகப்படி குளிரானாலும் சரி தூக்கம் வந்தாலுமே தூங்க முடியாத ஆத்மா நான்,அப்படி ஒரு சாபம்.எப்படா மழை நின்னு வெயிலடிக்கும்னு இருக்கு இப்போ!
துவைச்ச துணியெல்லாம் மழைல வெளிய உலர்த்த முடியாம வீட்டுக்குள்ளயே கயிறு கட்டி உலர்த்தற புண்ணியம் பிரிஜுக்குள்ள உட்கார்ந்திருக்கற எபெக்ட் ...இதுல எங்க இருந்து நிம்மதியா தூங்க ?
:(((
ஆமா...அது ஏன் ஆபிஸ்ல தூங்கறமாதிரி ஆண்களோட கார்ட்டுன் போட்டிருக்கிங்க... பொண்ணுங்க தூங்கமாட்டாங்கன்னா...? ஏன் இப்படி??? படத்தை மாத்தைலைன்னா போராட்டம் நடத்துவோம்...
இப்படிக்கு
வீட்டில் தூங்காமல் ஆபிஸீல் தூங்குவோர் சங்கம்
தென்றல், அத்தனையும் உண்மை. எனக்குத் தெரிந்து இரண்டு நபர்கள்,
12 மணிக்குத் தூங்கப் போய் 6 மணிக்கு எழுந்துவிடுகிறார்கள்.
வார இறுதியிலும் வேலை செய்கிறார்கள்.
கவலை அளிக்கும் விஷயம் தான்.
கொர்ர்ர்ர்ர்...யாருப்பா அது பதிவு போட்டு எழுப்பிவிடறது...கொர்ர்ர்ர்//
:)))
வாங்க வசந்த்,
என்னத்த சொல்ல...
வாங்க மிஸஸ்.தேவ்,
இங்க மழை இல்லாட்டியும் குளிர். தரையில் கால் பட்டா ஜில் ஜில்.. தப்பித் தவறி சுவத்துல கை வெச்சா ஜில் ஜில்னுதான் இருக்கு.
இந்தக் குளிருக்கு ரஜாய் போட்டு போத்திகிட்டு சுகமா தூங்கணும்னு இருக்கு. என்ன செய்ய வேலைகள் இருக்கே. பசங்களுக்கு பரிட்சை, என் வலி, கடைக்கு போறதுன்னு தூங்கத் தான் நேரமில்லை.
:)
பொண்ணுங்க ஆபிஸ்ல தூங்கறது தெரியாம தூங்குவாங்க பாஸ். ஆண்கள் தெரிஞ்சு போட்டோ பிடிச்சு போடற மாதிரி தூங்குவாங்க. :))
வீட்டில் தூங்காமல் ஆபிஸீல் தூங்குவோர் சங்கம்//
ஆகா இப்படியும் ஒரு சங்கமா!! இன்னும் என்னனென்ன சங்கங்கள் இருக்கோ???
கவலை அளிக்கும் விஷயம் தான்.//
ஆமாம் வல்லிம்மா. என்னதான் செய்வதுன்னு புரியலை. பாவமா இருக்கு.
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !
நல்லாத் தூக்கம் வருது போல தூங்குங்க அருணா.
குட் நைட் :)) மீ த ஸ்லிப்பீங்
நல்ல பகிர்வு!
நல்ல இடுகை
இப்படிக்கு,
தூங்காமல் இரவு 12.15 க்கு பின்னூட்டம் போடுவோர் சங்கம்
:)
(osa) இது குறட்டையர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனை.
----------
ஆனாலும் பாவம் தாங்க தூக்கம் இல்லாமல் தவிப்பது.
எனது அலுவலகத்தில் பெண்களும் தூங்குவாங்க - தலையனை மாதிரி சின்னதா வச்சிகிட்டு சேர்லையே உட்கார்ந்து டேபிள்ல தூங்குவாங்க
நான் அதிகம் பிரயாணத்தில் தூங்குகின்றேன் ...
முதல் வருகைக்கு மிக்க் நன்றி நெல்லை சரவணன்
ஓஹோ கதை அப்படி போகுதா அப்துல்லா. வர்றேன். வந்துகவனிக்கறேன்.
:)
வருகைக்கு நன்றி ஜமால்
துயிலாத பெண் ஒன்று கண்டேன்
எங்கே இங்கே
கரிசல்காரன் said...
என்னங்க லிங்க்குள்ள லிங்க்னு போய்கிட்டே இருக்கு.இந்த பதிவை படிச்சாலே தூக்கம் வராதவர்களுக்கும் தூக்கம் வந்திரும்...
hahaha correct thendral
:-)))
Mrs.Dev said...
தூக்கம் வருது ...ஆனா சென்னை மழைல வீடெல்லாம் ஜிலு ஜிலுன்னு இருக்கு,கழுதை எதை தொட்டாலும் கன்றாவிக் குளிர் ,விறு விறுன்னு இருக்கு,அதிகப்படி வெயிலானாலும் சரி அதிகப்படி குளிரானாலும் சரி தூக்கம் வந்தாலுமே தூங்க முடியாத ஆத்மா நான்,அப்படி ஒரு சாபம்.எப்படா மழை நின்னு வெயிலடிக்கும்னு இருக்கு இப்போ!
துவைச்ச துணியெல்லாம் மழைல வெளிய உலர்த்த முடியாம வீட்டுக்குள்ளயே கயிறு கட்டி உலர்த்தற புண்ணியம் பிரிஜுக்குள்ள உட்கார்ந்திருக்கற எபெக்ட் ...இதுல எங்க இருந்து நிம்மதியா தூங்க ?
:(((
superb
ithuthaan nialamai
hahaha
:-)))))))))
அதுவும் இந்த வெள்ளி, சனி வார இறுதியில நல்லா ஊர் சுத்திட்டு வந்தப்புறம், ஞாயிறு காலை ஆஃபிஸ் வந்தப்பிறகு வர்ற தூக்கம் இருக்கே...
//தூக்கம் வருது ...ஆனா சென்னை மழைல வீடெல்லாம் ஜிலு ஜிலுன்னு இருக்கு,கழுதை எதை தொட்டாலும் கன்றாவிக் குளிர் ,விறு விறுன்னு இருக்கு,அதிகப்படி வெயிலானாலும் சரி அதிகப்படி குளிரானாலும் சரி தூக்கம் வந்தாலுமே தூங்க முடியாத ஆத்மா நான்,அப்படி ஒரு சாபம்.எப்படா மழை நின்னு வெயிலடிக்கும்னு இருக்கு இப்போ!//
nallaa sonninga Mrs. DEV
its correct
துயிலாத பெண் ஒன்று கண்டேன்
எங்கே இங்கே//
:))) நான் மட்டுமில்லீங்க பலரும் இந்த லிஸ்டில் இருக்காங்க
வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி மஹா
93%+11%=100 அவ்வ்வ்வ்வ் எப்படி ஆத்தா//
சித்த கண்ணசஞ்சிட்டேன் அதான்.//
ஹிஹி.. அது கண்ணசந்துட்டேன்.! :-))
ஹிஹி.. அது கண்ணசந்துட்டேன்.! :-))//
:))))
Post a Comment