Saturday, December 26, 2009

வருவியா? வரமாட்டியா??

நல்லா இருக்கீகளா??ஹுசைனம்மா மட்டும் காணலியே என்னாச்சு??
ஏன் பதிவு போடலை?ன்னு கேட்டு மெயில் அனுப்பியிருந்தாங்க.
நம்மையும் ஒருத்தர் அன்பா விசாரிக்கப்ப சந்தோஷமா
இருக்குல்ல. தாங்க்ஸ் ஹுசைனம்மா.


அம்மம்மா, தாத்தாவை பாக்கணும்னு
பசங்க சொல்லிகிட்டு இருந்தாங்க.
புதுகைக்கு போகணும்னு திட்டம்.
2 மாசம் முன்னாடியே திட்டமெல்லாம் போட்டு
டிக்கெட் புக் செஞ்சு வெச்சாச்சு. கிளம்புவதற்கு
முன்னால தெலங்கானா பந்த போய் ஆந்திரா பந்த்
வந்திருச்சு. ”ரயில் ரோக்கோன்னு” வண்டிகளை
நிப்பாட்டிகிட்டு இருந்தாங்க.

அப்பாக்கு செம டென்ஷன்.” வருவியா, வரமாட்டியான்னு
தெரியலையே!” பாதி வழியில ரயிலை நிப்பாட்டிட்டா
என்ன செய்யன்னு யோசனை.

தமிழ்நாட்டில் வார்ட் புயல்னு அறிவிப்பு. புதுக்கோட்டை,
தஞ்சாவூர், நாகப்பட்டிணம் மாவட்ட பள்ளிகளுக்கு
விடுமுறை வேறயாம். எப்படியோ சென்னை போனாலும்,
புதுகை போவது கேள்வி குறியா இருக்கும் போல
இருக்கேன்னு கஷ்டமா இருந்துச்சு. பசங்களுக்கும்
“ஊருக்கு போய் அம்மம்மா, தாத்தாவை பார்க்க
முடியாதா”ன்னு வருத்தம்.

”வியாழக்கிழமை வரை பாக்கிறேன், பிரச்சனையின்னா
டிக்கட்டை கேன்சல் செஞ்சிடலாம்னு அயித்தான்
சொன்னார்”

பசங்க பரிட்சைக்கு படிக்கறதை விட ஊருக்கு
போக முடியாம போயிடுமோன்னு டென்ஷனா
இருந்தாங்க.

ஒரு வழியா சென்னை வரை பிரச்சனையில்லைன்னு
தெரிஞ்சு பசங்களுக்கு லீவு விட்ட அன்னைக்கு ராத்திரியே
”கூ கூ சுக்கு சுக்கு”ன்னு கிளம்பிட்டோம்ல.

போறப்ப ஒரு டென்ஷன்னா வர்றப்பா டென்ஷனோ
டென்ஷன். தெலுங்கானா தற்போது அமைக்கப்போவதில்லைன்னு
சொன்னதும் ஹைதையில் திரும்ப கலவரம் வெடிச்சிருச்சு.
பந்த் அறிவிச்சிருந்தாங்க. இதைக்கேள்வி பட்டதும்
”ஆஹா!! திரும்ப எப்படிடா சாமி போறதுன்னு”
ரோசனை.

சனிக்கிழமை அயித்தான் அலுவலகத்தில் இருந்தே
ஆகவேண்டிய அவசியம். நடப்பது நடக்கட்டும்னு
நினைச்சுகிட்டு இருக்க, 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ்
தினம் என்பதால் கிறிஸ்துவ சகோதரர்களுக்காக’
பந்த் செய்யப்போவதில்லைன்னு அறிவிச்சாங்க.

அப்பாடின்னு உசிரு வந்துச்சு. ஆண்டவன் புண்ணியத்துல
25ஆம் தேதி கிளம்பி 26 ஹைதை வருவது போல
முன் பதிவு செஞ்சிருந்தேன்.
இன்னைக்கு காலேல தான் ஹைதை வந்து இறங்கினேன்.
சாமிக்கு நன்றி சொல்லிகிட்டே இருந்தேன்.

பதிவு போட்டுக்கினு இருக்கறப்ப அப்பா போன்ல
கூப்பிட்டாரு.

”நல்லவேளைம்மா, நீங்க ஊரு போய் சேந்துட்டீங்க.
ரயில்பட்டியை எடுத்திருக்காங்கன்னு ஹைதைக்கு
போற ரயில்கள் இன்னைக்கு கேன்சல் செஞ்சிருக்காங்கன்னு”
அப்பா சொன்னாரு.

ஆஹா!!!!!!!!!!!!!!

24 comments:

அன்புடன் அருணா said...

அப்பாடா.....ஒருவழியா நல்லபடியா வந்து சேர்ந்தீங்களே!

நாஞ்சில் பிரதாப் said...

//தமிழ்நாட்டில் புயல்னு அறிவிப்பு. புதுக்கோட்டை,தஞ்சாவூர், நாகப்பட்டிணம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை வேறயாம்.//

நீங்க தமிழ்நாட்டுக்கு வரப்போறீங்கறதைதான் அப்படி சொல்லிருக்காங்க போல..:-)

தெலுங்கானா பத்தி உங்க கருத்து என்ன? கொடுக்கலாமா கொடுக்ககூடாது? உங்க ஒரு முடிவுக்காகத்தான் சிங் வெயிட்டிங்னு கேள்விபட்டேன்...

ரங்கன் said...

நல்ல டைமிங்க் சென்ஸ்..!!

butterfly Surya said...

welcome back..

புதுகைத் தென்றல் said...

ஆமாம் அருணா,

வந்து சேர்ந்ததும் நிம்மதி பெருமூச்சு வந்துச்சு.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

நீங்க தமிழ்நாட்டுக்கு வரப்போறீங்கறதைதான் அப்படி சொல்லிருக்காங்க போல..//

ஆஹா...

தெலுங்கானா பத்தி உங்க கருத்து என்ன? கொடுக்கலாமா கொடுக்ககூடாது? உங்க ஒரு முடிவுக்காகத்தான் சிங் வெயிட்டிங்னு கேள்விபட்டேன்...//

நாஞ்சிலாரே ஏன் இந்த மர்டர் வெறி!!!
ஏதுனாலும் பேசி தீத்துக்கலாம் பாஸ்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ரங்கன்

புதுகைத் தென்றல் said...

நன்றி சூர்யா

ஆயில்யன் said...

//ஹுசைனம்மா மட்டும் காணலியே என்னாச்சு??
ஏன் பதிவு போடலை?ன்னு கேட்டு மெயில் அனுப்பியிருந்தாங்க./

நானெல்லாம் மனசுக்குள்ளயே நினைச்சுக்கிட்டேன் பாஸ்! ஊருக்கு போயிருக்கீங்களா ஸோ மெயில் எல்லாம் படிக்க வாய்ப்பிருக்காது அப்பிடியே இருந்தாலும் கஷ்டப்பட்டு கடைத்தெரு பக்கம் வரணும்ல இதெல்லாம் யோசிச்சு யோசிச்சுத்தான்....! ம்!

புதுகைத் தென்றல் said...

எம்புட்டு தூரம் யோசிச்சிருக்கீங்க பாஸ்,

ஃபீலிங்க்ஸாயிடுச்சு.

வருகைக்கு நன்றி பாஸ்

நட்புடன் ஜமால் said...

இறைவனுக்கே நன்றி தாங்கள் நல்லபடியா வந்ததுக்கு.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ஜமால்

கண்மணி said...

வார்ட் புயலோ தெலுங்கானா பந்தோ நம்ம தென்றல் [புதுகை] அடிச்சா ஒதுங்கி வழிவிடும்ல

புதுகைத் தென்றல் said...

வார்ட் புயலோ தெலுங்கானா பந்தோ நம்ம தென்றல் [புதுகை] அடிச்சா ஒதுங்கி வழிவிடும்ல//

ஆஹா, நீங்களுமா????

அவ்வ்வ்வ்வ்வ்வ்

வல்லிசிம்ஹன் said...

பதிவுக்கு நன்றி தென்றல். நீங்க எப்படி இருக்கீங்களோ. பிள்ளைங்க பள்ளிக்கூடம் போகமுடியுமோன்னு எல்லாம் கவலை எல்லாம் இருந்தது.
உங்க மெயில் ஐடியைத் தொலைத்துவிட்டதால் மயிலவும் முடியவில்லை.
ஊருக்கு வந்துட்டுப் போயிட்டீங்களா,.
சரி .பத்திரமா இருங்க,. கடைகண்ணி எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.
டேக் கேர்.

imcoolbhashu said...

பத்திரமா ஊர் போய் சேர்ந்தீங்களா?. எதுக்கெடுத்தாலும் பந்த்..பந்த்.ன்னு நடக்க ஆரம்பிச்சப்புறம்,ஒரு பக்கம் பதறினாலும் மறுபக்கம் அதோடயே வாழப்பழகிட்டோம் இல்லையா?
http://amaithicchaaral.blogspot.com

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

உங்க அன்புக்கு மிக்க நன்றி.

பசங்களுக்கு 18 பரிட்சை முடிஞ்ச உடனேயே கிளம்பிட்டேன். பத்திரமா திரும்ப வந்து சேந்துட்டேன்.

29ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற பந்துன்னு சொன்னதும் ஒரு மாசத்துக்கு தேவையான மாசச் சாமான்களை வாங்கிட்டு வந்திட்டேன். இலங்கையிலிருந்தே இது பழக்கம் என்பதால் முன் ஜாக்கிரதை முத்தம்மாவா இருக்க பழகிட்டேன்.

நான் மெசெஜ் அனுப்பறேன்.

புதுகைத் தென்றல் said...

ஒரு பக்கம் பதறினாலும் மறுபக்கம் அதோடயே வாழப்பழகிட்டோம் இல்லையா?//

ஆமாங்க. முன்பு குண்டு வெடிச்சதுக்கு மத்தியில் வாழ்க்கை. இப்போ பந்து, அடிதடி, ம்ம்ம் இதுவும் பழகணும்னு இருக்கு

ராமலக்ஷ்மி said...

நல்வரவு.

வல்லிம்மா சொன்னமாதிரி ஆந்திரா செய்திகளைக் கேட்கும் போதெல்லாம் நீங்க எப்படியிருக்கீங்களோ என்கிற நினைப்புதான் ஓடுது. கவனமாய் இருந்துக்கோங்க.

சுரேகா.. said...

ஏங்க...கடைசி வரி வரைக்கும் தேடிப்பாத்துட்டேன்.. எனக்கு ஒரே டென்ஷன்...புதுகைக்கு வந்தீங்களா? இல்லையா?
:)

ஹுஸைனம்மா said...

சந்தோஷம் தென்றல். (தென்றல் வந்தாலே சந்தோஷம்தானே!! - கவித கவித..)

வந்தவுடனே பதிவுகள் போட்டுத் தாக்க ஆரம்பிச்சுட்டீங்க போல, சொன்ன மாதிரி!!

புதுகைத் தென்றல் said...

ஆந்திரா செய்திகளைக் கேட்கும் போதெல்லாம் நீங்க எப்படியிருக்கீங்களோ என்கிற நினைப்புதான் ஓடுது. கவனமாய் இருந்துக்கோங்க.//

வாங்க ராமலக்‌ஷ்மி,

இப்படி அன்பு நெஞ்சங்கள் கூட இருக்க எனக்கு என்ன குறை. முன்பு இலங்கையிலிருந்து சாட்டும்போது மங்களூர் சிவா தம்பி “அக்கா சீக்கிரம் இந்தியா வந்திடுங்க. கலவர பூமியில் காத்து வாங்காதீங்கன்னு” சொல்வாரு.

நம்ம நாடு மட்டும் பாதுகாப்பான்னு கேட்பேன்.

புதுகைத் தென்றல் said...

புதுகைக்கு வந்தீங்களா? இல்லையா?//

வாங்க தலைவரே, பதிவு வருது பாருங்க

புதுகைத் தென்றல் said...

தென்றல் வந்தாலே சந்தோஷம்தானே!! - கவித கவித..)

வந்தவுடனே பதிவுகள் போட்டுத் தாக்க ஆரம்பிச்சுட்டீங்க போல, சொன்ன மாதிரி!!//

தென்றலாவும், புயலாவும் பதிவு போட்டுத்தாக்கணும்னு தான் தென்றல்னே பேரு வெச்சுகிட்டேன்.
வருகைக்கு நன்றி