Saturday, December 26, 2009

அயித்தானை கலாய்த்த பிள்ளைகள்!!!

சென்னைக்கு போகும் ஒவ்வொரு முறையும்
பிள்ளைகள் ”ஞாபகம் வருதே” பாட்டு பாடுவாங்க.
(அயித்தானுக்குத்தான். அவர்தான் மிஸ்டர்.மெட்ராஸாச்சே)

அதுவும் இந்த முறை காலை முதல் இரவு வரை
சென்னையில் டேராவென்றால் கேக்கவேண்டுமா.

கோடம்பாக்கத்தில் என் தோழி இருக்கிறார். அவரது
வீட்டிற்குச் சென்று பெட்டியை வைத்துவிட்டு
சுடச்சுட வெந்நீரில் குளித்து ரெடியாகி மாம்பலம்
கிளம்பியாச்சு. ரவுண்ட் அப் + கொஞ்சமாய் பர்சேசிங். :))

முடித்து 2 மணிக்கு வந்தால் தோழி மதிய உணவு
தயார் செஞ்சு வெச்சிருந்தாங்க. சாப்பிட்டுவிட்டு
அவர்களோடு பேசி, அளவளாவிகிட்டு இருந்து
5 மணி வாக்கில் அயித்தான் ஊருக்கு புறப்பட்டோம்.

என்னதிது? சென்னையை சேர்ந்தவர்னு சொல்லிட்டு
அவுக ஊருக்கு? அப்படின்னா என்ன அர்த்தம்னு
கேக்கறீகளா??? அயித்தான் ஊரு திருவல்லிக்கேணி.பீச் ரோடு சும்மா டாலடிக்குது. கிரானைட் நடைபாதை,
ஸ்டீல் கம்பிகள்னு ஒரு மார்கமா இருந்துச்சு. அந்த
பாதையில் கார் நுழைஞ்சதுமே பசங்க,” அப்பாவுக்கு
இப்ப கொசுவத்தி சுத்தும்! சந்தோஷமா இருக்கும்னு”
சொல்லிகிட்டு ஞாபகம் வருதே பாடினாங்க.

அங்க ஒரு சொந்தக் காரவுக வூட்டுல கல்யாணம்
விசாரிக்கப்போனோம். அவுக வீட்டுல பேசி, காபி
சாப்பிட்டு கிளம்பும்போது பக்கத்துலேயே இருக்கற
பார்த்தசாரதியை பாக்காட்டி போனா எப்படின்னு?
அயித்தானை கேட்டேன். அதுவும் சரிதான்னு
கூட்டிகிட்டு போனாரு.

வைகுண்ட ஏகாதசிக்காக பூஜைகள் நடைபெறுவதால
திரைப்போட்டு மூடியிருக்கு. உற்சவர் தான் இருந்தார்.
ஹலோ சொல்லிட்டு பாத்தா மணி 8. 10.30க்கு தான்
ராக்போர்ட். நிறைய்ய நேரம் இருந்துச்சு.

சரி ராச்சாப்பாட்டையும் இங்கயே பாக்கலாம்னு
அயித்தான் சொன்னார். அதுக்கு முன்னாடி நீங்க
இருந்த வீட்டை காட்டுங்க, நீங்க படிச்ச ஸ்கூலை
காட்டுங்கன்னு பசங்க கேட்டுகினு இருந்தாங்க.

அதுக்கு முன்னாடி சூப்பரா டின்னர் சாப்பிடலாம்னு
சொல்லி அயித்தான் ரத்னா கபே கூட்டிகிட்டு போனார்.
என்ன ஆர்டர் செய்யலாம்னு யோசிக்கிறதுக்கு முன்னாடி
4 ப்ளேட் இட்லின்னு சொன்னார். ”இட்லியான்னு!!” வாய்
பிளந்த பசங்களுக்கு,” சாப்பிட்டுப்பாரு!! அப்புறமா சொல்லுன்னாரு”

2 இட்லி தட்டுல வந்துச்சு. தொட்டுக்க சட்னி, சாம்பார்
எதையும் காணோம். அயித்தானை பசங்க பாக்க அதுக்குள்ள
குவளையில் சாம்பாரை கொண்டுவந்து ஊத்தினார் சர்வர்.
(படம் நெட்டுல சுட்டது)


இப்படி மிதஞ்சுச்சு இட்லி. :)) சுடச்சுட சாம்பார்
சும்மா தேவாமிர்தமா இருந்துச்சு. பசங்களுக்கு
ரொம்பவே பிடிச்சு போச்சு. நாங்க சாப்பிட்டுகிட்டு
இருந்த போது வந்த மத்தவங்களும் மொதல்ல
ஆர்டர் செஞ்சது இட்லிதான். ஒரு ப்ளேட்டாவது
ஆர்டர் செய்யாதவங்களே இல்லை.


சாப்பிட்டு முடிச்சதும் பசங்க அயித்தான் சின்னப்ப இருந்த வீடு,
பிறந்த கோஷா ஆஸ்பத்திரி, படிச்ச ஹிந்து சீனியர் ஸ்கூல்
எல்லாம் பாத்தாங்க. எக்மோருக்கு வண்டியை விடச்சொல்லி
அங்க போய் சேர்ந்தோம். இரவு 10.30க்குதான் வண்டி.
அதுவரை ரெஸ்ட் ரூமில் போய் ஓய்வெடுத்தோம்.

9.45க்கெல்லாம் ப்ளாட்பார்முக்கு வண்டி வந்திருச்சு.
ஏறி படுத்துததுதான் தெரியும். கண்விழிச்சப்போ வண்டி
30 நிமிஷம் லேட்டுன்னாங்க. ரொம்ப நல்லதாப்போச்சுன்னு
இருந்தோம். திருச்சிராப்பள்ளி சேர்ந்து வெளியில வந்தோம்.
பஸ்ஸ்டாண்டுக்கு எதிர்ல ஒரு சின்ன ஹோட்டல். குளிச்சு
ரெடியாக மட்டும்தானேன்னு புக் செஞ்சு வெச்சிருந்தோம்.
அங்க போக ஆட்டோ 50ரூபாய் கேட்டாங்க. அதுக்குள்ள
பஸ் காலியா வந்துச்சு. பசங்க ,”பஸ்ஸுல போகலாம்பா!!” ன்னு
சொல்ல பஸ்ல போனோம். பசங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.

ஆளுக்கு ரெண்டு ரூவாதாண்ணா,
ஆட்டோல போயிருந்தா 50 ரூவா செலவாகும். இப்ப 42 ரூவா
மிச்சம்னு அண்ணனும் தங்கச்சியும் பேசிகிட்டாங்க.

ரூமுக்கு போய் குளிச்சு ரெடியாகி மீ த வெயிட்டிங்கா
காத்திருந்தோம். யாருக்கு???

தொடரும்.

27 comments:

ஆயில்யன் said...

ரத்னா கபே - அட்ரஸ் ப்ளீஸ்?

ஆயில்யன் said...

சாம்பாரும் இட்லியும் தின்னுப்புட்டு வந்து சொல்லி காமிச்சு இப்ப மீ த வயிறு புகைஞ்சிங்க் !

ஆயில்யன் said...

/ரூமுக்கு போய் குளிச்சு ரெடியாகி மீ த வெயிட்டிங்கா
காத்திருந்தோம். யாருக்கு??? //

ஓ.........!

இதுல சஸ்பென்ஸெல்லாம் வருதா?

ரைட்டு !

ஆதிமூலகிருஷ்ணன் said...

வந்து ரொம்ப நாளவுதா? ஹால், கார்ப்பெட்னு வீடு களைகட்டுது ஃபிரெண்ட்.!

அப்படியே பயணக்கட்டுரையும்.!

நானானி said...

ஒரே நாள் சென்னையை சுற்றியதில் இவ்ளோ தகவல்களா? நல்லாருந்துச்சு.

ஒரு போன் செய்திருக்கலாமே? மீட்டிருக்கலாமே!

அட! மீ த ஃபர்ஸ்டா?

அறிவன்#11802717200764379909 said...

அத்தான் என்று எழுதுங்களேன்..அயித்தான் என்பது பேச்சு வழக்கு சொல்.

புதுகைத் தென்றல் said...

வாங்க பாஸ்,

திருவல்லிக்கேணியில் போய் ரத்னா கபேன்னு கேட்டா எல்லோரும் சொல்வாங்க.

//சாம்பாரும் இட்லியும் தின்னுப்புட்டு வந்து சொல்லி காமிச்சு இப்ப மீ த வயிறு புகைஞ்சிங்க் !//
அதுக்குத்தானே பதிவு போடுறது

புதுகைத் தென்றல் said...

ஆமாம் ஃப்ரெண்ட் ரொம்ப நாளா உங்களை இந்தப் பக்கம் காணோம்.

வர்றவங்க உட்கார வசதியா சோபா, கார்பட் எல்லாம்.

:))

புதுகைத் தென்றல் said...

ஒரு போன் செய்திருக்கலாமே? மீட்டிருக்கலாமே!//

இவுக செம பிசியா ப்ரோக்ராம் போட்டுட்டாங்க. அதனால பேசலை. தவிர ஊருக்கு போறதுக்கு முன்னாடி பீபீ கொஞ்சம் இறங்கி அவஸ்தை பட்டேன். திருவல்லிக்கேணி வரை வந்தா வீட்டுக்கு கண்டிப்பா வரணும்னு துளசி டீச்சர் சொல்லியிருந்தாங்க. அவங்க கூடயும் பேச முடியலை.

அடுத்த தடவை கண்டிப்பா மீட்டலாம்.

புதுகைத் தென்றல் said...

.அயித்தான் என்பது பேச்சு வழக்கு சொல்.//

தெரியும்ங்க,அப்படி சொல்வது எங்க ஊரு பக்க பழக்கம். அப்படியே தொத்திகிச்சு

எம்.எம்.அப்துல்லா said...

i miss u toooo akka :((

ராமலக்ஷ்மி said...

//2 இட்லி தட்டுல வந்துச்சு. தொட்டுக்க சட்னி, சாம்பார்
எதையும் காணோம். அயித்தானை பசங்க பாக்க அதுக்குள்ள
குவளையில் சாம்பாரை கொண்டுவந்து ஊத்தினார் சர்வர்.//

பசியெடுக்க வைக்கிறது வரிகள்:)!

வல்லிசிம்ஹன் said...

rathna cafe pokalai. inime poven:)
next pl come home. ok?

நாஸியா said...

சென்னை....ராக்ஃபோர்ட், திருச்சி, திருச்சி பஸ்,... ஐயோ எனக்கு ரொம்ப ஊரு நினைப்பு வருதுங்க‌

நாஸியா said...

ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க சகோதரி!

புதுகைத் தென்றல் said...

அடிக்கடி போனையும் நம்பரையும் தொலைச்சிப்புட்டு இப்ப மிஸ் யூ அக்காவா.

பெஞ்ச் மேல ஏத்தி போனை தொலைப்பியான்னு அப்பாவி விட்டு அடிக்கச் சொல்லணும்

புதுகைத் தென்றல் said...

பசியெடுக்க வைக்கிறது வரிகள்//

அந்த சாம்பாரை மோந்ததுக்கே பசி கிளப்பிடுச்சு. அதான் வரிகளிலும் வந்திருக்கு ராமலக்‌ஷ்மி,

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

ரத்னா கபே போயி ஆனந்தமா இட்லியை ருசிச்சு பதிவு போடுங்க வல்லிம்மா.

அடுத்த முறை கண்டிப்பா வந்து சந்திக்கறேன்ன்.

புதுகைத் தென்றல் said...

ஐயோ எனக்கு ரொம்ப ஊரு நினைப்பு வருதுங்க‌//

ஆஹா இன்னும் பதிவுகள் பாக்கியிருக்கு.
//ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க சகோதரி!//

நன்றி சந்தோஷமா இருக்கு. சகோதரி கிடைச்சதுக்கு, பாராட்டுக்கு.

நட்புடன் ஜமால் said...

முதலில் சாம்பார் குளியல் பிறகு ...

fundoo said...

பசி நேரத்தில நீங்க வேற..

புதுகைத் தென்றல் said...

முதலில் சாம்பார் குளியல் பிறகு ...//

சாம்பாரில் குளிச்ச இட்லியை ரவுண்ட் கட்டிட்டு நித்திரைதான்.

:))

புதுகைத் தென்றல் said...

பசி நேரத்தில நீங்க வேற..//

:))

ஹுஸைனம்மா said...

சஸ்பென்ஸ் வச்சுட்டுப் போயிட்டீங்க பேசாம? இப்ப வருவியா, வரமாட்டியான்னு நாங்க பாடணுமா?

அன்புடன் அருணா said...

OK அப்புறம்????

புதுகைத் தென்றல் said...

சஸ்பென்ஸ் வச்சுட்டுப் போயிட்டீங்க பேசாம? இப்ப வருவியா, வரமாட்டியான்னு நாங்க பாடணுமா?//

வந்திட்டேன் ஆத்தா வந்திட்டேன். வந்து பதிவும் போட்டுட்டேன்.

:)))))

புதுகைத் தென்றல் said...

அடுத்த பதிவு போட்டாச்சு அருணா