புதுகைக்கு போகும்போது வரும்போதும் திருச்சியை
தாண்டிதான் பயணம். ஆனால் ஒரு முறை கூட
பிள்ளைகளை ஊருக்குள் அழைத்துச் சென்றதே இல்லை.
நமக்கும் இந்த முறை உடல்நிலைக்குறைவால் அதிகம்
அலைய முடியாத நிலை. ஆனால் பிள்ளைகளையும்
புது இடத்துக்கு அழைத்து போகவேண்டும்!! எப்பூடி??
அப்படி யோசிச்சப்ப கிடைச்ச ஐடியாதான் திருச்சி ரவுண்ட் அப்.
நாங்க குளிச்சு முடிச்சு காத்திருந்தது அம்மையப்பனுக்காக.
அட எங்க அம்மா, அப்பாவுக்காக. புதுகையிலிருந்து
கார் எடுத்து வந்திட்டாங்க. ஆஷிஷுக்கு ரொம்ப பிடிச்ச
அம்பாசிடர் கார். :)) செம காட்டுல இருந்தாப்டி ஆஷிஷ்.
அம்மா, அப்பா நாங்க இருந்த ஹோட்டலுக்கு வந்தாங்க.
அங்கேயிருந்து நேரா சென்றது உச்சிப்பிள்ளையார் கோவில்.
அடிவாரத்துல மாணிக்க விநாயகரை தரிசிச்சுகிட்டு படியேற
ஆரம்பிச்சா...... படி போய்க்கினே இருக்கு.
இந்தக் கோவிலில் உச்சி பிள்ளையார் எம்புட்டு பிரசித்தமோ,
தாயுமானவ சுவாமியும் ரொம்ப பிரசித்தம். அதைப்பத்தி
ஏற்கனவே போட்ட பதிவு இங்க.
மொத்தம் 438 படிகள். அம்புட்டு தூரம் ஏற முடியாதுன்னு
அம்மாவும் அப்பாவும் கார்லேயே இருந்தாங்க. நாங்க மட்டும்
போனோம்.
மாணிக்க விநாயகரை தரிசிச்சு படியேற ஆரம்பிச்சோம்.
முன்னாடி ராம் மாமா திருச்சில இருந்தாங்க. சின்ன வயசுல லீவுக்கு
திருச்சிக்கு வருவேன். அப்ப மலையடிவாரக்கோவில்ல
கட்டியிருந்த யானைகிட்ட என்னை விட்டுவிடுவதா சொல்லி
குமார் மாமா பயப்படுத்துவாங்க. பசங்களுக்கு யானைன்னா
இஷ்டம். இப்பவும் யானை இருக்கும்னு
நினைச்சு போனேன். யானை கட்டியிருந்த இடம் காலியா
இருந்துச்சு. பழைய நினைவுகளை அசைபோட்டுகிட்டே
படியேறினேன்.
200 படி ஏறினப்புறம் நம்பவேமுடியாத அளவுக்கு பெரிய
பிராஹரத்துடன் கூடிய பெரிய லிங்கம். இவர்தான்
அருளிமிகு தாயுமானவ சுவாமி. அப்பனே அன்னையின்
உருவில் வந்த இடமாச்சே. எப்போதும் எல்லோருக்கும்
அருள் புரிப்பான்னு வேண்டிகிட்டேன்.
மட்டுவார்குழலம்மையையும் தரிசிச்சு மேலே படி ஏற
ஆரம்பிக்கும்பொழுதே திருச்சி நகரம் அழகா தெரியுது.
இந்த இடத்தை ஏறுவது தான் கொஞ்சம் கஷ்டம்.
குகைக்குள் இருக்கும் விநாயகரை தரிசனம் செஞ்சுகிட்டோம்.
திருச்சிராப்பள்ளிக்கு நிறைய்ய கதை இருக்கு.
அதை எழுத ஆரம்பிச்சா நிறைய்ய பதிவாகும்.
இங்க போனா படிச்சிக்கிடலாம்.
முழுமுதற்கடவுளை தரிசிச்சு முடிச்சு காலை உணவு
முடிச்சிட்டு நேரா ஓடினது ஸ்ரீரங்கரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்ய. ராப்பத்து, பகல்பத்துல பெரியவர் பிசியா
இருந்தாலும் ஹலோ சொல்லிட்டேன். தங்க கொலுசு போட்டிருக்கார்
பாருங்க ரங்கநாதர். ம்ம்ம்ம்
இந்தக்கோவிலில் ரங்கநாதருக்கு காலையில் ரொட்டியும், வெண்ணையும்
நிவேதனம் செய்வாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா??
காண்டினெண்டல் ப்ரேக்ஃபாஸ்டான்னு கேக்ககூடாது. தனக்காக
காதாலால் கசிந்துருகிய துலுக்கநாச்சாரியக்காக இப்படியாம்.
அந்தக் கதையை சமீபத்தில் புத்தகத்தில் படிச்சேன்(அவள்விகடனா,
ஆனந்த விகடனா, சக்தி விகடனா தெரியலை. டிசம்பர் மாச
புத்தகம் தான்)
வெளிப்ப்ராகாரத்தில் துலுக்க நாச்சியாருக்கென சந்நிதி இருக்கு.
5குழி 3வாசல் அப்படின்னு ஒரு இடம் கோவிலில் உண்டு.
5குழிக்குள் கையை வெச்சு பார்த்தால் 3 கோபுரங்கள் தெரியும்னு
சொல்வாங்க. இப்ப ஏதும் தெரியலை.
அங்கேயிருந்து நேராக குணசீலம் போனோம். திருப்பதி வெங்கடாசலபதிக்கு
வேண்டிகிட்டு அம்புட்டு தூரம் போக முடியாதவங்க குணசீலம்
வெங்கடாசலபதிக்கு செய்யலாம். ஆனா இவருக்கு நேர்ந்துகிட்ட
இங்க மாத்திரம் தான் பிரார்த்தனை செய்யலாம்.
இங்கே 12.30க்கு சங்க தீர்த்தம் முகத்தில் அடிப்பார்கள். மனநலம்
குன்றியவர்களுக்கும் நலம் கிடைக்கும் அப்படின்னு சொல்வாங்க.
இங்கே இறைவன் பேரு ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி. லக்ஷ்மியை
இதயத்தில் வைத்த படி திரு உருவம்.
குணசீலம் தளத்திற்கு
அடுத்து செல்ல வேண்டிய இடமும் கோவில்தான். மணி 12 ஆகிடுச்சு.
கோவில் மூடிடாம இருக்கணுமேன்னு போன் போட்டு கேட்டோம்.
ஐயப்ப சாமி சீசன் + மார்கழி மாதம் என்பதால் கோவில் மூடுவதில்லைன்னாங்க.
ஆஹான்னு சந்தோஷப்பட்டுகிட்டு கிளம்பினோம்.
கோவில் தரிசனம் நல்லா நடந்தாலும் சில விஷயங்கள்
நெருடுது. எங்கே? என்ன நெருடல் எல்லாம் அடுத்த பதிவுல
வருதுல்ல.
22 comments:
நல்ல ரவுண்ட்ஸ்
நெருடல் இல்லாம எங்கே போகுது ...
நெருடல் இல்லாம எங்கே போகுது ...//
அதான் கஷ்டம்
திருச்சியுமா?
அது சரி.. கரெக்டா ஏதாவது ஒரு நாள் நான் ஊரில் இருந்திருக்கப்போறேன்.
நீங்க வந்திட்டுப்போயிருக்க்கப்போறீங்க!
என் நம்பர் இருக்கா?
உங்க நம்பர் என்னிடம் இல்லை...அதான் கொடுமை!
போட்டோவெல்லாம் புச்சுட்டு வர்லியா? :(
ஊருல நாலு நாள் இருந்தேன் சுரேகா,
மழையால போன செய்யலை. உங்க நம்பர் என் கிட்ட இருக்கு. என் நம்பரும் கொடுத்ததா ஞாபகம்.
போட்டோவெல்லாம் புச்சுட்டு வர்லியா?//
இல்ல பாஸ் ஞாபகமா, கேமராவை மறந்து வெச்சிட்டு போயிட்டேன்.
அதான் படங்கள் நெட்டுல சுட்டேன். அயித்தான் மொபைலில் சில படங்கள் இருக்கு. இன்னும் என் கணிணிக்கு வரலை. வந்ததும் கண்டிப்பா பதிவு வரும்
காமிரா இல்லாமல் ஊரு சுத்த கிளம்பிய தென்றலை கண்டிக்கிறேன்.
காமிரா இல்லாமல் ஊரு சுத்த கிளம்பிய தென்றலை கண்டிக்கிறேன்.//
:))) மொத தபா மன்னிச்சு விட்டுருங்க
கலக்கல் பாஸ்
வருகைக்கு நன்றி பாஸ்
ஐ! நானும் மலைக்கோட்டைக்கு போயிருக்கேனே! திருச்சிய பொறுத்த வரையில மலைக்கோட்டை ஜாதி மத வேறுபாடு இல்லாம எல்லாரும் வர்ற இடம்... :)
எங்க கல்லூரி பக்கத்துல இருக்குற திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் இருக்குற மலைக்கு நாங்க அடிக்கடி போவோம் (அப்படியே அஜீஸ் பிரியாணிலயும் காவேரி சாட்லயும் ஒரு ரவுண்டு கட்டிடுவோமே! ).. சாயுங்கால நேரம் எவ்வளவு ரம்மியமா இருக்கும்!!
ஆகா.. திருச்சியை நினைவு படுத்திட்டீங்களே!! நானும் மலைக்கோட்டைக்கு போயிருக்கேனே! அங்க உள்ள தெப்பக்குளம் ஏரியா ஒரு மினி டி நகர்..
திருவெறும்பூர்ல இருக்குற எறும்பீஸ்வரர் கோயில் (அப்படியே அஜீஸ் பிரியானி இல்லை காவேரில சாட்) அடிக்கடி தோழிமார்களோட அவுட்டிங்க் ப்ளான்ல இருக்கும்! தோழிகள் உள்ளே செல்ல, நான் மலையின் திண்டுகளில் உட்கார்ந்துக்குவேன்! எவ்வளவு ரம்மியமா இருக்கும், சாயுங்கால நேரம்!
எல்லா இடங்களுக்கும் பலவருடம் முன்னே போயிருக்கிறேன். பதிவு நினைவுகளில் மூழ்க வைத்தது. நல்லா எழுதியிருக்கீங்க. நெருடல் என்னன்னு தொடருங்க:)!
வாங்க நாஸியா,
உங்களுக்கும் கொசுவத்தி சுத்தியாச்சா.
வருகைக்கு நன்றி
நெருடல் என்னன்னு தொடருங்க//
பதிவு வருது
சில வருடம் முன்பு சென்று வந்த நினைவுகள்..!!. நெருடல் ஏன்... காத்திருக்கிறோம்.
உச்சிப்பிள்ளையார் கோவில்னா மலைக்கோயிலா தென்றல்? இல்ல இது வேறயா?
ஜூலையில திருச்சி போனப்ப, ஆசையா மேல ஏறி பாக்கணும்னு நினச்சிப் போனேன். ஆனா பத்து மணியாயிடுச்சு. அந்நேரத்துல மேலே ஏறினா தேவையில்லாத தர்மசங்கடங்கள் வருமோன்னு திரும்பி வந்துட்டேன். அடுத்த முறை கண்டிப்பா போணும், இறைவன் நாடினால்.
வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்,
இதோ இன்னும் 10 நிமிஷத்துல அடுத்த பதிவு படிச்சீங்கன்னா தெரிஞ்சிடும்
ஆமாம் ஹுசைனம்மா,
மலைக்கோவில், ராக்ஃபோர்ட் அப்படின்னு சொல்வதுதான் உச்சிப்பிள்ளையார் கோவில்
:)
நண்பரே தங்களின் திருச்சி வலம்பற்றி வாசித்து மகிழ்ந்தேன். . .
என் இளங்கலை பட்டப்படிப்புதனை திருச்சியில் படித்த போதும், கோவில்கள் பற்றி நான் அறிந்து இருக்கவில்லை. தங்களின் இந்த பதிவின் மூலம் அறியபெற்றேன் .. நன்றிகள் பல பல ...
வாழ்த்துக்களுடன். . .
சேதுராமன் கிருஷ்ணசாமி
முதல் வருகைக்கு மிக்க நன்றி சேதுஎழில்
Post a Comment