திருமணநாள் அன்று டின்னருக்கு எங்கே போகலாம்னு? அயித்தான்
கேட்டார். அங்கத்தி போகலாம்னு சொன்னேன். ஆஷிஷ் 70MM
ட்ரை செஞ்சு பாக்கலாம்னு சொல்ல சரின்னு அயித்தான் சொன்னார்.
ஆஹா, அற்புத ப்ரபஞ்சமால்ல இருந்துச்சு. பாலிவுட் தீமில்
இருக்கும் ஒரே ரெஸ்டாரண்ட் இது தானாம்.
உள்ள நுழைஞ்சதிலேர்ந்து எங்கெங்கு காணினும் ஹிந்தி
சினிமா தான்.

AMAR AKBAR ANTONY படத்துல எண்ட்ரி தரும் அமிதாப்!!

டான்சர் ஹெலன்!!

ஆவாரா ஹூ என பாடும் ராஜ் கபூர்!!

சண்டை காட்சி எல்லாம் சூப்பரா செஞ்சு வெச்சிருக்காங்க.

புஃபே டைப் சாப்பாடு. வெஜ், நான் வெஜ்னு தனியா பிரிச்சு வெச்சிருக்காங்க.

வெஜ் மெனு சொல்றேன்.
ஸ்பினாச்+ப்ரோகலி சூப், வெஜ் பிட்சா, நூடல்ஸ், பாஸ்தா,
வடை, சாம்பர், சட்னி, காலிஃபளவர் மஞ்சூரியன்,
தால்மக்கானி, கடாய் வெஜிடபிள், பனீர் பட்டர் மசாலா,
ஸ்டீம்டு ரைஸ், சீரக ரைஸ், தஹி வடா பக்கத்துல
பூந்தி, காரச் சட்னி, இம்லி சட்னி, சுடச்சுட சாஃப்டாக
நான் எல்லாம் இருக்கு. சுவையோ சுவை. ஓரீஸ்
உணவுவகங்களில் சுவை ரொம்ப நல்லா இருக்கும்.
அதிக காரமில்லாத உணவு வகைகள்.

டெஸர்ட் எது எடுப்பது? எதை விடுவதுன்னு தெரியலை. :))
கேக், டபுள் கா மீட்டா, ஐஸ்கிரீம் வித் ஹாட் சாக்லேட் +
சாக்லேட் சிப்ஸ். தனியா ஐஸ்கிரிம் கவுண்டர் ஒண்ணும் இருக்கு.
வேணுங்கறத ஆர்டர் செஞ்சா தனியா செஞ்சு தனி பில்லா
கொடுப்பாங்க.
சினிமா பத்தின தீம்ல இருக்கறதால சாப்பாட்டு பில்லும்
ஃபிலிம் ரோல் டப்பாவுல வருது. :))

இம்புட்டு சொன்னேனே. சாப்பாடு விலை
ஒரு ஆளுக்கு :ரூபாய்.225 + டாக்ஸ்
பிள்ளைகளுக்கு (8வயதுக்குள்) பாதி விலை.
இடம்: ஓரிஸ் 70MM ஜலவிஹார்.
நெக்லஸ் ரோடு
ஹைதராபாத்
Phone: 040-64543333
Mobile: 9959400038, 9959400040
23 comments:
unga hotala akkaa weldone
ஓஒ சாப்பாடு எப்படி தென்றல் - அதச் சொல்லவே இல்லையே - ம்ம்ம்ம்ம்
திருமண நாளன்று சென்றதனால் நன்றாய்த்தான் இருந்திருக்கும்
நல்வாழ்த்துகள் தென்றல்
எங்களுக்கும் இந்த இடத்து சாப்பாடு ரொம்ப பிடித்திருந்தது. ஆனா இந்த பாலிவூட் சமாசாரம் கொஞ்சம் கொஞ்சம் ஜாஸ்தியா tinsel town ஆக்கிட்ட மாதிரி தோனியது. ம்..நல்ல choice தான் enjoy பண்ணினீங்களா பிள்ளை தயவில்!! good.:))
unga hotala akkaa weldone//
ஆஹா அம்பூட்டு பெரிய ஆளா நானு.
ஹோட்டலுக்கு போயிட்டு வரக்கூடிய ஆளு நானு :)) வருகைக்கு நன்றி
வாங்க சீனா சார்,
மெனு சொல்லும்போதே அதிக காரமில்லாத உணவுன்னு சொல்லியிருந்தேனே. ஓரிஸ் உணவகங்களில் சுவைக்கு குறைவேதும் இல்லை.
enjoy பண்ணினீங்களா பிள்ளை தயவில்!!//
ஆமாம் ஜெயஸ்ரீ,
ரொம்ப பிடித்திருந்தது. ஆஷிஷுக்கு பலமுறை நன்றி சொன்னோம். சென்ற வருடமும் ஓரிஸ் தான் ஆனால் அதுஓரிஸ் ஜீவா.
Wedding anniversary greetings , Thenral.
it is beautiful and well put up. I am talking abt the hotel:)
நல்லாத்தான் கொண்டாடியிருக்கீங்க போல!!
வாங்க வல்லிம்மா,
ரொம்ப அருமையான ஆம்பியன்ஸ்.
வருகைக்கு நன்றி
ஆமா ஹுசைனம்மா நல்லாவே கொண்டாடினேன்.
நன்றி
ஹைய்ய்ய்ய் அப்ப எனக்கெல்லாம் பாதி வெலைக்கே சோறு கிடைக்குமா ஹய்ய்ய் ஜாலி :)
//it is beautiful and well put up. I am talking abt the hotel:)//
தென்றல் சமையல்லுன்னு எந்த ரிஸ்க்கும் எடுக்கபிடாதுன்னுதான் அயித்தான் அன்னிக்கு எல்லாரையும் ஓட்டலுக்கு கூப்பிட்டு போய்ட்டாராம்ல :))))
இப்படி சொல்லிட்டா நீங்க பச்ச புள்ளன்னு நாங்க நம்பிடுவோமா ரங்கா:)
வாங்க பாஸ்,
வந்து இப்படி ஏதும் கமெண்டினாதான் நிறைஞ்சா மாதிரி இருக்கு.
தாங்க்ஸ்
இங்கயுமா:)))
திருமண நாள் வாழ்த்துக்கள் தென்றல்!
வாழ்க வளமுடன்!!
திருமண நாள் வாழ்த்துகள்
//வயி்ற்றெரிச்சல் புகைகளும், காதுல புகைகளும் கிளப்பும் பதிவு இது.
//
கண்டிப்பாக.
அதற்கு காரணம்
நான் இருப்பது சென்னையில்.
இப்ப நினைச்ச உடனே அந்த ஹோட்டலுக்கு போக முடியாதுல்ல..
நல்லா மெனு..........
என்ஜாய் என்ஜாய் !!
யெஸ்ஸு வித்யா :))
வருகைக்கு நன்றி
நன்றி கோமதி அரசு.
வாங்க புகழன்,
நன்றி
ஒரு எட்டு ஹைதைக்கு வந்திட்டு போறது.
தாங்க்ஸ் சுபாஷிணி,
என்ன இருந்தாலும் மேங்கோ ட்ரீ மாதிரி வருமா!!!
:))
Post a Comment