பழைய நட்புக்களை சந்திக்கறது சந்தோஷமான விஷயம்.
அப்படி இரண்டு சந்தோஷம் எங்களுக்கு கிடைத்தது.
மும்பையில் என்னுடன் பணிபுரிந்த நண்பர் ஹரியின்
மனைவி அயித்தானுடன் ஹிந்துஸ்தான் லீவரில் பணி
புரிந்தார்.(அப்போ அவர்களுக்குத் திருமணமாகலை)
ஹைதைக்கு மாற்றலாகி வந்திருந்த அவர்களின்
தொலைபேசி எண் கிடைக்க நெம்ப சந்தோஷமாக
பேசினார்கள். என் வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறார்கள்.
ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் வந்து காலிங் பெல்
அடிக்க, கதவைத் திறந்த மகனுக்கு யாருனு தெரியாமல்
என்னை கூப்பிட்டான். ஹரியை பார்த்துவிட்டு ”அப்பச்சா” என
கத்தியே விட்டேன். (ஹரியை அப்படித்தான் அழைப்பேன்)
பரஸ்பரம் பிள்ளைகளுக்கு எங்களின் கதையை சொல்ல
“ஆ.. அப்படியா” என செம ஆச்சரியம். :)))
**********************************************
திருமணமான புதிதில் ஹைதையில் அயித்தானின்
நண்பர்கள் விருந்துக்கு வந்திருந்ததை பதிவாக
போட்டிருந்தேன். அதில் சந்தர் எனும் நண்பர்
ஹைதைக்கு மாற்றாலாகி வந்திருக்கிறார்.
நட்புக்கள் இருவரும் “என்னடா எப்படி இருக்க?
நீ குண்டாகிட்ட, மாறவே இல்லை” என
பேசி மகழ்ந்துகிட்டாங்க. நேற்று இரவு டின்னருக்கு
வீட்டிற்கு வந்திருந்தார். பழைய நினைவுகளை
அசை போட்டுகிட்டே சாப்பிட்டோம்.
(தம் ஆலு, சப்பாத்தி, ரைஸ், தயிர்,சாலட் நான் போட்ட
ஆவக்காய் இதான் மெனு) :))
சென்ற முறை சோறுக்காக காக்க வைக்க நேர்ந்தது.
இந்த முறை வயிறு ஃபுல் என சொல்லும் அளவுக்கு
சாப்பாடு போட்டாச்சு.
********************************************
போன மாசமே ஆரம்பிச்சிருச்சு. இப்ப ஆட்டம்
ஜாஸ்தியாத்தான் இருக்கு. ஹைதை குளிரத்தான்
சொல்றேன். வெயில் அடிக்குது ஆனா உரைக்க
மாட்டேங்குது. :)
பகலில் கூட ஸ்வெட்டர் போட்டுக்க வேண்டிய
நிலை. இரவில் கெட்டி பெட்ஷீட் பத்தாமல்
க்வில்ட் போத்திக்க வேண்டி இருக்கு.
ச்சே என்ன குளிர்!! ( வயிற்றெரிச்சலை
கிளப்பியாச்சு. நிம்மதியா இருக்கு)
:)))))))))
**************************************
தெலுங்கானா பந்த் தந்த திருப்பமா
ஹைதை ஒரு மார்கமாத்தான் இருக்கு.
அங்கங்கே தர்ணா, அடிதடி எல்லாம் நடக்குது.
கலவரத்துல கலந்துகிட்ட உஸ்மானியா
யுனிவர்சிட்டி பசங்களை உசுப்பேத்தி விட்ட
புண்ணியவான் யாரோ! நாசமாப்போக.
இப்படி கலவரங்களில் மாணவர்கள் கலந்துகிட்டதை
மீடியாக்களில் பார்த்த கம்பெனிகள் ப்ளேஸ்மெண்ட்
வைக்க வர மாட்டாங்களாம். அவங்க எதிர் காலமே
வீணாயிடுமுன்னு பேராசிரியர் ஒருவர் சொல்லிக்கிட்டு
இருந்தார். அம்மா, அப்பா கஷ்டபட்டு படிக்க அனுப்பினா
இவங்க கையில தடி எடுத்துகிட்டு கார், பெட்ரோல் பங்குன்னு
அடிக்க கிளம்பறாங்க.
ப்ளேஸ்மெண்ட் இல்லாம வேற இடத்துல வேலைக்கு
ட்ரை செய்யலாம்னாலும் ஓ.யூ ல படிச்ச பசங்களுக்கு
வேலை இல்லைன்னு சொல்லும் நிலையும் இருக்குமாம்.
தேவையா மக்கா உங்களுக்கு இது??
*********************************************
இந்த வருட ஆரம்பத்தில் என்னென்னவோ கத்துக்கணும்னு
திட்டம் போட்டு வெச்சிருந்தேன். மாமாவின் இழப்பு,
என் உடல்நிலை சரியில்லாமல் போனதுன்னு இந்த
வருடமெல்லாம் இருந்ததால் எதுவும்
உருப்படியா செய்யவே இல்லைன்னு மனசுக்கு ஒரே
வருத்தம்.
2009ஆம் வருஷமும் முடியப்போகுது. ஒண்ணும் புதுசா
கத்துக்கலையேன்னு இருந்தேன். ஏதாவது ஒண்ணு
கத்துகிட்டே ஆகணும்னு குக்கரி கிளாசில் சேர்ந்திட்டேன்.
ஐஸ்கிரீம், மாக்டெயில், சாக்லேட், கேக், பிஸ்கட்ஸ்
அப்படி இப்படின்னு 125 ஐடம் கத்துக்க போறேன்.
பாவம் பசங்களும், அயித்தானும். :))))
*************************************
நான் பாக்கணும்னு நினைச்சுகிட்டு இருந்த படம்
ஆவக்காய பிரியாணி. தியேட்டரை விட்டே
படம் சீக்கிரம் போயிடிச்சி. போன வாரம்
ஜீ தெலுகுவில் இந்தப் படம் பாத்தேன். ஹிந்து
முஸ்லீம் களம். ஹீரோ முஸ்லிம், ஹீரோயின்
ஹிந்து. அவர்களி காதல் கரை சேருதா? இல்லையா
என்பதுதான் கதை.
நல்லாத்தான் எடுத்திருக்காங்க. நல்ல படம் எல்லாம்
என்னிக்கு ஓடிருக்கு? (நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டமே
போடாமத்தானே நாமளும் இருக்கோம்)எப்படியோ
படம் பார்த்த திருப்தி எனக்கு.
21 comments:
//(நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டமே
போடாமத்தானே நாமளும் இருக்கோம்//
:)
யூ ட்யூப்ல பாட்டு பாத்தேன். நல்லா இருந்துது.
வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி,
பாட்டு எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு.
ஆவக்காய் பிரியாணின்னு ஒரு படமா - சரி சரி - நல்லாருந்தாச் சரி
நண்பர்கள் - பிரிந்து மீண்டும் சேரும் போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
நட்புக்காக தயார் செய்த விருந்து
வெயில் - குளிர்
தெலுங்கானா பந்த் - காம்பஸ் இண்டர்வியூ கிடையாது - ம்ம்ம்ம்
125 புது ஐட்டம் சமயலா - ஜ்மாய்ங்க
நல்வாழ்த்துகள் தென்றல்
:)
நிஜத்தை சொல்லிட்டிங்களே! ஆனாலும் பாவம் பிள்ளைங்க பாவம் கணவர்ன்னு விட்ரக் கூடாது இல்ல?! செய்ற டிஷ் எல்லாத்தையும் பதிவாவும் போட்டுடுங்க தென்றல் .
//பாவம் பசங்களும், அயித்தானும். :))))///
இங்க! இங்கதான் பாஸ் நீங்க எல்லாரோட மனசுலயும் சேர் போட்டு ஜம்முன்னு உக்காருறீங்கோ! :))))))
:)
என்னன்னு பின்னூட்டறது?
-வித்யா
காலேஜ் மேட்டர் எல்லாம் அத்தனையும் உண்மை தான் . இங்க அழகப்பா யுனிவெர்சிட்டி பசங்க பட்டப்பாடு கொஞ்சம் நஞ்சம் இல்ல .
இது நல்ல பதிவு. பின்னூட்டமும் போட்டாச்சு :)
ஆவக்காய் பிரியாணி காரமும் மணமுமாய் ஜோராய் இருக்கு:)
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சீனா சார்
செய்ற டிஷ் எல்லாத்தையும் பதிவாவும் போட்டுடுங்க தென்றல்//
கண்டிப்பா போடறேன் மிசஸ்.தேவ்
//பாவம் பசங்களும், அயித்தானும். :))))///
இங்க! இங்கதான் பாஸ் நீங்க எல்லாரோட மனசுலயும் சேர் போட்டு ஜம்முன்னு உக்காருறீங்கோ! :))))))//
//இல்லாங்காட்டி நீங்க வந்து அயித்தான் பாவம்னு சொல்லுவீங்க. அதுக்கு முன்ன நானே சொல்லிட்டா!!!
:)))
இங்க அழகப்பா யுனிவெர்சிட்டி பசங்க பட்டப்பாடு கொஞ்சம் நஞ்சம் இல்ல .//
ஆமாம் அதான் வருத்தமா இருக்கு ரோமியா பாய்.
உங்க முதல் வருகைக்கு நன்றி
என்னன்னு பின்னூட்டறது?
:))))))))
பின்னூட்டமும் போட்டாச்சு :)//
அட்டெண்டென்ஸ் போட்டாச்சு. மெயில் அனுப்பியிருக்கேன் பாருங்க. முடிஞ்சா கால் பண்ணுங்க அப்துல்லா. உள்ளூரில் இருந்தும் உங்களை தொடர்பு கொள்ள முடியலைன்னு தலைவர் சுரேகா மெயில் அனுப்பியிருக்கிறார்.
கூப்பிடுவீங்கன்னு மீ த வெயிட்டிங்.
நன்றி வித்யா
ஆவக்காய் பிரியாணி நல்லா இருக்குங்க :)
சூப்பர் டேஸ்ட் பிரியாணி அக்கா...........
125 வகை சமையலா........... கலக்குங்க
// கலவரத்துல கலந்துகிட்ட உஸ்மானியா
யுனிவர்சிட்டி பசங்களை உசுப்பேத்தி விட்ட
புண்ணியவான் யாரோ! நாசமாப்போக. //
ரிபீடேய்...............
நன்றி தாரணி ப்ரியா
நன்றி சுபாஷிணி
ஆவக்காய் பிரியாணின்னு பேரும் வச்சு, நாக்கில தண்ணீ ஊற வச்சிட்டீங்க. மன்னிச்சுட்டேன்:)
பிரியாணியில் போடப்பட்ட அத்தனை விசயங்களும் சூப்பர்.
அழகா எழுதறீங்க தென்றல்.
வாங்க வல்லிம்மா,
//ஆவக்காய் பிரியாணின்னு பேரும் வச்சு, நாக்கில தண்ணீ ஊற வச்சிட்டீங்க. மன்னிச்சுட்டேன்//
:)))
நீங்களும் ஊறுகாய்ல எக்ஸ்பர்டாமே, கோபால் சார் சொன்னரு.
பாராட்டுக்கு மிக்க நன்றிம்மா
Post a Comment