Tuesday, January 12, 2010

ஹைதை-ஆவக்காய பிரியாணி 12.1.09

பொங்கல் நேரத்துல என்ன ஆவக்காய் பிரியாணின்னு
பாக்கறீங்களா?? :) அட்வான்ஸா பொங்கல் வாழ்த்து
எல்லோருக்கும் இங்க சொல்லியிருக்கேன். மறுக்கா
பொங்கல்வாழ்த்தை எல்லோருக்கும் சொல்லிக்கறேன்.

*************************************************

பொங்கல் இனிப்பு அதிகமா இருக்கும். அதனால் ரொம்ப
சாப்பிட முடியாது. திகட்டும். எங்க அவ்வா பொங்கலுக்கு
தொட்டுக்க சட்னி ஒண்ணு செய்வாங்க சூப்பரா இருக்கும்.
சக்கரை பொங்கலுக்கும் செம காம்பினேஷன் அது.

வண்டிக்காரன் துவையல்னு பேரு.அவசர துவையல்னு
பேரு.

ப.மி-4, சிவப்பு மிளகாய்,10 புளி எலுமிச்சம் பழம் அளவு,
கொத்துமல்லி- 1 மிகச்சின்ன கட்டு,2 ஈர்க்கு கறிவேப்பிலை,
பெருங்காயம் - 1 ஸ்பூன்,உப்பு-தேவையான அளவு
எல்லாவற்றையும் அரைத்து ந.எண்ணெயில் கடுகு
தாளித்து அதில் அரைத்து வைத்திருக்கும்
விழுதை சேர்த்து பிரட்டி எடுத்தால் சுவையான துவையல் ரெடி.

இனி தடையே இல்லாம சக்கரை பொங்கலை ஒரு கை பார்க்கலாம்.
:)))
****************************************************

தை பிறந்தால் வழி பிறக்கும்னு சொல்வாங்க. தை பிறக்கும்
முன்னரே நல்ல செய்தி வந்திருச்சு. மஹாராஷ்டிராவிலிருந்து
புது விளைச்சல்ல பருப்புக்கள் வந்திட்டதனால, பருப்புக்களின்
விலை குறைஞ்சிடுமாம்.கிலோ 100 ரூபாய் வரை விற்கப்பட்டும்
பருப்புக்கள் இரண்டு நாள்ல 70 ரூபாய்க்கு விக்கப்படுமாம்(ஹோல்சேல்
மார்கெட் ரேட்டு சொல்றேன்). இன்னும் இரண்டு வாரங்களில்
இந்த விலை இன்னமும் குறைய வாய்ப்பிருக்காம்.

:)
***************************************************

தேவை ஒரு சென்சார் போர்டு அல்லது சட்டம்னு பதிவு போட்டிருந்தேன்.
தனியார் சேனல்களின் ஆட்டத்தை கொஞ்சம் குறைக்கும் விதத்தில்
சட்டம் ஒன்று இயற்றப்படணும்னு ஆந்திர அரசு மத்திய அரசை
வலியுறுத்தப்போகுதாம்.

அமைச்சர் கீதாரெட்டி,” முதலமைச்சர் இந்தத் தகவலை
மத்திய அரசுக்கு கொண்டு சென்று தீர்மானம் இயற்ற வைக்கபோகிறார்.
மீடியாக்களின் சுதந்திரத்தில் கைவக்கப்போவதில்லை, அதே சமயம்
மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் நிகழ்ச்சிகளை தருவதையும்
அனுமதிக்கப்போவதில்லைன்னு”! சொல்லியிருக்காங்க.

என் ப்ளாக்கை இவங்க படிக்கறாங்களோ!!

******************************************
TV5 இந்த சேனல்தான் ரிலயன்ஸ் கடைகள் அடித்து நாசமாகும்
விதமாக தவறான செய்திகளை பரப்பியது.அந்த சேனல் மீது
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ் மூலம் தொண்டர்களை
தூண்டிவிட்ட வம்சிசந்த் ரெட்டியை போலிஸ் சிறையில் அடைச்சிருக்காங்க.

கர்ணூலைச் சேர்ந்த மாரெப்பன் என்பவரும் காரணம் என்று
போலிஸ் துப்புத் துலக்க அவர் நேற்று முன் ஜாக்கிரதையாக
NIMS வந்து அட்மிட் ஆகிட்டாராம்.

இவ்வளவு சீக்கிரமா வேலைகள் நடந்தால் எப்பூபூடி!!!!!

************************************************

அம்ருதா ரொம்ப சோகமா இருந்தா? என்னம்மா ஆச்சுன்னு
கேட்டேன். ”அப்பா ஊருக்கு போயிருக்காங்க, எனக்கு ஸ்கூல்ல
பட்டம் செய்யற போட்டி வேற இருக்கு. எனக்கு செய்யத் தெரியாது!
யாரு சொல்லித் தருவாங்கன்னு” சோகம்.

”பட்டம் தானே செய்யணும் இதுக்கு போய் அலட்டிக்கலாமான்னு!”
சொல்லிட்டு தேவையான சாமான் வாங்கிட்டு வந்து வீட்டுலயே
செய்ய சொல்லிக்கொடுத்தேன். “உனக்கு பட்டம் செய்யத் தெரியுமாம்மா!!”ன்னு
செம ஆச்சரியம். பட்டம், கில்லி, கோலிகுண்டுன்னு மாமாகூட போட்டி
போட்டிருக்கேன். மாஞ்சா கயிறு செய்ய கண்ணாடி தூள் நுணுக்கறது,
அது கைல பட்டு காயம்னு நான் அடிக்காத கூத்துக்களா!!!

பொங்கல்னா இங்கே பட்டம் விடுவது வழக்கம்.


நானும் உன்னை மாதிரி பட்டம் செய்வேன்ம்மான்னு ஒரே சந்தோஷத்தோட
கிளம்பினா அம்ருதம்மா. உனக்கு பட்டம் செய்யம் தெரியும்னு எனக்கு கூடத்
தெரியாதுன்னு ஆஷிஷ் அண்ணாவும் சொல்லிட்டு இன்னைக்கு 2 பட்டம்
செஞ்சு வைக்கச் சொல்லிட்டு போயிருக்காங்க. :))

நான் போய் பட்டம் செய்யற வேலையை பார்க்கிறேன்.

21 comments:

சின்ன அம்மிணி said...

பட்டத்துக்கு ஒழுங்கா வால் எல்லாம் ஒட்டினீங்களா!!!

புதுகைத் தென்றல் said...

பட்டத்துக்கு ஒழுங்கா வால் எல்லாம் ஒட்டினீங்களா//

:))

வித்யா said...

பொங்கல் நல்வாழ்த்துகள் அக்கா.

புதுகைத் தென்றல் said...

பொங்கல் நல்வாழ்த்துகள் அக்கா.//

நன்றி வித்யா

நட்புடன் ஜமால் said...

நானும் சர்க்கரை பொங்களை கெட்டி சட்னி வைத்து சாப்பிடுவதே வழக்கம்.

கொக்கு பர பர - கிளம்புங்க கிளம்புங்க ...

amaithicchaaral said...

நாங்க அனுப்புன பருப்பு வந்து சேர்ந்தாச்சா...அது பொங்கல் அன்பளிப்பாக்கும்.:-))).

இங்கே மஹாராஷ்ட்ராவிலும், பட்டம் விடுறது உண்டு.கடைகளில் எல்லாம் ஒரே வால்கள் கூட்டம்தான்.

http://amaithicchaaral.blogspot.com/2010/01/blog-post_08.html

ஹுஸைனம்மா said...

//என் ப்ளாக்கை இவங்க படிக்கறாங்களோ!!//

ம்ம்... நெனப்பு!! (உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்??)

சமைக்காமலே சாப்பிடுற அரிசியையும் இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க தெரியுமா? இன்னிக்கு நியூஸ்ல சொன்னாங்க.

“சமைக்கவேண்டாம்!! அப்படியே சாப்பிடலாம்!”

புதுகைத் தென்றல் said...

வாங்க ஜமால்,

இனிப்பு அதிகமா சாப்பிட்டு உடம்பு கெடாம இருக்க நல்ல ஐடியா சட்னி,

நான் கொக்கு பர பரன்னு பட்டம் விட்டது அப்ப. இப்ப பசங்க விடும்பொழுது பக்கத்துல பாதுகாவல் மட்டும் தான்

புதுகைத் தென்றல் said...

அது பொங்கல் அன்பளிப்பாக்கும்//

டாங்க்ஸ் அமைதிச்சாரல். மஹாராஷ்ட்ராவுல் எங்க? அம்ச்சி மும்பையா? லூட்டி அடிக்கும் லோனாவாலாவா? பணம் அடிக்கும் நாசிக்கா???

:))

புதுகைத் தென்றல் said...

இங்கே மஹாராஷ்ட்ராவிலும், பட்டம் விடுறது உண்டு.கடைகளில் எல்லாம் ஒரே வால்கள் கூட்டம்தான்.//

ஆமாம் அங்கயும் பட்டம் விடுவாங்கன்னு தெரியும். அனுபவிச்சிருக்கேன். மீ அம்ச்சி மும்பை.

புதுகைத் தென்றல் said...

ம்ம்... நெனப்பு!! :))))

சமைக்காமலே சாப்பிடுற அரிசியையும் இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க தெரியுமா? இன்னிக்கு நியூஸ்ல சொன்னாங்க.

“சமைக்கவேண்டாம்!! அப்படியே சாப்பிடலாம்!”//

ஆஹா தாக்கலுக்கு தாங்க்ஸ் ஹுசைனம்மா. ஆனாலும் சமையல் வேலை குறையும்ங்கிறீங்க!!!!

வல்லிசிம்ஹன் said...

அட,இன்னும் என்னவெல்லாம் தெரியும்பா!!!!!
இப்படி ஒரு நல்ல அம்மாவுக்கு என்னப் பட்டம் கொடுக்கிறது:)

சட்டினி சூப்பர் ஐடியா. .இதை அம்மில அரைச்சு, அதில பச்சை ஆப்பிள் துண்டங்களைப் பிரட்டிச் சாப்பிட்டா,
ஆ!!அது தனி ருசி.
பருப்பு விலை குறையுதா.
நன்றின்ங்கோவ் நல்ல செய்தி கொடுத்ததுக்கு.

My days(Gops) said...

எங்க ஊருல பொங்கல் அன்னைக்கு பொங்கல் கூட வைக்க மாட்டாங்க ஹி ஹி ….

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

PPattian : புபட்டியன் said...

பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.. பேச்சிலரா? மாஸ்டரா?

amaithicchaaral said...

மீ பண் அம்ச்சி மும்பை மத்யே.

எங்க வீட்டுக்கு ஹல்திகுங்கும் வாங்கிக்க வாங்க.

//http://amaithicchaaral.blogspot.com/2010/01/blog-post_12.html//

காற்றில் எந்தன் கீதம் said...

உங்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த தைத்திருநாள் வாழ்த்துக்கள் :)

புதுகைத் தென்றல் said...

சட்டினி சூப்பர் ஐடியா. .இதை அம்மில அரைச்சு, அதில பச்சை ஆப்பிள் துண்டங்களைப் பிரட்டிச் சாப்பிட்டா,
ஆ!!அது தனி ருசி.//

ஆஹா ஐடியா நல்லா இருக்கே செஞ்சு பாத்திடறேன் வல்லிம்மா

புதுகைத் தென்றல் said...

நன்றி மை டேஸ்

புதுகைத் தென்றல் said...

மஞ்சள் குங்குமம் எடுத்துகிட்டேன் அமைதிச்சாரல் நன்றி

புதுகைத் தென்றல் said...

பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.. பேச்சிலரா? மாஸ்டரா?//

பட்டம் கொடுத்திருக்கேன் :))

புதுகைத் தென்றல் said...

நன்றி சுபாஷிணி,

தைமகள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை தர வேண்டுகிறேன்