Thursday, January 07, 2010

கிச்சடி செய்யலாமா???

எப்பவும் ஒரே மாதிரி சமையல் போரடிக்கும்.
கொஞ்சம் வித்யாசமா செய்யலாம்னு நினைக்கறவங்க
இதை செஞ்சு பாக்கலாம்.

உடம்பு சரியில்லாம, வயிறு சரியில்லாம இருக்கறப்ப
கூட இந்த கிச்சடியை சாப்பிடலாம்.

நம்ம வெண்பொங்கலுக்கு தங்கச்சி மாதிரி:)
அதே அரிசி, அதே பாசிப்பருப்பு , கூட கொஞ்சம்
காய்கறிகள் :))

தேவையான சாமான்கள்:

1 கப் அரிசி
1 கப் பாசிப் பருப்பு
1 கப் காய்கறிகள் (காரட், பீன்ஸ், பட்டாணி எல்லாம் கலவையாக)

1 பெரிய வெங்காயம் நீள் வாக்கில் அறிந்தது

2 சின்ன தக்காளி நீள வாக்கில் அறிந்தது.

தாளிக்க சீரகம் கறிவேப்பிலை

நெய் 1 ஸ்பூன்

கரம் மசாலா, சீரகத்தூள், தனியா தூள், - தலா 1 ஸ்பூன்

உப்பு, மஞ்சள் தேவையான அளவு.


செய்முறை:

குக்கரை அடுப்பில் வைத்து நெய் போடவும்
நெய் உருகியதும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து
வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி
சேர்க்கவும்.

காய்கறிகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கியதும்
மசாலா, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி
வைத்திருக்கும் அரிசி, பருப்பையும் சேர்த்து
தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி 3 அல்லது 4 விசில்
விட்டு இறக்கி வைக்கவும்.

ஸ்டீம் போனதும் குக்கரைத் திறந்தால் கம கம கிச்சடி ரெடி.





கொத்துமல்லித் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

தொட்டுக்கொள்ள எதுவும் தேவையிராது. விரும்பினால்
தயிர் தொட்டுக்கொள்ளலாம். இல்லையேல் ஊறுகாய் நல்ல
காம்பினேஷன். சுட்ட அப்பளம் மேலும் சுவை சேர்க்கும்.

இது வயதானவர்கள், சின்னக்குழந்தை அனைவருக்கும்
இதமான உணவு.

பிள்ளைகளுக்கு லஞ்சுக்கும் அனுப்பலாம். காய்கறிகள்,
பருப்பு, அரிசி என தேவையான அனைத்துச் சத்துக்களும்
கிடைக்கிறது.


மசாலா விரும்பாதவர்கள் சாம்பார் பொடி போட்டும் செய்யலாம்.
அதுவும் வேண்டாம்னு மாறுதலா வேணும்னா
தாளிக்கும்போது பச்சைமிளகாய் சேர்த்துக்கலாம்.

(கிட்டுமணிகளும், forced bachelorsகளும்
செய்து ஆனந்தமடையக்கூடிய உணவு)

:))

31 comments:

ஆயில்யன் said...

என்னமோ நிறைய நிறைய சொல்லியிருக்கீங்க என்னை பொறுத்தவரைக்கும் மஞ்சள் பொடி போட்டா ரவை உப்புமா கிச்சடின்னு நினைச்சுக்கிட்டிருந்தேன் :)

pudugaithendral said...

அப்படியா பாஸ்,

இந்த மாதிரி செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க. சுவையா இருக்கும்.

pudugaithendral said...

ரவை, சேமியாவில் கூட கிச்சடி செய்யலாம். நம் கிச்சடி செய்முறையில் அரிசிக்கு பதில் ரவை/சேமியா/கோதுமை ரவை சேர்த்துக்கணும்

Anonymous said...

எனக்கும் ரவையில மட்டும்தான் கிச்சடி செய்யத்தெரியும். இது புதுசா இருக்கு.

sathishsangkavi.blogspot.com said...

படித்ததும் சாப்பிடவேண்டும் என்ற எண்ணம்...

இவ்வார இறுதியில் செய்து சாப்பிட்டு பார்க்கிறேன்....

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு. வெண்பொங்கலுக்கு அண்ணன்:)! செய்து பார்த்து விடுகிறேன்! நன்றி தென்றல்.

Vidhya Chandrasekaran said...

செய்யலாமே. நீங்க செய்யுங்க. நான் சாப்பிட வர்றேன்:)

Jaleela Kamal said...

நம்ம வெண்பொங்கலுக்கு தங்கச்சி மாதிரி:)
அதே அரிசி, அதே பாசிப்பருப்பு , கூட கொஞ்சம்
காய்கறிகள் :))

அது எப்படி வெண்பொங்க்லுக்கு தங்கச்சி ஏணி வச்சா கூட எட்டாது போல இருக்கே..... ஹி ஹி



அரிசி கிச்சிடி ரொம்ப அருமையா இருக்கு. ஆனா பார்க்க ரவா கிச்சி போல் இருக்கு

எம்.எம்.அப்துல்லா said...

ஒ.கே. டண்.

Thamira said...

கிச்சன்ல வச்சு செஞ்சா அது கிச்சடி. கரெக்டா ஃபிரென்ட்.? :-))

நட்புடன் ஜமால் said...

அவசரத்துக்கு உதவும்.

பூங்குன்றன்.வே said...

//நம்ம வெண்பொங்கலுக்கு தங்கச்சி மாதிரி:)//

அட..உணவில் கூட உறவு முறை இருக்கா !
கிச்சடி சுவைக்கிறது.

pudugaithendral said...

செஞ்சு பாருங்க சின்ன அம்மிணி,

வேலையும் சுளூவு, உடம்புக்கும் நல்லது

pudugaithendral said...

இவ்வார இறுதியில் செய்து சாப்பிட்டு பார்க்கிறேன்....//

செஞ்சு பாருங்க. நான் கொடுத்திருக்கும் அளவுக்கு 2 பேர் சாப்பிடலாம்.

pudugaithendral said...

செய்து பார்த்து விடுகிறேன்! //
ஆஹா செஞ்சுட்டு சொல்லுங்க ராமலக்‌ஷ்மி

pudugaithendral said...

நீங்க செய்யுங்க. நான் சாப்பிட வர்றேன்/./

அப்ப உடனடியா கிளம்பிவாங்க. இன்னைக்கு லன்ச் அதான் :))

pudugaithendral said...

அரிசி கிச்சிடி ரொம்ப அருமையா இருக்கு. ஆனா பார்க்க ரவா கிச்சி போல் இருக்கு//

நெட்டுல சுட்ட படத்தை போட்டா அப்படித்தான் இருக்கும். என் கேமிரா வேலை செய்யலை

தாரணி பிரியா said...

ம் சேமியா ரவையில செய்வாங்க. அதை மட்டும்தான் சாப்பிட்டு இருக்கேன். இன்னிக்கு நைட் அம்மாகிட்ட இந்த டிபன் செய்ய சொல்லிரேன் :).

நன்றி தென்றல்

pudugaithendral said...

ஒ.கே. டண்//

குட்

pudugaithendral said...

கிச்சன்ல வச்சு செஞ்சா அது கிச்சடி. கரெக்டா ஃபிரென்ட்.? //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

இதல்லாம் கத்துகிட்டா ரமா ஊருக்கு போகும்போது ஹோட்டல்ல சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்க வேணாம்ல ஃப்ரெண்ட்.

அதனால் தான் forced bacherlosகும் இது உதவுன்னு ஒரு வரி சேத்தேன்.

:))

pudugaithendral said...

அவசரத்துக்கு உதவும்.//

ஆமாம் ஜமால். ஹெல்த்தி & ஹோம் மேட்

pudugaithendral said...

அட..உணவில் கூட உறவு முறை இருக்கா !//

:))
கிச்சடி சுவைக்கிறது//

நன்றி பூங்குன்றன்

ஹுஸைனம்மா said...

தென்றல், இந்த ரெஸிப்பியும் நேற்றைய ஹஸ்பெண்டாலஜியின் தொடர்ச்சியா? ;-)

கொஞ்ச நாள் முன்னாடி பசங்களுக்கு ஏதோ குஜராத் ஐட்டம் செஞ்சு கொடுத்ததா சொன்னீங்களே, அந்த ரெஸிப்பி போடுங்களேன்!!

pudugaithendral said...

இன்னிக்கு நைட் அம்மாகிட்ட இந்த டிபன் செய்ய சொல்லிரேன்//

அம்மாவுக்கு சர்ப்ரைஸா நீங்களே செஞ்சும் கொடுக்கலாம். ஐடியா எப்பூடி??

வருகைக்கு நன்றி தாரணி

pudugaithendral said...

இந்த ரெஸிப்பியும் நேற்றைய ஹஸ்பெண்டாலஜியின் தொடர்ச்சியா? //

சபைல இப்படில்லாம் படக்குன்னு கேட்டுட்டா எப்பூடி ஹுசைனம்மா

:)))

கொஞ்ச நாள் முன்னாடி பசங்களுக்கு ஏதோ குஜராத் ஐட்டம் செஞ்சு கொடுத்ததா சொன்னீங்களே, அந்த ரெஸிப்பி போடுங்களேன்!!//

அது காண்ட்லி செஞ்சு பதிவு போடறேன்.போட்டோதான் பிரச்சனை. சீக்கிரம் பதிவு வரும்

நிஜமா நல்லவன் said...

Note pannitten. kandippa innum 2 masam kazhithu useful'ah irukkum:)

கானா பிரபா said...

நம்ம வெண்பொங்கலுக்கு தங்கச்சி மாதிரி:)//

ஓ இப்படி எல்லாம் உறவு முறை இருக்கா.

கிச்சடியை இன்று தான் பார்க்கிறேன்

ஆயில்யன் said...

// நிஜமா நல்லவன் said...

Note pannitten. kandippa innum 2 masam kazhithu useful'ah irukkum:)//

ஆஹா மொத்தத்தில அக்கா சொல்ற டிப்ஸ்லெல்லாம் இப்பிடித்தான் அலட்சியம் பண்ணிக்கிட்டு திரியறீரு சரி விடுங்க!

pudugaithendral said...

kandippa innum 2 masam kazhithu useful'ah irukkum//

உடன் பிறப்புகள்லாம் கஷ்டப்படக்கூடாதுன்னு தானே இப்படி பதிவு போடுறது

pudugaithendral said...

கிச்சடியை இன்று தான் பார்க்கிறேன்//

ஆஹா செஞ்சு பாத்திடுங்க பாஸ்

Pandian R said...

ரவையை வைத்து செய்கிற பண்டத்திற்கு கண்டனம் எழுத வந்தேன். அம்சமாக அரிசி வைத்திருக்கிறீர்கள்..

>>>>>>>>>>>>
தொட்டுக்கொள்ள எதுவும் தேவையிராது. விரும்பினால்
தயிர் தொட்டுக்கொள்ளலாம். இல்லையேல் ஊறுகாய் நல்ல
காம்பினேஷன். சுட்ட அப்பளம் மேலும் சுவை சேர்க்கும்.

>>>>>>>>>>>>>>>
ஆவ்வ்வ்... தேங்கா சட்னி தேங்கா சட்னி....