Wednesday, January 06, 2010

ஹஸ்பண்டாலஜி - முதுகலை இல்லறவியல் பாடங்களின் தொகுப்பு...

என்ன ஒரு அநியாயம்!! இப்படி ஒரு வகுப்பு நடந்ததா
நிறைய்ய பேருக்குத் தெரியவில்லை.
புதுசா வந்திருக்கறவங்க நிறைய்ய பேரு தங்கமணிகளை
தாக்கி பதிவு போட்டுகிட்டு வர்றாங்க.

இப்படி பாடம் வந்துச்சுன்னு அவங்களுக்கெல்லாம்
சொல்லத்தான் ஹஸ்பண்டாலஜி பாடங்களின் தொகுப்புக்களை
இங்கே கொடுக்கப்போறேன்.


வேடிக்கை பார்க்க வந்த என்னை பதிவெழுத வைத்து,
ப்ரொபசரா ப்ரோமஷன் கொடுத்தது ஹஸ்பண்டாலஜி.
அப்பல்லாம் தம்பி மங்களூர் சிவா கிட்டுமணி. தெகிர்யமா
பின்னூட்டம் போட்டுத்தாக்குவார். இப்ப அவரும் ரங்கம்ணி
ஆகிவிட்டதால் ம்மூச்... செம சூடான இடுகைகள், பின்னூட்டம்னு
கலை கட்டிய அந்த பதிவுகளின் சுட்டிகள் இனி.( மீள் பதிவா
போடலாம், ஆனா அந்த பழைய பின்னூட்டங்கள் வராதுல்ல. அதான்
சுட்டி)


தாரைத்தப்படையுடன் ஆரம்ப அறிவிப்பு.

HUSBANDOLOGY பாடம் 1

பினாத்தாலாரின் பின்னூட்டத்திற்கு பதில் பதிவாக.

HUSBANDOLOGY பாடம் 2

HUSBANDOLOGY பாடம் 3


HUSBANDOLOGY பாடம் 4

HUSBANDOLOGY பாடம் 5


HUSBANDOLOGY பாடம் 6

HUSBANDOLOGY பாடம் 7

HUSBANDOLOGY பாடம் 8

HUSBANDOLOGY பாடம் 9


2008ல் இதையே மீள்பதிவா போடலாம்னு திட்டம் போட்டேன்.
நம்ம ஃப்ரெண்ட் ஆதி(தாமிரா) வந்து மீள்பதிவுக்கான அத்தனை
தகுதியும் இருக்கு. ஆனாலும் புதுசா ஆரம்பிங்களேன்னு சொல்ல
அட, இந்த முறையும் பட்டயை கிளப்பலாம்னு ஆரம்பிச்சேன். :))

HUSBANDOLOGY 2008 LESSON :1


HUSBANDOLOGY 2008 LESSON :2


HUSBANDOLOGY 2008 LESSON :3


HUSBANDOLOGY 2008 LESSON :4


HUSBANDOLOGY 2008 LESSON :5


ரங்கமணிகளின் வயிற்றில் புளியை கரைக்கும் இந்த பாடங்களை
புதுசா வந்திருக்கும் தங்கமணிகள் நல்லா படிச்சு பயன்படுங்க.

முன்னாடி பாடம் படிச்சவங்களும் ஒரு முறை ரெஃப்ரெஷ் செஞ்சுகிட்டு
களத்துல இறங்கலாம்.

எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.

27 comments:

நாஞ்சில் பிரதாப் said...

அடேங்கப்பா என்ன இது? பெரிய புரட்சியே நடக்குது? இது நம்ம ஏரியாவே கிடையாது?
என்னவா பண்ணிட்டுப்போங்க... நல்லாருங்க....

புதுகைத் தென்றல் said...

என்னவா பண்ணிட்டுப்போங்க... நல்லாருங்க....//

:)))

fundoo said...

நான் பதிவே போடுறதில்லீங்க. அதும் தங்கமணியைத் தாக்கியா....

ஆதிமூலகிருஷ்ணன் said...

மொத்தம் 14 பாடங்கள்தான்.

திருமணமாகாத ஆண்களுக்கான எச்சரிக்கை இதுவரை 34 பதிவுகளில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஆட்டமெல்லாம் இங்கே செல்லாது என சொல்ல கடமைப்பட்டுள்ளேன். மேலும் நீங்கள் பதிவில் தொகுத்திருப்பதால் நாங்கள் அதை புக்காகவே போட்டு தமிழகத்தையே கலக்கலாமா என்று திட்டமிட்டுள்ளோம். எச்சரிக்கை.! :-))

புதுகைத் தென்றல் said...

நான் பதிவே போடுறதில்லீங்க. அதும் தங்கமணியைத் தாக்கியா....//

அந்த பயம் இருக்கட்டும்.

புதுகைத் தென்றல் said...

மொத்தம் 14 பாடங்கள்தான்.//

மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெருசுன்னு சொல்ற மாதிரி 14 பாடங்கள் தான் ஒவ்வொண்ணும் கத்து தரும் ட்ரீட்மெண்ட் எப்படின்னு அனுபவிச்சவங்களை கேளுங்க ப்ரெண்ட்.

திருமணமாகாத ஆண்களுக்கான எச்சரிக்கை இதுவரை 34 பதிவுகளில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.//

அரைச்ச மாவையே ஆளாளுக்கு திரும்ப அரைச்சுகிட்டு இருக்கீங்க//

ஆகவே இந்த ஆட்டமெல்லாம் இங்கே செல்லாது என சொல்ல கடமைப்பட்டுள்ளேன். மேலும் நீங்கள் பதிவில் தொகுத்திருப்பதால் நாங்கள் அதை புக்காகவே போட்டு தமிழகத்தையே கலக்கலாமா என்று திட்டமிட்டுள்ளோம். எச்சரிக்கை.!//

நல்லா போடுங்க. ஆரு வேணாம்னாக.

நிஜமா நல்லவன் said...

:)

நிஜமா நல்லவன் said...

/என்ன ஒரு அநியாயம்!! இப்படி ஒரு வகுப்பு நடந்ததா
நிறைய்ய பேருக்குத் தெரியவில்லை./

நிறைய பேருக்கு தெரியாதது ஒண்ணும் அநியாயம் இல்லைங்க புரொபசர்....இப்ப மறுபடியும் எடுத்து கொடுக்குறீங்க பாருங்க அது தான் பெரிய அநியாயம்...:)

Mrs.Faizakader said...

ஒவ்வொரு பாடமாக இப்ப தான் நான் படிக்கிறேன் அப்பறம் என்னவரை பார்க்க வைக்கிறேன்

நிஜமா நல்லவன் said...

/புதுசா வந்திருக்கறவங்க நிறைய்ய பேரு தங்கமணிகளை
தாக்கி பதிவு போட்டுகிட்டு வர்றாங்க./


நேரில் தான் தாக்க முடியலை.....பதிவுலயாவது தாக்கிட்டு போவட்டுமே...விடுங்க பாவம்:)

நிஜமா நல்லவன் said...

/வேடிக்கை பார்க்க வந்த என்னை பதிவெழுத வைத்து,
ப்ரொபசரா ப்ரோமஷன் கொடுத்தது ஹஸ்பண்டாலஜி./


ம்ம்ம்ம்...வேடிக்கை மட்டுமே பார்த்திட்டு போய் இருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்!

நிஜமா நல்லவன் said...

/2008ல் இதையே மீள்பதிவா போடலாம்னு திட்டம் போட்டேன்./


உங்கக்குள்ள ஒரு வில்லத்தனம் இருந்துகிட்டே தான் இருக்கு:))

புதுகைத் தென்றல் said...

இப்ப மறுபடியும் எடுத்து கொடுக்குறீங்க பாருங்க அது தான் பெரிய அநியாயம்..//

ஏதோ என்னால ஆன நல்ல காரியம்

:))

புதுகைத் தென்றல் said...

ஒவ்வொரு பாடமாக இப்ப தான் நான் படிக்கிறேன் அப்பறம் என்னவரை பார்க்க வைக்கிறேன்//

ஃபாயிஷா,

நீங்க படிச்சு குறிப்பு எடுத்துக்கணும்.அதை செயல்முறை படுத்தணும். உங்களவரை படிக்க வெச்சா அலர்டாகிட்டா கஷ்டம் பாருங்க.

பீர் | Peer said...

இந்த ஹஸ்பண்டாலஜிஸ் எல்லாம் ஃபெய்லியர்.

ஆதி, நீங்க அடுத்த ரவுண்ட ஆரம்பிங்க. அமோக ஆதரவு கிடைக்கும்.

நிஜமா நல்லவன் said...

/ரங்கமணிகளின் வயிற்றில் புளியை கரைக்கும் இந்த பாடங்களை
புதுசா வந்திருக்கும் தங்கமணிகள் நல்லா படிச்சு பயன்படுங்க./

சும்மாவே கேக்க வேணாம்....இப்படி ஏத்தி வேற விடுங்க....:)

புதுகைத் தென்றல் said...

நேரில் தான் தாக்க முடியலை.....பதிவுலயாவது தாக்கிட்டு போவட்டுமே...விடுங்க பாவம்//

:)

நிஜமா நல்லவன் said...

/முன்னாடி பாடம் படிச்சவங்களும் ஒரு முறை ரெஃப்ரெஷ் செஞ்சுகிட்டு
களத்துல இறங்கலாம்./

இன்னும் ஒரு வாரத்துக்கு வீட்டுல நெட் கணக்க்ஷனை பிடுங்கிட வேண்டியது தான்:)

புதுகைத் தென்றல் said...

இந்த ஹஸ்பண்டாலஜிஸ் எல்லாம் ஃபெய்லியர்.//

அப்படின்னு நீங்க சொல்லிட்டா அது நிஜமாகிடுமா. :)) அடுத்த ரவுண்ட் ஆரம்பிச்சா நாங்க பயந்திருவோமா.

திருப்பித் தாக்கத் தெரியாதா என்ன???

புதுகைத் தென்றல் said...

நிஜம்ஸ் இன்னைக்கு கும்மி அடிக்கும் முடிவில் இருக்கீங்க. வாழ்த்துக்கள்

புதுகைத் தென்றல் said...

இன்னும் ஒரு வாரத்துக்கு வீட்டுல நெட் கணக்க்ஷனை பிடுங்கிட வேண்டியது தான்//

அது அந்த பயம் ரொம்ப முக்கியம்

நிஜமா நல்லவன் said...

/ புதுகைத் தென்றல் said...

ஒவ்வொரு பாடமாக இப்ப தான் நான் படிக்கிறேன் அப்பறம் என்னவரை பார்க்க வைக்கிறேன்//

ஃபாயிஷா,

நீங்க படிச்சு குறிப்பு எடுத்துக்கணும்.அதை செயல்முறை படுத்தணும். உங்களவரை படிக்க வெச்சா அலர்டாகிட்டா கஷ்டம் பாருங்க./அவுங்க எவ்ளோ அப்பாவியா பின்னூட்டம் போட்டு இருக்காங்க பாருங்க....நீங்க என்னன்னா பிரச்னையை உண்டாக்கிடுவீங்க போல:)

நிஜமா நல்லவன் said...

/ஆதிமூலகிருஷ்ணன் said...

மொத்தம் 14 பாடங்கள்தான்.

திருமணமாகாத ஆண்களுக்கான எச்சரிக்கை இதுவரை 34 பதிவுகளில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஆட்டமெல்லாம் இங்கே செல்லாது என சொல்ல கடமைப்பட்டுள்ளேன். மேலும் நீங்கள் பதிவில் தொகுத்திருப்பதால் நாங்கள் அதை புக்காகவே போட்டு தமிழகத்தையே கலக்கலாமா என்று திட்டமிட்டுள்ளோம். எச்சரிக்கை.! :-))/ஆதி அண்ணே....நீங்க முதலில் புக் போடுற வேலையை ஆரம்பிங்க:)

நசரேயன் said...

//புதுசா வந்திருக்கறவங்க நிறைய்ய பேரு தங்கமணிகளை
தாக்கி பதிவு போட்டுகிட்டு வர்றாங்க.//

அப்ப பழசா வந்தவங்க தாக்கலமா ? .. இடுகையிலே மட்டும்னு சொல்லுறேன்

நட்புடன் ஜமால் said...

கடைசி லைன்ல வச்சீங்க பாருங்க ட்விஸ்ட்டு

புதுகைத் தென்றல் said...

அப்ப பழசா வந்தவங்க தாக்கலமா ? .. இடுகையிலே மட்டும்னு சொல்லுறேன்//

பழைய நண்பர்கள் பதிவு போட்டா நாங்க எதிர் பதிவு போடுவோம்னு அவங்களுக்குத் தெரியும்ல

:)))

புதுகைத் தென்றல் said...

நன்றி ஜமால்