Friday, January 08, 2010

தேவை ஒரு சென்சார்போர்ட் அல்லது சட்டம்

வெள்ளையர்களிடமிருந்து கஷ்டபட்டு வாங்கிய
சுதந்திரம் இப்போது கட்டுப்பாடட்டு கிடக்கிறது.
கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் இருக்கிறது.
பேசும் உரிமை/சுதந்திரம் அனைவருக்கும் பொது.
அதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம்,’
கருத்து கந்தசாமியாகி கருத்து சொல்லலாம் என்று
ஏதும் இல்லை.

பா ஹிந்தி படத்தில் ஒரு காட்சி. சேனல்காரர்கள்
எப்படி எல்லாம் பேசி சூடேற்றி நிகழ்ச்சி வழங்கி
டீ ஆர் பீ ரேட்டிங் எகிற வைக்கிறார்கள் என்று.
அவர்களுக்கு பதிலடி கொடுப்பார் அபிஷேக் பச்சன்
தூர்தர்ஷன் மூலம். நாட்டின் நிலை இதுதான்.

இதோ தெலுங்கானாவிற்காக ஏற்கனவே கொழுந்து
விட்டு எரிந்து கொண்டிருக்கும் ஆந்திராவில் மற்றுமொரு
கலவரம். உபயம் இங்கே உள்ள ஒரு செய்தி சேனல்.
மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு
ரிலயன்ஸ் நிறுவனத்தினர் காரணம் என கொளூத்திப்போட
நேற்று ரிலயன்ஸ் கடைகள் அத்தனையையும் அடித்து
துவம்சமாக்கியிருக்கிறார்கள்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த Mark Ames எனும் செய்தியாளர்
இணையதளத்தில் எங்கோ

‘Enemy of Larry Summers Ex-Boss Dies in Mysterious Helicopter Crash.’ Summers is currently director of the White House’s National Economic Council for President Barack Obama. According to Ames, Summers worked for Mukesh Ambani, head of Reliance Industries Limited, right until he took the White House job.
என எழுதியிருக்கிறார்.

இதை ஆதாரமாக கொண்டு செய்தி வெளியிட்டது அந்தச்
சேனல். அவ்வளவு தான் ஆத்திரம் கொண்டு காங்கிரஸ்
தொண்டர்கள் ரிலயன்ஸ் கடைகளைத் துவம்சம் செய்தனர்.

இப்போது அந்த சேனலின் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது
அரசு. அம்பானிகளும் சும்மா விடப்போவதில்லை என சொல்லி
இருக்கிறார்கள்.

சுதந்திரத்தை கட்டுப்பாடற்றதாக செய்கிறது தற்போதைய்ய
சேனல்கள். அதிலும் பல சேனல்கள் ஆளுங்கட்சி,எதிர்கட்சி
இல்லாவிட்டால் ஏதாவதொரு கட்சியின் சார்பு உள்ளது.
இதனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
தங்களுக்குள் கட்டுப்பாடு இல்லாமல் எல்லாவற்றையும்
படம்பிடித்து போட்டு டீ ஆர் பீ ரேட்டிங் ஏத்தி காசாக்கப்
பாக்கிறது சேனல்கள்.

மனிதாபிமானம் என்பது மருந்துக்கும் இல்லை.
மக்களை உசுப்பேத்திவிட்டு கலவர பூமியாக்குவதில்
சேனல்களின் பங்கு அதிகம்.

முன்பு தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி நிலையங்களில்
நிகழ்ச்சிகள், செய்திகள் வழங்க சென்சார் செய்துதான்
தருவார்கள். தெரிவிக்கும் வார்த்தையில் கூட
கவனமாக இருப்பார்கள். இதைப்பற்றி என்
முந்தைய பதிவு


அரசு உடனடியாக ஒரு சட்டம் கொண்டு வந்து
இந்தத் தனியார் சேனல்களுக்கு சென்சார் போர்டு அமைக்க
வேண்டியது அத்தியாவசியமாகிவிட்டது.

கருத்துச் சுதந்திரம் பற்றி பேசும் பொழுது நம் வலையுலகிலும்
அது கட்டவிழ்ந்துதான் இருக்கிறது. இனியாகிலும் யார்
மனதையும் புண்படுத்தாமல் நம் விமர்சனமோ, கருத்தோ
இருக்க வேண்டும்.

இல்லையென்றால் வலைப்பதிவர்களுக்கும் சென்சார்போர்ட்
வைக்கவேண்டுமென அரசு நினைக்கும் நிலை வந்துவிடும்.

39 comments:

Pandian R said...

ரொம்ப சமீபத்தில நாடாளுமன்ற கிணற்றில் இது பற்றி மசோதா வருவதாக இருந்ததே.. என்ன ஆச்சுன்னு தெரியலை. (மும்பை தாக்குதல் அப்போ சேனல்களில் அப்பட்டமான தீமை தெரிந்ததால் அது பற்றி பேசினார்கள்)..

pudugaithendral said...

ரொம்ப சமீபத்தில நாடாளுமன்ற கிணற்றில் இது பற்றி மசோதா வருவதாக இருந்ததே.. என்ன ஆச்சுன்னு தெரியலை//

கிணத்துல போட்ட கல்லாகிடுச்சோ என்னவோ :(

pudugaithendral said...

மும்பை தாக்குதல் அப்போ சேனல்களில் அப்பட்டமான தீமை தெரிந்ததால் அது பற்றி பேசினார்கள்)..//

ஆமாம் அதுவும் நம்ம ஆர்மிகாரங்க டேலண்ட் எல்லாம் வெளியில தெரியிற மாதிரி நேரடி ஒளிபரப்பு கொடுமை அது

நட்புடன் ஜமால் said...

சில நேரங்களில் திருடனாய் பார்த்துன்னு விடறது விட்டுட்டு கடுமை செய்யனும் ...

--------------

கொடுமை என்னன்னா நம்ம சட்டம் கடுமை தான் அதை செய்யம் கடமை தான் இல்லை

மணிகண்டன் said...

Everything has its pro's and con's. And when it comes to press, i would not advise for censoring. They need to understand the responsibility or else, they need to be exposed. Once that is done, people would start ignoring those channels. (except for the rasigars). This is the only practical possibility for the people now :)-

Vidhoosh said...

எல்லாத்துக்கும் சட்டங்கள் ஏற்கனவே இருககுனகுன்க. Section 49(0) of the Conduct of Election Rules மாதிரி அமுக்கப்பட்டே மறைந்து கொண்டு இருக்கின்றன. விபரமறிந்தவர்கள் கரைவேட்டிகளை ஏன் குற்றம் சொல்கிறார்கள் என்பது இதனால் கூட இருக்கலாம்...

:(
வித்யா

pudugaithendral said...

thanks for your comments manikandan

pudugaithendral said...

கொடுமை என்னன்னா நம்ம சட்டம் கடுமை தான் அதை செய்யம் கடமை தான் இல்லை//

ஊழல் மிக்க அரசியல்/வாதிகள் வேறென்ன சொல்ல

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வித்யா

தராசு said...

பூனைக்கு யாருங்க மணி கட்டுவது?

பதிவுலகத்தைப் பற்றி கூறினீங்களே அது முற்றிலும் உண்மை. எதிர்மறை கருத்துக்கள் கட்டாயம் பதியப்பட வேண்டியதே, அதற்காக தரம் தாழ்ந்த வார்த்தைகள் அவசியமில்லாதவை.

pudugaithendral said...

பூனைக்கு யாருங்க மணி கட்டுவது?//

வாங்க தராசு அண்ணேன்,

பிள்ளையும் ஆட்டிவிட்டு தொட்டிலையும் ஆட்டுறவங்க தான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இனியாகிலும் யார்
மனதையும் புண்படுத்தாமல் நம் விமர்சனமோ, கருத்தோ
இருக்க வேண்டும்.//
I second it

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இதெல்லாம் நீதிமன்றம் மூலம் தீர்க்க வேண்டியது.

வன்முறை கூடாது. அதும் சத்தியா கெரக, அகிம்சா வழிவந்தக் கட்சி காங்கிரசுக்கு வன்முறையே கூடாது.

சாதாரண ஒரு குடிமகன் கொலை செய்யப்பட்டிருந்தால்....?

சாட்சிக்குத் தகுந்தார்போல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும். அதற்கு முன்பு சாட்சிகள் கலைக்கப்பட்டுவிடும்.

அதுதான் நாம் பெற்ற விடுதலையின் பயன்....

வேறென்ன சொல்ல...

ஹுஸைனம்மா said...

//கருத்துச் சுதந்திரம் பற்றி பேசும் பொழுது நம் வலையுலகிலும்
அது கட்டவிழ்ந்துதான் இருக்கிறது. //

அந்தக் கூத்தெல்லாம் நடந்த சமயத்துல நீங்க ஊருக்குப் போயிட்டீங்கன்னு நினைக்கிறேன். நல்லவேளை!!

கருத்துச் சுதந்திரம், தனிமனிதச் சுதந்திரம்னு பேசறவங்க “சுயகட்டுப்பாடு”ன்னு ஒண்ணு இருக்கறதைக் கண்டுக்க்றதேயில்ல.

அன்புடன் அருணா said...

ரொம்ப சரி!

பிரபாகர் said...

சரிதாங்க... இவங்க பண்ற அழிச்சாட்டியம் தாங்கல... தொலைக்காட்சிதான் இன்னிக்கு இருக்கிற சமுதாய சீர்கேடுகளுக்கு ஆதாரமா இருக்கு. திருந்துவாங்களா?

பிரபாகர்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

எல்லாமே அரசியல் ...

என்ன சொல்வது ...


துளசி டீச்சர் ( துளசி கோபால் ) வலைப்பதிவோட லிங் இருந்தா கொஞ்சம் கொடுங்களேன் .

சாந்தி மாரியப்பன் said...

எல்லாத்துக்கும் ஒரு மூக்கணாங்கயிறு தேவைதான்.

கோபிநாத் said...

இப்போதைக்கு அங்க இருக்கும் பிரச்சனைக்கு வேற ஒரு வழி தான் இந்த செய்தி. இவுங்களை ஒன்னும் செய்ய முடியாது.

அரசு நடத்தும் நிகழ்ச்சிகளே அரசாங்க தொலைகாட்சியில் போடுவது இல்லை. இதே அந்த பா படத்தில் வந்த அரசியல் காட்சிகளை கிண்டல் செய்த பத்திரிக்கைகள் தான் அதிகம்.

நீங்க பார்த்து இருக்காங்க்கா...எப்பதான் இதுக்கு ஒர் தீர்வு வருமோ ;(

Starjan (ஸ்டார்ஜன்) said...

துளசி டீச்சரின் தளத்தை கண்டு கொண்டேன் . மிக்க நன்றி

cheena (சீனா) said...

அன்பின் தென்றல்

உண்மை உண்மை - தேவைதான் = வலையுலக்த்திற்கும் சேர்த்துத்தான்

நல்வாழ்த்துகள் தென்றல்

சிங்கை நாதன்/SingaiNathan said...

This news seems came in during the crash itself Sep 2009.

http://exiledonline.com/enemy-of-larry-summers-ex-boss-dies-in-mysterious-helicopter-crash/

Wats the intention to flash it now by that channel ?? To divert the current crisis?? These politicians and media can go to any extent :( If both are hand in hand god only can save our country.

Already reports coming out which channel is funded by which political party...

Regards
Singai Nathan

pudugaithendral said...

வருகைக்கு நன்றி டீ வீ ஆர்

pudugaithendral said...

They need to understand the responsibility or else, they need to be exposed.//

நல்லா சொன்னீங்க மணிகண்டன்

pudugaithendral said...

வன்முறை கூடாது. அதும் சத்தியா கெரக, அகிம்சா வழிவந்தக் கட்சி காங்கிரசுக்கு வன்முறையே கூடாது.//

அப்படியா?? காந்தி செத்தப்பவோ அந்தக் கொள்கையும் போயிடிச்சின்னு நினைக்கிறேன்

pudugaithendral said...

கருத்துச் சுதந்திரம், தனிமனிதச் சுதந்திரம்னு பேசறவங்க “சுயகட்டுப்பாடு”ன்னு ஒண்ணு இருக்கறதைக் கண்டுக்க்றதேயில்ல.//

ஆமாம் ஹுசைனம்மா,

சொல்றதை சொல்வோம். ஏத்துக்கறவங்க ஏத்துக்குவோம். நாம அவங்களோடு கை கோர்த்து போவோம்.
முடிஞ்ச வரைக்கும் நம்ம மேல அந்த மாதிரி பெயர் வராம பாத்துக்கணும். முக்கியமா இந்த விஜய்/அஜீத் படங்களை விமர்சிக்கும்போது. பத்திரிகைகள் வலையுலகத்தை அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறது.

யார் கண்டார்கள் சம்பந்தப்பட்டவர்களும் பார்க்கலாம்!!!

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அருணா

pudugaithendral said...

திருந்துவாங்களா?//

அதானே கேள்விக்குறியா இருக்கு பிரபாகர்!!

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

எல்லாமே அரசியல் ...

என்ன சொல்வது ...//

அதான். வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்,

நான் பின்னூடத்தை ரீலீஸ் செய்வதற்குள் லிங்கையும் கண்டு பிடிச்சிட்டீங்க போலிருக்கு.

pudugaithendral said...

எல்லாத்துக்கும் ஒரு மூக்கணாங்கயிறு தேவைதான்.//

ஆமாம். போடப்போவது யாருன்னு தான் தெரியலை அமைதிச்சாரல்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

நீங்க பார்த்து இருக்காங்க்கா..//

நன்றி கோபி. பத்திரமா இருந்துக்கறேன்.

pudugaithendral said...

வலையுலக்த்திற்கும் சேர்த்துத்தான் //

வருகைக்கு நன்றி சீனா சார்.

Ungalranga said...

இன்றைய தொ(ல்)லை காட்சிகளை பற்றி கேட்கவா வேண்டும்..

இன்று தமிழகத்தில் 1 கோடிக்கு மேற்பட்டவர்கள் இந்த சேனல் அரசர்கள்களுக்கு ..Visual Slaves..!!

என்ன காட்டினாலும் அப்படியே நம்பும் நாம் இருக்கும் வரை..எந்த கடவுளும் நம்மை காப்பாற்ற முடியாது..

அறிவை மழுங்கடிக்கும் இந்த குப்பை சேனல்களை பார்பதற்கு பதில் தூர்தர்ஷன் எவ்வளவோ மேல்..!!

என்று தணியுமிந்த பண மோகம்..??
என்று எரியும் என் மக்கள் மனதில் அறிவின் தீ..??

pudugaithendral said...

Already reports coming out which channel is funded by which political party...//

இப்படித்தானே அரசியல் நடக்குது. ஓட்டுக்கு காசு, பரபரபுக்கு காசு,எல்லாத்துக்கும் காசு

pudugaithendral said...

இன்று தமிழகத்தில் 1 கோடிக்கு மேற்பட்டவர்கள் இந்த சேனல் அரசர்கள்களுக்கு ..Visual Slaves..!!

என்ன காட்டினாலும் அப்படியே நம்பும் நாம் இருக்கும் வரை..எந்த கடவுளும் நம்மை காப்பாற்ற முடியாது..//

நிஜம்னு பலருக்கும் தெரியும். ஆனாலும் வெளியே வரத் தெரியாம மூழ்கி கிடக்காங்க.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரங்கா

சாந்தி மாரியப்பன் said...

//எல்லாத்துக்கும் ஒரு மூக்கணாங்கயிறு தேவைதான்.//

ஆமாம். போடப்போவது யாருன்னு தான் தெரியலை அமைதிச்சாரல்.//

மனசாட்சின்னு ஒரு ஹோல்சேல் டீலர் இருக்கார்,அவர் கடையில இப்போ வியாபாரம் இருக்கான்னு தெரியலை.!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உடைக்கனும்ன்னு இருந்திருப்பாங்க.. செய்தி பயன்பட்டிருக்கும்.. அவ்வளவு தான்..

ஆனா யாரெல்லாம் நேர்மையா செய்தி தரலையோ அவங்களை புறக்கணிப்பது ஒன்று தான் வழின்னு தான் தோணுது..

pudugaithendral said...

மனசாட்சின்னு ஒரு ஹோல்சேல் டீலர் இருக்கார்,அவர் கடையில இப்போ வியாபாரம் இருக்கான்னு தெரியலை//

:(((

pudugaithendral said...

ஆனா யாரெல்லாம் நேர்மையா செய்தி தரலையோ அவங்களை புறக்கணிப்பது ஒன்று தான் வழின்னு தான் தோணுது..//

athan athe than