ஜனவரி 10 ஆம் தேதி 2010 அன்று ஒரு சாதனையை செய்திருக்கிறார்
ஹைதையைச் சேர்ந்த பெண்.
எரோபிக்ஸ் கற்றுத்தரும் தினாஜ் தொடர்ந்து 26 மணிநேரம்
எரோபிக்ஸ் நடனம் செய்து புதிய உலக கின்னஸ் சாதனையில்
இடம்பெற்றிருக்கிறார்.
உடல்நலம் பற்றி மக்களிடம் ஒரு அறிவை உருவாக்க வேண்டும்
என்பதற்காகவே தான் இந்தச் சாதனையை செய்ய நினைத்ததாகச்
சொல்லியிருக்கும் தினாஜ் இதற்கு முன்பு விசாகபட்டிணத்தில்
20 மணிநேரம் தொடர்ந்து நடனமாடி இருக்கிறார்.
இந்த சாதனைகளுக்கு முன்பு வெள்ளோட்டமாக
12 மணிநேரம், 16 மணிநேரம் நடனமாடியிருக்கிறார்.
இது லிம்கா உலக சாதனையில் ஏற்கபட்டிருக்கிறது.
அதற்கு பின் விசாகப்பட்டிணத்தில் நடத்தப்பட்ட 20 மணிநேர
சாதனை ஆசியாவிலேயே சாதனை.
இப்போது உலக சாதனையாக தொடர்ந்து 26 மணிநேர
நடனம். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்திருக்கிறது.
இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பது ஒரு இந்தியர் அதுவும்
ஒரு பெண் என்பதில் பெருமை கொள்வோம்.
வாழ்த்துக்கள் தினாஜ்.
உலக சாதனைக்காக ஒரு பயணம் எனும் அவரது இந்த
வலைதளத்தில் புகைப்படங்கள், காணொளிக்கள் இருக்கின்றன.
7 comments:
கின்னஸ் சாதனைக்கு வாழ்த்துக்கள் தினாஜ்.
வாழ்த்துக்கள்
பெரிய விஷயம்!!!
வாழ்த்துகள்.
வாழ்த்துகள்.
சாதனைக்கு வாழ்த்துக்கள் தினாஜ்.
நம்மை எவ்விதத்திலாவது பாதிக்கும் விஷயங்களைத்தான் பதிவில் பகிர்வோம். அதன்படி, நீங்களும்கூட உடற்பயிற்சிப் பிரியை ஆக இருப்பீங்கன்னு நினைக்கிறேன், சரியா?
அமைதிச்சாரல், கயல், அப்துல்லா,ஜமால்,மாதேவி, ஹுசைனமமா
வருகைக்கு நன்றி
ஆமாம் உடற்பயிற்சி எனக்கு பிடித்த ஒன்று. தினமும் யோகா,வாக்கிங் தவற மாட்டேன்:)
Post a Comment