Monday, January 18, 2010

பா - 3 இடியட்ஸ் பார்த்துவிட்டேன்

எனக்கு பிடித்த நடிகர் அமிதாப்பின் பா படத்தை பார்க்கும்
வாய்ப்பிற்காக காத்திருந்தேன். ஜனவரி 1 அயித்தான் இந்தப் படத்துக்கு
அழைத்துச் சென்றார். அமிதாப் ப்ரொஜோரியா சிறுவனாக
வேடம் தரித்து நடித்திருக்கிறார் என்று முன்பே தெரிந்திராவிட்டால்
இது அமிதாப்பின் படம் என்று சொல்லவே முடியாது. அமிதாப்பாக
நடிக்காமல் ப்ரொஜோரியா சிறுவனாக வாழ்ந்திருக்கிறார்.
அமிதாப்பை அறிமுகப் படுத்துவதாக டயிட்டிலில் போட்டது சரியே.


நேர்மையான அரசியல்வாதி, குழந்தையின் நோய் தெரிந்து
நொறுங்கினாலும் ஏற்றுக்கொண்டு வளர்க்கும் தாய், அமிதாப்பின்
நடிப்பை என்னவென்று சொல்வது.. வார்த்தைகள் இல்லை.

அடுத்ததாக பார்க்கத் திட்டமிட்டிருந்த படம் 3 இடியட்ஸ்.
விமர்சனங்கள் எதையும் படிக்காமல் தவிர்த்து படம் பார்க்கச்
சென்றேன்.

என்னவென்று சொல்வது!!!! வலைப்பூக்களில் நாம் ஒருவர்
கொசுவத்தி சுத்தினால் அது அடுத்தவருக்கும் கண்டிப்பாய் சுத்தும்.
அது போல் தான் இந்தப் படமும். படத்தை பார்ப்பவர்கள் தன்
வாழ்வில் நடந்த நிகழ்ச்சியாக ஏதேனும் ஒரு காட்சியை நினைக்கச்
செய்யும் உருவாக்கம்.

பெற்றோர்களுக்கான மெசெஜ், பிள்ளை விரும்புவதை செய்ய
விடுங்கள். பணம் குறைவாக சம்பாரித்தாலும் சரி அவர்கள்
விரும்பும் வேலை பார்க்க படிக்க வைப்பதே சரி.
இஞ்சினியரிங் படித்தே ஆகவேண்டும் என கட்டாயப்படுத்தும்
மாதவனின் தகப்பன் பாத்திரம் போல் பல பெற்றோர்கள்
நிஜத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.


மாணவர்களுக்கு மெசெஜ்: புரியாமல் மனப்பாடம் செய்யாமல்
புரிந்து படிப்பது அவசியம். எப்போது புரிந்து படிப்பீர்கள்? உங்களுக்கு
அதன் மேல் விருப்பம் இருப்பின் மட்டுமே. ஆக விரும்பிய
துறையை எடுத்து மட்டும் படியுங்கள். (சொல்லின் பொருள்
புரியாமல் சத்துர் எனும் மாணவன் ஆற்றும் உரையில் தவறு
உண்டாகி வயிறு புண்ணாகிநாம் சிரித்தாலும் நச்சென மண்டையில்
உறைப்பது,” இப்படித்தானே பல மாணவர்கள் வரிக்கு வரி மனப்பாடம்
செய்து பரிட்சை எழுதி அதிக மார்க் பெருகிறார்கள்””)ஆசிரியர்களுக்கு மெசெஜ்: புரிந்து கொள்ளும்படி பாடம் நடத்துங்கள்.
கற்றலில் இனிமை வேண்டும் அதை கற்பித்தலில் காட்டுங்கள்.

(prerajulation, farhanism இரண்டு வார்த்தைக்கும் அர்த்தம் தேடும்
மாணவர் + பிரின்சிபாலுக்கு அமீர் தரும் ஷாக்சிம்பிளி சூப்பர்ப்)

பாடத்திட்ட வல்லுனர்களுக்கு: தேய்ந்து போன் டேப்ரிக்கார்டாக இருக்கும்
நம் மெக்காலே முறை கல்வித் திட்டத்தை மாற்றுங்கள். அந்தத்
திட்டத்தால் எந்த பயனுமில்லை!!!!

இந்த க்ரேடிங் சிஸ்டம் தரும் மன அழுத்தத்தை அலட்டிக்கொள்ளாமல்
அமீர் சொல்லும் காட்சி சூப்பர்.


நான் படிக்க நினைத்து ஒன்று படித்தது வேறு என கொசுவத்தி
சுத்தினாலும் கண்ணில் நீர் வரவழைத்த காட்சி கரீனா கபூர்
அக்காவின் பிரசவம். அந்த காட்சி பார்க்கும் பொழுது ஆஷிஷின்
பிரசவ வேதனை, வலி அதே போல் தலைவெளியில் வராமல்
என் நெஞ்சில் ஒரு பெண் அமர்ந்து கொள்ள,
இதற்கு மேல் சொல்ல மனது வரவில்லை....... :((எதிர் பார்த்தது போல் சதுர் தேடும் வான்கடு எனும் விஞ்ஞானி
அமீர்கான் தான். படம் முழ்தும் நல்லதொரு எண்டயர்மெண்ட் +
மெசெஜ்கள். போரடிக்காமல் கொடுத்திருப்பது சாமர்த்தியம்.
கேமிரா அழகு. அதுவும் ஆரம்ப பாட்டில் கேமிரா மலை உச்சியிலிருந்து
செல்லும் பொழ்து தலை சுற்றுவது போல இருக்கிறது. பச்சை
பசேல் அருமை.
வாழ்க்கை முழுதும் செத்து செத்து பிழைக்கிறோம்

Give me some sunshine
give me rain
give me another chance
i want to grow up once again.

பலரின் மனதைச் சொல்லும் பாடல்.

தொலைத்த குழந்தைப்பருவத்தை திரும்ப
வாழ ஒரு வாய்ப்பு கிடைக்காதா? என ஏக்கம்
யாருக்குத்தான் இல்லை!!!!!!!Get Your Own Hindi Songs Player at Music Plugin

ALL IZZ WELL!
இந்த தாரக மந்திரத்தை நீங்களும் சொல்லிப்பாருங்கள்.
அதிசயம் நிகழலாம்.

லைஃப் ஹோ அவுட் ஆஃப் கண்ட்ரோல்
ஹோட்டோ கோ கர்கே கோல்
சீட்டி பஜாகே போல்
ALL IZZ WELL!

சீட்டி பஜாகே போல் பய்யா
ALL IZZ WELL!!!!!


Get Your Own Hindi Songs Player at Music Plugin


தமிழ்ல இந்த படத்தை ரீமெக்கினா யாரெல்லாம் நடிச்சா
நல்லாயிருக்கும்????

26 comments:

butterfly Surya said...

xlent..

ALL IZZ WELL!

எம்.ரிஷான் ஷெரீப் said...

//தமிழ்ல இந்த படத்தை ரீமெக்கினா யாரெல்லாம் நடிச்சா
நல்லாயிருக்கும்????//

விஜய், விஜய்காந்த், விஜய்Tராஜேந்தர்

ரங்கன் said...

விமர்சனம் பார்க்க தூண்டிவிட்டது..

நன்றி தென்றல்..!!

நட்புடன் ஜமால் said...

மெஸேஜேஸ் பற்றிய மெ-ஸே-ஜ்

:)

fundoo said...

ம். பார்த்திடவேண்டியதுதான்.

கோபிநாத் said...

ஆகா...பார்த்துட்டிங்களா..சூப்பரு ;))

"பா" எப்பூடி...அந்த அறிமுகம் படுத்தும் காட்சியே அட போட வைக்கும்.

3 இடியட்ஸ் - அட்டகாசமான படம்.

\\prerajulation, farhanism இரண்டு வார்த்தைக்கும் அர்த்தம் தேடும்\\

ஆமா எப்படிக்கா படத்தோட வசனம் அதுல வர பெயர்கள் எல்லாம் இம்புட்டு ஞாபகம் வச்சிருக்கிங்க!?? ;))

கலக்கல் பதிவு ;))

ஹுஸைனம்மா said...

எல்லாரும் நல்லாருக்குன்னு சொல்றீங்க, சீக்கிரம் பாக்கணும்!!

புதுகைத் தென்றல் said...

விஜய், விஜய்காந்த், விஜய்Tராஜேந்தர்//

ஏன் ரிஷான் இந்த மர்டர் வெறி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ரங்கன்

புதுகைத் தென்றல் said...

மெசெஜ் பற்றிய மெ-செ-ஜ்//

ஆமா ஜமால் முக்கியமான பாயிண்டை 4 தடவை சொன்னத்தானே மனசுல பதியும்.

புதுகைத் தென்றல் said...

கண்டிப்பா பாத்திடுங்க. ஃபண்டூ.

உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்

புதுகைத் தென்றல் said...

பா" எப்பூடி...அந்த அறிமுகம் படுத்தும் காட்சியே அட போட வைக்கும்.

ஆமாம் கோபி,
\\prerajulation, farhanism இரண்டு வார்த்தைக்கும் அர்த்தம் தேடும்\\

ஆமா எப்படிக்கா படத்தோட வசனம் அதுல வர பெயர்கள் எல்லாம் இம்புட்டு ஞாபகம் வச்சிருக்கிங்க!?? //

படம் மனசுல நிறைஞ்சிடுச்சு. அதான் எல்லாம் மனசுல. ஏதாவது ஒரு மாற்றம் கல்வித்துறையில வரணும்னு நினைக்கற ஆசிரியை துறையை சேர்ந்தவளாச்சே :)

புதுகைத் தென்றல் said...

நானே லேட்டுன்னு நினைச்சேன்.நீங்க இன்னும் பாக்கலியா?? சீக்கிரம் பாருங்க ஹுசைனம்மா.

நிஜமா நல்லவன் said...

.

வித்யா said...

All iz well:)

புதுகைத் தென்றல் said...

புள்ளி வெச்சிருக்கீங்க கோலம் எப்ப போடப்போறீங்க நிஜம்ச் தம்பி??
:))

புதுகைத் தென்றல் said...

ஆமாம் ஆல் இஸ் வெல்தான் வித்யா.
வருகைக்கு நன்றி

Mrs.Faizakader said...

நானும் பார்த்தேன் படம் அருமை.. இதோடு உங்கள் விமர்ச்சனம் மிகவும் அருமை..

Rajalakshmi Pakkirisamy said...

//தமிழ்ல இந்த படத்தை ரீமெக்கினா யாரெல்லாம் நடிச்சா
நல்லாயிருக்கும்????//

நாசர் வைரசாக, Surya, Sameera :), Madavan.....

ஊருக்குள்ள இத பத்தி தான் பேசிக்கிறாங்க. ரீ-மேக் பண்ணினா நல்லா இருக்கும். ஆனா சூர்யா தவிர வேற யார போடுறதா இருந்தாலும் வேணாம்.

புதுகைத் தென்றல் said...

வாங்க ஃபாயிஷா,

மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

நாசர் வைரசாக, Surya, Sameera :), Madavan.....//

நல்லா இருக்கு ராஜலக்‌ஷ்மி, சூர்யா, மாதவன் சரி இன்னொரு ஹீரோ!!!!

SurveySan said...

////எதிர் பார்த்தது போல் சதுர் தேடும் வான்கடு எனும் விஞ்ஞானி
அமீர்கான் தான்///

என் மரமண்டைக்கு அது தோணவே இல்லை, கடைசி வரை. ஏதோ சைனீஸ் பேராருக்கேன்னு லூஸ்ல விட்டுட்டேன் :)

புதுகைத் தென்றல் said...

வாங்க சர்வேசன்,

ஸ்விம்மிங் பூலோடு ஒரு வீடு, லாம்போகினி கார் எல்லாம் வெச்சிருப்பதா சைலன்சர் சொல்லி அலட்டும் போது அவருக்கு குட்டு வைக்கும்படி ஹீரோவை பெரிய விஞ்ஞானியா காட்டாட்டி படத்தோட தீமுகுக்கே வேட்டு வெச்சா மாதிரி ஆகிடுமேன்னு ஒரு கஸ்ஸிங் தான்.
(எம்புட்டு சினிமா பாத்திருப்போம்)

வருகைக்கு நன்றி

SUFFIX said...

இரண்டு நாடகளுக்கு முன்னரே இந்தப் படம் பார்த்தேன், தரமான திரைப்படம். நிறைய படிப்பினைகள் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும். தங்களது விமர்சனம் இன்னும் அருமையாக இருக்கிறது.

புதுகைத் தென்றல் said...

thanks suffix

S.Arockia Romulus said...

IllayaRaja proved again in PAA movie that he is the only King..............in music world