Tuesday, January 19, 2010

எங்கள் செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஒரே அட்டகாசமாக போய்விட்டது. அம்ருதம்மாவின்
கொட்டம் ரொம்பவே ஜாஸ்தியாகிடுச்சு. :)))

லீவுக்கு ஊருக்கு போன போது “இந்தத் தடவை
லேப்டாப் இல்லாமல் வர்றேன். ஜாலியா எஞ்சாய் செய்யலாம்னு”
அயித்தான் சொல்லி வாய் மூடலை,” ஹை! உங்களுக்கு
லேப்டாபே தேவையில்லை. கைல இருக்கற மொபைல் போதுமேன்னு”
மடக்கல் நடக்குது.


ஜனவரி பிறந்ததுலேர்ந்து கவுண்ட் டவுன் நடக்குது.
இன்னும் 18 நாள் தான் இருக்குன்னு சொல்லிகிட்டே வந்தாங்க.

ஒண்ணும் தெரியாத மாதிரி,”எதுக்குன்னு??” நான் கேட்டதுக்கு
on 19th I am becoming a decade(அவுங்க பிறந்த 10 வருஷம்
ஆகப்போகுதாம்!!) we need to celebrateனு ஆர்டர்.பொங்கல் அன்னைக்கு வந்து மெல்லமா என் கிட்ட
அம்மா சொல்றாங்க,”இன்னைக்கு ஃபுல்லும் அண்ணாகூட
ரொம்ப ஆர்க்யூ செய்யக்கூடாதுன்னு”!!

“ஏம்மான்னு” கேட்டதுக்கு, “ஆர்க்யூ செஞ்சா கலெக்‌ஷன்
கட்டாகிடும்!!! பொங்கல், பர்த்டேக்கு அண்ணாகிட்டேயிருந்து
வாங்கிக்க வேண்டியிருக்குல்ல!!!”” அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அண்ணனுக்கு காதுல விழுகாம கமுக்கமா கமெண்ட்
அடிக்கறாங்க...2 மாசம் முன்னாடியே தனக்கு லாங்க் கவுன் வேணும்னு
மேடம் சொல்லிட்டாங்க. ஹைதை, சென்னை கடைகளில்
தேடி கிடைக்கலை. புதுகை ட்ரிப் முடிஞ்சு திரும்பி வரும்போது
ஆர்.எம்.கே.வி கடை விளம்பரம் பாத்து இந்த மாதிரிதான்
கேட்டேன்னு சொல்ல அடிச்சு பிடிச்சு தாம்பரம் - மாம்பலம்
வந்து வாங்கிகிட்டு ஓடினதை என்னன்னு சொல்ல!!!!

எங்கள் செல்லம் அம்ருதாவுக்கு இன்றைக்கு பிறந்த நாள்.
அம்மா, அப்பா, அண்ணாவின் மனமார்ந்த பிறந்த நாள்
வாழ்த்துக்கள் செல்லம்.தன் பிறந்த நாளுக்கு என்ன மெனுன்னு ஆர்டர் போட்டிருக்காங்க.
குலாப்ஜாமுன், பிசிபேளாபாத், உருளை வருவல், சாயந்திரம்
டொமினோஸ் பிட்சா. பார்டிக்கு எல்லோரும் வந்திடுங்க.

47 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் மருமகளாரே!

அபி அப்பா said...

எங்கள் அன்பான வாழ்த்துக்கள் அம்ருதா குட்டிம்மா!

அன்புடன்
அபிஅப்பா
அபிஅம்மா
அபி
நட்ராஜ்

நட்புடன் ஜமால் said...

“ஆர்க்யூ செஞ்சா கலெக்‌ஷன்
கட்டாகிடும்!!! பொங்கல், பர்த்டேக்கு அண்ணாகிட்டேயிருந்து
வாங்கிக்க வேண்டியிருக்குல்ல!!!”” அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்]]


தெளிவான ப்ளானிங்கு

ஹா ஹா ஹா

சின்ன அம்மிணி said...

//ஆர்க்யூ செஞ்சா கலெக்‌ஷன்
கட்டாகிடும்!!!//

வாழ்க்கையில் இப்படியே விவரமா இருந்து பெண்கள் மானத்தைக்காப்பாற்று அம்ருதா!!!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Vidhoosh said...

happy birthday amrutha. may life bring you more happiness and peace.
love,
vidhya

Jayashree said...

பெண்ணுக்கு இனிய பிறந்தனாள் வாழ்த்துக்கள் தென்றல்

நாஸியா said...

ஐ! சின்ன வயசுல நானும் கவுன்ட் டவுன் வெச்சு பிறந்த நாள் கொண்டாடினது ஞ்யாபகம் வருது...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிக்கு! :)

கோமதி அரசு said...

அம்ருதாவிற்கு,பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்!

வாழ்வில் எல்லா வளமும்,நலமும்,
பெற வாழ்த்துக்கள்.

காற்றில் எந்தன் கீதம் said...

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அம்ருதாம்மா

Sangkavi said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

butterfly Surya said...

அம்ருதா குட்டிக்கு வாழ்த்துகள்.

வித்யா said...

வாழ்த்துகள் பிரின்சஸ்:)

SanjaiGandhi™ said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்ருதா.. எல்லாம் வளமும் பெற்று நல்வாழ்வு வாழ்க..

ஹுஸைனம்மா said...

//ஆர்க்யூ செஞ்சா கலெக்‌ஷன்
கட்டாகிடும்//

யாரோட பொண்ணு? அதனால ஆச்சர்யமில்லை!!

”கலெக்‌ஷன் கம்மி”ங்கிற பதிவப் (& பின்னூஸ்) படிச்சாங்களோ அம்ருதா?

இனிய பத்தாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

புதுகைத் தென்றல் said...

நீங்க போனில் கூப்பிட்டு சொன்னதுக்கு முகம் ப்ரசன்னமாகிடுச்சு ஜமால். :))நன்றி
தெளிவான ப்ளானிங்கு
:))

நன்றி அபி அப்பா

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சின்ன அம்மிணி.
வாழ்க்கையில் இப்படியே விவரமா இருந்து பெண்கள் மானத்தைக்காப்பாற்று அம்ருதா!!!//

முக்கியமான விஷயமாச்சே

புதுகைத் தென்றல் said...

நன்றி வித்யா

நன்றி ஜெயஸ்ரீ

நன்றி நாஸியா

நன்றி கோமதி அரசு மேடம்

நன்றி சுதர்ஷிணி

புதுகைத் தென்றல் said...

நன்றி சங்கவி,

நன்றி சூர்யா

பிரின்ஸஸா!!! மஹாராணி மாதிரில்ல சட்டம் போடறாங்க. வருகைக்கு நன்றி வித்யா

நன்றி சஞ்சய்


யாரோட பொண்ணு? அதனால ஆச்சர்யமில்லை!!
அது மேட்டர்

”கலெக்‌ஷன் கம்மி”ங்கிற பதிவப் (& பின்னூஸ்) படிச்சாங்களோ அம்ருதா?//

பதிவு படிக்கவெல்லாம் மேடத்துக்கு டைம் இல்ல.வாழ்த்திற்கு நன்றி ஹுசைனம்மா

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள் மருமகளே.

பார்ட்டி அடுத்த மாசம் வந்து வாங்கிக்கிறேன் :)

Jaleela said...

உங்கள் தங்கத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மெனு ம்ம் பலே பலே ... ம்ம்ம்ம் பிஸிபேளா கேட்கவே வேண்டாம், அப்பள்த்துடன், சூப்பரா இருக்கும்

PPattian : புபட்டியன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்ருதா.. ஆமா பார்ட்டி எங்கேன்னு சொல்லவே இல்லையே :)

சந்தனமுல்லை said...

அம்ருதா-விற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

பப்பு & முல்லை

கோபிநாத் said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்ருதா ;))

புதுகைத் தென்றல் said...

பார்ட்டி அடுத்த மாசம் வந்து வாங்கிக்கிறேன்//

குட் மாமான்னா இப்படித்தான் இருக்கணும். வாழ்த்தை சொல்லிடறேன். நன்றி அப்துல்லா.

வாங்க ஜலீலா
மெனு ம்ம் பலே பலே ... ம்ம்ம்ம் பிஸிபேளா கேட்கவே வேண்டாம், அப்பள்த்துடன், சூப்பரா இருக்கும்//

பெரிய மனது செஞ்சு அப்பளம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க மேடம் :))வாழ்த்துக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க புட்டியன்,
ஆமா பார்ட்டி எங்கேன்னு சொல்லவே இல்லையே //

பர்த்டே பார்டியெல்லாம் செய்ய மாட்டேன். விருந்துக்கு வீட்டுக்கு அதாவது ஹைதைக்கு வந்திடுங்கன்னு சொன்னேன். வாழ்த்திற்கு நன்றி


நன்றி முல்லை & பப்பு

தேவன் மாயம் said...

இனிய இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

தேவன் மாயம் said...

வாழ்த்துக்களை உங்கள் மகளுக்குச் சொல்லவும்

புதுகைத் தென்றல் said...

நன்றி தேவா

நன்றி கோபி

புதுகைத் தென்றல் said...

மேடம் ஸ்கூல் போயிருக்காங்க தேவா,

வந்ததும் பதிவைக் காட்டி எல்லோருடைய வாழ்த்தையும் கண்டிப்பா சொல்லிடறேன்.

:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் அம்ருதா.. :)

ஆர்டர் , நோ ஆர்க்யூ ஹ்ம் கலக்குறே..:)

கண்மணி said...

அம்ருதாவிற்கு இந்த பெரியம்மாவின் ஆசிகள்.
என் கிட்ட சொல்லியிரிருந்தா லாங் கவுன் [செம டிசைன்ல வருது] வாங்கி அனுப்பியிருப்பேனே குட்டிப் பொண்ணுக்கு.

SK said...

வாழ்த்துக்கள் அம்ருதா!!!!

அமுதா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்ருதாவுக்கு

Deepa said...

உங்கள் செல்ல மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Suresh Kumar V said...

வாழ்த்துக்கள் பற்பல....

புதுகைத் தென்றல் said...

ஆமாம் கயல் கலக்கலாத்தான் இருக்கு.
நன்றி.

ஆகா நன்றி கண்மணி

புதுகைத் தென்றல் said...

நன்றி எஸ்.கே

நன்றி அமுதா

நன்றி தீபா

நன்றி சுரேஷ் குமார்

வல்லிசிம்ஹன் said...

அன்பு அம்ருதா, உனக்கு விருப்பமான எல்லாம் கிடைக்கணும்னு வாழ்த்தறேன்.
எங்க்கள் ஆசிகளும் அன்பும் ஹைதை தேடி வருகின்றன. உன் இன்னோரு தாத்தாவும் பாட்டியும்.
ஹாப்பி பர்த் டே செல்லம்.

கானா பிரபா said...

அம்ருதாவுக்கு வாழ்த்துக்கள்

சிட்னி மாமா

அன்புடன் அருணா said...

அம்ருதாவிற்கு,பிறந்த நாள் வாழ்த்துக்கள்+பூங்கொத்து!

மாதேவி said...

அம்ருதா செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

அம்ருதாக்குட்டிக்கு வாழ்த்துகள்

-உமா
மீரா
மேகா
கிருஷ்ணா

கும்க்கி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்ருதா....
இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்க
வாழ்த்துகிறேன்...

புதுகைத் தென்றல் said...

ஆசிகளுக்கு நன்றி வல்லிம்மா,

நன்றி பரிசல்

நன்றி கானா,

நன்றி அருணா

ராமலக்ஷ்மி said...

தாமதமானாலும் என் அன்பான வாழ்த்துக்களை அம்ருதாவிடம் சேர்ப்பித்து விடுங்கள் தென்றல்.

புதுகைத் தென்றல் said...

கண்டிப்பா சொல்லிடறேன் ராமலக்‌ஷ்மி

அமைதிச்சாரல் said...

// “ஆர்க்யூ செஞ்சா கலெக்‌ஷன்
கட்டாகிடும்!!! //

இதை இப்படியே கன்டின்யூ பண்ணும்மா..:-)).

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்ருதா.

புதுகைத் தென்றல் said...

வாழ்த்தை சொல்லிடறேன் அமைதிச்சாரல்