Thursday, January 21, 2010

ஆஷிஷ் டான்ஸ் போட்டோஸ்

இந்த வருடம் துவக்கமே என் பையனின் கெட்ட ஆட்டத்தோடுதான்:))

அப்பார்ட்மெண்டில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஐயாதான்
பிரபுதேவா.. சும்மாவா 3 பாட்டுக்கு தானே கொரியோ க்ராப் செஞ்சிருக்காரு.
ஒரு பாட்டு ஸோலோவா ஆட்டம் வேறு.


நடனம் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். ஆனா பெண்ணா பிறந்த
காரணத்தால் சில ஆசைகள் நிறைவேறாமப்போகும். என் பிள்ளை
அதை செய்யணும்னு வற்புறுத்தல, ஆனா இயல்பாவே வந்திருச்சுன்னு
நினைக்கிறேன்.

ஆஷிஷ் ஆட்டம், ட்ராயிங்க் எல்லாவற்றிலும் கலக்கும் ஆள்.

ROCKET SING ஹிந்தி பாட்டுக்கு ஆஷிஷ் போட்ட ஆட்டதுக்கு
செம விசில் தான்.:)) ரன்பீர் சிங்கை விடவும் சூப்பரா
ஆடினதா எல்லோரும் சொன்னாங்க.

பாட்டு இங்கேயிருக்கு.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆஷிஷ் ஆடும் போட்டோ:


3 idiots படத்தின் ஆல் இஸ் வெல் பாட்டுக்கு டான்ஸ்:
எந்துகே ரவணம்மா எனும் தெலுங்கு குத்து பாட்டுக்கு
கூட்டமாக சேர்ந்து குத்தும் ஆஷிஷ் :))
இந்தப் பாட்டைபத்தி பதிவு இங்கேயிருக்கு.
பேப்பர் கப்பில் ஆஷிஷ் செய்த பூ:


ஆஷிஷின் படிக்கும் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர்களின்
send off party யில் ஆஷிஷ் 3 பாட்டுக்கு நடனம் அமைக்க
போறார். அவங்க க்ளாஸ் டீச்சரே இவன் பெயரை கொடுத்திருக்காங்கன்னு
ஐயாவுக்கு ஒரே பெருமை. எனக்கும் தான்.

அம்ருதாவும் அவங்க ஃப்ரெண்ட் இதியும் கூட இரண்டு
பாட்டுக்கு செம டான்ஸ். பொண்ணுங்க போட்டோ வேணாமேன்னுதான்
போடலை.

இது நான் செஞ்ச சாக்லேட். எல்லோருக்காகவும் :))
டான்ஸ் போட்டோ பாத்து களைச்சிருப்பீங்க. எங்க ஊர் பன்னீர் சோடா
குடிங்க. சூப்பரா இருக்கும்.

41 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஹா! நம்ம மேட்டர்

தூள் ...

நட்புடன் ஜமால் said...

paper work - nice:)

குசும்பன் said...

//நடனம் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். ஆனா பெண்ணா பிறந்த
காரணத்தால் சில ஆசைகள் நிறைவேறாமப்போகும். //

??? ஒய் பீலிங்?


//இது நான் செஞ்ச சாக்லேட். எல்லோருக்காகவும் :))//

கால் வெச்சா வெடிக்கு மிதி வெடி மாதிரி, இது வாயில் வெச்சதும் வெடிக்குமா?:)))

சின்ன அம்மிணி said...

Welldone Aashish.

புதுகைத் தென்றல் said...

வாங்க ஜமால் வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

ஒய் பீலிங்?

ஃபீலிங்க்ஸ் ஆஃப் ஹைதைதான் குசும்பன். அது தனி கதை :))


கால் வெச்சா வெடிக்கு மிதி வெடி மாதிரி, இது வாயில் வெச்சதும் வெடிக்குமா?:)))//

வாயில போட்டா கரையற மாதிரி சூப்பரா செஞ்சிருக்கேன்.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி

Jeeves said...

சாக்லேட்டு கேக்கு எல்லாம் செய்யுங்க
ஒண்ணும் குடுக்காதீங்க.

ஏய் ஆஷிஷ் எங்க என்னோட சாக்லேட் ?

அம்மு ? எங்க பர்த்டே கேக்கு ?

ரங்கன் said...

கண்ணுக்கு அழகாய் ஆஷிஷ் ஆட..
அதை பார்த்துகிட்டே நீங்க பண்ண சாக்லேட்ஸை சாப்டாச்சு..

ஸோடா மட்டும் அப்புறமா குடிக்கிறேன்.!!

புதுகைத் தென்றல் said...

மாமாகிட்ட பேசிக்கறேன்னு சொல்லிட்டாங்க ஜீவ்ஸ்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ரங்கன்

thenammailakshmanan said...

நன்றி சூப்பர் சோடா அன்ட் நடனம் தென்றல்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி தேனம்மை

மோனிபுவன் அம்மா said...

SUPER SUPER என்ற அத்தை சொன்னதாக சொல்லவும் ஆஷிஷ்க்கு

//நடனம் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். ஆனா பெண்ணா பிறந்த
காரணத்தால் சில ஆசைகள் நிறைவேறாமப்போகும். //


குழந்தைகளை வைத்து தான் நம்ம ஆசையையும் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்

அபி அப்பா said...

தெலுகு குத்து செம குத்து. ஆனா சிகப்பகலர் பேண்ட்,மஞ்சள் கலர்சட்டை, போட்டிருந்தா நல்லா எடுப்பா இருந்திருக்கும் ஆஷிஷ்:-)))

புதுகைத் தென்றல் said...

குழந்தைகளை வைத்து தான் நம்ம ஆசையையும் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்//

வற்புருத்தாம அவங்களுக்கும் பிடிச்சிருந்தாதான் நல்லது. இயல்பாவே ஆஷிஷுக்கு நடனம் வருது. வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

அந்த காஸ்ட்யூம் இப்ப விஜய்க்குதான் செட்டாவுது அபி அப்பா, எங்க ஆளுங்க
ட்ரெஸ், டான்ஸ் எல்லாம் கலக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு காலத்துல தெலுங்கு படத்துல டான்ஸ்னா உடற்பயிற்சி மாதிரி இருக்கும். இப்ப உய் உய்னு விசில் அடிக்கலாம்.

:)))

தாரணி பிரியா said...

super :)

fundoo said...

அடடே. கலக்கல் ஆட்டம். கலக்கல் பேப்பர் பூ. கலக்கல் சாக்லேட். எல்லாத்தையும் விட காளீஸ்வரி. அருமை.

ஹுஸைனம்மா said...

வாழ்த்துக்கள் அம்ருதா & ஆஷிஷ்.

புலி - பூனை ஞாபகத்துக்கு வருது. உங்கள் பெருமிதங்கள் தொடர்க.

// புதுகைத் தென்றல் said...
... எங்க ஆளுங்க ட்ரெஸ், டான்ஸ் எல்லாம் கலக்க ஆரம்பிச்சிட்டாங்க. //

அதென்ன ”எங்க ஆளுங்க”? எப்ப நீங்க ஆந்திராக்காரவுக ஆனீங்க? ;-)

கோமதி அரசு said...

ஆஷிஷ் நடனம்,உங்கள் சாக்லேட்,
சோடா எல்லாம் அருமை.

வித்யா said...

வாழ்த்துகள் பிள்ளைகளுக்கு.

நிசமாவே சாக்லேட் நீங்கதான் செஞ்சீங்களாக்கா?

அமைதிச்சாரல் said...

ஆஷிஷ்க்கு பாராட்டுக்கள்.

//நடனம் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். ஆனா பெண்ணா பிறந்த
காரணத்தால் சில ஆசைகள் நிறைவேறாமப்போகும். //

வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்திக்கொண்டால்
ஃபீலிங்க்ஸ் தேவையில்லைங்க.கழிஞ்ச நவராத்திரிக்கு கூட கொரியோகிராபரை வரவழைத்து, கர்பாவும் தாண்டியாவும் கத்துக்கிட்டு,எங்க பில்டிங்கில் தூள் கிளப்பிட்டோமில்ல. இத்தனை வருட இடைவெளிக்குப்பின் புது அனுபவமாகத்தான் இருந்தது.

அமைதிச்சாரல் said...

நீங்க கேட்டதுக்கு என் பிளாக்கில் பதில் சொல்லியிருக்கேன். இங்கேயும் ஒருக்கா சொல்லிக்கிறேன்.

'தாராளமா போட்டுக்கலாம்'

ராமலக்ஷ்மி said...

ஆஷிஷ், அம்ருதா இருவருக்கும் என் வாழ்த்துக்கள்!

கண்மணி said...

:))
கை வேலையிலும் கில்லாடியோ..குட்

புதுகைத் தென்றல் said...

நன்றி தாரணிப்ப்ரியா

புதுகைத் தென்றல் said...

வாங்க ஃபண்டூ,

காளிஸ்வரி கொசுவத்தி சுத்துதா

புதுகைத் தென்றல் said...

அதென்ன ”எங்க ஆளுங்க”? எப்ப நீங்க ஆந்திராக்காரவுக ஆனீங்க? ;-)//

தாய்மொழி தெலுங்கு, பிறந்து வளர்ந்தது தங்கத் தமிழ்நாட்டில். எனக்கு யாதும் ஊரே யாவரும் கேளீர் தானே.

வருகைக்கு நன்றி ஹுசைனம்மா

( நிறைய்ய பதில் சொல்ற மாதிரி கேள்வி கேட்க வேண்டியது, அப்புறம் என் கேள்விக்கு மட்டும் பெரிய்ய்ய்ய்ய்ய் பதில்னு பின்னூட்ட வேண்டியது)

:))))

புதுகைத் தென்றல் said...

நன்றி கோமதி அரசு

புதுகைத் தென்றல் said...

நிசமாவே சாக்லேட் நீங்கதான் செஞ்சீங்களாக்கா?//

ஆமாம் இப்பத்தான் குக்கரி கிளாஸ்ல சேர்ந்து ஒரு 125 வைரைட்டி சமையல் கத்துகிட்டேன் வித்யா :))

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

வடக்கே ஆடலாம், தெற்கே ஆடினால் நம்ம மேலே ஆடிடுவாங்க. :((
போன கணேஷ் விசர்ஜனுக்கு நானும் ஆடினேன். ஹைதை வடக்கு + தெற்கு காம்பினேஷன்ல இருக்கும்

:)))

புதுகைத் தென்றல் said...

நன்றி அமைதிச்சாரல்

புதுகைத் தென்றல் said...

நன்றி ராமலக்‌ஷ்மி,

தமிழ்மண இரட்டை விருதுக்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள்

புதுகைத் தென்றல் said...

ஆமாம் கண்மணி,

படம் வரைதல், பெயிண்டிங் இதெல்லாமும் ஐயாவுக்கு ரொம்ப பிடிக்கும். என்னிய போலன்னு சொல்லிக்கலாம் :))

அன்புடன் அருணா said...

ஆஹா...ஆஷீஷுக்குப் பூங்கொத்து இந்த தடவை!

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி அருணா

ஹுஸைனம்மா said...

//நிறைய்ய பதில் சொல்ற மாதிரி கேள்வி கேட்க வேண்டியது, அப்புறம் என் கேள்விக்கு மட்டும் பெரிய்ய்ய்ய்ய்ய் பதில்னு பின்னூட்ட வேண்டியது//

கேள்வி கேட்டாத்தான் அறிவு வளரும்னு பெரியவங்க சொல்லிருக்காங்க... ;-)

வல்லிசிம்ஹன் said...

மிக மிக அருமை தென்றல். ஆஷிஷ் போட்டோ போட்டதும் பிடித்தது. அம்ரிதா போட்டோ போடாததும் பிடித்தது.
இந்தமாதிரி அம்மா கிடைத்ததுக்கு ரெண்டு குழந்தைகளுக்கும் ,உங்க வீட்டுக்காரௌக்கும் வாழ்த்துகள் சொல்றேன்.
உண்மையிலியே நீங்கள் அன்புத் தென்றல்.
பெண்களை உற்சாகப் படுத்தாமல் அடக்கி வைத்த காலம் எங்கள் காலம் மட்டும் என்று நினைத்தேன். நீங்கள் இளைஞர்
தலைமுறையைச் சேர்ந்தவர் . உங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடா என்று அதிசயமாக இருக்கிறது.
இசையும் நடனமும் நம்மை விடுவிக்கும் கருவிகள்.
வருங்காலக் குழந்தைகளுக்காவது நல்லது நடக்கட்டும்.

புதுகைத் தென்றல் said...

கேள்வி கேட்டாத்தான் அறிவு வளரும்னு பெரியவங்க சொல்லிருக்காங்க..//

சரி :)))

புதுகைத் தென்றல் said...

பெண்களை உற்சாகப் படுத்தாமல் அடக்கி வைத்த காலம் எங்கள் காலம் மட்டும் என்று நினைத்தேன்.//

பயங்கர கட்டுப்பாட்டோடு அடக்கித்தான் வளர்க்கப்பட்டேன் வல்லிம்மா..
பாட்டும் நடனமும் ரொம்ப பிடிச்சும் விட நேர்நது. பிள்ளைகளுக்கு தாலாட்டும், கடவுளிடமும் பாடி சந்தோஷமாக இருக்கிறேன்.

எனக்கு பதிலாக ஆஷிஷ், அம்ருதா ஆடுவதில் சந்தோஷம்

வருகைக்கு நன்றிம்மா