Friday, January 22, 2010

மிளகு குழம்பு- ஆந்திரா ஸ்டைல்

இந்த குழம்புக்கு தெலுங்கில் பிண்டி மிரியம் என்று
பெயர். மிரியம்- மிளகு.

வாழக்காயை வெச்சு பொடிமாஸ், பொடி, காய், இல்லாட்டி
அவியலில் போடுவதுன்னு நடக்கும். மனசிருந்தா
சிப்ஸ் செய்வோம். இதைத் தவிரவும் வேறெப்பெடி சமைக்கலாம்??

வாழக்காய் பொதுவா வாயு சம்பந்த பட்டதுன்னு பலர் ஒதுக்கிடுவாங்க.
அந்த ஒதுக்கீடெல்லாம் வேண்டாம். வாழக்காயும் சாப்பிடலாம்,
அதே சமயம் வாய்வு தொந்திரவும் வராது. அது இந்த பிண்டி மிரியத்தால்
சாத்தியம்.

தேவையான சாமான்கள் பாப்போமா!!

2 வாழக்காய், 1 கைப்பிடி அளவு (அல்லது குறைச்சலா) பச்சை வேர்க்கடலை,
புளி எலுமிச்சம் அளவு, உப்பு, மஞ்சள் தேவையான அளவு.
வேக வைத்த துவரம்பருப்பு - 1 கப்

வறுக்க கடலைப்பருப்பு,தனியா தலா 2 ஸ்பூன், மிளகு 3 ஸ்பூன்
போட்டு எண்ணெய் விடாம வறுத்து வெச்சுக்கவும். ஆறியதும்
தேங்காய்த்துருவல் 3 ஸ்பூன் சேர்த்து நைசா அரைச்சு வெச்சுக்கணும்.



செய்வது இப்படித்தான்.

ஒரு அடிகணமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி,
தோல்சீவி துண்டங்களாக நறுக்கிய வாழக்காய், கைப்பிடி வேர்க்கடலை
போட்டு வேக விடவும்.

பாதி வெந்த பொழுது கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீர், மஞ்சள்,
உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

புளி வாசனை போனதும் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை
சேர்த்து நன்கு கொதிக்க விடவும், பிறகு பருப்பை மசித்து
சேர்த்து கொதிக்கவிட்டு கறிவேப்பிலை சேர்த்தால்



கம கம ஆந்திரா ஸ்டைல் மிளகு குழம்பு ரெடி.

தோசை, இட்லி, சோறு எல்லாத்துக்கும் நல்ல காம்பினேஷன்

8 comments:

நட்புடன் ஜமால் said...

வாழக்காய் தான் நம்ம ஃபேவரைட்

இந்த மெனு சாப்பிட்டதில்லை

தங்ஸ்-கிட்ட இப்பவே காட்டிட வேண்டியது தான் ...

சாந்தி மாரியப்பன் said...

புதுசா இருக்கு.. செஞ்சு பாத்துட வேண்டியதுதான். ஒரு சந்தேகம் இப்போ கொண்டைக்கடலை,துவரை, மொச்சை இதுங்களோட சீசன். கடலைக்குப்பதில் இதுங்களை பச்சையா போடலாமா?.

pudugaithendral said...

ஆஹா எஞ்சாய் ஜமால்

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

கடலை தான் போட்டுப்பழக்கம். கடலை குக்கரில் வெக்காமலே வாழைக்காயுடன் சேர்ந்து வெந்திடும். மத்தவை அப்படி இருக்காதுன்னு நினைக்கிறேன்.


கொஞ்சமா போட்டு செஞ்சு பாருங்களேன்.

cheena (சீனா) said...

மிளகு குழம்பா - எங்க தங்க்ஸை படிக்கச் சொல்றேன் - பாப்ப்பொம்

நல்வாழ்த்துகள் தென்றல்

pudugaithendral said...

வாங்க சீனா சார்,

இந்தக் குளிருக்கு சூப்பரா இருக்கும்.

ஹுஸைனம்மா said...

//மிரியம்- மிளகு.//\

சரி. பிண்டி - வெண்டக்காய் இல்லையா? வாழக்காயா தெலுங்குல?

(அட, கேள்வி!!)

புது மெத்தடா இருக்கு. ஒரு சேஞ்சுக்கு டிரை பண்ணிப் பாக்கணும்.

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

பிண்டி - இது bindi illa pindi அதாவது மாவு. பருப்பையே கெட்டியாக கரைத்து ஊற்றுவதால் பிண்டி மிரியம்.