நாம என்னதான் பனீர் பட்டர் மசாலா, தால் மக்கனி,
சன்னா மசாலா வீட்டுல செஞ்சாலும் ,”நல்லாயிருக்குன்னு!”
பசங்களும், கணவரும் சொல்வாங்க தான். உண்மையில்
ஹோட்டல் க்ரேவி மாதிரி வரமாட்டீங்குதேன்னு நமக்கேத்
தோணும். ருசி சரியா இருந்தாலும் அந்த க்ரேவி டேஸ்ட்
வித்யாசமா இருக்கும்.
தக்காளி வெங்காயம் அரைச்சு மசாலா சேத்து, ஊற வெச்சிருக்கும்
சன்னாவையும் போட்டு குக்கரில் 5 விசில் அடிச்சா சன்னா
மசாலா ரெடின்னு நானும் தாங்க நினைச்சிருந்தேன். ஆனா
இப்ப நாம செய்யற சன்னா செம டேஸ்டா இருக்குன்னு
பசங்க பாராட்டு மழை தான். அந்த ரகசியத்தை உங்களுக்கும்
சொல்றேன்.
ஹோட்டலில் சமையல் கலரை கொட்டித்தான் சமைக்கிறாங்க.
அதனால கலர் அந்த மாதிரி கிடைக்காது. கலர் போடுவதில்
எனக்கு உடன் பாடில்லை. அதனால் இயற்கையான நிறம்
அருமையான ஹோட்டல் சுவை க்ரேவி செய்வோமா!!!
முதல்ல BASIC GRAVY செஞ்சு வெச்சுக்கணும்.
அதை எப்படி செய்வதுன்னு பாப்போம்.
BASIC GRAVYல 3 க்ரேவி வேணும்.
WHITE PASTE, YELLOW PASTE, RED PASTE
WHITE PASTE:
க்ரேவி முந்திரி அல்லது சமைக்கும் முந்திரி - 50 கிராம்
தர்பூஸ் பழ விதைகள் - 1 ஸ்பூன்.
(இவை பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்)
இரண்டையும் நன்கு கொதிக்க வைத்து, ஆறியதும்
மைய அரைத்துக்கொண்டால் வொயிட் பேஸ்ட் ரெடி.
YELLOW PASTE:
பெரிய வெங்காயம் வெட்டியது - 4
இதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து
வேகவைத்து வடிகட்டி அரைத்தால் மஞ்சள் பேஸ்ட்.
(வெங்காயத்தை வேக வைப்பதால் பச்சை வாசனை
போய் திக் க்ரேவி கிடைக்கும்)
RED PASTE:
5 தக்காளியை மிக்ஸியில் அடித்து வைத்து கொண்டால்
ரெட் பேஸ்ட் ரெடி.
இதை வெச்சுகிட்டு பேசிக் க்ரேவி எப்படி செய்வதுன்னு
பாப்போம். மேலே சொல்லியிருக்கும் க்ரேவியும் சம அளவுல
வர்ற மாதிரி பாத்துக்கணும்.
1 கப் WHITE PASTE + 1 கப்YELLOW PASTE + கப் RED PASTE
BASIC GRAVY செய்முறை:
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை,
1 துண்டு லவங்கப்பட்டை, 2 ஏலம், 1 ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
சேத்து நல்லா வதக்கணும்.
அடுத்து தக்காளி பேஸ்டை ஊத்தி நல்லா கொதிக்க விடணும்.
அடுத்ததா மஞ்சள் பேஸ்ட், கடைசியா வெள்ளை பேஸ்ட்
சேர்த்து கொஞ்சமா தண்ணீ சேர்த்து நல்லா கொதிக்க விடணும்.
தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், தனியா தூள், ஜீரகப்பவுடர்,
கரம் மசாலா தலா ஒரு ஸ்பூன் சேர்த்து நல்லா வதக்கினா
பேசிக் க்ரேவி ரெடி
இதை வெச்சு ஹோட்டல் க்ரேவி டேஸ்ட்ல எப்படி சமைப்பது?
இந்தோ மதியம் போஸ்ட் வந்திடப் போகுது. :))

8 comments:
மீதியை சீக்கிரமா போடுங்க. செஞ்சு பார்க்கணும்.
ஆகா இனி நானும் அசத்திட மாட்டேன்:)? ரொம்ப நன்றி தென்றல்!
//இந்தோ மதியம் போஸ்ட் வந்திடப் போகுது. :))//
வெயிட்டிங் ஆவலுடன்:)!
நான் ரொம்ப நாளா தேடிண்டு இருக்கேன் இந்த ரிசிப்பி. சீக்கிரம் அடுத்த பகுதி. cant wait. இந்த தர்பூஸ் விதைன்னால என்ன பயன்? அது கலரிங் ஏஜண்டா?
சூப்பர்... வெய்ட்டிங் அடுத்த போஸ்டுக்கு
வாங்க கண்ணகி, ராமலக்ஷ்மி,அநன்யா,அமுதா.
இதோ அடுத்த பதிவு 5 நிமிஷத்துல
இந்த தர்பூஸ் விதைன்னால என்ன பயன்? அது கலரிங் ஏஜண்டா?//
கலரிங் ஏஜண்டெல்லாம் இல்ல. அதனால சுவை கொஞ்சமே கொஞ்சம் கூடுமாம் + திக் க்ரேவி கிடைக்கும்
சூப்பர் சூப்பர் நல்ல விளக்கம்..
http://niroodai.blogspot.com
தென்றல் ரொம்ப நாளாக பேசிக் கிரேவி எப்படி செய்கிறார்கள் என்று அறிய முயன்று கொண்டிருந்தேன். இன்று கண்டேன். காரைக்குடி அமராவதிபுதூரில் இருக்கும் சாரதா ஆஸ்ரம் மற்றும் சாரதா கல்லூரியில் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன்பு சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டராக பணிபுரிந்திருக்கிறேன். காரைக்குடி வீடுகளை எல்லாம் பார்த்து பிரமித்துப் போனேன்.
Post a Comment