Wednesday, January 27, 2010

PERSONALITY DEVELOPMENT - அசத்தலான ஆரம்பம்

நானும் எல்லார் கிட்டயும் இதைப்பத்தி பதிவு போடுங்கன்னு
கேட்டுகிட்டே இருந்தேன். போடறேன்னு சொன்னவங்க எல்லோரும்
மறந்துட்டாங்களா?? என்னன்னு புரியலை.

wifeologyக்கு எதிரா யாராவது எழுதுவாங்கன்னு காத்திருந்து
அது நடக்காம போக ஆரம்பிக்கப்பட்டதுதான் என்
husbandoloy வகுப்புக்கள். :))

இப்பவும் நானே எழுதலாம்னு முடிவு செஞ்சிட்டேன். திரும்ப
ஹஸ்பண்டலாஜி இல்லீங்க. எதைப்பத்தி???? வாங்க பேசலாம்.

பதின்ம வயதுக்குழந்தைகளை வளர்ப்பது அவ்வளவு
சுலபமான வேலையில்லை. குழந்தையும் அல்லாத,
பெரியவரும் அல்லாத இரண்டும்கெட்டான் மன நிலையில்
இருக்கும் அந்தக் வளரும் குழந்தைகளை மென்மையாக
கையாளவது மிக அவசியம்.



பெண் குழந்தைக்கு தரப்படும் அறிவுரையைப் போல ஆண்குழந்தைகளுக்குத்
தரப்படுவதில்லை. அதை இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன்.

இனி வரும் வாரங்களில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில்
வரப்போகும் இந்த பதின்மவயதுக்குழந்தைகள் தொடரில்
இருபாலருக்கும்
பொதுவான சில பிரச்சனைகள், வளர்ப்பு முறை பற்றி பேசுவோம்.

என் தோழி ஒருத்தரை பத்தி முன்னமே சொல்லியிருக்கேன். இலங்கையில்
ஒரு கல்லூரியில் DIPLOMA IN PERSONALITY DEVELOPMENT அப்படின்னு
ஒரு பட்டயப்படிப்பு. பதின்ம வயது பிள்ளைகள் இந்த பயிற்சியில
கலந்துகிட்டு தன்னை நல்லா உருவாக்கிக்க முடியும். இந்த வகுப்பில்
சைக்காலஜி ஆசிரியை மேலே சொல்லியிருக்கும் என் தோழிதான்.

அவங்க தயாரிச்ச புத்தகத்தை அச்சில் ஏத்திக்கொடுக்கும் பொழுது
நிறைய்ய டிஸ்கஸ் செய்வோம். நாளை உனக்கும் உதவும் என்று
அந்த புத்தகத்தை எனக்கு ஒரு காபி தந்திருக்காங்க.

எனக்கும் பதின்மவயதில் அடி எடுத்துவைத்திருக்கும் மகன் இருக்கிறான்.
அவனுக்கும் அதை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறேன். என் பிள்ளைகள்
போல மற்ற பிள்ளைகளுக்கும் உதவவேண்டும் எனும் எண்ணத்தில்
உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. நான் பாடம் எடுக்கப்போவதில்லை.
அதில் எனக்குத் தேர்ச்சியும் இல்லை. ஒரு ஆசிரியையாகவும், தாயாகவும்
என் பார்வை எப்போதும் இருக்கும். நானும் கற்றுக்கொண்டு கற்றதை
உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

இந்த பதிவுகள் பேரண்ட்ஸ் கிளப்பிலும் என் வலைப்பூவிலும் திங்கள்
மற்றும் வியாழக்கிழமைகளில் வரும்.


மெல்லச் சிறகு விரிக்கும் அந்த பட்டாம்பூச்சிகளுக்கு
வசந்தமான வாழ்வை அளிப்போம். நல்லதொரு
தலைமுறையை உருவாக்குவோம்.

29 comments:

நட்புடன் ஜமால் said...

பெண் குழந்தைக்கு தரப்படும் அறிவுரையைப் போல ஆண்குழந்தைகளுக்குத்
தரப்படுவதில்லை]]

உண்மை தான் - அதிலும் தாயார், சகோதரி தான் நெம்ப அட்வைஸிங்ஸ்

Anonymous said...

ரொம்ப நல்லவங்க நீங்க...(இது போல பதிவுகளாக போடறீங்களே..)

MyFriend said...

வாழ்த்துக்கள் :-)

Ananya Mahadevan said...

ரொம்ப உபயோகமா இருக்கும். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

ஆமாம் ஜமால்,

இந்த டாபிக்ல நாளை முதல் பேச ஆரம்பிக்கபோவதால அங்க நிறைய்ய பேசலாம்

pudugaithendral said...

இது போல பதிவுகளாக போடறீங்களே.//

நாளைய உலகத்திற்கு உதவுவதுதானே ஒரு ஆசிரியையின் கடமை. நானும் ஒரு ஆசிரியைங்க. இப்ப வேலைக்கு போகலை. ஆனால் நான் ஒரு ஆசிரியை என்ப்தை எப்பவும் மறக்க முடியாதே

pudugaithendral said...

நன்றி மைஃபிரண்ட் தங்கச்சி???

நலமா??? டிக்கெட் அனுப்ப மற்க்காதீங்க

pudugaithendral said...

வாங்க அநந்யா,

வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

நாளைக்கு முதல் பதிவு வருது.

Kumky said...

எனக்கும் உபயோகமா இருக்கும்..

நன்றி டீச்சர்.

Thamira said...

பயனுள்ள தொடர் ஃபிரெண்ட். வாழ்த்துகள்.! (எனக்கு 10 வருஷங்கழிச்சுதான் தேவைப்படும். ஹிஹி)

pudugaithendral said...

வாங்க கும்க்கி,

எல்லோருக்கும் ரொம்ப உதவியாய் இருக்கும்னு தான் பகிர்ந்துக்க போறேன்.

pudugaithendral said...

வாங்க ஃப்ரெண்ட்,

10 வருஷம் கழிச்சு உபயோகிக்க மைண்ட்ல இப்பவே வெச்சுக்க உதவும்ல. கண்டிப்பா நாளைக்கும்வாங்க

கோமதி அரசு said...

நல்ல பதிவு,

வாழ்த்துக்கள்!!

Prathap Kumar S. said...

அடேங்கப்பா. ஏரியா ஏரியாவா தாண்டி பின்னுறீங்க போங்க... எல்லாத்தையும் நோட்டுபண்ணி
வச்சுருக்கேன்... பின்னாடி உதவும்...

pudugaithendral said...

வாங்க நாஞ்சிலாரே,

ஏதாவது உருப்படியா எழுதணும்னுதான் இப்படி தாவிக்கினு இருக்கேன்.

ஆமாம் ஓட்டு போட்டீங்களா???

சிநேகிதன் அக்பர் said...

நல்ல முயற்சி.

எங்களுக்கும் பயனுள்ளதா இருக்கும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆரம்பிங்க ஆரம்பிங்க.. எங்க வீட்டு அம்மணிக்கும் வயசு நெருங்கிட்டு இருக்கு.. ;)

Unknown said...

மிகவும் பயனுள்ள பதிவு..//மெல்லச் சிறகு விரிக்கும் அந்த பட்டாம்பூச்சிகளுக்கு
வசந்தமான வாழ்வை அளிப்போம். நல்லதொரு
தலைமுறையை உருவாக்குவோம்.// கட்டாயமாக..

pudugaithendral said...

நன்றி கோமதி அரசு

pudugaithendral said...

வாங்க அக்பர்

pudugaithendral said...

வாங்க கயல்,

ஆமாம் ரொம்ப உபயோகமா இருக்கும்

புகழன் said...

ரொம்ப உபயோகமா இருக்கும். வாழ்த்துகள்.

pudugaithendral said...

நன்றி புகழன்

மோனிபுவன் அம்மா said...

இரு குழந்தைகளுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.

வாழ்த்துகள்.

அன்புடன் அருணா said...

நிஜம்மாவே அசத்தலான ஆரம்பம்தான் தென்றல்...பூங்கொத்து!

pudugaithendral said...

நன்றி மோனிபுவன் அம்மா

pudugaithendral said...

உங்களின் பூங்கொத்தோடு நாளை பதிவு வருது அருணா(ஒரு வேண்டுகோள், ஒரு ஆசிரியையாக உங்களின் கண்ணோட்டம் இந்தத் தொடர் பதிவுக்கு ரொம்ப அவசியம் கண்டிப்பா வந்து உங்க கருத்தை சொல்லுங்க)

நன்றி

Thamiz Priyan said...

எங்களுக்கு இதையெல்லாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்காததால் எப்பவுமே ஒருவித இழப்பு அல்லது பயத்திலேயே காலத்தைக் கழிக்கின்றோம். நம் சந்ததிகளுக்காவது உதவட்டும். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

வாங்க தமிழ்ப்ரியன்

அந்த எண்ணத்தில் தான் எழுத துவங்கி அடுத்த பதிவும் போட்டாச்சு