Tuesday, February 16, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி - 16/2/10

CBSC பாடத்திட்டத்தில் வரும் கல்வியாண்டிலிருந்து மாறுதல்கள்
கொண்டு வரப்போறாங்க. இதுவரை continuous assessment (தொடர்
பரிட்சார்த்தம்) செஞ்சுகிட்டு இருந்தாங்க. அது வெறும் பாடங்களுக்கு
மட்டும்தான். பிற கலைகளில் அதிகமாக கவனம் செலுத்தாம
இருந்தாங்க. ஆனா வரும் கல்வியாண்டிலிருந்து பிற கலைகள்
(extra curricular activities)கட்டாயப்பாடமாக்கி
அவற்றுக்கும் மதிப்பெண்கள் கொடுக்கப்போறாங்க. ஏட்டுச்
சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதுடன் ”கைத்தொழில் ஒன்றைக்
கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்க்கொள்” என
உணர்ந்து மாற்றம் கொண்டுவந்த கல்வியாளர்களுக்கு நன்றி.

********************************************************

இதுவும் கல்வி பத்தித்தான். ஆந்திராவில் அரசு பள்ளிகளில் கூட
CBSC பாடத்திட்டம் தான் சொல்லிக் கொடுத்துகிட்டு இருந்தாங்க.
வரும் கல்வியாண்டிலிருந்து வெறும் பாடத்திட்டம் மட்டுமில்லாமல்
பரிட்சார்த்தம் கூட continuous assessment (தொடர்
பரிட்சார்த்தம்) முறையில் அமுல் படுத்தப்படும்னு அறிவிச்சிருக்காங்க.
அனைவரின் வரவேற்பையும் பெற்றிருக்கு இந்தத் திட்டம்.
******************************************************

ஆஷிஷுக்கு எப்பவும் பள்ளியில் ஒரு பிரச்சனை இருக்கும்.
ஐயா 1ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பொழுது ஆஷிஷின்
சாப்பாட்டுக்கூடையில் மண் இருக்கும். ”ஏன் ஆஷிஷ் இப்படின்னு!!”
கேட்க ஆஷிஷ் சொன்னது,
“ஆனந்த்னு ஒரு பையன் தாம்மா டெய்லி போடுறான்”

அவங்கம்மாவைத் தெரியும் என்பதால் போன் செஞ்சு கேட்டேன்.
ஆனந்திடமே போன் கொடுத்தார் அவன் அம்மா,”நீங்க மட்டும்
ஏன் ஆண்ட்டி விதம் விதமா ஆஷிஷுக்கு செஞ்சு அனுப்பறீங்க!
எங்கம்மா வெறும் சோறுதான் தர்றாங்க, அதான் அப்படி
செஞ்சேன்” என்றான் என்ன பேசன்னு புரியலை வெச்சிட்டேன்.

இப்பவும் இதுத்தொடர்கதை. என்ன கூடையில் மண் விழுவதில்லை.
ஆஷிஷ், அம்ருதாவுக்கு சாப்பிடக் கிடைப்பதில்லை. கூடவே
வெச்சு அனுப்பினாலும் எல்லாம் பசங்க சாப்பிட்டு விடுவாங்க.

நேற்று செஞ்சு அனுப்பின பாஸ்தா ஆஷிஷ் அம்ருதாவுக்கு
4 பீஸ்தான் கிடைச்சுதாம்!! காலையிலயும் அதிகம் வெச்சு,
மதியமும் அவங்களுக்காக எடுத்து வைக்கும் அளவுக்கு
செய்ய வேண்டியதா இருக்கு!!

அன்னைக்கு ஆனந்த் கேட்ட மாதிரி,”ஏன் தான் நான் மட்டும்
வெரைட்டியா செய்யறேனோன்னு இருக்கு!!!”
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

*******************************************************

பேரண்ட்ஸ் கிளப்பில் முன்பு போட்ட குழந்தைகளுக்கான
உணவு பதிவுகளின் லிங்கள் இங்கே. நீங்களு வெரைட்டியா
செஞ்சு கொடுக்க உதவும்.

பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கான உணவு

இட்லி வகைகள்

DOSA VARIETIES

NOODLES

இதுவும் படிக்கலாம்


********************************************************

இந்த வாரத் தமிழ்மண நட்சத்திரம் எங்கள் புதுகை ப்ளாக்கர்களின்
தலைவர் சுரேகா. வாழ்த்துக்கள் தலைவரே!

நட்சத்திர பதிவுகளில் மணிமகுடம் இன்றைய இந்தப் பதிவு.
படிக்காதவங்க கண்டிப்பா படிக்க இதோ லிங்க்.

**********************************************************

16 comments:

வல்லிசிம்ஹன் said...

எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேனு பார்த்தேன்:)
பெண் மட்டும்தான் கையில் டிபன் எடுத்துப் போவாள். வீட்டுக்குத் திரும்பும்போது ஏன் இதனை பசி வெறின்னு நான் கேட்பேன். உன் சப்பாத்தி,புலாவ் எல்லாமென் தோழிகளுக்குப் போய்விடுகிறது எனக்க் அவங்க கொண்டு வரது பிடிக்கலை. அதான் அப்படின்னு சிரிப்பாள். இதென்னடா தொந்தரவுன்னு, அப்புறம் சப்பாத்தியும், சப்ஜியும் ஒரு எட்டு பேருக்குக் காணும்படி அனுப்புவேன்.
பகிர்ந்துகொள்ளும் ஆஷிஷ் செல்லத்துக்கு வாழ்த்துகள். அவனுடைய அன்னைக்கும் ''சூப்பர் மாம் '' பட்டம் கொடுக்கிறேன்.

நாஸியா said...

அது இல்ல?

**

எங்கும்மாவும் எங்களுக்கு வித விதமா செஞ்சு தருவாங்களோ இல்லையோ, என்னுடைய தோழிமாரெல்லாம் ஹாஸ்டல் புள்ளைங்க.. அதனால பத்து ப்ரேக் அப்பவே என்னுடைய லன்ச்சு பாக்ஸ் முடிஞ்சிடும்..இத்தனைக்கும் பெரிய்ய்ய டப்பாவுல தான் நிறைய தருவாங்க ம்மா.. பூரி செஞ்சு அனுப்பினா பத்து பூரியாச்சும் இருக்கும்.. இட்லியும் அப்படிதான்.. அப்படியும் ஒண்ணும் தேராது.. எப்பவாச்சும் ஒருத்தி மட்டும் ஹாஸ்டல் சாப்பாடு தருவா.. ;) இல்லன்னா நாலு மணி வரைக்கும் பட்டினி தான்.. வீட்டுக்கு வந்த பிறகும் பசி இருக்காது..ம்மா கத்த கத்த அப்படியே தூங்கிடுவேன்.. அப்ப‌டியே ரொம்ப‌ மெலிஞ்சு போயி எதிர்ப்பு ச‌க்தி இல்லாம‌ டைஃபாய்டும் டெங்குவும் +1, +2 ப‌டிக்கிற‌ப்போ வ‌ந்து ம‌ருத்துவ‌ம‌னையில‌ ஒரு வார‌ம் இருக்குற‌ நிலை வ‌ந்தது.. ரொம்ப‌ க‌ஷ்ட‌ப்ப‌ட்டேன்..

பயமுறுத்துரேன்னு நினைக்காதிங்க.. என்னுடைய அனுபவம்.. பழைய நினைவுகளை கிளரிட்டு.. :)

நாஸியா said...

I meant adhu CBSE..

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

சேம் ப்ளட்டுன்னு சொல்லுங்க. பாவ்பாஜிபராத்தா செஞ்சா 8தான் வெக்கணும் அம்ருதாவுக்கு. அவ ஃப்ரெண்ட் முன்னாடியே புக் செஞ்சு வெச்சிருக்கா.:))

வருகைக்கு நன்றி.

உங்க வாயால பாராட்டு சந்தோஷமா இருக்கு

pudugaithendral said...

வாங்க நாஸியா,

காலையில் டிபன், பால் குடிச்சாத்தான் பஸ்லயே ஏற விடுவேன். 10மணி ஷார்ட் ப்ரேக்கும் கைல கொடுத்திடுவேன். லஞ்சு ப்ரேக்ல எப்படியும் வயிறு நிறையாது. அதனால் வந்ததும் சாப்பாடு கொடுத்திடுவேன். ப்ளானிங்கா அட்டாக்குறேன்ல

pudugaithendral said...

I meant adhu CBSE..//

புரியல நாஸியா

ஹுஸைனம்மா said...

நானும் நினைச்சேன், அது CBSE தானேன்னு; இல்லை இது வேறயா?

ஆமா, CBSE-ல நிறைய மாற்றங்கள் கொண்டுவர்றதா நியூஸ் வர்றது நல்ல விஷயம்.

ஸ்கூல்/ காலேஜில ஒரு பெரிய வட்டமா இருந்து தோழிகளுடன் எல்லாரின் சாப்பாடையும் ஆளுக்கொரு பிடி சாப்பிட்ட நினைவுகள் வருது.

அப்பல்லாம் நமக்குன்னு இந்த மாதிரி புதுப்புது ரெஸிப்பிகள் கண்டுபிடிக்கிற சிரமத்தை நம்ம அம்மாக்களுக்குக் கொடுத்ததில்லையே நாம. இப்ப நம்ம பிள்ளைகளால கிட்டத்தட்ட ஒரு 5-ஸ்டார் செஃப் ரேஞ்சுக்கு ஆராய்ச்சி நடத்தவேண்டியிருக்கு!!

காற்றில் எந்தன் கீதம் said...

பிரியாணி நல்ல இருக்கு அதுவும் இந்த சாப்பாட்டு மேட்டர் :) உங்க பதிவு எல்லாம் பார்த்து நானும் கொஞ்சம் நல்ல சமையல் செயிறேன்னு நம்ம ரங்கமணி சொல்லுறாரு உங்களுக்கு தான் நன்றி சொல்லணும் குரு :)
ஆமா எதோ கொஞ்ச நாள் கிளாசுக்கு (உங்கபதிவுகளுக்கு) வரலன்னு என்னை உங்க ப்ளாக் லிஸ்ட் ல இருந்து தூக்கிட்டின்களா:( (நம்ம கம்ப்யூட்டர் ல ஒரு கோளறு அத்தோட 10 நாள் ஊருக்கு போய்டேன் குரு )
சுதர்ஷினி
(காற்றில் எந்தன் கீதம்)

நாஸியா said...

CBSC-->CBSE central board of secondary education அதையா சொல்ல வர்றீங்கன்னு கேட்டேன்.. ;)


\\ப்ளானிங்கா அட்டாக்குறேன்ல\\

சூப்பர்! வயித்தை காய போடக்கூடாதுங்குறது நான் ரொம்ப லேட்டா கத்துக்கிட்ட பாடம்.. :|

pudugaithendral said...

ஒரு 5-ஸ்டார் செஃப் ரேஞ்சுக்கு ஆராய்ச்சி நடத்தவேண்டியிருக்கு!!//

ஆமாம் ஹுசைனம்மா,

சிபிஎஸ்சியில பல நல்ல மாற்றங்கள்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சுதர்ஷிணி,

குருவா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அது ப்ளாக்ல ஏதோ பிரச்சனைன்னு எல்லா லிஸ்டையும் எடுத்தேன். அதைத் திரும்ப சேக்க முடியலை. இப்பத்தான் ஒண்ணொன்னா சேக்கறேன்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

CBSC-->CBSE central board of secondary education அதையா சொல்ல வர்றீங்கன்னு கேட்டேன்.. ;)

யெஸ்ஸு

ஹுஸைனம்மா said...

இதில் நீங்கள் ரெஃபர் செய்திருக்கும் பள்ளி உணவுகள் குறித்த மற்ற பதிவுகளையும் படித்தேன். ஸேம் பிஞ்ச்!! ஆல்மோஸ்ட் நானும் இதுபோலத்தான் பிரட் வகைகள் செய்கிறேன்.

சோறு வேண்டாம் என்பதற்கு இங்கேயும் அதே காரணம்; விளையாட டைம் இல்லையாம்!!

நன்றி!! ;-)))

Thenammai Lakshmanan said...

என் பையன்கள் சிபிஎஸ இ முடிச்சு நாளாகுது இப்போ ஆபீஸுக்கு லஞ்ச் கொண்டு போனாலும் இப்படித்தான் தென்றல் நடக்குது அவனுக்கு ஒரு டப்பா அவன் நண்பர்களுக்கு ஒரு டப்பா

pudugaithendral said...

ஆஹா சேம்ப்ளட்டுன்னு சொல்லுங்க ஹுசைனம்மா

pudugaithendral said...

ஆபீஸுக்கு லஞ்ச் கொண்டு போனாலும் இப்படித்தான் தென்றல் நடக்குது அவனுக்கு ஒரு டப்பா அவன் நண்பர்களுக்கு ஒரு டப்பா//

ஆஹா அப்பயுமா!! கந்தா என்னை காப்பாத்து.