Wednesday, February 10, 2010

பருப்பிலே இருக்கு பலவித சத்துக்கள்

வாங்க வாங்க, ஆளுக்கு கொஞ்சம் எடுத்துகிட்டு அப்படி சோபாவுல
உக்காருங்க. சாப்பிட்டுகிட்டே பேசிக்குவோம்.
எடுத்துக்கோங்க.
என்னது? ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிட்டா உடம்புக்கு ஆகாதா!

ஆமாங்க நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா நிஜம் அது இல்லையே.

நானா எதுவும் சொல்லலீங்க. எனக்கு Nutrition பரிந்துரை செஞ்ச
டயட் சார்ட்ல தினமும் 2 வால்நட் சாப்பிடணும்னு இருந்துச்சு.
”அந்த பேரையே இப்பத்தான் கேள்விப் படறேன். இதெல்லாம்
காஸ்ட்லி அயிட்டம். நான் மாட்டேன்பான்னு ”!!சொல்லிட்டு கூலா
இருந்தேன். விதி விட்டுச்சா? 6 மாசத்துக்கு முன்னாடி கைவலில
அவதி பட்டதுதான் உங்களுக்குத் தெரியுமே!!

ஸ்பாண்டிலைடிசிஸ்னாங்க, ஃபைரோமயாலஜியான்னாங்க. கடைசியில
விட்டமின் டி குறைவு. அதனால்தான் வலின்னு சொல்லிட்டாங்க.

அதைப் பத்தி அதிகம் தெரிஞ்சிக்கலாம்னு கூகுள் ஆண்டவர்கிட்ட
கேட்டேன். அருவியா கொட்டுது விஷயம். அதுல Walnut
உடலில் எடையை கூட விடாம செஞ்சு, கொலஸ்ட்ராலை குறைக்கும்னு
சொன்னார் ஆண்டவர். அதுமட்டுமா புரதம், கால்சியம்,மக்னீசீயம், ஜிங்க்,
கார்போஹைட்ரேட், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு எல்லாம்
இருக்குன்னு தெரிஞ்சிச்சு. அட கொடுமையே இதை தானே மாத்திரையா
கொடுத்திருக்காங்க. இதை முன்னாடியே சாப்பிட ஆரம்பிச்சிருந்தா
பிரச்சனை கொஞ்சமா இருந்திருக்குமேன்னு தோணிச்சுங்க.
கண் கெட்ட பின்னாடி சூரிய நமஸ்காரம்தான்னாலும் நல்லதுன்னு
உடனே தினமும் 2 வால்நட் சாப்பிட ஆரம்பிச்சேன்.
மத்த பருப்புங்கள்லயும் ஏதேனும் சத்து இருக்கணுமேன்னு மனசு
தோணிச்சின்னாலும அதை தெரிஞ்சிக்கவும் புத்தி வேலை செய்யணுமே.
பசங்களுக்கு தினமும் 2 பாதம் பருப்பு கொடு. அது மூளையை நல்லா
வேலை செய்ய வைக்கும்னு அத்தை சொல்வாங்க. பசங்களுக்கு மட்டும்
வாரத்துக்கு 4 தடவை கொடுத்துகிட்டு இருந்தேன். நாமும் 2 சாப்பிடுவோம்னு
சாப்பிட ஆரம்பிச்சேன்.

அந்த நேரம் பார்த்து prevention அப்படின்னு ஒரு புத்தகத்தை கடையில்
பாத்து வாங்கிகிட்டு வந்தேன். அதில் உடல் எடையை குறைக்கும் டயட்டில்கூட
தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் சாப்பிட்டு வரச்சொல்லி ஒருத்தருக்கு
அறிவுரை சொல்லி அவரும் சாப்பிட்டு நல்லா தெம்பா இருப்பதா சொல்லியிருந்தாங்க.
பாதாம் சாப்பிடுவது நல்லதுன்னு அப்பத்தான் தெரிஞ்சிச்சு.

protein, vitamin E, monsaturated fats, as well as magnesium, potassium, and calcium இந்த சத்துக்களெல்லாம் பாதாமில் இருக்காம். இதைத் தவிர
sodium, and vitamins like vitamin B1, B2, and B3 or niacinவும் இருக்காம்.அப்பா தினமும் கடலமிட்டாய் வாங்கி கொடுப்பார்.
ஏதாவது சாதிச்சாலும் கடலைமிட்டாய் தான் ட்ரீட். வெல்லமும் சேர்த்து
செய்வதால் உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்லி சொல்லியே
சாப்பிட வெச்சிடுவார். அந்த பழக்கத்துல இப்ப தினமும் மதியச் சாப்பாட்டுக்கு
பிறகு 2 கடலை மிட்டாய் சாப்பிடறதை பழக்கமா வெச்சிருக்கேன்.

இந்த கடலை(peanuts)இது சல்லீசா கிடைக்குதுங்கறதாலேயே
நாம இதை மதிக்க மாட்டோம்.

இதுல கலோரி அதிகம் தான்னாலும்,vitamin E, B3, and B6 இருக்கு.
இதைத்தவிர பொட்டாசியம்,ஜிங்கும் இருக்கு.

சக்கரை பொங்கலிலோ, வெண்பொங்கலிலோ கண்ணுல படும் நெய்யில
வறுத்த முந்திரி பருப்பு என்ன டேஸ்ட்!! முந்திரி பருப்பை உடைச்சுக்
கொடுக்கும் சாக்கில் வாயில போட்டுகிட்டது, சக்கரை பொங்கல் முந்திரிக்கு
அடிச்சுகிட்டதுன்னு முந்திரி பருப்புக்கும் நிறைய்ய கொசுவத்தி.

அப்பா பேங்க்ல மீட்டிங்கின் போது ராதா கபே ஹோட்டலிலிருந்து
நெய்யில் வறுத்து, உப்பு போட்ட முந்திரி பருப்பு கொடுப்பாங்க.
அப்பா அதை சாப்பிடாம கொண்டு வந்து எனக்கும் தம்பிக்கும் தருவாங்க.

இந்த முந்திரி எங்க ஊருல ஃபேமஸான அயிட்டம். ஆதன்க்கோட்டை
முந்திரி அம்புட்டு ஃபேமஸ். முந்திரில என்ன சத்து இருக்குத் தெரியுமா?
செலீனியம்,மக்னீசியம்,பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து.இந்த பாஸ்பரஸ் நம் உடம்புக்கு கிடைக்கும் கால்சிய சத்துக்கள்
முறையா எலும்புகள், பல் உற்பத்திக்கு போய் சேருதான்னு பாத்துக்குமாம்.


பெரிய பிஸ்தாவான்னு நீன்னு கேப்பாங்க. பெரிய ஆளான்னு கேக்கற
மாதிரின்னு வெச்சுக்கோங்க. நிஜமாவே இந்த பிஸ்தா பருப்பும் பெரிய
பருப்புதான்.

proteins, monosaturated fats, calcium and phosphorus இதுல இருக்கு.
விட்டமின் A&C யும் இருக்கு.


மொத்தத்துல இந்த NUTகளை சாப்பிட்டா நம்ம உடம்புகளின் NUT கழண்டு
போகாம இருக்கும்னு சொல்றாங்க. இந்த வகை பருப்புக்கள் விலை ஜாஸ்தின்னாலும்
உடம்புக்கு நல்லதுன்னா எவ்வளவு காஸ்ட்லி மருந்தானாலும் வாங்கி சாப்பிடற
மாதிரி சாப்பிடறது நல்லது.

அதிகமாகிவிடமா கொஞ்சமா, அதிகம் உப்பு சேர்க்காம மாலை நேரத்துக்கு
கொறிக்கறா மாதிரி குடும்பம் மொத்தமும் சாப்பிட்டா எம்புட்டு நல்லது.

அதுலயும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ரொம்ப முக்கியம். பெண்களுக்குன்னு
சொன்னதால இது ஏதோ தங்கமணி ஆதரவுன்னு நினைக்காதீங்க.

பெண்களுக்கு குழந்தை பிறப்பு, மெனோபாஸ், மாதாந்திர தொந்திரவுகள்னு
சத்துக்கள் நிறைய்ய இழந்திடறாங்க. அதனாலதான் சொன்னேன்.

வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு கொடுன்னு பெரியவங்க
அப்பவே சொல்லியிருக்காங்க. நாமும் பெரியவங்க சொல்படி கேட்போம்.

அதுக்குள்ள எந்திரிச்சிட்டீங்க! ஒரு முக்கியமான விஷயம். நம்ம நானானிம்மா


பாதாம், முந்திரி சேத்து அடை செய்வது எப்படின்னு சொல்லியிருக்காங்க.

உங்க எல்லோருக்கும் என்னோட அன்பளிப்பா 1 கிலோ ட்ரை ஃப்ரூட்ஸ்.

ALL ENJOY!! BE HAPPY AND HEALTHY

31 comments:

Jeeves said...

யக்கோவ்.. புதுசு புதுசா சொல்றீங்க. இதெல்லாம் சாப்டு குண்டாய்ட்டேன் வைங்க.. அப்புறம் சொல்லிட்டேன் ஆமா

புதுகைத் தென்றல் said...

இதெல்லாம் சாப்டு குண்டாய்ட்டேன் வைங்க.. அப்புறம் சொல்லிட்டேன் ஆமா//

அன்பளிப்பா கொடுத்திருக்கற 1 கிலோவையும் ஒரே நாளிலோ ஒரு வாரத்துலேயோ நீங்க மட்டுமே காலி செஞ்சா குண்டாத்தான் ஆவீங்க. அளவா சாப்பிட்டு அருணாவுக்கும், மருமக ஜெயஸ்ரீக்கும் கூட கொடுங்க.

அப்புறம் ஏன் குண்டாகப்போறீங்க :))

அமைதிச்சாரல் said...

தென்றல்,இதுல அந்த வால்நட்டை தட்டோட இந்தப்பக்கம் தள்ளுங்க..

முந்திரி, திராட்சை ம்ம்ம்.சின்னப்புள்ளைல அம்மா கடைக்கு போகச்சொன்னா, முந்திரி,திராட்சை வாங்கிக்க லஞ்சம் கொடுத்தாத்தான் போவேன்.

அநன்யா மஹாதேவன் said...

இங்கே டயட்டீஷன், வீக்லீ ஒன்ஸ் ஒரு பவுல் டிரை ஃப்ரூட்ஸ் திங்க சொல்லி இருக்காங்க. அதுவும் வெஜிடேரியன்ஸ்க்கு இப்படி சாப்பிடறது முக்கியமாம். மாமிசத்தில் கிடைக்கும் சில முக்கிய புரத்ச்சத்துக்கள் நட்ஸ் ல தான் இருக்காம். எனக்கு வால்நட்டும் பதாமும் இஷ்டம். பதாமை ராத்திரி ஊரவைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடறேன். பதாம், தலைமுடி வளர்ச்சி, தோல் பொலிவு இதெல்லாத்துக்கும் உறுதுணையா இருக்கு.அட ஆமாம், சொன்னாப்ல, முடி கொஞ்சம் நீளம் வளந்து தான் இருக்கு. btw, ஒரு கிலோ பருப்புக்கள் கொடுத்து இந்த மாச பட்ஜெட்டில் கணிசமான தொகை சேமிச்சதுக்கு நன்றிகள் பல.

புதுகைத் தென்றல் said...

அந்த வால்நட்டை தட்டோட இந்தப்பக்கம் தள்ளுங்க..//

உங்களுக்கு இல்லாததா, ஓடு ஒடிச்சு ரெடியா இருக்கறதையே தர்றேன் அமைதிச்சாரல்

புதுகைத் தென்றல் said...

அருமையான தகவல்களுக்கு நன்றி அநன்யா,

ஒரு கிலோ பருப்புக்கள் கொடுத்து இந்த மாச பட்ஜெட்டில் கணிசமான தொகை சேமிச்சதுக்கு நன்றிகள் பல.//

நோ மென்ஷங்க :))

துளசி கோபால் said...

நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க.

நம்ம தோழிவீட்டு மரத்துலே காய்ச்சதுன்னு ஒரு மூட்டை வால்நட்ஸ் வீட்டுக்கு வந்து ஒடைச்சு எடுத்துவைக்க நேரமில்லாமச் சும்மாக் கிடக்கு.

மஃப்பின் செய்யும்போது வால்நட்ஸ் போட்டா...அம்மாம்ருசி.

கொட்டைப் பருப்பு எல்லாம் தினம் நவ்வாலு தின்னாப் போதும்.

புதுகைத் தென்றல் said...

கொட்டைப் பருப்பு எல்லாம் தினம் நவ்வாலு தின்னாப் போதும்.//

டீச்சரும் சொல்லிட்டாங்க பாருங்க.
வருகைக்கு நன்றி

கோமதி அரசு said...

//NUTகளை சாப்பிட்டா நம்ம உடம்புகளின் NUT கழண்டு போகாம இருக்கும்னு சொல்றாங்க//

நல்ல தகவல்,தென்றல்.

அன்பளிப்புக்கு நன்றி.

Mrs.Faizakader said...

எல்லா பருப்புகளின் உள்ள சத்துகளை இனி தெரிந்தே சாப்பிடுவோம்.

முன்பு எனக்கு ஒரு சந்தேகம் வரும் பாதாம் சாப்பிட்டால் உடல் குண்டாகிவிடுமோ என்று பயம் இருக்கும் ஆனால் சில புத்தங்களில் படித்து தெளிவு பெற்றேன். முந்திரி சாப்பிட்டால் உடல் குண்டாகும்னு சொல்லுவாங்க அது உண்மையா?

ட்ரைஃப்ரூட் ரொம்ப டேஸ்டாக இருக்கு..

Vidhoosh said...

ஐயோ சக்கரைப் பொங்கல் வேற ஞாபகம் வந்து பாடாய் படுத்துதே... நெய் பொழிந்து செய்தால்தானே அந்த சுவை ஆகா...

ஹும்ம்ம்.. எதைப் பாத்தாலும் எப்டியெல்லாமோ கொசுவத்தி புகைய கக்க ஆரம்பிச்சுருது.. :(

இப்ப சக்கரைப் பொங்கல் வேணும்... ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்....அம்மா...ஆ ஆ

வித்யா said...

அளவா சாப்பிடனும். சூப்பர் போஸ்ட். ஓட்டு போட்டாச்சு:))

ஹுஸைனம்மா said...

நல்ல விஷயங்கள் தென்றல். நன்றி.

கடலை மிட்டாய் ரொம்ப நல்லதுதான், ஆனா இப்ப சீனிப்பாகுல செய்வாங்க போல, பழைய டேஸ்ட் இல்ல (ஆனாலும் விடுறதில்ல).

வேர்க்கடலை தினமும் சாப்பாட்டில் சேர்க்க ஒரு சுலப வழி, தாளிக்கும்போது உடைச்சு சேர்க்கலாம். அப்புறம், (ஸாதிகாக்கா டிப்ஸ்) குருமா போன்றவைக்கு தேங்காயோட சேர்த்து அரைச்சு விடலாம். முந்திரி, பாதாமும் சேர்க்கலாம்.

என்னோட தாளிப்புல கடுகு, உ.பருப்பு, வெந்தயம், சீரகம், எள், வே.கடலை எல்லாம் சேரும்.

ஹை, நான் கேள்வியே கேக்கலை இல்ல? ;-)

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி கோமதி அரசு

புதுகைத் தென்றல் said...

முந்திரி சாப்பிட்டால் உடல் குண்டாகும்னு சொல்லுவாங்க அது உண்மையா?//

முந்திரியை சாதாரணமா சாப்பிடலாம். தினத்துக்கும் 6 என்ற அளவில் சாப்பிடலாம். வெயிட் போடாது. நெய்யில வறுத்தது, உப்பு சேத்ததுன்னு கொஞ்சம் டேஞ்சர் தான். என்ன சாப்பிட்டா என்ன? தினமும் உடற்பயிற்சி, நடை செஞ்சிட்டா சரியாகிடும்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

இப்ப சக்கரைப் பொங்கல் வேணும்... ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்....அம்மா...ஆ ஆ//

இப்ப இங்க கிளைமேட்டுக்கு சுடச்சுட வெண்பொங்கல், மிளகு தாளிச்சு சாப்பிடணும்போல இருக்கு. அதுக்கு எனன் செய்ய? :)

புதுகைத் தென்றல் said...

தாங்க்ஸ் வித்யா

புதுகைத் தென்றல் said...

டிப்ஸ் சூப்பர் ஹுசைனம்மா,

டிப்ஸ் சொல்ற மூடுல கேள்வி கேக்க மறந்துட்டீங்களா இருக்கும் :)

Sangkavi said...

அருமையான தகவல்....

நாஸியா said...

நன்றி நன்றி நன்றி...

வால்நட்ட நம்மூருல அக்ரூட்டுன்னு சொல்லுவாங்க தானே... கல்யாண வீடுங்களுக்கு போனா ஓட்டோட கிடைக்கும்.. அதை உடைச்சு சாப்பிடறதுக்குள்ள பெரும்பாடு.. ஆனா அவ்வளவு ருசி! :)

எனக்கு இப்ப கடலை மிட்டாய் சாப்பிடனும் போல இருக்கே...

ஸாதிகா said...

நல்ல தகவல்!

எம்.எம்.அப்துல்லா said...

இந்த முந்திரி எங்க ஊருல ஃபேமஸான அயிட்டம். ஆதன்க்கோட்டை
முந்திரி அம்புட்டு ஃபேமஸ்.

//

போனவாரம் கந்தர்வகோட்டை போறப்ப வழியில் ஆதனக்கோட்டையில வண்டிய நிறுத்தி வாங்கி சாப்பிட்டேன்.(வயித்தெறிச்சலா இருக்கா!) இப்பல்லாம் ரேட்டு கூடசொல்றாங்கக்கா. கால்கிலோ 70 ரூபாயாம்.

:)

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி சங்க்வி

ஆமாம் ஸாதியா அக்ரூட்டுன்னு தான் சொல்வாங்க. நான் உடைச்சு வெச்சுகிடுவேன்.

புதுகைத் தென்றல் said...

போனவாரம் கந்தர்வகோட்டை போறப்ப வழியில் ஆதனக்கோட்டையில வண்டிய நிறுத்தி வாங்கி சாப்பிட்டேன்.(வயித்தெறிச்சலா இருக்கா!) //

நல்லா இருங்க. :))
இப்பல்லாம் ரேட்டு கூடசொல்றாங்கக்கா. கால்கிலோ 70 ரூபாயாம்.//

எல்லாமே விலை ஏறிப்போச்சு. அப்புறம் வக்கீல் கோபால கிருஷணன் வீட்டு வாசலில் பழைய மாமி பஜ்ஜி போடுவதில்லை. அவங்க இறந்து போயிட்டாங்களாம். அவங்ககிட்ட வேலை பாத்தவங்க சின்ன வண்டி வெச்சு பஜ்ஜி போட்டுகிட்டு இருக்காங்க. :(

henry J said...

Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

தங்கவேல் மாணிக்கம் said...

தென்றல், ஆதண்டங்காய் என்று ஒன்று இருக்கின்றதே அது எங்கே கிடைக்கும் ? விபரம் தெரியுமா?

அமைதிச்சாரல் said...

புதுகைத்தென்றல்,

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். விருப்பமும், நேரமும் இருந்தால் எழுதுங்க.

http://amaithicchaaral.blogspot.com/2010/02/blog-post_10.html

thenammailakshmanan said...

//வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு கொடுன்னு பெரியவங்க
அப்பவே சொல்லியிருக்காங்க. நாமும் பெரியவங்க சொல்படி கேட்போம்.//

உண்மை தென்றல் நன்றி உங்க பரிசுக்கு

புதுகைத் தென்றல் said...

வாங்க தங்கவேல்,

அம்மாகிட்ட ஆதண்டங்காய் பத்தி கேட்டேன். வயிற்றில், கருப்பையில் இருக்கும் பூச்சியை எடுக்க சாப்பிடுவாங்களாமே அதுவா? கருப்பையில் இருக்கும் பூச்சி எடுத்துட்டா கரு தங்குமாம். எட்டிக்காயை விட கசப்பா இருக்குமாம்.

ஆடிமாசம் மட்டுமே கிடைக்கும் அபூர்வ காயாம். ஆடி அமாவாசையின் போது கண்டிப்பாய் புதுகை பக்கம் கிடைக்கும்னு சொன்னாங்க.

புதுகைத் தென்றல் said...

மாட்டிவிட்டுட்டீங்களா வர்றேன் இருங்க அமைதிச்சாரல்

புதுகைத் தென்றல் said...

நன்றி தேனம்மை