Thursday, February 04, 2010

SELF ESTEEM- சுயமரியாதை

SELF ESTEEM - சுய மரியாதை இது நம்மைப்பற்றி நாம் வைத்திருக்கும் பிம்பத்தின்
பெயர். நமது எண்ணங்களை வைத்து நாம் அளவீடு செய்து வைத்திருக்கும்
ஒரு பிம்பம். இது நம் பிம்பம்.

உதாரணமாக: நான் அழகானவள், என் தவற்றில் இருந்து நான் கற்கிறேன்,
போன்ற எண்ணங்கள் நம்மை பாசிட்டிவ் மனிதராக காட்டும். அதிக
அளவில் சுய மரியாதை உடையவர் என புரிந்து கொள்ளலாம்.

என்னத்த செஞ்சு, என்னத்த படிச்சு, நான்லாம் எங்க தேறப்போறேன்,

ரீதியில் பேசுபவர்கள். சுய மரியாதை அற்றவர்கள். எவ்வளவு
நெகட்டிவ் எண்ணங்கள் இருக்கிறதோ அவ்வளவு சுயமரியாதை
அற்றவராக இருப்பார்கள்.




நம்மைப்பற்றி நாம் வைத்திருக்கும் சில அபிப்ராயத்தை
சொல்லிக்கொள்ள முடியாமல் இருக்கும். மற்றவரைப்போல்
இல்லாமல் கொஞ்சம் வித்யாசமானவராக இருக்கலாம்.தனித்துவம்
என்றும் சொல்லலாம். (Unique individual)இந்த ஒரு காரணம்
போதும் நாம் கர்வத்தோடு தலை நிமிர்ந்து நிற்க.

சுயமரியாதை நம் வாழ்க்கையை பலவிதமாக பாதிக்கிறது.
நாம் நினைக்கும் விதம், நடந்து கொள்ளும் விதம், அடுத்தவரைப்
பற்றிய நம் எண்ணங்கள் எல்லாம் இதில் அடங்கும். நாம் இலக்கை
அடையும் விதத்தில் இது பாதிக்கிறது.

அதிக சுய மரியாதை எண்ணம் நம்மை அதிக செய்ல்பாட்டுத்திறன்
உடையவராகவும், தகுதிவாய்ந்தவராகவும், அன்பானவராகவும்,
காரிய சித்தி உடையவராகவும் எண்ண வைக்கிறது.

குறைந்த சுய மரியாதை எதற்கும் உபயோகமற்றவராக,
எந்தச் செயலும் செய்யத்தெரியாதவராக,அன்பற்றவராக
எண்ண வைக்கும்.

உங்கள் சுய மரியாதையில் தாக்கத்தை
ஏற்படுத்தும் சில காரணிகள் சில வற்றைப்பார்ப்போம்:

1. வீடு: வீட்டில் இருப்பவர்களுடனான உங்களின் உறவு
எப்படி இருக்கிறதோ அதைப் பொருத்து சுய மரியாதை அளவு
நிர்ணயிக்கப்படுகிறது.

2.பள்ளி: ஆசிரியர்கள், உடன் படிக்கும் மாணவர்கள்,
அலுவலக பணியாளர்கள் இவர்களுடன் உங்களின்
உறவு பள்ளியில் வெறும் பாடம் மட்டும் பயிலாமல்
விளையாட்டு,ஒழுங்கு, லீடர்ஷிப் கிளப், ஃப்ரெண்ட்ஷிப் கிளப்,
NSS ஆகியவற்றில் ஈடுபாடு.

3: பணியிடத்தில்: அலுவலகத்தில் உயரதிகாரி, சம பணியாளர்கள்,
வேலைப்பளு, வாங்கும் திட்டுக்கள், பாராட்டுக்கள், பதவிஉயர்வு
வேலையை பொறுப்பாக முடித்து வீட்டையும் அலுவலகத்தையும்
சமமாக பார்க்கும் பொறுப்புணர்ச்சி.

4. சின்ன வயதில் நாம் நடத்தப்பட்ட விதம்,பெரிய வயது
நண்பர்கள்( அண்ணாவோட ஃப்ரெண்ட் நமக்கும் ஃப்ரெண்டாகி
அவருடைய அனுபவங்களும் நமக்கு பாடமாகுமே)அக்கம் பக்கத்துக்காரர்கள்.

5. சமூகம்: ஒரே ஊரில் ஒரே தெருவில் பல வருடங்கள் எங்கும்
செல்லாமல் வாழ்பவர் கற்றதை விட பல இடங்களுக்கு செல்பவர்
கற்பது ஏராளம். பிற மதக் கலாச்சாரங்கள், மத வழிபாட்டு முறைகள்,
அடுத்தவர்கள் காட்டியிருக்கும் பிம்பங்களுடன் உங்களின் அனுபவம்.

6. பொதுவாக: நல்ல அனுபவங்கள், நிறைந்த உறவு இவை சுய மரியாதையை
நிறைவாக்கும். கெட்ட அனுபவங்கள், துயரமான உறவுநிலை குறைவான
சுய மரியாதைத் தான் தரும்.

எந்த ஒரு சின்ன விடயமோ அல்லது நபரோ நமது சுய மரியாதை
இவ்வளவுதான் என்று வரையறுக்காது. அனுபவங்கள் தரும் பாடமாக
அவை மாறிக்கொண்டே இருக்கும்.

நம் சுயமரியாதையை அதிகபடுத்துவது எப்படி?

சேலஞ்சிங்கான வேலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
(ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு
டயலாக் அடிச்சு ரொம்ப ரிஸ்க் எடுத்துட்டா அது ஓவர்
கான்பிடன்ஸாகி கவுத்துப்புடும்)

வாழ்க்கையை அர்த்தமுள்ளாதாக்கிக்கொள்ள வேண்டும்.

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மாறும் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளும்
மனம் இருந்தால் மார்கமுண்டு.

எப்போதும் நம்மை பற்றி நல்லதாக நினைக்க என்னென்ன
செய்யலாம்??



நமக்கு நாமே தான் நல்ல நண்பன்/தோழி.

நமது பலம் பலவீனத்தை அலசிப்பார்த்து அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சாத்தியமான குறிக்கோள்களை வைத்துக்கொண்டு, அதை அடைய
ஏதாவது கற்கவேண்டியிருந்தால் கற்று திறமையை வளர்த்துக்
கொள்ள வேண்டும்.(கார் வாங்க வேண்டும் என்ற ஆசையிருந்தால்
கார் ஓட்ட பழகிக்கொள்ள வேண்டும் என்பது போல்)

நாம் நம்மை உணர்ந்து நமக்கே நமக்கென நேரம் ஒதுக்கி
நம்மை நாம் மகிழ்வித்துக்கொள்ள வேண்டும்.
நம்மை நாம் உணர்ந்தால் எனும் இந்தப் பதிவு படிச்சிருக்கீங்களா??

நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்மை நம் எண்ணங்களை நாம்
நம்பி அதன் படி வாழவேண்டும். அடுத்தவரின் எண்ணங்களால்
உதைபட்டு பந்து போல் வாழ்வதால் புண்ணியம் ஏதுமில்லை.

சுய மரியாதை. ஆம் நமக்கு நாமே மரியாதை செலுத்திக்கொள்ள
வேண்டும். என்ன சாதித்திருக்கோமே அதற்கு பெருமை
பட்டுக்கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் நல்ல குணம்,
திறமை இவற்றை அடையாளம் காணுதல் வேண்டும்.
தேவையானல் மேம்படுத்திக்கொள்ளவும் இது உதவும்.

நம்மிடம் நாம் அன்பு செலுத்தி நம்மை நாம் நல்லமுறையில்
கவனித்துக்கொள்ள வேண்டும். நம் தவறுகளை ஏற்றுக்கொண்டு
அதை திருத்திக்கொள்ள வேண்டும். சாதனைகளையு, சோதனைகளையும்
மிகைப்படுத்தாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

என்னால் முடியும் எனும் எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சின்ன சின்ன personal goalகள் அவற்றை அடைந்ததும்
ஊக்கப்படுத்த நமக்கு நாமே பாராட்டிக்கொள்வது/ பரிசளிப்பதும்
நல்லது.

மொத்தத்தில் POSITIVE ATTITUDE நற் சிந்தனைகள், செயல்கள்
நம் சுயத்தை அதிகமாக்கி மகிழ்ச்சியையும், தனித்துவத்தையும்
தரும்.

17 comments:

pudugaithendral said...

test

S.Arockia Romulus said...

correct post in a correct time thanks madam

Ungalranga said...

நல்ல பதிவு..

இது போன்ற சுய முன்னேற்ற பதிவுகளை மேலும் தொடருங்கள்..

என்னை போன்ற யூத்களுக்கு மிகவும் உதவ கூடிய பதிவு இது..!!

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல பதிவு தென்றல்.

Unknown said...

நல்ல பதிவு தென்றல்

Thenammai Lakshmanan said...

very helpful PUTHUGAI THENDRAL
thanks for sharing ma

கோமதி அரசு said...

//நாம் நம்மை உணர்ந்து நமக்கே நமக்கென நேரம் ஒதுக்கி நம்மை நாம் மகிழ்வித்துக் கொள்ள வேண்டும்.//

நல்ல கருத்து.

நல்ல பதிவு தென்றல்.

வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

எளிதாகச் சொல்லியிருக்கிறீர்கள் தென்றல்....... பூங்கொத்து!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குட் போஸ்ட்..

சாந்தி மாரியப்பன் said...

அருமையா இருக்குப்பா..

சுயமரியாதையில் தாக்கத்தை ஏற்படுத்தும், சில காரணங்கள் நல்ல அலசல்.

சூப்பர்ப்!!!.

pudugaithendral said...

நன்றி ரோமுலஸ்,

நன்றி ஷாகுல்

நன்றி ரங்கன்

நன்றி ராமலக்‌ஷ்மி
நன்றி ஃபாயிஷா
நன்றி தேனம்மை

நன்றி கோமதி அரசு

நன்றி அருணா

நன்றி கயல்

நன்றி அமைதிச்சாரல்

Thamira said...

இதுபோன்ற சுயமுன்னேற்றப் பதிவுகளில் எனக்கு அவ்வளவாக ஆர்வமில்லை எனினும் பலருக்கும் இவை பயனுள்ளதாக இருக்கலாம்.. தொடருங்கள்.!!

நட்புடன் ஜமால் said...

well said

there should be self esteem and shouldn't go esteem.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ஆதி

pudugaithendral said...

ரொம்பச் சரியா சொன்னீங்க ஜமால்

கண்ணகி said...

தென்றல் நல்ல அலசல். நல்ல பதிவு.

pudugaithendral said...

வாங்க கண்ணகி,

மிக்க நன்றி