Tuesday, February 02, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 2/2/10

கொஞ்சம் குளிர் விட ஆரம்பிச்சிருக்கு. அட குளிர் குறைய்ய
ஆரம்பிச்சிருக்குன்னு சொன்னேங்க. :)) சிவராத்திரிக்கு இன்னமும்
10 நாள் தானே இருக்கு அதான். போன வருஷத்தை விட இந்த
வருஷம் குளிர் சீக்கிரமே வந்தாப்ல வெயிலும் வந்திடும். :(

*********************************************************


ஹைதையின் ஷ்பெஷல் திராட்சைகள் வர ஆரம்பிச்சாச்சு.
கிலோ 54 ரூபாயா இருந்தது இப்போ 34க்கு கூட கிடைக்குது.
இன்னும் கொஞ்ச நாளில் கிலோ 20க்கும் கிடைக்கும். சரியான
திராட்சை சீசன். தர்பூசூம் வர ஆரம்பிச்சிருச்சு. ஏப்ரல், மே
மாசத்துல பெரிய்ய சைஸ் பழம் 10 ரூபாய்க்கு கிடைக்கும்.


ஆனந்தமா திராட்சை சாப்பிட்டு மாம்பழத்துக்காக மீ த வெயிட்டிங்.
(வயிற்றெரிச்சலை கிளப்பிவிட்டதுல சந்தோஷம்)

*********************************************

தெலங்கானா பந்த், கலவரங்களின் போது பஸ், கார்னு
அடிச்சு நொறுக்கிகிட்டு இருந்தாங்க. இந்த நஷ்டங்களை எப்படி
ஈடு கட்டுவாங்கன்னு வருத்தப்பட்டுகிட்டு இருந்தேன்.
ஆந்திர பிரதேஷ் ஹைகோர்ட் அரசியல் கட்சிகளிடமிருந்து
நஷ்டங்களை வசூலிக்கச் சொல்லி உத்தரவு போட்டிருக்கு.

அரெஸ்ட் ஆகியிருந்த ஒரு மாணவனுக்கு பெயில் கேட்டப்போ
நீதிபதி ,”பெயில் வேணும்னா, நஷ்ட ஈடா ஒரு லட்சம் பணம்
கட்டுன்னு” சொன்னது ஹைலைட். அடுத்த முறை அடிச்சு
நொறுக்குமுன் யோசிங்க மக்கா!!

******************************************

இன்னொரு சந்தோஷ சமாசரமும் ஹை கோர்டால.
க்ரைம் ஷ்பெஷல், நடந்தது என்ன? குற்றம் எங்கே?ன்னு
பரபரப்பு கிளப்பிகிட்டு தெலுங்கு சேனல்கள் ஷோ நடத்துவது,
நிகழ்ச்சி தயாரிப்பது எல்லாம் இனி தடை போட பட்டிருக்கு.
மக்களை பயமுறுத்தும் இத்தகைய நிகழ்ச்சிகளை உடனடியா
நிறுத்தச் சொல்லி ஆர்டர் போட்டுடாங்கல்ல. :))

**************************************************

NDTV GOOD TIMES சேனல்ல வர்ற மாதிரி சாப்பாடு,
ட்ரெஸ் இப்படி பல விதமா நிகழ்ச்சிகளை ஜெயா பளஸ்
நிகழ்ச்சியில பாக்கலாம். NDTV GOOD TIMES நிகழ்ச்சிகளை
பார்ப்பதால அந்த குவாலிட்டி இல்லையோன்னு எனக்குத்
தோணினாலும், ஜெயா ப்ளஸின் இந்த முயற்சிக்கு என்
மனமார்ந்த பாராட்டுக்கள். நிகழ்ச்சி இன்னும் கொஞ்சம்
விரிவா இருந்தா நல்லா இருக்கும்.

*************************************************

சின்ன வயசுல படிச்ச புத்தகம் அது. அப்பா ரொம்ப பத்திரமா
வெச்சிருந்த அந்த புத்தகம் எத்தனை முறை படிச்சிருப்பேன்னு
எனக்கு நினைவே இல்லை. அவ்வளவு சுவாரசியம், நகைச்சுவை
ததும்ப இருக்கும் கதை. சாவி அவர்கள் எழுதிய
வாஷிங்க்டனில் திருமணம் தான் அது. செம சூப்பரா இருக்கும்.
அந்த கதை படிக்கணும் போல இருக்குன்னு அப்பா கிட்ட
4 வருஷமா சொல்லி புக் கிடைச்சா வாங்கி கொடுக்க
சொல்லியிருந்தேன். கிடைக்கலை. :((
ஆனா நேற்று அநன்யா டவுன்லோடிக்க சொல்லி இந்த
லிங்கை கொடுத்து புண்ணியம் கட்டிகிட்டாங்க.

என் நீண்ட நாள் ஆசையை நிறைவேத்தினதுக்கு நன்றி அநன்யா.

நீங்களும்விரும்பினால் தரைவிறக்கம் செஞ்சு படிக்க
இதோ லிங்க்."வாஷிங்க்டனில் திருமணம்

**********************************************

32 comments:

Vidhoosh said...

ஹூம்... மாம்பழம் சாப்பிட்டு ஆறு வருஷம் ஆச்சு. :(

எங்கக்காவின் மாமனார் எனக்குன்னே ஸ்பெஷல் ஆக ஒரு கூடை ஹைதராபாத்திலிருந்து அனுப்புவார். அவர் வெளிநாடு போன பின் கூடை வரதில்லை. நீங்கதான் அனுப்பனும். :))

அநன்யா மஹாதேவன் said...

பிரியாணி நல்ல சுவை. திராட்சைய பார்த்தா எச்சில் ஊருது. இங்கெல்லாம் வருடத்தின் 365 நளும் கனிகள் ஒரே சுவையுடன் சுத்தமாக இனிப்பில்லாமல் வெறும் வாசனையுடன் மட்டுமே கிடைக்கும். வாஷிங்க்டன்னில் திருமணம் உங்களுக்கு இவ்வளவு இஷ்டமா? என் பெயரை உங்க ப்ளாக்ல மென்ஷன் பண்ணினதுக்கு நன்றிகள் பல.

வி. நா. வெங்கடராமன். said...

ஒரு நல்ல கதையின் சுட்டியை கொடுத்ததற்கு மிகவும் நன்றி.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

ஹுஸைனம்மா said...

நம்ம “அம்மா”வோட திராட்சைத் தோட்டங்களைப் பாத்திருக்கீங்களா? ;-)

ஹை கோர்ட் நடவடிக்கைகள் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனி இப்படி அதிரடி நடவடிக்கைகள்தான் வேலைக்காவும்.

அப்புறம், வாஷிங்டன் லிங்குக்கு ரொம்ப நன்றி.

வித்யா said...

இங்கயும் திராட்சை கிடைக்குது. நாங்களும் சாப்பிடுவோம்:))

மீ த வெயிட்டிங்ஃபார் தர்பூஸ்:)

நாஸியா said...

ஐயோ மாம்பழத்தை இப்பவே ஞ்யாபகம் காட்டிட்டீங்களே!! போன வருஷம் என்னன்டா கல்யாண பொண்ணு, சாப்பிடாதே, பரு வரும்னு தடா போட்டாங்க. இப்ப என்னடான்ன்னா இந்த ஊருல..

எனக்கு பிடிச்ச ஒரே காய் மாங்கய், நான் விரும்பி சாப்பிடும் ஒரே பழம் மாம்பழம்.. அதுவும் பங்கனபள்ளி மாம்பழம்.. அவ்வ்வ்வ்

புதுகைத் தென்றல் said...

நீங்கதான் அனுப்பனும்.//
அனுப்பறதை விட நீங்க இங்க வாங்க ஆனந்தமா சாப்பிடலாம்.(கூடை அனுப்பும்போது ப்ராயணத்துல ரொம்ப கனிஞ்சிடும் பாருங்க) :)

புதுகைத் தென்றல் said...

வாங்க அநன்யா,

வாஷிங்க்டனில் திருமணம் ரொம்பபிடிச்சது. ஒவ்வொரு கேரக்டரும் மனசுல சம்மணம் போட்டு உக்காந்திருக்கு

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி வெங்கட்ராமன்

PPattian : புபட்டியன் said...

Thanks for the link..

புதுகைத் தென்றல் said...

அம்மாவோட பங்களா வெளியிலேர்ந்து பாத்திருக்கேன். திராட்சை தோட்டம் பாத்ததில்லை.

வருகைக்கு நன்றி ஹுசைனம்மா

புதுகைத் தென்றல் said...

இங்கயும் திராட்சை கிடைக்குது. நாங்களும் சாப்பிடுவோம்//

ஆஹா அங்கயும் கிடைக்கும். ஆனா எங்க ஊரு விலையில கிடைக்காதே!!! :))))))))( இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊத்தியாச்சு)

புதுகைத் தென்றல் said...

வருத்தப்படாதீங்க நாஸியா,

உங்க பேரைச் சொல்லி 4 மாம்பழம் எக்ஸ்ட்ராவாவே சாப்பிடறேன்.

:))

எம்.எம்.அப்துல்லா said...

அக்கா, தரவிறக்கச் சுட்டிக்கு நன்றி. ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன்.

ஸாதிகா said...

என்னங்க..திராட்சை,தர்பூஸ் விலைகளை சொல்லி ஆச்சரியப்பட வைத்து விட்ட்டீர்கள்.இங்கு தர்பூஸ் ஒரு பெரிய சைஸ் 100,120 என்றல்லவா விற்கின்றார்கள்.!!!இனி இதெல்லாம் வாங்க வேண்டுமென்றால் ஹைதை வந்தால் அள்ளிக்கொண்டு போகலாம் போலும்:-)நேரம் இருக்கும் பொழுது எனது வலைப்பூ பக்கமும் வாருங்கள்.நன்றி!
http://shadiqah.blogspot.com/

ஸாதிகா said...

சாவியின் வாஷிங்டனில் திருமணம் லின்க் கொடுத்து இருந்தீர்கள்.இதேபோல் கோவி மணிசேகரன் அவர்களின் "மனோரஞ்சிதம்"கிடைக்குமா?வெகு நாட்களாக அந்த நாவல் படிக்க ஆசை

thenammailakshmanan said...

Thanks for sharing the Washintonil thirumanam ...
Puthukaith Thendral

புதுகைத் தென்றல் said...

வாங்க அப்துல்லா,

நலமா?? நீங்களும் தேடிகிட்டு இருந்தீங்களா? நம்ம ஊர் மீனாட்சி பதிப்பகத்துல சொல்லி வெச்சும் கிடைக்கலை

புதுகைத் தென்றல் said...

வாங்க ஸாதிகா,

ஹைதையில் விலை வாசி கொஞ்சம் குறைவுதான். சென்னையை விடவும் குறைவுதான். சீசனின் போது மாம்பழம் கிலோ 20 தான். :)) வாங்க நிறைய்ய அள்ளிகிட்டு போகலாம்

புதுகைத் தென்றல் said...

இதேபோல் கோவி மணிசேகரன் அவர்களின் "மனோரஞ்சிதம்"கிடைக்குமா?வெகு நாட்களாக அந்த நாவல் படிக்க ஆசை//

கேட்டுட்டீங்கள்ள நம்ம வலையுலக நட்புக்கள் எப்படியும் தேடி தந்திடுவாங்க

புதுகைத் தென்றல் said...

ஆஹா நீங்களும் வா.தி ரசிகையா.

சந்தோஷம் தேனம்மை. எல்லா புகழும் அநன்யாவுக்கே

அன்புடன் அருணா said...

நான் கூட 10/15 தடவை படிச்சிருக்கேன்!thanx for the link!

Mrs.Menagasathia said...

பிரியாணி சூப்பர்ர்ர்..

சாவியின் கதை லிங்க் கொடுத்ததற்க்கு மிக்க நன்றி தென்றல்!!ரொம்ப நாளா தேடிக்கிட்டிருந்தேன்.அனன்யாவுக்கும் ஸ்பெஷல் நன்றி!!

தாரணி பிரியா said...

எனக்கு ஏனோ திராட்சை பிடிக்காது. ஆனா தர்பூஸ் ரொம்ப பிடிக்கும். அப்புறம் சுட்டிக்கு நன்றி தென்றல்

புதுகைத் தென்றல் said...

ஆஹா வருகைக்கு சந்தோஷம் அருணா

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி மேனகா சாத்தியா

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி தாரணிப்ரியா

அண்ணாமலையான் said...

திராட்சை பழம் எங்கருந்து வாங்குனீங்க? ‘அம்மா’ தோட்டத்துலேருந்தா? நல்லா சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க ... வாழ்த்துக்கள்...

புதுகைத் தென்றல் said...

வாங்க அண்ணாமலையான்,

எங்க ஊரு(புதுகை) ராஜா திருச்சியில் தான் இருக்காங்க. திருச்சிக்கு வந்திட்டு எங்க ஊரு காரங்க வந்து அவங்களை சந்திச்சா நல்லபடியா கவனிச்சு அனுப்பி வைப்பது வழக்கமாம். அப்படியெல்லாம் ”அம்மா” கிட்ட எதிர் பார்க்க முடியுமான்னு எனக்குத் தெரியாது.(அரசியலும் தெரியாது பாருங்க):))

எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கற கடை, மார்கெட்லதான் வாங்கினேன்.

//நல்லா சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க //

ரொம்ப நன்றிங்க

விக்னேஷ்வரி said...

”பெயில் வேணும்னா, நஷ்ட ஈடா ஒரு லட்சம் பணம்
கட்டுன்னு” சொன்னது ஹைலைட். அடுத்த முறை அடிச்சு
நொறுக்குமுன் யோசிங்க மக்கா!! //
ஐ, நல்லாருக்கே.

மக்களை பயமுறுத்தும் இத்தகைய நிகழ்ச்சிகளை உடனடியா
நிறுத்தச் சொல்லி ஆர்டர் போட்டுடாங்கல்ல. //
ஐ, இதுவும் நல்லாருக்கே.

புத்தக சுட்டிக்கு நன்றிங்க. நானும் படிக்கிறேன். சின்ன வயசுல வாசிச்சது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

சுவாரசியமான தகவல்கள். குறிப்பாக வாஷிங்டனில் திருமணம், சேம் பிளட்.! தாங்க்ஸ் ஃபார் தி இணைப்பு.

சொல்ல மறந்துட்டனே திராட்சைப்பழங்கள் கொள்ளை அழகு.!

புதுகைத் தென்றல் said...

thanks friend