உலகின் நண்பன் இப்படி யாராவது இருக்க முடியுமா??
சாத்தியமா?? முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
என்பதற்கு இவரே சாட்சி.
மிகச் சிறந்த சக்திசாலியாக திகழ்ந்தான் அரசன் கொளசிகன்.
ஒரு சமயம் ஓய்வு எடுக்க தன் படைவீரர்களுடன்
வஷிஷ்டரின் ஆஸ்ரமத்திற்குச் சென்றிருந்தார்.
மொத்த படைக்கும் உணவிட்டு மிக அருமையாக
விருந்தோம்பல் செய்தார் வஷிஷ்டர். ஒரு முனிவருக்கு
இது எப்படி சாத்தியம் என்று கேட்க, கேட்பதை
கொடுக்கும் காமதேனுவின் மகள் நந்தினி தன்னிடம்
இருப்பதாகவும், அவள் தான் தனக்கு உதவியதாகவும்
சொன்னார் முனிவர்.
இந்திரனால் முனிவருக்கு பரிசளிக்கப்பட்ட நந்தினி
முனிவரை விட தன்னிடம் இருந்தால் நாட்டுமக்களுக்கு
உதவலாமே! என்ற எண்ணத்தில் நந்தினியை தனக்கு
கொடுக்க சொல்லி கேட்டான். முனிவர் மறுக்க
அவரிடமே யுத்தம் புரிந்தான். நந்தினியின் காதுகளிலிருந்து
படைபடையாக போர்வீரர்கள் வந்து போரிட மன்னன்
தோற்கிறான். கைதியாக முனிவர் முன் நிறுத்தப்படுகிறான்.
ப்ரம்மரிஷி வஷிஷ்டரும் மன்னனுக்கு அறிவுரை சொல்லி
அனுப்பி வைக்கிறார்.
ஆனாலும் இந்த நிகழ்வு மன்னனின் மனதில் நீங்கா வடுவாகிவிட்டது.
தவவலிமை மிகச் சிறந்தது என உணர்ந்து
தானும் தவம் செய்து தவவலிமை செய்ய
காட்டுக்கு போகிறான். வஷிஷ்டரைப்போல தானும் ப்ரம்மரிஷி
ஆகி காட்டுவதாக சொல்கிறான். ”பிறப்பால் ஷத்த்ரியனான
உனக்கு அது சாத்தியம் இல்லை!” என்று சொல்ல
“நடத்தி காட்டுகிறேன்” என்று புறப்படுகிறான் கொளசிகன்.
(க்ஷத்த்ரியர்களுக்கு கோவம் அதிகம். போர்க்குணம்
நிறைந்தவர்கள்)
கொளசிக மாமுனி தவம் செய்து வலிமை பெற்று தன்
நாட்டுக்கு வந்து பார்த்தால் நாடு காடாக இருக்கிறது.
மக்கள் சுயநலமிக்கவர்களாக இருந்தார்கள். பசுமை போய்
காய்ந்து போயிருந்தது. நாட்டின் அவலநிலையைக்
கண்டு மனம் வெம்பி தன் தவவலிமையைக் கொண்டு
நாட்டை மலர்ச்சி அடைய செய்து நல்லவர்கள்
கையில் கொடுத்துவிட்டு திரும்பவும் தவம் செய்ய
காட்டுக்கு போனான்.
கொளசிகனின் தவம் கலைக்க மேனகா வருகிறாள்.
மேனகையுடன் சிறிது காலம் வாழ்ந்து சகுந்தலையை
மகளாகப் பெற்று விட்டுவிட்டுப்போன மேனகையை
வெறுத்து மகளை கண்வ மகரிஷியிடம் வள்ர்க்கச்
சொல்லிக் கொடுத்துவிட்டு திரும்பவும் தவம்.
கண்வரிடம் வளர்ந்த சகுந்தலை- துஷ்யந்தன்
காதலில் உருவானவன் தான் பரதன். இவர்
பெயரால்தான் நம் தேசம் பாரதம் என அழைக்கப்படுகிறது
என்றும் சொல்வார்கள். மகளின் துயர் துடைக்க
துஷ்யந்துனுடம் போராடி மகளைச் சேர்த்துவிட்டு
திரும்பவும் தவம். எத்தனை முறை தவம்
செய்தாலும் ப்ரம்மரிஷி எனும் பட்டம் மட்டும்
கிடைக்கவில்லை.
நடுவில் த்ரிசங்கு மன்னனுக்காக தன் சக்தியை
கொடுத்து த்ரிசங்கு சொர்க்கம் அமைத்தார்.
பலகால தவத்துக்கு பிறகு ப்ரம்மா மஹிரிஷி/ராஜரிஷி
பட்டத்தை கொளசிக முனிக்குத் தருகிறார். தனது
ஆசை,கோபத்தை அடக்க முடியாத காரணத்தால்
இன்னும் ப்ரம்மரிஷி மட்டும் ஆக முடியவில்லை.
திரும்ப கடும் தவம் செய்யப்போனார். இந்திரனின்
சூழ்ச்சிக்கு இடம் கொடாமல் தவம் செய்தார்.
தவத்தின் சக்தி உச்சமாகி ப்ரம்மன் வந்து
ப்ரம்மரிஷி எனும் பட்டம் தருகிறார். ப்ரம்மரிஷி
வஷிஷ்டரும் வந்து தன் வாயால் அதை வழிமொழிகிறார்.
பிறப்பால் அரசனான கொளசிகன் தன் விடாமுயற்சியால்
ப்ரம்மரிஷி ஆனான். இந்த கொளசிக மாமுனி தந்தது தான்
மிகச் சக்தி வாய்ந்த மந்திரம். அது என்ன மந்திரம்?
யார் அந்த மந்திரத்திற்கான தெய்வம்? கொளசிக மாமுனி
உலகின் நண்பன் ஆனது எப்படி??
எல்லாம் மதியம் 3 மணி பதிவில்
6 comments:
viswamithrar....:)
அவரேதான்.
கோபத்துல ஐயாவுக்கு ஈடு இணையாருமே இல்லையே.
வருகைக்கு நன்றி கார்த்திக்
after the break-ah?!
yessu :))
//விடா முயற்சிக்கு ஒரு கொளசிக மாமுனி//
முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு கொளசிக முனிவர்.
நல்ல பதிவு.
interesting Kala..
Post a Comment