Friday, March 05, 2010

காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா!!!!

கொளசிக மாமுனி உலகின் நண்பன் ஆனது எப்படி?
உலக நன்மைக்காக அந்த மாமுனிவர் தந்த மந்திரம்
அவரை உலகின் நண்பனாக்கியது. கொளசிக மாமுனியின்
இன்னொரு பெயர் தான் விஸ்வாமித்திரர். விஸ்வா- உலகம்,
மித்திரர்- நண்பன்.



காயத்ரி தேவி வேதங்களின் தாய் என்றும் சொல்வார்கள்.
எந்த ஒரு தெய்வத்துக்கும் அதன் ப்ரத்யேக காயத்ரி மந்திரத்தை
சொல்லி வழிபட்டால் பலன் அதிகம்.

காயத்ரி மந்திரம் சொன்னால் ஏற்படும் பலன் அதிகம்.
பிராம்மணர்கள் பூணூல் அணிந்து 3 வேளையும் தொழுவது
இவளைத்தான். பெற்ற தாய் அருகில் இருந்து காப்பது போல்
காயத்ரி தன்னை ஜபிப்பவர்களை எப்போதும் காப்பாள்.


இதுதான் அந்த மந்திரம். இதை பெண்கள் சொல்லக்கூடாது
என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து
பல பெண்கள்(வட நாட்டினர் அதிகமாக) காயத்ரி மந்திரம்
சொல்கிறார்கள். ஜாதி வேறுபாடில்லாமல் வடநாட்டினர்
பலரும் காயத்ரி மந்திரம் ஜெபிப்பார்கள். காயத்ரி மந்திரம்
யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.

காயத்ரி மந்திரம் தெய்வத்தை உணர உதவுகிறது.
நிஜமான தெய்வத்தை நமக்குள் தேடி அடைய
ஒரு வழி காயத்ரி மந்திரம்.

இதைப்பற்றி மேலும் அறிய இங்கே செல்லலாம். காயத்ரி ஜபிப்பதால்
உடலில் ஏற்படக்கூடிய அதிர்வுகள், விஞ்ஞான பூர்வமாக என
பல விடயங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


இந்த மந்திரத்தை எங்கும் எப்போதும் சொல்லலாம்.
பிராயணத்தின் போது,தனியாக நடக்கும் பொழுது,
மனது சஞ்சலமாக இருக்கும் பொழுது சொல்லலாம்.
சொல்பவருக்கு பலன் அதிகம் என்பதால் முறையாக
ஜபித்து சொல்வது நல்லது.

உடலில் இருக்கும் சக்கரங்களில் மட்டுமல்ல
எல்லா இடங்களிலும் சக்தி தருவது காயத்ரி மந்திரம்.
சொல்பவரும், கேட்பவரும் புனிதமடைவது
இந்த மந்திரத்தால்தான் சாத்தியம் என்கிறார்கள்
பெரியவர்கள்.



15 comments:

எல் கே said...

nalla pathivu

SK said...

Thanks for the post!!!

pudugaithendral said...

வருகைக்கு நன்றி எல் கே

pudugaithendral said...

நன்றி எஸ் கே

கோமதி அரசு said...

மதுரை கூடல் நகர் பெருமாள் கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காயத்ரி மந்திரம் கூட்டு பிராத்தனை நடக்கிறது.

”எவர் நம் அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கின்றாரோ அந்த ஜோதிமயமான இறைவனைத் தியானிப்போமாக”

இது தான் காயத்ரி மந்திரத்தின் தமிழ் அர்த்தம்.

நல்ல அறிவு வேண்டும் என்றால் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனாக இருப்பதில் தவறில்லையே தென்றல்.

நல்ல பதிவுக்கு நன்றி.

Ananya Mahadevan said...

இந்த காயத்ரி மந்திரத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு தெய்வத்துக்கும் வரையறுக்கப்பட்ட காயத்ரி மந்திரத்தை கட்டாயம் பெண்கள் சொல்லக்கூடாது. இதை உச்சரிப்பதனால் உண்டாகும் அதிர்வுகள் பெண்களுக்கு எதிர்மரையான விளைவுகளைத்தருமாம். முன்னாடி ஸ்ரீஸுக்தம் எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தேன். இப்போது இந்த உண்மை உணர்ந்து எல்லாம் நிறுத்தி விட்டேன்!

சாந்தி மாரியப்பன் said...

//காயத்ரி மந்திரம்
யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.//

உண்மைதான். எங்க வீட்டில் விளக்கேற்றும்போது காயத்ரி சொல்வோம். என் பையன் லஷ்மி,சரஸ்வதி,அனுமன்,வினாயகர்,
ஸ்ரீராம், என்று எல்லா காயத்ரியும் சொல்லித்தான் வழிபடுவார். நானும் சொல்வதுண்டு.

இப்பல்லாம் ப்ரீரெக்கார்டட் ஆக கிடைக்கிறது.வாங்கி வந்து பிளக்கில் செருகி விட்டால் போதும் பேட்டரி தீரும்வரை சொல்லிக்கொண்டே இருக்கும் சாதனங்களும் வந்து விட்டன.

இராகவன் நைஜிரியா said...

அனுபவப் பூர்வமாக உணரப் படவேண்டிய விஷயம் இது.

எழுத்துக்களால் வடிக்க இயலாது.

மிக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். நன்றி.

pudugaithendral said...

நல்ல அறிவு வேண்டும் என்றால் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனாக இருப்பதில் தவறில்லையே தென்றல்.//

கண்டிப்பாய் தவறில்லை கோமதி அரசு.
மதுரை கூடல் நகர் பெருமாள் கோவிலில் விஷ்ணு பாராயணம் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும். சித்தப்பாவுடன் போயிருக்கிறேன்

எல் கே said...

//அநன்யா மஹாதேவன் //

shree shuktham sollalam endru ninaikiren. etharkum en akka or ammakitta kettu confirm panren

pudugaithendral said...

வாங்க அநன்யா,

எதிர் மறையா ஏதும் ஆகிவிடாது. அந்தக்கால பெண்கள் வேதங்களிலும் தேர்ந்தவர்களாக இருந்தார்கள் எனப்தற்கு பல சாட்சிகள். சக்தியை உடல் தாங்கும் வகையில் உடலை பேணுவது அவசியம். இது என் அனுபவம்

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

ப்ரீ ரெக்கார்டர் கிடைப்பதை உபயோகிப்பதால் கூட வீட்டில் நல்ல வைப்ரேஷன்ஸ் வர வைக்க முடியும்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

அனுபவப் பூர்வமாக உணரப் படவேண்டிய விஷயம் இது.//

ஆமாம் இராகவன்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க எல்கே,

ஸ்ரீசுக்தம், லலிதா ஸஹஸர்நாமம், லலிதா திரசதி, கட்கமாலா எது வேண்டுமானாலும் சொல்லலாம். தவறு ஏதுமில்லை. ஸ்கந்த ஷ்ஷ்டி கவசத்தை ஒரு நால் 36 முறை பாராயணம் செய்தாலும் கிடைக்கும் சக்தி அளப்பரியது. வருடம் ஒரு முறை கண்டிப்பாய் சொல்வேன்.

பெண்கள் சொல்லக்கூடாது எனும் மந்திரம் இல்லை. ஜபிக்கப்படுவதே பெண் தெய்வம் தான்.

Thenammai Lakshmanan said...

நானும் தினம் காயத்ரி சொல்றேன் கலா நல்ல வைபரேஷன்