Tuesday, March 09, 2010

டெலிபோன் கொசுவத்தி

டெலிபோன் இது ஏதோ பணக்காரர்கள் வீட்டு சாதனமாத்தான்
இருந்துச்சு. டெலிபோன்ல பேசுவதெல்லாம் ஒரு 15 வருசத்துக்கு
முன்னாடி சாதாரண விஷயமில்லை. ரொம்ப அவசியம்னா
வீட்டுப்பெரியவங்க மட்டும் பேசுவாங்க.(இப்ப குட்டி குழந்தைக்கு
கூட செல்போன்னா என்னன்னு தெரியும்)


தொலை பேசியில பேசும் வாய்ப்பே எனக்கு இல்லாம
இருந்துச்சு. மும்பையில வேலை பாத்துகிட்டு இருந்தப்போ
சின்னதா இருந்த எங்க ஆபிஸை பக்கத்துல இருந்த
பெரிய கட்டிடத்துக்கு மாத்தினாங்க.

அங்கே வேலைகள் நடக்கும் பொழுதே PARESH எனும்
அலுவலக் நண்பன் வந்து, அங்கே ஒவ்வொருவருக்கும்
எக்‌ஷ்டன்ஷன் போன் இருக்கு!, 3 போன் கனெக்‌ஷன்ஸ்
இருக்கு! நீ தான் டெலிபோன் ஆப்பரேட் செய்யப்போறியாம்!
கேள்விபட்டேன்னு!! சொன்னதுலேர்ந்து செம டென்ஷன்.
எனக்கு எந்த ந்யூஸும் வரலை. கணபதி சுப்பிரமணியம்
சார்தான் அப்ப மேனேஜர். “பரேஷ் ஏதோ சொல்றாப்லயே!
எனக்கெல்லாம் டெலிபோன் பேச வராது! நான் மாட்டேன்னு”
சொல்ல,” அதெல்லாம் முடியாது நீ தான் செய்யறன்னு”
கட்டாயமா சொல்லிட்டார்.

நான் அங்க அப்ப டைப்பிஸ்டாத்தான் வேலை பாத்துகிட்டு
இருந்தேன். சரி டைப்பிங் எப்பவுமா இருக்கப்போவுது,
இதுவும் செஞ்சு பாக்கலாம்(பாத்துதானே ஆகணும்)னு
நினைச்சாலும் மொழி கொஞ்சம் பிரச்சனை. ஹிந்தி
நல்லா வரும். ஆங்கிலம் கூட ஸ்டார்ட் செஞ்ச வந்திடும்.
மராத்தி!! எங்க கம்பெனிக்கு பல மராத்தியர்கள் க்ளையண்ட்.

அம்மம்மாகிட்ட வந்து சொன்னேன். சாமியை மனசுல
வேண்டிக்கோ, எப்படி செய்வதுன்னு தெளிவு உனக்கு
கிடைக்கும்னு சொன்னாங்க.

புது கட்டிடத்துக்கு போனதுக்கப்புறம் டைப்பிங்கைவிட
கம்ப்யூட்டர், பெட்டிகேஷ், டெலிபோன் ஆப்பரேட்டிங்
எல்லாம் என் தலையில். :(

என்னோடு வசாயிலிருந்து வரும் தோழி ஒருவர்
மும்பை டெலிபோன்ஸில் வேலை. அவரிடம்
கேட்டு எப்படி பேசுவதுன்னு 4 நாளைக்கு ட்ரையினில் ட்ரையினிங்
எடுத்துகிட்டேன். பேசுபவரின் முகம் தெரியாது
என்பதால் கவனமா பேசு, இதமா பேசு, பதட்டப்படாதேன்னு
சொல்லிக் கொடுத்தாங்க.

ஒரு நாள் கணபதி சார் வந்து ஒரு பத்திரிகையைக்
கொடுத்து,” இதற்கு டெலிபோன் மூலமா வாழ்த்து
தந்தி அனுப்பிடு”! சொல்ல அது எப்படி செய்வதுன்னு
தெரியாது சார்னு சொல்ல “ அனுப்பிட்டு எனக்கு
கன்பர்ம் செய்யுன்னு போயிட்டார்!”

டெலிபோன் டைரக்டரியை புரட்டி எக்சேஞ்ச் நம்பரை
எடுத்து அவர்களுக்கு சொன்னா நம்ம போன் நம்பரை
வாங்கிகிட்டு கொஞ்சம் நேரம் கழிச்சு அவங்களே கூப்பிடுவாங்க.
என்ன மெசெஜ் அடிக்கணுமோ அந்த நம்பரைச் சொல்லி
அட்ரஸ் சொன்னா மெசெஜ் அனுப்பிடுவாங்க. அதற்கான
தொகையை அடுத்தமாத பில்லில் சேத்திடுவாங்க.

செஞ்சிட்டு சாரிடம் கன்பர்மேஷன் நம்பர் கொடுத்தேன்.
“என்னமோ பயப்பட்டியளு! இப்ப எப்படி முடிஞ்சுதாம்”
அப்படின்னு கேட்க தண்ணியில தூக்கிப்போட்டா
நீச்சலடிச்சுத்தானே சார் ஆகணும்னு கேக்கவா முடியும்.


ஒரு முறை எங்க எம்டீ வந்திருந்த நேரம். அவசரமா
international call உடனடியா செய்ய வேண்டும்.
எங்க போன்ல எதுக்கும் அந்த வசதி இல்ல. எப்படி
செய்வதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தாங்க. என் ட்ரையின்
ஃப்ரெண்ட் JAYA BANE international call புக்கிங்க்ல
தான் இருந்தாங்க. அவங்க எக்‌ஷ்டன்ஷனுக்கு போன்
செஞ்சு புக் செஞ்சு கொடுத்தேன். செம பாரட்டு.

ஒரு முறை கஸ்டமர் ஒருவர் போன் போட்டு கத்திகிட்டு
இருந்தார். அவரோட பேச வேண்டிய அலுவலக நண்பர்
கீழே சின்ன அலுவலகத்தில் இருந்தார். கஸ்டமரை
ஹோல்டில் வைத்துவிட்டு அந்த நபரை அழைத்து உங்க
கிட்ட பேசணுமாம், பேசுங்கன்னு சொல்ல,”அந்தாளு
சுத்த வேஸ்ட், நான் பேசமாட்டேன், இல்லைன்னு
சொல்லிடுங்கன்னு”சொன்னாரு.

நானும் அப்படியே சொல்லிட்டு வெச்சிட்டேன்.
திரும்ப திரும்ப அந்த கஸ்டமர் போன் செஞ்சு
கத்திகிட்டு இருக்க லைனை கீழே கனெக்ட் செஞ்சிட்டு
வச்சிட்டேன். பேசிமுடிச்சிட்டு அந்த நபர் மேலே
வந்து செம காச்சு காச்சினார். மேனேஜரும்
அவருக்கு சப்போர்டா பேச(எம் டீயோட ஆள்)
வந்த கோபத்துல எம் டீயோட ஆள் என்பதால்
அவருக்கு சப்போர்ட் செஞ்சு பேசறீங்க! அப்படி
இப்படின்னு நானும் இரண்டு பேரையும் காச்சியது
அன்னைக்குத்தான்.

வடுமாங்காய் கடிச்சா மாதிரி நறுக்குன்னு பதில்
சொல்வீங்க தெரியும்! கடுகு பொரிச்சாப்ல பொறிஞ்சு
தள்ளிட்டீங்களாமேன்னு! அஸிஸ்டண்ட் மேனேஜர்
கேட்கும் அளவுக்கு என் கோபத்தை முழுமையா
வெளியில் காட்டியிருந்தேன். என் மேல் தவறில்லைன்னா
எந்த இடத்திலும் போராடுவேன். தவறுன்னா
ஒத்துகிட்டு மன்னிப்பு கேட்பேன்.

டெலிபோன் பத்தி நினைக்கும்பொழுது இவரை நான்
நினைக்காமல் இருக்க முடியாது. மாமா கம்பெனி
டெலிபோன் ஆப்பரேட்டர் த்வனி தான் அவர்.
நான் வேலை பார்த்த கம்பெனியின் சில
விடயங்களை சத்யாமாமா வேலைப்பார்த்த
கம்பெனிகாரர்கள் பார்த்துக்கொடுத்ததால்
அடிக்கடி டெலிபோன் போட்டுக்கொடுக்க
வேண்டியது என் வேலையாக, த்வனி தோழியாகிவிட்டார்.

பலமுறை போனில் பேசியிருப்போம்.
ஒருமுறை கூட நேரில் சந்தித்ததே கிடையாது. மிக நல்ல குரல்.
உங்கள் பெயருக்கேற்ற குரல்வளம் என பாராட்டியிருக்கிறேன்.
நான் போன் செய்யும் பொழுது மாமாவிடம் பேசுவதற்கு முன்
த்வனியுடன் 2 நிமிடம் பேசிவிட்டுத்தான் மாமாவிடம்
பேசுவேன். ஃப்ரெண்ட் கிட்ட பேசிகிட்டு இருந்தியான்னு?”
மாமாவும் கட்டாயம் கேட்பார்.

சந்திக்காமலே போனது வருத்தம் தான்.
இப்பவும் ஒவ்வொருமுறை தொலை பேசி
ஒலிக்கும்பொழுதும் இந்த நினைவுகள் வராமல்
இருந்ததில்லை.

22 comments:

வித்யா said...

நல்லா சுத்தியிருக்கீங்க.

நட்புடன் ஜமால் said...

நான் அபுதாபியில் வேலையில் இருந்தப்போ என்னை அழைக்கும் பலர் எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்ட மறக்கவே மாட்டாங்க

அங்கே இரண்டு ஜமால் வேலை பார்த்தோம் அதால அவங்க கேட்டுட்டு தான் லைன் கொடுப்பாங்க,

ரொம்ப அழகா :P கேப்பாங்கன்னு பசங்க சொல்வாங்க

கம்யூத்தர் ஜமால் - இப்படி

எம்.எம்.அப்துல்லா said...

கீழ புதுசா நீங்க சேர்த்திருக்குற கையெழுத்து சூப்பராகீது :)

புதுகைத் தென்றல் said...

நல்லா சுத்தியிருக்கீங்க.//

:)) வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

ஆஹா உங்களுக்கும் கொசுவத்தி சுத்திடிச்சா ஜமால்,

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

கீழ புதுசா நீங்க சேர்த்திருக்குற கையெழுத்து சூப்பராகீது //

வலையுலகத்துல வந்து கத்துகிட்டது நிறைய்ய. சமீபத்துல ஒரு பதிவு பாத்துகத்துகிட்டேன்.

வருகைக்கு நன்றி ஜமால்

எம்.எம்.அப்துல்லா said...

//வருகைக்கு நன்றி ஜமால் //

யக்கா என் பேரை நான் ஜமால்னு மாத்திக்கல :)))

புதுகைத் தென்றல் said...

ஆமாம் அப்துல்லா

ஜமால் பின்னூட்டத்துக்கும் பதில் சொல்வதா நினைச்சு அப்படி போட்டுட்டேன் மன்னிக்கணும்

ஹுஸைனம்மா said...

ஆமாம், முன்னாடியெல்லாம் டிரங்க்கால் புக் பண்ணிட்டு வெயிட் பண்றதும்; அந்த டயல் ரிங்கைச் சுத்திச் சுத்தி விரல் தேஞ்சு போனதும், முதமுதல்ல ரீ-டயல் ஆப்ஷனோட பட்டன் நம்பர் உள்ள ஃபோன் வந்ததும்... இப்படி கொசுவத்தி சுத்திகிட்டேயிருந்தா, “நீண்ட பல இரவுகள்” நின்று எரியும் வத்தியே கிடைக்கும்!!

கல்யாணம் ஆக முன்னயும், ஆன பின்னயும் “அவரோட” ஃபோனுக்காக வெயிட் பண்ணி ஃபோனுக்குப் பக்கத்துல காவல் இருந்ததும்... ம்ம்..

அப்பாவி தங்கமணி said...

கொசுவர்த்தி அருமை புதுகை தென்றல். எனக்கும் பழைய நினைவுகளை ஏற்படுத்தியது. பதினொன்னாவது படிக்கும் போது தான் எங்க வீட்டுல மொதல் மொதலா போன் வந்தது. ஆரம்பத்துல நான் நீனு போட்டி போடுவோம் போன் எடுக்கறதுக்கு. அப்புறம் நீ எடு நான் எடுனு ஆய்டுச்சு. இப்ப நீங்க சொல்ற மாதிரி பொறந்த கொழந்தை கூட பந்தா பண்ணுது

அமைதிச்சாரல் said...

//டெலிபோன்ல பேசுவதெல்லாம் ஒரு 15 வருசத்துக்கு
முன்னாடி சாதாரண விஷயமில்லை.//

நிஜம்தான். புக் செஞ்சு ஒன்று, இரண்டு வருடங்கள் ஆகும்,கனெக்ஷன் வீட்டுக்கு வருவதுக்கு.அப்பல்லாம் அது ஒரு ஆடம்ப்ர சாதனமாக்கூட பாக்கப்பட்டது. இப்பதான், நெனச்சா அடுத்த ஒருமணி நேரத்துல கையில மொபைல் வந்துடுது.

புதுகைத் தென்றல் said...

கல்யாணம் ஆக முன்னயும், ஆன பின்னயும் “அவரோட” ஃபோனுக்காக வெயிட் பண்ணி ஃபோனுக்குப் பக்கத்துல காவல் இருந்ததும்... ம்ம்..//

நானெல்லாம் போன் பூத்துல காவல் இருந்திருக்கிறேன். அதுவும் 9 மணிக்கு மேலே குறைவான காசுல பேச.. :))
இதெல்லாம் கொசுவத்தி சுத்தினா நீங்க சொன்னபடி நீண்ட பல இரவுகள் அல்ல நீண்ட பல வருடங்கள் எரியும் வத்தி ஆகிடும்

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி அப்பாவி தங்கமணி

thenammailakshmanan said...

அருமையான பகிர்வு கலா உண்மை அப்போவெல்லாம் வீட்டு போனை தாத்தாவை கேட்டுத்தான் உபயோகிக்கணும் ரொம்ப நேரம் பேசினா கோச்சுக்குவார் இப்போ பாருங்க எல்லார் கையிலும் போன்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி தேனம்மை

சுல்தான் said...

துபாயில் 1985 வாக்கில் அறையில் புதிதாக டெலிபோன் பொருத்தி விட்டு போனார்கள். வேலையிலிருந்து வந்த நண்பர் "அட போன் வச்சிட்டாங்களா!" என்று சொல்லிக் கொண்டே ரிசீவரை கையிலெடுத்தார். "ஷாக் அடிக்கப்போகுது பாத்துங்க!" என்று நகைச்சுவைக்காகத்தான் சொன்னேன். நண்பர் அப்படியே ரிசீவரை விட்டு விட்டு தூரமாகத் தாவினார். ரிசீவர் சுவற்றில் பட்டு உடைந்தது. என் பங்குக்கு 70திர்ஹமும் நண்பர் 70 திர்ஹமும் போட்டு புதிய டெலிபோன் வாங்கிக் கொடுக்க வேண்டி வந்தது. இப்போது நினைத்தாலும் சிரிப்புதான்.

மங்களூர் சிவா said...

டெலிபோன் ஆப்பரேட்டர்னாலே கொஞ்சம் ப்ரியம்தான் இல்லையா!
:)))))))))(வீட்டுல போட்டுக்குடுத்துடாதீங்க)

புதுகைத் தென்றல் said...

இப்பல்லாம் பூங்கொடி பதிவு பக்கம் வர்றதில்லைன்னு தெரிஞ்சுதான் பின்னூட்டம் வருது போல

மங்களூர் சிவா said...

/
புதுகைத் தென்றல் said...

இப்பல்லாம் பூங்கொடி பதிவு பக்கம் வர்றதில்லைன்னு தெரிஞ்சுதான் பின்னூட்டம் வருது போல
/

ஆமாங்
லெக்சரர் ரொம்ப பிசி


(லெக்சர் எனக்குதான்)

புதுகைத் தென்றல் said...

லெக்சர் எனக்குதான்//

:)))

Jaleela said...

ரொம்ப சரி
நானும் ரொம்ப நீச்சலடித்து தான் எழுந்தேன்.
உங்கள் கையெழுத்து ஜூப்பரா கீது

புதுகைத் தென்றல் said...

thanks jaleela