Wednesday, March 10, 2010

”போடு தாளம் போடு”

டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். வெளியே
ஆடாட்டியும் மனசுக்குள்ள ஒரு குத்தாட்டம் ஓடிகிட்டே
இருக்கும். அப்பாவுக்குத் தப்பாம பிறந்திருக்கும் ஆனந்பாபு
நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பிரபல நடிகர் நாகேஷின் மகன் என்ற அறிமுகம்
இருந்தாலும் நடனத்தால் தனக்கென ஒரு இடம்
பிடித்தவர் ஆனந் பாபு.

1985ல் வந்த பாடும் வானம்பாடி படத்தில் ஹிந்தி
மிதுன் சக்கரவர்த்தியை விட மிகச் சிறப்பாக
ஆடியிருக்கிறார் என்பது என் எண்ணம்.

வாழும் வரை போராடு வழி உண்டு என்றே
பாடு. நாகேஷின் இந்தப் பாடல் சூப்பர்



ஐம் எ டிஸ்கோ டேன்ஸர்னு ஆடும் பாடலைத்
தேடினேன் கிடைக்கலை. :(

இந்த படம் அப்போது புதுகையில் எஸ்.வீ. எஸ்
தியேட்டரில் ஓடி செம கலெக்‌ஷன். வெற்றிவிழாவுக்கு
ஆனந்பாபு புதுகைக்கு வந்து ஒரே ஒரு நடனம்
மட்டும்தான் ஆடினார்னு பாத்தவங்க வருத்தப்பட்டாங்க.

அவ்வளவு க்ரேஸ் அவரின் நடனம் மேல் பலருக்கும்
இருந்திருக்கு.

சேரன் பாண்டியன் படத்திலும் நல்ல நடிப்பு.

புது வசந்தம் படத்தில் சரி நடனம். ”ஆடலுடன்
பாடலைக்கேட்டு” பாட்டின் நடனத்தின் போது
திரையைச்சுத்தி லைட்டிங்க்ஸ் எல்லாம் கொடுத்திருந்தார்கள்
எங்க ஊர் சாந்தி தியேட்டர் காரர்கள். அந்த
படத்தில் வரும் ”போடு தாளம் போடு”
என் ஆல்டைம் ஃபேவரிட்.



தனக்கென ஒரு பாதை வகுத்து போய்க்கொண்டிருந்தவர்
தன் வாழ்க்கையில் தடுமாறி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்து தற்போது ஏதோ
ஒரு படத்தில் நடிப்பதாக கேள்வி.

நேற்று புதுவசந்தம் படம் பார்த்தேன். எனக்குப் பிடித்த
நடிகரின் நடனம் பார்த்து பரவசமானேன். அதை இங்கே
பகிர்கிறேன்.


18 comments:

நட்புடன் ஜமால் said...

அவர் நடிச்சி ஒரு படம் வெளி வந்தாச்சு

ஆதவன்

Ananya Mahadevan said...

வளரவேண்டிய நேரத்தில ரொம்ப எக்கச்செக்கமாக மாட்டிக்கொண்டார். பாவம். கே.பீயின் சிகரத்திலும் நல்ல நடிப்பு என்று நினைவு. எம் குலதெய்வத்தின்|(SPB) பிள்ளையாய் நடிச்சிருப்பார்.

Porkodi (பொற்கொடி) said...

ஆஷிஷ் டான்ஸ் கத்துக்கலியா? :)

க ரா said...

இப்ப சமிபத்துல ரெண்டு படம் நடிச்சிட்டாரு அவரு. மதுரை சம்பவம், ஆதவன்.

settaikkaran said...

என்னைப் பொறுத்தவரையில் நாகேஷ் நகைச்சுவையின் பிதாமகன்! அவர் மகன் நடித்து நான் பார்த்த படம் "தங்கைகோர் கீதம்," படம் தான்! "தினம் தினம் உன்முகம் நினைவினில் மலருது," சூப்பர் டான்ஸ்!

கோமதி அரசு said...

நல்ல வளர்ந்து வரும் வேலையில்

வாய்ப்பை தவர விட்டவர்.

ஆதவன் படத்தில் நடித்து இருக்கிறார்.

இனியாவது வாய்ப்பை தக்க வைத்துக்
கொள்ள வாழ்த்துக்கள் .

pudugaithendral said...

ஆதவன் க்ளிப்பிங்க்ஸ்ல பாத்திருக்கேன். படம் பேருதான் நினைவில் இல்ல

நன்றி

pudugaithendral said...

சிகரம், வானமே எல்லை, சேரன் பாண்டியன் இதிலும் நல்ல நடிப்பு ஆநன் பாபுக்கு.

வருகைக்கு நன்றி அநன்யா

pudugaithendral said...

வாங்க பொற்கொடி,

ஆஷிஷ் டான்ஸ் கத்துகிட்டுதான் இருக்கார். புதுவருஷம் பொறந்த போது கெட்ட ஆட்டம் போட்டான்னு பதிவு போட்டிருந்தேனே

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி கண்ணன்

pudugaithendral said...

சூப்பர் பாட்டு அது சேட்டைத் தம்பி,

இப்படி பதிவு போட்டாத்தான் நிறைய்ய சாங்க்ஸ் பிடிக்கலாம்னு பதிவு போட்டேன்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆமாம் கோமதி அரசு,

வருகைக்கு மிக்க நன்றி

பாச மலர் / Paasa Malar said...

கடந்த வருடம் ஆதவன் மற்றும் இன்னுமொரு படத்திலும் (பெயர் நினைவில்லை) நடித்திருந்தார்...

இப்போதான் இராமசாமி கண்ணன் மறு மொழியில் பார்த்தேன்..அந்தப் படம் மதுரை சம்பவம்

எம்.எம்.அப்துல்லா said...

/புதுவருஷம் பொறந்த போது கெட்ட ஆட்டம் போட்டான்னு //

நல்ல ஆட்டம்னுல கேள்விப்பட்டேன் :))

pudugaithendral said...

ஆஹா ரொம்ப நாளைக்கப்புறம் பாசமலர்,

எங்கப்பா போனீங்க? எப்படி இருக்கீங்க

pudugaithendral said...

நல்ல ஆட்டம்னுல கேள்விப்பட்டேன்//

ஸ்மைலியும் நீங்களே போட்டுட்டீங்க அப்துல்லா

ஹுஸைனம்மா said...

நல்ல டான்ஸர். அப்போதைய சினிமா டான்ஸை புதுமையாக்கினவர்; அவருக்குப் பின் பிரபுதேவா அதேபோல் புதுமை செய்தார்.

Thenammai Lakshmanan said...

ஆமா தென்றல் ஆஷிஷ் போட்ட ஆட்டம் பற்றிய பதிவு அருமையா இருந்துச்சு... தாய்ப்பாசம் பெருமையோட கூட... அவர்தான் நடன இயக்குனர்னு படிச்ச ஞாபகம்..


ஆனந்த்பாபு நல்ல நடிகர் ..ஒருவீழ்ச்சிக்குப் பின் மீண்டு வந்து சாதிக்க வாழ்த்துக்கள் ..